Sri Rajarajeswari Samedha Shri Rajarajeswarar Maha Kumbabishekam – Aug 28, 2025

Namaskaram All,

With the blessings of H H Kanchi Periyavas especially our HH Sri Sankara Vijayendra Saraswathi Swamigal, Smt Mahalakshmi Mamu is very happy to inform about the next kumbhabhisekam of Sri Rajarajeswari Samedha Shri Rajarajeswarer, Sri Thirupurasundari Samedha Sri Panchamukeswarer, Sri Sathusashti Kaleswari Samedha Sri Sathusashti Kaleswarer temple located at Thiruvanaikoil close to Sri Sankara Matam opposite to Sri Akilandeswari Sannadhi.

This temple was identified by Our Mahaperiava and performed Kumbhabhisekam during 1943. The signficance is Sathusashti Kaleswarar and Sathusashti Kaleswari cannot be found anywhere in the world except in this place.

Maha Kumbhabhisekam of this temple is planned on 28th August 2025. More Details are given in the Invitation below.

Please attend the Maha Kumbabhishekam and reach out to Smt. Mahalakshmi Mami for any questions. There are quite a few areas where Mami urgently needs our help and support.

Smt. Mahalakshmi Mami Contact Info.:

Shri. V.C. Subramanian & Smt. Mahalakshmi Subramanian
Phone: 011- 91- 44 – 2815 2533
Cell: 011-91-9840053289
Cell: 011-91-9940053289
Email: vcsmani@yahoo.com

A detailed Sthala Puranam (history) of this temple is given below along with the directions, timings and Maha Kumbabihekam invitation.

1943 ஆம் ஆண்டு ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் திருவானைக்காவலுக்கு விஜயம் செய்தபோது திருவானைக்காவல் வடக்குவீதியில் உள்ள சங்கரமடத்தின் பின்புறம் வடகிழக்குப்பகுதியில் புதர்மண்டியும் கட்டுமானம் இடிந்தும் எளிதில் யாரும் செல்லாமுடியாமலும் கவனிப்பாரற்ற நிலையில் பாழடைந்து போன நிலையில் ஒரு கோவில் இருப்பதைக் கண்டார். பாரத தேசத்தின் பல பகுதிகளுக்கு ஸ்வாமிகள் விஜயம் செய்யும் போது இப்படியான பராமரிப்பும் வழிபாடும் இன்றி சிதிலமடந்திருக்கும் கோவில்களை கண்டு அதனை வழிபாடுகள் நடக்கும்படி புணரமைக்கும் பணியை செய்துவந்தார். புதர்களையும் மரங்களையும் அகற்றி இடிந்திருந்த கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அவ்விடத்தில் இரண்டு சிவாலயங்கள் இருப்பதைக் கண்டார். ஒன்று ராஜராஜேஸ்வரம் என்னும் ஆலயம். இன்னொன்று பஞ்சமுகேஸ்வரர் ஆலயம். இரண்டும் அடுத்தடுத்து அமைந்திருந்தது. அதிலுள்ள ஒரு சிவாலயத்தின் மூலவராக இருந்த லிங்கத்திருமேனி நான்கு பக்கங்களிலும் பரமசிவனது நான்குமுகங்கள் கொண்டதாக இருந்தது. அதற்கு நான்கு புறங்களிலும் நான்கு வாயிலும் மேலே ஒரு வாயிலாக ஐந்து வாயில்களைக்கொண்டு அக்கோவில் அமைக்கப்பட்டு இருந்ததைக் கண்டார். (ஆதாரம். ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் நூல் )

ஸ்ரீருத்ர மஹன்யாச மந்திரத்தில் தத்புருஷம் அகோரம் ஸத்யோஜாதம் வாமதேவம் ஈசானம் என்கிற ஐந்து வேதமந்திரங்களில் கூறப்பட்டுள்ள ஈசனின் ஐந்து முகங்களே இந்தப் பஞ்சமுக லிங்கத்தின் தத்துவமாகும்.கிழக்கு முகமாக உள்ளது தத்புருஷம் ( சாம வேதம் ) தெற்கு முகமாக உள்ளது அகோரம் ( அதர்வண வேதம்) வடக்கு முகமாக உள்ளது வாமதேவம் ( யஜுர்வேதம் ) ஐந்தாவது முகமாயுள்ளது ஈசானம் தேஜோரூபம் அது அரூபமாக விளங்குகிறது. மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த இந்த ஆலயங்களைப் பழுது பார்க்கச்செய்து 13.6.1943 அன்று ஸ்வாமிகளே முன்நின்று கும்பாபிஷேகத்தையும் நடத்தி வைத்தார்கள்.அன்று முதல் இந்த ஆலயங்களுக்கு பூஜையும் நடைபெற்று வருகின்றது.திருவானைக்காவல் தல புராணம் இந்த ஆலயம் குபேரனால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது என கூறுகிறது. நேபாளநாட்டில் இவ்விதமான ஐந்துமுக மகாலிங்கமும் ஐந்து வாயில்களோடு கூடிய சிவாலயமும் இங்குள்ளது போலவே உள்ளது அது ஆதிசங்கரரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேபாளம் சென்று அந்தப் பசுபதீஸ்வர லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். நம் நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத இந்தகைய பஞ்சமுகேஸ்வரர் ஆலயத்திற்கு திருவானைகாவல் வரும் பக்தர்கள் தவறாது தரிசிக்க வேண்டும்.

திருவானைகா வடக்கு வீதியில் சங்கரமடம் உள்ளது அதை ஒட்டி உள்ள சாலையில் மூக்கறுந்த பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் இந்த ஆலயம் இருக்கிறது. சங்கர மடத்தின் உள்பக்கமாக செல்லும் வழி ஒன்றும் உள்ளது ஆனால் அது பொது வழியல்ல.
முபக்கம் அடித்தளம் மட்டும் கொண்டு கோபுரம் அற்றவாயில் தான் நம்மை முதலில் வரவேற்கிறது. கிழக்கு நோக்கி உள்ள அந்த வாயிலின் வழியே நாம் உள்நுழைந்தால் பலிபீடமும் நந்தியும் சன்னதி நோக்கி இருக்கக் காண்கிறோம். நந்திக்கு தனியே மண்டபம் இன்றி கூரை வேயப்பட்டுள்ளது.முகமண்டபத்தில் வலதுபுறம் அனுமன் கைகூப்பிய நிலையில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. சிவன் கோவிலில் பெரும்பாலும் முருகன் சிலைதான் இந்த இடத்தில் இருக்கும் சற்று வித்யாசமாக இங்கு அனுமன் எழுந்தருளியுள்ளார். முகமண்டபம் கடந்து அர்த்த மண்டபத்திலிருந்து அம்பாளையும் ஈஸ்வரனையும் ஒரே சமயத்தில் தரிசிக்கும் படியான அமைப்பில் ராஜராஜேஸ்வரி அம்மன் தெற்கு நோக்கி கோவில்கொண்டுள்ளாள். ஸ்வாமி ராஜராஜேஸ்வரர் லிங்கஸ்வரூபமாக கோவில்கொண்டுள்ளார்.

கோவில் திருச்சுற்றில் தெற்குப்பகுதியில் ஒரு மேடைபோன்ற அடிதள அமைப்பு கோவில் கட்டுமானத்தைப் போல அமைந்துள்ளது. இத்தகைய பிரத்யேகமான அமைப்பு ஏதேனும் சிறப்பு வழிபாடு அல்லது கலைஅரங்கேற்றம் போன்றவைகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். தலவிருட்சம் மகாவில்வம், இரண்டுதள விமானத்தை, கடக்கும் போதே தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தியின் தரிசனம் காணக்கிடைக்கிறது. கோட்டத்தில் இருந்தாலும் தணியே மண்டப அமைப்பு ஏற்படுத்தி வழிபாடு நடந்துவருகிறது. கன்னிமூலையில் கணபதி கருவறையின் நேர்பின்புறம் வள்ளி தேவையானையுடன் மயில்மீதமர்ந்த சுப்ரமணியர், அடுத்து கஜலட்சுமி ஆகிய தனி சன்னதிகள் உள்ளது. பிரகாரத்தை வடக்குப்பக்கம் வலம்வரும்போது அம்பாள் சன்னதியின் நேர்பின்புறம் சண்டிகேஸ்வரர் சன்னிதியை அடுத்து சிறிய கிணற்றையும் காண்கிறோம் வலம் முடித்து நந்திதேவன் பலிபீடம் தாண்டி நமஸ்கரித்து எழுந்தால் நம் எதிரே சதுரமும் அல்லாத செவ்வகமும் அல்லாத ஒரு அமைப்பில் பெரிய தூண்களைக் கொண்ட மண்டபம் தெரிகிறது. அதன் உள்தான் பஞ்சமுகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. பஞ்சமுகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்வதற்கு மண்டபத்தின் வடக்கு புறமாக சன்னதியின் உள் நுழைகிறோம்.நான்கு அடி மேடை மீது அழகிய முகங்களைக்கொண்ட பஞ்சமுக லிங்கத்தை தரிசிக்கும் போது நாட்டில் எங்கும் காணக்கிடைக்காத லிங்கஸ்வரூபத்தின் முன் நிற்கிறோம், மகாபெரியவர் கண்டு உலகிற்கு காட்டிய அதே ஈஸ்வரனின் முன் நிற்கிறோம் என்னும் பரவசம் படர்கிறது. லிங்கத் திருமேனியின் நான்கு திசைகளிலும் நான்கு முகங்கள் மேல்பகுதி அரூபமாக , ஆவுடையார தாமரை அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்லது.லிங்கத்தின் நான்கு திசைகளிலும் கருவறையில் சாளரம் போன்ற வாசல் இருக்கிறது. தற்காலிக ஏற்பாடாக கம்பி போட்டிருந்தாலும் நான்கு திசைகளில் இருந்தும் ஈசனை தரிசிக்க முடியும். நேர் எதிரில் அம்பாள் திரிபுரசுந்தரி சன்னிதி. இங்கும் ஒரே நேரத்தில் அம்பாளையும் ஈஸ்வரனையும் தரிசிக்கலாம்.

தலவரலாறாக தொன்று தொட்டு இக்கோவில் சார்ந்த கதை ஒன்று சொல்லப்பட்டு வருகிறது ராவணம் குபேரன் இருவருமே விச்ரவஸ்சின் புதல்வர்கள். விஸ்ரஸ்வன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர் குபேரன். கேகசிக்குப் பிறந்தவன் இராவணன். இருவருக்கும் இடையே எப்போதும் பகை. ஒரு சமயம் பகை முற்றி இருவரும் யுத்தம் புரியும் அளவிற்கு அது வந்துவிட்டது. குபேரனின் அனைத்து செல்வங்களும் புஷ்பக விமானமும் ராவனனால் அபகரிக்கப்பட்டது. விரக்தியான குபேரன் மகாதேவரை வேண்டினான்.காவிரியின் தென்கரையில் ஈஸ்வரனுக்கு ஆலையம் அமைத்து அங்கு லிங்கப்பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டுவா, மகாவிஷ்னுவானவர் தசரதனுக்கு மகனாகப்பிறந்து யுத்தத்தில் ராவனனை வீழ்துவார் அப்போது உன்னிடமிருந்து பறிக்கப்பட்ட செல்வங்கள் உன்னை வந்து அடையும் என்கிற அசிரீரி குரல் கேட்டது அதன் படியே காவிரியின் தென்கரையில் ராஜராஜேஸ்வரம் எனும் இக்கோவிலை அமைத்து குபேரன் வழிபட்டு வந்த குபேரன் ராஜராஜேஸ்வரர் அருளால் இழந்த உடைமைகளை திரும்பப்பெற்றான் என்கிறது தலவரலாறு. .கோவிலின் கிழக்குப் பகுதியில் தனி மண்டபம் ஒன்று நீளவாட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு காலபைரவரை முதலில் தரிசிக்கிறோம் அடுத்து சதுஷ்சஷ்ட்டிகலேஸ்வரர் முன் நாம் நிற்கிறோம். இத்தகைய லிங்கத்திருமேனி அஷ்டாஷ்ட்டலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. அஷ்ட்டம் என்றால் எட்டு அஷ்டாஷ்ட்டம் என்றால் 8×8 =64. இந்த லிங்கத்திருமேனியில் ஈசனின் 64 முகங்களைக் குறிக்கும் விதமாக அறுபத்து நான்கு வரைக்கோடுகள் புடைப்பாக காணப்படுகிறது.அருகிலேயே சதுசஷ்ட்டிகலேஸ்வரி அம்மனும் எழுந்தருளியுள்ளார். சதுஷ்சஷ்ட்டிகலேஸ்வரரின் பின்புறம் நம் பார்வைக்குத் தெரியும்படியாக நான்கு பாணலிங்கங்கள் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இவைகள் நான்கு வேதங்களையும் குறிக்கின்றன.

கோவிலினுள்ளே பெரிய வெளிப்பிரகாரத்தில் நெல்லி, தென்னை போன்ற பல்வேறு மரங்கள் சூழ்ந்து ரம்யமாக காட்சி அளிக்கிறது.

தேய்பிறை அஷ்ட்டமிகளில் பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. பெளர்ணமி,பிரதோஷம்,சிவராத்ரி,பொன்ற நாட்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றது. சனிப்பிரதோஷம், போன்ற நாட்களில் அன்னதானம் நடைபெறுவதாக அறிவிப்புப்பலகை தெரிவிக்கிறது.

காலை 6.30முதல் 9.30 வரையிலும் மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம், மலைக்கோட்டை போன்ற பிரசித்திபெற்ற கோவில்களுக்கு வரும் பக்தர்கள் இத்தகைய அபூர்வமான பஞ்சமுக லிங்கம் அமைந்துள்ளதும் மகாபெரியவர் கண்டு வெளிக்கொணர்ந்ததுமான ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலுக்கும் வந்து ஈசனின் அருளை பெறவேண்டும்.

வழி: திருவானைக்காவல் வடக்கு உள்வீதியில் சங்கரமடத்தினை அடுத்துள்ள திருவள்ளுவர் தெருவில் மூக்கறுந்தவிநாயகர் கோவிலுக்கு எதிரில் உள்ளது.

__________________________________________________________________________________________________________

Rajarajeswaram V9

 

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading