
Jaya Jaya Sankara Hara Hara Sankara – The touching scenes on how Bhagawath Padhal took Sanyasam and left his mother has been beautifully narrated by Sri Periyava in this chapter.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a moving drawing and Shri ST Ravikumar for the great translation. Rama Rama
அன்னையைப் பிரிந்து ஆசானைத் தேடி..
முதலை வாயிலிருந்து குழந்தை மீண்டு வந்ததைப் பார்த்து தாயார் மிகவும் ஸந்தோஷமடைந்தாள். அந்த ஸந்தோஷத்தில் அவர் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்ட நினைவே போய்விட்டது! “அப்பா, பிழைத்து வந்தாயே! ஆத்துக்குப் போகலாம். நான் கண்ணை மூடுவதற்குள் உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்த்துடணும்” என்றாள்.
அதைக் கேட்ட ஆசார்யாள், “அம்மா, நான் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள நீ அநுமதி தரவில்லையா? அதை மறந்து பேசுகிறாயே! இதுவரைக்கும் உன் ஒருத்திக்கு மாத்ரம் குழந்தையாயிருந்தேன். இனிமேல் லோகத்திலுள்ள அத்தனை தாயார்களுக்கும் நான் குழந்தை. ஆமாம் நான் லோகத்துக்கெல்லாம் குழந்தை. பிக்ஷை போடுகிற ஸ்த்ரீகளெல்லாம் எனக்கு தாயார்கள். நீ மாத்ரம் தாயாரென்று நினைக்காதே. பல தாயார்களில் நீயும் ஒரு தாயார். நான் ஞானோபதேசம் வாங்கிக் கொள்ள குரு பரம்பரை இருக்கிறதே, அதிலுள்ளவர்களெல்லாம், எனக்குத் தகப்பனார். ஞானம் வந்து, நான் உபதேசம் பண்ணி, அது யாரார் மனஸுக்கு ஒரு ஸந்தோஷத்தைக் கொடுத்து அவர்ளை நல்ல வழிக்குக் கொண்டு வருமோ, அவர்கள் எல்லோரும் என் குழந்தைகள். குழந்தைகள் என்றால் பத்னி வேண்டுமே, நீயும் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும் என்றாயே, அப்படி ஒரு பத்னியையும் இந்த க்ஷணத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டேன். சாந்தி என்று அவளுக்கு பேர். மனஸ் ஏகாந்தமாக ஒன்றி இருக்கும் படியான ஸ்தானத்தில் சாந்தி என்ற வனிதையை விவாஹம் செய்து கொண்டிருக்கிறேன்.
பிக்ஷா-ப்ரதா ஜநந்ய: பிதரோ குரவ: குமாரகா : சிஷ்யா: |
ஏகாந்த-ரமண-ஹேது: சாந்திர்-தயிதா விரக்தஸ்ய || 1
(ஆசையைத் துறந்தவனுக்கு (துறவிக்கு) பிக்ஷையிடுபவர் யாவரும் அன்னையர்; குரவர் யாவரும் தந்தையர்; சீடர் யாவரும் மக்கள்; ஏகாந்தத்தில் இன்பம் காண ஏதுவாகவுள்ள சாந்தியே மனையாள்.)
“நீதான் நான் மற்ற தாயார்களிடத்தில் போய் அவர்களெல்லாம் கொஞ்சும்படிக் செய்வதற்கும், அப்பப்போ சாந்தி வனிதையோடு நான் ஏகாந்தத்தில் ஆனந்தமாயிருந்து கொண்டிருப்பதற்கும் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றார்.
“என்னை விட்டு விட்டா போகப் போறே? என் அந்த்ய காலத்திலேகூட உன்னைப் பார்க்காமல்தான் ஆவி பிரியணுமா?” என்று தாயார் ரொம்பவும் அழுதாள்.
“இல்லை இப்போது உன்னை ஏமாற்றிவிட்டுப் போகிறேனல்லவா? இதற்காகவாவது அந்த்ய காலத்திலே உன் மனஸ் ஸமாதானமாவதற்காக உன் பக்கத்திலேயே வந்து இருக்கிறேன். அப்பொழுது நீ என்னை ஸ்மரித்த மாத்ரத்தில் வந்து விடுகிறேன். (தஹன) க்ருத்யமும் பண்ணுகிறேன்” என்று ஆசார்யாள் வாக்குக் கொடுத்தார்.
ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக் கொண்டு அந்த அம்மாளும் ஆசார்யாள் புறப்படுவதற்கு அநுமதி கொடுத்தாள்.
ஸந்நியாஸி க்ருத்யம் பண்ணலாமா என்றால்…
தாயார் என்பவளுடைய ஸ்தானம் எல்லாவற்றையும் விட உயர்வானது. அப்படி ஸகல சாஸ்த்ரத்திலும் இருக்கிறது. மாத்ரு ருணம் (தாயாருக்குப் பட்டுள்ள சாஸ்த்ரீயக் கடன்) யாரையும் விடவே விடாது. பித்ரு ருணத்திலிருந்துகூட ஸெளத்ராமணி என்ற மஹா யாகத்தைப் பண்ணினால் விடுபட்டுவிடலாம்; மாத்ரு ருணத்திலிருந்து மட்டும் ஒரு புத்ரன் ஜீவனுள்ளவரை விடுபட முடியாது — என்று தர்ம சாஸ்த்ரத்திலேயே இருக்கிறது. பெரிய ருணம் அந்திம க்ரியை செய்து பரலோகம் சேர்ப்பதுதான். வேறே புத்ரர்களிலிருந்தால் அவர்களிடம் இந்தக் கடனைக் கட்டிவிட்டு ஒருவன் ஸந்நியஸிக்கலாம். ஆசார்யாள் ஏக புத்ரர். அப்படிப்பட்டவர் ந்யாயமாகப் பார்த்தால் ஸந்நியாஸமே வாங்கிக் கொள்ளக் கூடாது தான். ஆனாலும் இது அவதாரம் — ஈச்வரன் தன் வாக்கால் ‘ஒரே ஒரு புத்ரனா, நூறா?’ என்று கேட்டு, ஒன்றாக அமைந்தது. அவனுடைய உத்தேசமோ ஸந்நியாஸ குருவாக தர்மோத்தரணம் பண்ணுவதாக இருந்தது. அதனால் ஸகல சாஸ்த்ரங்களுக்கும் மூலமானவனே தர்ம ஸம்ஸ்தாபனார்த்தம் பண்ணிய உத்தேசமென்பதால் ஏக புத்ரர் ஸந்நியஸித்தார். ஆனால் இவர்தான் அவதார புத்ரரே தவிர அவள் அவதார அம்மா இல்லையே! அதனாலே அவள் ருணத்தை அவள் எப்படி ஆசைப்பட்டாளோ அப்படி அவர் தீர்க்க வேண்டுமென்பதுதானே ந்யாயம்? அவள் த்ருப்திக்காக தஹனம் மாத்ரம்தான் செய்ய நினைத்தார். அப்புறம் கார்யங்கள், தர்ப்பணம், திவஸமென்று எதுவும் செய்ய நினைக்கவில்லை.
தர்ம சாஸ்த்ரங்களிலேயே இருக்கிறது, க்ருஹஸ்தனாயிருந்து புத்ரனைப் பெற்ற பிறகு ஸந்நியாஸியான ஒருவன் காலமானால் அப்போது அவனுடைய பூர்வாச்ரம புத்ரன் அவனுக்கு வேறே எந்தக் கர்மாவும் செய்யக் கூடாதானாலும் 11-வது அல்லது 12-வது நாளில் பார்வண ச்ராத்தம் என்பதை மட்டும் செய்ய வேண்டுமென்று. ஸந்நியாஸிக்குப் பூர்வாச்ரம புத்ரனால் இப்படி ஒன்று நடக்கலாமென்றிருப்பதால் அந்த ஸந்நியாஸியும் ஏகபுத்ரனாக இருக்கும்போது பூர்வாச்ரமத் தாயாருக்கு தஹன ஸம்ஸ்காரம் மாத்ரம் பண்ணலாம் என்று ஆசார்யாள் நினைத்திருக்கலாம். “தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ராமணம் தே“2 என்பதையே எப்போது பார்த்தாலும் வலியுறுத்தி வந்த ஆசார்யாள் சாஸ்த்ரத்தில் இடம் கொடுக்காத ஒன்றை செய்தேயிருக்க மாட்டார். எப்படியிருந்தாலும் ஆசார்யாளுக்கு நாம் சாஸ்த்ரம் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை! அல்லது, ‘அவரே சாஸ்த்ரத்தை ரிலாக்ஸ் பண்ணலாமென்றுதான் இப்படியெல்லாம் பண்ணினார். அவரே ரிலாக்ஸ் பண்ணினாரென்றால் நாம் விட்டுங்கூட விடலாம்’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது!
தர்ம சாஸ்த்ரங்களிலேயே இன்னும் என்ன சொல்லியிருக்கிறதென்றால், ஒரு ஸந்நியாஸியின் பூர்வாச்ரமப் புத்ரன் உள்பட மற்ற எந்த பந்துக்கள் செத்துப் போனாலும் அப்போது அவன் ஸ்நானங்கூடச் செய்ய வேண்டியதில்லை; ஆனாலும் பூர்வாச்ரம மாதா-பிதாக்களின் மரணத்தின் போது மட்டும் அவன் கட்டின வஸ்த்ரத்தோடு ஸ்நானம் பண்ண வேண்டும் என்று இருக்கிறது. இங்கே மாதா பிதா இரண்டு பேருக்கும் ஸம ஸ்தானம் கொடுத்திருக்கிறதென்றால், இன்னொரு விதியோ பிதாவுக்கும் மேலே மாதாவை உயர்த்தி வைத்துச் சொல்லியிருக்கிறது: “ஸர்வ-வந்த்யேந யதிநா ப்ரஸூர்-வந்த்யா ஹி ஸாதரம்“: எல்லோரும் ஸந்நியாஸியை நமஸ்கரிக்கணும். ஸந்நியாஸிகளிலேயே அவரைவிடக் குறைவாக வ்யாஸ பூஜை செய்துள்ளவர்கள் அவரை நமஸ்கரிக்க வேண்டும். மற்ற ஜனங்களில் ஸகலருமே அவரைவிட வயஸில் எத்தனை பெரியவர்களானாலும் நமஸ்கரிக்கணும். ‘ஸர்வ’ ஜனங்களும் என்று இப்படிச் சொல்லும்போது அதில் அப்பாவும் அடக்கம் தான். ஆனால் அம்மா மட்டும் அடக்கமில்லை. ஸந்நியாஸியாகிவிட்ட புத்ரனை அவள் நமஸ்காரம் செய்ய வேண்டாம். அது மாத்ரமில்லை. அவளை இவர் — ஸந்நியாஸி — நமஸ்காரம் செய்ய வேண்டும் : “ப்ரஸூர் – வந்த்யா”.
‘இப்படி விதி இருக்கே!’ என்று ஒரு கடமையாக மட்டும், ‘கடனே’ என்று பண்ணினால் போதாது. ‘ஸாதரம்’- ‘மரியாதையான அன்போடுகூட’ நமஸ்கரிக்கணும்.
இப்படியெல்லாமிருப்பதால்தான் ஆசார்யாள் தாயாருக்கு அப்படி வாக்குக் கொடுத்தார்.
அப்புறம் அவளை நமஸ்காரம் பண்ணிவிட்டு குருவைத் தேடிக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.
________________________________
1 நீலகண்ட தீக்ஷிதரின் ‘வைராக்ய சதக’த்தில் காணும் இச்லோகத்தை ஆசார்யாளின் வாக்காக ஸ்ரீசரணர்கள் நயமாகக் கையாண்டிருக்கிறார்கள்.
2 “(செய்யத் தக்கது எது; செய்யத் தகாதது எது என்று முறைப்படி நிச்சயிப்பதில்) சாஸ்த்ரமே உனக்குப் பிரமாணமாகும்” — கீதை XVI.24Bottom of Form
________________________________________________________________________
Leaving the mother, Going in search of Guru..
Seeing that the child has released himself from the grasp of the crocodile, the Mother was elated. In her joy, the thought that he had taken to Sanyas was totally forgotten! She said “My child! You have survived! Let us go home. Before I permanently close my eyes, I should perform your wedding”.
On hearing this Acharya responded, “Amma, Did you not grant me permission to take to Sanyasam? You are talking forgetting that! Thus far, I was a son only to you. From now onwards, I am a child to all the mothers in the world. Yes, I am a child to the entire world. All the women who offer me food [भिक्षा] are my mothers. Do not think that you are the only mother. You are one among many mothers. The people who comprise the Guru Parampara [गुरु परम्परा- traditional order of Acharyas] who will grant me Jnanam, are all my fathers. After I obtain Jnanam [ज्ञान] and teach it to others, all those who experience joy in their hearts by my teachings and set themselves on the right path, will be my children. Is not a wife required for begetting sons; you were also saying that you would like to see me married; I have, at this very instant, got married to such a wife. Her name is Shanti. I have married the woman Shanti at that spot where my heart is in solitude and united with the Supreme.
Bhikshaa-pradaa jananya: pitaro gurava: kumaarakaa: sishyaa: ।
Ekaanta-ramana-hetu: saantir-dayitaa viraktasya । ।
भिक्षा-प्रदा जनन्यः पितरो गुरवः कुमारकाः शिष्याः ।
एकान्त-रमण-हेतुः शान्तिर्-दयिता विरक्तस्य ।।
(For a person who has renounced all desires (a Sanyasi), all those who offer Bhiksha are his mothers; all the Gurus are his fathers; all the disciples are his children; the peace [shanti] which facilitates attainment of bliss in solitude is the wife).
He said, “You have to give me the opportunity to go over to the other mothers so that they too can shower their love on me, and also for me to enjoy with the woman Shanti in solitude”.
The mother wept inconsolably and asked, “Are you leaving me and going away? In my last moment, should my life leave me without seeing you?”
“No, Am I not disappointing you and going away now? At least to make up for this and to assuage your heart, I will come and be with you during your final moments. At that time, I will come here the moment you think of me. I will also perform the (cremation) rites” (दहन कृत्यम्).
Somehow reconciling herself [to the situation], the noble lady gave permission for Acharya to leave.
To the question whether a Sanyasi can perform last rites….
The status of a mother is superior to everything else. This is stated in all the Sastras. The debt one owes a mother [मातृ ऋणम् – maatru ruNam] does not leave a person at all. One can perhaps escape the debt to a father by doing the magnificent yaagam (महा याग) called Soutraamani [सौत्रामणि]; but, till the end of his life, a son can never escape from the debt he owes his mother – these rules are present in the Dharma Sastras. His greatest duty is to perform the last rites and enable the atma reach the other world. If there are other sons, one can then pass on this duty to them [to his brothers] and become a Sanyasi. Acharya was the only son. From the point of view of propriety, such a person should not be taking up Sanyasam at all. But this was an incarnation – Eswara had himself asked whether they desired to have ‘just one son or a hundred’, thus making him the only child. His [Eswara’s] intention was to re-establish Dharma (धर्मोद्धारणम्) by being a Sanyasa Guru. Since that ‘One’ – the origin of all Sastras – himself decided to establish Dharma (धर्म संस्थापनम्), the only son took up Sanyasam. However, while he was an incarnate son, that noble lady was not an incarnate mother! Therefore, was it not appropriate on his part to clear the debt he owed her in a manner that she desired? To satisfy her, he thought of performing only the cremation. He did not intend to perform the subsequent activities like tarpanam, sraddham, etc.
It is mentioned in the Sastras itself that if a person, having led the life of a householder [गृहस्थः], has a son, takes up Sanyasam subsequently, and later passes away, his son of the previous life (poorvasrama) should not be doing any other rites, but certainly perform the Paarvana Shraddham on the 11th day or 12th day. [पार्वणश्राद्ध – the ceremony in honour of ancestors performed at the conjunction of sun and moon i.e. at new moon and at other specified times].Since the son from poorvasrama can perform these rites for a Sanyasi, Acharya could have thought that a Sanyasi who is the only son can perform at least the cremation of his mother. Acharya, who always kept emphasising “tasmaat saastram pramaanam te”2 [तस्मात् शास्त्रं प्रमाणं ते], would never have done something which the Sastras do not permit. Whatever it may be, we don’t have to teach Sastras to Acharya! Neither should we misinterpret it saying ‘He did this only because he wanted to relax the Sastra [rules]. If he himself had relaxed them, we can go to the extent of even giving up the Sastras’!
Additionally, what is mentioned in the Dharma Sastras is this: when any of the relatives (बन्धु:) including the Sanyasi’s son of the previous Ashrama dies, he does not have to even take bath; However, if his parents in the previous ashrama pass away, he should take a bath with the very clothes he is wearing then. While an equal status has been given to both mother and father here, another rule gives the mother a superior status as compared to the father: “sarva vandyena yatinaa prasur-vandyaa hi saadaram” [सर्व वन्द्येन यतिना प्रसुर्-वन्द्या हि सादरम्]: Everyone should offer namaskarams to a Sanyasi. Even among Sanyasis, those who have performed lesser number of Vyasa puja offer namaskarams to him [who has performed more Vyasa puja]. All other people, even if they are older than him, should offer namaskarams to him. When it is stated ‘All’ the people, it includes even the father. But mother is not included. She need not offer namaskaram to her son who has become a Sanyasi. Not only that. He should offer namaskarams to her: “Prasur vandyaa” [प्रसुर्-वन्द्या].
It should not be done just as a matter of duty that is thrust upon, because ‘there is such a rule’. ‘Saadaram’ [सादरम्] – it should be offered with ‘reverence and love’.
Acharya gave his word to his mother only because there are rules like this.
Thereafter, he offered namaskaram to her and left in search of his Guru.
_______________________
1 This sloka found in the ‘Vairagya Sataka’ [वैराग्यशतकम् – 100 verses on freedom from worldly desires] written by Neelakanta Deekshitar, has been handled here beautifully by SriCharana as if it were the words of Sri Adi Sankara.
2 “(For you to properly decide what should be done or what should not be done) only the Sastras are the authority for you” – Gita XVI.24
_______________________________________________________________________
Audio
![]()