அன்னை காமாக்ஷியின் பதினைந்து வடிவங்கள் 4 : ஸ்ரீஉக்ர சாமுண்டா

ஸ்ரீகாமாக்ஷி தேவியின் பதினைந்து வடிவங்கள் 4:

ஸ்ரீஉக்ர சாமுண்டா:

Fifteen SvarupAs of Bhagavati Shri Kamakshi

Shri Ugra Chamunda :

1) அனாஹத சக்ரத்தில் ஜ்வலிக்கும் ஸ்ரீகாமாக்ஷியம்மையின் வடிவம். ஸ்ரீசாமுண்டா பகவதி.

2) சண்டமுண்டர்களை ஒழித்த, பரப்ரஹ்மஸ்வரூபிணி. ஆதலால் மஹா சாமுண்டா.

3) ஸப்த மாத்ருகைகளில் ஒரு தேவியாக வழிபாடிருந்த போதிலும், வங்காளம், அஸாம் மற்றும் ஒடிஷாவிலே தனித்த மஹாவித்யா ஸ்வரூபிணியாக இந்த தேவிக்கு ஆலயங்கள் உண்டு.

4) ஜூன் 7 முதல் புதிதாக ஆரம்பிக்கப்போகும் ஸ்ரீசாக்த கீதா த்ரயம் எனும் தேவீ பரமான மூன்று கீதைகளின் வ்யாக்யானம் எனும் கட்டண வகுப்பில் சேர்ந்து, சாக்த ஸித்தாந்தத்தை அறிந்து கொள்ள “mayiladuthurairaghavan@gmail.com” என்ற Email க்கு மெயில் அனுப்பவும்.

5) ஸௌபாக்ய சிந்தாமணி ஸ்ரீகாமாக்ஷியின் ஸம்ஹார வடிவாக ஸ்ரீசாமுண்டாவையே கூறுகிறது.

6) திருவொற்றியூர் ஸ்ரீவட்டப்பாறை அம்மன், திருவக்கரை ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆகியோர் ப்ரத்யக்ஷ சாமுண்டா ஸ்வரூபமே. தனி ஆலயங்களாக இவை இன்று பர்யந்தம் விளங்குவது, சாமுண்டா தேவி வழிபாடு தமிழகத்தில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கியதற்குச் சான்று.

7) காதுகளில் தொங்கும் பெரிய யானைகளை குண்டலமாய் அணிந்தவள், யுத்தத்தில் மிகவுக்ரமாய் இருப்பவள், அஸுரக்கூட்டங்களை அழிப்பவள், குடல்களின் கொத்துக்களை வாயிலே தாங்குபவள், நரம்புமாலை அணிந்தவள், நரமுண்டங்கள் கோர்த்த மாலை அணிந்தவளான ஸ்ரீஉக்ரசாமுண்டாவும், தாயே ஸ்ரீகாமாக்ஷி நீயே.

8) ஒடிஷா (ஓட்ர தேசம்) பங்கி எனும் ஊரில் உள்ள சர்ச்சிகா தேவி மற்றும் விந்த்யாசலம் ஸ்ரீவிந்த்யவாஸினி ஆகிய க்ஷேத்ரங்கள் ஸ்ரீசாமுண்டாவின் முக்ய க்ஷேத்ரங்கள்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading