51 சக்தி பீடங்கள் 1:
மஹாமாயா பீடம், அமர்நாத், ஜம்மு காஷ்மீர்:
51 Shakti Peeth 1 :
Mahamaya Peeth, Amarnath, Jammu Kashmir:
சக்தி பீட நாயகி — ஸ்ரீமஹாமாயா
பைரவர் : த்ரிஸந்த்யேச்வரர்
அங்கம் : தொண்டை
1) ஸதி தாக்ஷாயணியின் தொண்டை விழுந்த அமர்நாத் சக்தி பீடம்
2) பரமசிவன் ஸஹிதமாக மஹாமாயையான ஸ்ரீபார்வதி விளங்கக்கூடிய மஹாபீடம். ஸ்ரீபார்வதி பீடம் என்றும் மறுபெயர் இந்த பீடத்திற்கு உண்டு.
3) சைதன்ய வடிவினளாகவும், மாயா விலாஸத்தை தாண்டுவிக்கக்கூடியவளாகவும் விளங்கும் மஹாமாயை.
4) ஸம்ஸார பந்தத்திற்கும், ஸம்ஸார மோசனத்திற்கும் காரணியான மஹாமாயை.
5) த்ரிமூர்த்திகளுக்கும், த்ரிதேவியர்க்கும் ஆதாரமாக, துரீயையாக, தனக்கு மேலொருவர் இல்லாதவளாக, நிஸ்ஸீம மஹிமை மிகுந்தவளாக விளங்கும் ஸ்ரீமஹாமாயா பகவதி
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
மயிலாடுதுறை ராகவன்
![]()