ஸ்ரீமாத்ரே நம:
ஸ்ரீகாமாக்ஷி தேவ்யை நம:
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானம்
ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம்
வஸந்த நவராத்திரி மஹோத்ஸவம்

“ஜய ஏகாம்ரேஶ்வரார்தா⁴ங்கி³ ஜய தஞ்ஜா-விலாஸினி.
ஜய ப³ங்கா³ருகாமாக்ஷி ஜய ஸர்வார்த²-தா³யினி”
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இவ்வருடம் தஞ்சை மேலராஜவீதியில்
ஸ்ரீ பங்காரு காமாக்ஷி ஆலயத்தில் வரும்
ஸ்வஸ்தி ஸ்ரீ விச்வாவஸு வருஷம் பங்குனி மாதம் 5 ஆம் தேதி (19-03-2026) வியாழக்கிழமை முதல் பங்குனி மாதம் 13ஆம் தேதி (27-03-2026) வெள்ளிக்கிழமை முடிய வஸந்த நவராத்திரி என்கிற ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீகாஞ்சி காமாக்ஷி தேவியின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவளும் சகல சிவ க்ஷேத்ரங்களிலும் மனோன்மணி சக்தியாக விளங்குபவளுமான அன்னை பராசக்தி ஸ்ரீபங்காரு காமாக்ஷி தேவி ஆலயத்தில் மாலை 4:30 மணிக்கு ஸ்ரீஅம்பிகைக்கு லக்ஷார்ச்சனையும், இரவு 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையில் சாக்த ரத்னா மயிலாடுதுறை ஸ்ரீ ராகவன் அவர்களால் பதினெட்டு மஹாபுராணங்களில் ஐந்தாவது மஹாபுராணமான ஸ்ரீமத் தேவிபாகவத மஹாபுராண உபந்யாஸமும் காலை 7:00 மணியிலிருந்து 11:00 மணிவரை ஸ்ரீமத் தேவிபாகவத பாராயணமும், காலை 9:30 மணி முதல் ஸ்ரீவித்யா ஹோமமும், மாலை 05:00 மணி முதல் ஸ்ரீலலிதோபாக்யான பாராயணமும், ஸ்நபன மூர்த்தி அபிஷேகமும் அதி விமரிசையாக நடைபெறுகிறபடியால் பக்தகோடிகள் தவறாது கலந்து கொண்டு பாராயணத்தையும் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளின்படி நடைபெறுகிற உபன்யாஸத்தையும் ச்ரவணம் செய்தும் ஸ்ரீஅம்பிகையின் லக்ஷார்ச்சனையிலும் பங்கு கொண்டு ஸ்ரீஅம்பிகையின் அருளுக்குப் பாத்திரராக வேணுமாய்க் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காமாக்ஷி சரணம்
![]()
One Response
For long i was wonderin. Now it os clear ஜய ஏகாம்ரேஶ்வரா. paarvathi does tapas under one mango (eka amra) tree