
Jaya Jaya Sankara Hara Hara Sankara – The boon / curse of Rishis and Mahans happen withour fail explains Sri Periyava, in this chapter.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a dedicated drawing and Shri ST Ravikumar for the great translation. Rama Rama
_____________________________________________________________________
துறவியானார்!
ஆகாசத்தில், ரதத்தில் ஒரு கந்தர்வன் தென்பட்டான்.
முதலைதான் அப்படி ஆனது.
பதினெட்டு தினுஸான தேவ ஜாதிகளில் கந்தர்வர் ஒன்று. சித்தர், கிந்நரர், கிம்புருஷர் முதலானவர்களைப் போல இவர்களும் தேவ ஜாதி. மநுஷ்ய ஜாதியைவிட ஜாஸ்தி அறிவுச் சக்தி, ஸூக்ஷ்மமான வ்யாபக சக்தி எல்லாம் உள்ள ஜாதிகள். நமக்கு தெரியாததெல்லாம் அவர்களுக்குத் தெரியும். நம் கண், காது முதலானவை சில விதமான லைட் வேவ், ஸெளண்ட் வேவ்களையே பிடிக்க முடிவதால் இதற்கு மேலே ஒன்றும் கிடையாது என்று எப்படிச் சொல்லலாம்? நம் காதுக்கு நேராகக் கேட்காததை க்ரஹித்து வந்து கேட்கப் பண்ண இப்போது ரேடியோ வந்திருக்கவில்லையா?1 வெளியிலே இப்படி ஒரு கருவியாயில்லாமல் ஈச்வரன் ஒரு சரீரத்திலேயே கரணமாக அந்த சக்தியையும் வைத்துச் சில ஜீவ ஜாதிகளைப் படைக்கிறானென்றால், அதெல்லாம் முடியாது என்று நாம் ஆக்ஷேபிக்கலாமா? ஸ்வாபாவிகமாக இப்படி அவர்கள் சக்தி பெற்றிருப்பது மட்டுமில்லை. யோக சாஸ்த்ரங்களில் சிலதில் இருப்பதை ஸாதனை பண்ணி ஸித்தி பெற்றால் மநுஷ்ய ஜாதிக்கும் அந்த சக்தி வரும். நம் கண்ணுக்குத் தெரியாததைக் காட்டும் ரேடியோலைட் மாதிரி நமக்கே வாய்க்கும்! யோக ஸித்தி பெற்றவர்களுக்கு கந்தர்வாதிகள் ப்ரத்யக்ஷமாகவே தெரிவார்கள். நாம் சாஸ்த்ர விஷயமென்றாலே ஒன்றும் ஆலோசித்துப் பார்க்காமல் குருட்டு நம்பிக்கை, ஸூபர்ஸ்டிஷன் என்று ஒரே வார்த்தையில் தள்ளி விடுகிறோம்!
முதலை கந்தவர்னாயிற்று. அது எப்படி என்பதற்கும் கதை சொல்லியிருக்கிறது.
கந்தர்வ ஜாதியினர் உத்ஸாஹ ஜீவிகள். குடி, பாட்டு, ஆட்டம் என்று இருப்பார்கள். இந்த கந்தர்வனும் அப்படி இருந்தவன்தான்.
அவனே தன் கதையை ஆசார்யாளிடம் சொல்லிக் கொண்டான்– [சிரித்து] ஆடோ – பயாக்ரஃபி!
“நான் பாட்டுக்கு ஸதா குடித்துக் கொண்டு, எங்கள் ஸ்த்ரீகளோடு ஆடிப் பாடிக் கொண்டு மதோன்மத்தமாகக் கிடப்பது வழக்கம். ஒருநாள் துர்வாஸ மஹர்ஷி வருகிற வழியிலே இப்படிக் கிடந்தேன். அவரோ இதற்கெல்லாம் நேர் விரோதம். நெருப்பாக இருப்பவர். சீலத்தில் மாத்ரமில்லை, கோபத்திலும் நெருப்பானவர். அவர் வருவதையும் லக்ஷ்யம் பண்ணாமல் முதலை கிடக்கிற மாதிரி ஜல க்ரீடை பண்ணிக் கொண்டு நான் கிடந்ததைப் பார்த்ததும் அவருக்கு மஹா கோபம் வந்துவிட்டது.
“முதலையாகப் போகக் கடவாய்!” என்று சபித்து விட்டார்.
உடனே அவர் காலில் விழுந்து அபசாரத்துக்காகக் கெஞ்சி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
“அவர் பரம சிவாம்சம் அல்லவா? அதனாலே ருத்ர கோபமும் வரும்; அது மாதிரியே, அந்தப் பரமசிவனை எப்படி ‘ஆசுதோஷி’2 என்று சொல்லியிருக்கிறதோ அப்படியே இவரையும் ரொம்ப எளிதாக ப்ரீதிப்படுத்தி விடவும் முடியும். இப்போது நான் கெஞ்சியவுடன் இரக்கம் கொண்டு விட்டார்.
“அதனால், ‘ஸரி, சாபத்தை அப்படியே வாபஸ் வாங்கி கொள்ள முடியாதாகையால் இப்போதைக்கு முதலை ஜன்மா வரட்டும். ஆனால் பரமேச்வரனுடைய காலடியைப் போய்ப் பிடித்துக் கொள்ளு. விமோசனம் கிடைத்துவிடும்’ என்றார்.”
புராணங்களில் அநேகக் கதைகள் இப்படி வருவது தான். ஒரு கதாபாத்ரம் மதோன்மத்தமாயிருந்து அபசாரம் பண்ணுவது, தபஸ்வி ஒருத்தர் சாபம் கொடுப்பது, உடனே இந்தப் பாத்ரம் கெஞ்சுவது, அவர் கருணையோடு விமோசனம் சொல்வது என்று. ஸாதாரணமான ஒரு ஜீவனுடைய லக்ஷணம் தன்னிஷ்டப்படித் திமிராக இருப்பது; அப்படி இருப்பதில் கஷ்டம் வந்தால் பல்லைக் காட்டுவது — ‘மிஞ்சினால் கெஞ்சுவது’ என்பதுதானென்றும்; தபஸின் லக்ஷணமும் தபஸ்வியின் லக்ஷணமும் என்னென்ன என்றும் இந்தக் கதைகள் காட்டுகின்றன. தபஸின் லக்ஷணம் சக்தி. அதனால்தான் ஒரு தபஸ்வி ‘கல்லாகப் போ, முதலையாகப் போ’ என்றால் தேவர்களுங்கூட அப்படியாகி விடுகிறார்கள். தபஸ்வியின் லக்ஷணம் என்ன? அந்த சக்தியை எப்படி உரியபடி ‘ஹார்னெஸ்’ செய்யணுமோ அப்படி நல்லதற்கே செய்வது. தப்புப் பண்ணினால் தண்டிக்க வேண்டியது தர்மமென்பதற்காக சாபம் தருவது. தப்பை உணர்ந்தபோது மன்னிக்க வேண்டியது தர்மமென்பதால் அப்போது கருணையோடு சாப விமோசனம் தருவது. அந்தக் கதைகளில் இப்படி ஒன்றுக்கொன்று ஈடு கொடுத்துக் கொண்டு போவதைப் பார்க்க அழகாக இருக்கும்.
“பரமசிவனின் காலடியைப் பிடித்துக்கொள் என்றால் அது எப்படி ஸாத்யம்? நான் முதலையானபின் ஏதாவது ஆற்றிலே மடுவிலே கிடப்பேனாயிருக்கும். அவரானால் கைலாஸ உச்சியில் உட்கார்ந்திருப்பவர். எப்படிப் பிடிப்பது?” என்றேன்.
“அதற்கு அவர், ‘அதைப் பற்றி நீ கவலைப்படாதே. அவருடைய காலடியே உன்னைத் தேடிக் கொண்டு வரும், போ!” என்று சொல்லி அனுப்பினார். ‘நான் கொடுத்த சாபம் தப்பாது. உன் முதலை ஜன்மமே ஈச்வரன் அவதாரம் செய்யப் போகிற ஸமயத்திலே அவருக்கு ஒரு ப்ரச்னையைத் தீர்த்து வைத்து, அவர் துரீயாச்ரமியாகப் புறப்பட உதவி பண்ணும். அவதார நோக்கம் நிறைவேற ஒரு கருவியாகும் பாக்யம் உனக்குக் கிடைக்கும்’ என்றார்.
“அவர் சொன்னபடியேதான் இங்கே வந்து ஸாக்ஷாத் சிவாம்சமான தங்களுடைய காலடியைப் பிடித்தேன். எனக்கும் முதலை ஜன்மா தீர்ந்தது; தங்களுக்கும் ஒரு குடும்பத்து மநுஷ்யர் என்ற ஜன்மா தீர்ந்தது; என்று சொல்லி அந்த கந்தர்வன் ஆசார்யாளை நமஸ்கரித்து விட்டுப் போய்விட்டான்.
முதலையாக ஜன்மா எடுத்த அவன் அவர் காலடியைப் பிடித்து சாப விமோசனம் பெற்ற மாதிரி நாமும் பிடித்தால் ஜன்ம நிவ்ருத்தி பெறலாம் என்று காட்டத்தான் அந்த க்ராமத்துக்கே காலடி என்று பேர் வந்ததோ என்னவோ? பகவத் பாதரின் ஊர் கால் – அடி!
1 1932-ல் கூறியது
2 ‘ஆசு’ — சடுதியில்; ‘தோஷி’ — திருப்தியடைந்து மகிழ்பவர்
______________________________________________________________
He (Acharya) became an Ascetic
In the sky a Gandharva (गन्धर्व) appeared on a chariot.
The crocodile had got transformed [into the Gandharva].
Gandharva is one of the eighteen types of Devas. Like Siddhas, Kinnaras and Kimpurushas, they also belong to the Deva species. These species have superior mental abilities as compared to humans, and also the subtle power to pervade everywhere. They can see what we cannot. Since our eyes and ears can grasp only certain types of light waves and sound waves, can we declare that there is nothing beyond them? To help us hear what our ears are not able to hear directly, we now have the Radio, don’t we?1 If Eswara has created certain forms of life which have these powers built within their body, rather than have it as an external device, can we object to that? It is not that they alone have this innate power. If certain practices prescribed in the Yoga Sastras are taken up and perfection is attained, such power will be obtained even by humans. Like the radio-waves which show what is not visible to our naked eyes, we will also acquire unique powers! Gandharvas and other Devas will be explicitly visible to people who have attained Yoga Siddhi. When it comes to matters pertaining to our Sastras, we reject them with a single word as blind belief, superstition, etc. – without making any effort to understand them!
The crocodile became a Gandharva. A story is narrated as to how that happened.
People of Gandharva race are pleasure loving beings. They revel in drinking, singing, dancing, etc. This Gandharva was also like that.
He himself recounted his life to Acharya – [laughing] Auto-biography!
“I used to be inebriated all the time and enjoyed myself, singing, and dancing with our women. One day, I was lying in an inebriated condition on the path where Durvasa Maharishi was coming. Alas, his life was diametrically opposite to all this. He was like the fire. Not only in his character, but also in anger he was like fire. On seeing me lying down in a pool of water like a crocodile without even noticing him coming, he got very furious.
He cursed me, ‘You shall become a crocodile!’.
Immediately I fell on his feet and sought his pardon, apologising for my wrongful behaviour”.
“Was he not an aspect of Paramasiva? So, he used to get angry like Rudra; Also, just like Paramasiva, who is called ‘Aasutoshi’2 [आशुतोषी], he can also be easily satisfied. Now he took pity on me when I pleaded with him.
He said ‘Okay. Since it is not possible to take back the curse, for now you may take birth as a crocodile. But go and hold the feet of Paramasiva. You will be liberated’”.
This is how it is in many of the stories in the Puranas. One character does a wrong deed in a state of inebriation; A Tapasvi gives a curse; Immediately that character pleads and the Tapasvi, out of compassion, suggests something for relief from the curse. These stories depict the characteristics of a normal living being who lives arrogantly as per his wish; if he faces difficulty in leading such a life, he bares his teeth; if it goes beyond him, he pleads. The stories also depict the characteristics of penance [tapas] and that of a saint [tapasvi]. The characteristic of penance is power. That is why, when a Tapasvi curses saying ‘Become a stone’ or ‘Become a crocodile’, even Devas get transformed [as per the Tapasvi’s curse]. What is the characteristic of a Tapasvi? He should harness that power in a proper way for general good. Giving curse is Dharma since a person who does a wrong deed should be punished. Forgiving a person when the person realises his mistake is Dharma too. So, out of compassion, the person is told a way out of his curse. It is interesting to observe that such things happen in a coordinated way in these stories.
“I asked him, ‘You say I should get hold of the feet of Paramasiva; how is that possible? As a crocodile I may be lying in some river or on a mound; He is sitting on top of Mount Kailash; How can I get hold of his feet?’
Responding to that, he sent me away saying ‘You don’t worry about that. His feet will search for you and reach you, Go!’. He further said ‘the curse I have given will not fail. During his incarnation, your life as a crocodile will solve a problem faced by him and help him take up the life of a Sanyasi. You will get the fortune of being a tool in fulfilling the objective of the incarnation’.
Just as he had mentioned, I caught hold of your feet, you – who is obviously an aspect of Siva. For me, the life of a crocodile has ended; For you also, life as a family person has come to a close”. Saying this, the Gandharva offered his namaskarams to Acharya and disappeared.
Is it possible that the village itself came to be known as Kalady only to show us that just as he (Gandharva), who had taken the life of a crocodile, could get relief from the curse on clinging to His feet, we will also attain relief from this life if we cling to His feet? The place of Bhagawat Pada is, Kaal-Adi!
1 This was spoken in 1932
2 ‘Aasu’ – immediately; ‘toshi’ – Who revels on being satisfied.
____________________________________________________________________
Audio
![]()
One Response
🙏💐🙏💐🙏💐