
Jaya Jaya Sankara Hara Hara Sankara – The incident where Sri Bhagawathpadhal took ‘Aapat Sanyasam’ has been lucidly narrated by Sri Periyava in this chapter.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for depicting a colorful drawing and Shri ST Ravikumar for the great translation. Rama Rama
_________________________________________________________________
துறவியானார்!
கிட்டே வந்துவிட்ட நதியில் ஒருநாள் தாயாருக்கு ஸ்நானம் பண்ணி வைத்தார். அப்புறம் தாமும் ஸ்நானம் பண்ண இறங்கினார்.
அப்போது அவர் காலை ஒரு முதலை பிடித்துக் கொண்டு விட்டது. (இப்போதுங்கூட அந்தத் துறைக்கு ‘முதலைக் கடவு’ என்றே பேர் இருக்கிறது.)
கரையேறிருந்த தாயார் பரிதவித்துப் போய்விட்டாள். பர்த்தா காலமாகி விட்டார், ஏக புத்ரனுக்கு இப்படி ஆபத்து என்றால் ஒரு ஸ்த்ரீக்கு எப்படியிருக்கும்?
ஆசார்யாளானால் ‘இதுதான் நாம் எதிர்பார்த்த ஸமயம்’ என்று அவளைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். “முதலை வாயிலிருந்து மீளுவது நடக்காத காரியம். இது ஸஹஜமான சாவில்லை. துர்மரணம். அபம்ருத்யுவுக்கு ஆளானவர்களின் ஆவி படுகிற கஷ்டம் எனக்கு உண்டாகும். உனக்கும் புத்ரகர்மாவினால் ஏற்படும் ஸத்கதி கிடைக்காது. இப்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது – இதிலிருந்து மீளுவதற்கு வழி ஏற்பட்டாலும் ஏற்படும்படியாக ஒன்றுதோன்றுகிறது. உனக்கும் அது ஸம்மதமானால் அப்படிப் பண்ணுகிறேன். அப்போது எனக்கும் அபம்ருத்யு தோஷம் வராது. உனக்கும் ஸத்கதி கிடைக்கும். என்னவென்றால்…
இப்போது நான் ஸந்நியாஸாச்ரமம் வாங்கிக் கொண்டால் வேறே ஜன்மா வந்து விட்டது போலாகும். அப்போது இந்த ஜன்மாவுக்கு ப்ராரப்தமாக ஏற்பட்ட மரணமும் விலகிவிடலாம். காலை இழுக்கும் முதலை விட்டுவிடலாம். ஒருத்தன் ஸந்நியாஸியானால் அவனுடைய இருபத்தோரு முன் தலைமுறைக்காரர்களுக்கு ஸத்கதி கிடைத்து விடும். அதனால் உனக்கும் அப்படிக் கிடைக்கும்.”
“முதலை விடாமல் மரணமே ஏற்பட்டாலும் ஸந்நியாஸியாகிவிட்டால் அது துர்மரணம் என்று ஆகி ஆவியாய் திரியப் பண்ணாது.
ஆகையால் எப்படிப் பார்த்தாலும் அதுதான் வழியென்று தோன்றுகிறது”.
“ஜலத்திலிருந்து கொண்டுதான் ப்ரைஷ மந்த்ரம் (துறவற தீக்ஷை மேற்கொள்வதற்கான மந்த்ரம்) சொல்லி, மனஸினால் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். தற்செயலாக நான் ஜல மத்தியிலேயே இருக்கிறேன்”.
“இந்த ஸந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் முதலை முழுங்குவது தவிர வேறே என்னவும் நடப்பதற்கில்லை. எனக்கும் துர்மரணம், உனக்கும் ஸத்கதி இல்லை என்றுதான் முடிந்துவிடும். அதனால் இதுதான் வழியென்று அபிப்ராயப்படுகிறேன். ஆனாலும் உன் அநுமதி இல்லாமல் ஸந்நியாஸம் வாங்கிக்கொள்வதற்கு எனக்கு உரிமையில்லை. அதனால் நீ தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என்று சொன்னார்.
‘எட்டு வயஸுக் குழந்தையை ஸந்நியாஸியாகப் போ என்று சொல்வதா என்று பார்த்தால், இல்லாவிட்டால் முதலை அல்லவா நிச்சயமாக இழுத்துக் கொண்டு போய்விடும்?’ என்று அந்த அம்மாள் குழம்பினாள். ‘தன்னோடு கூட வாஸம் பண்ணாவிட்டாலும் உயிரை வைத்துக் கொண்டு [“உசிரை வெச்சுண்டு” என்று ஒரு தாயின் பரிவுடன் கூறுகிறார்கள்] எங்கேயாவது ஸந்நியாஸியாக இருக்கட்டும்; கண்ணாலேயாவது எப்போதாவது பார்க்கலாம்; பார்க்காவிட்டால்கூட ஸரி, எங்கேயாவது குழந்தை இருந்து கொண்டிருந்தால் போதும்’ என்று நினைத்தாள்.
ஆனாலும் ‘ஸந்நியாஸம் வாங்கிக்கோ!’ என்று சொல்ல நா வரவில்லை. “உனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியே பண்ணிக் கொள்ளு” என்று சொன்னாள்.
இப்படிச் சொல்வதா, அப்படிச் சொல்வதா என்று குழப்பமாக, dilemma என்கிறார்களே, அப்படி அந்த அம்மாளுக்கு ஏற்பட்டது இது இரண்டாம் தடவை. இதற்கு முந்தி, முதல் ‘டைலம்மா’ ஆசார்யாளுடைய பிறப்பைப் பற்றி ஏற்பட்டது. “மந்தர்களாக, ஆனால் தீர்க்காயுஸோடு நூறு பிள்ளைகளா? மஹா மேதையாக, ஆனால் அல்பாயுஸாக ஒரே பிள்ளையா? எது வேண்டும்?” என்று ஸ்வாமி கேட்டது முதல் ‘டைலம்மா’! அப்போது என்ன சொன்னாள்? உங்கள் இஷ்டப்படியே பண்ணிக்கோங்கோ!” என்றுதானே சொன்னாள்? இப்போது அவருடைய இறப்பைக் குறித்ததாக இரண்டாவது ‘டைலம்மா’ ஏற்பட்டபோதும் அதே பதிலைச் சொன்னாள்!
‘ஒருவேளை அப்போது ஸ்வாமி சொன்ன அல்பாயுஸ் காலம் இப்போதுதான் முடிவதாயிருக்குமோ என்னவோ? இப்போது நாம் எதையாவது சொல்லிவிடாமல், அவருக்கே விட்டுவிட்டால் மனஸை மாற்றிக் கொண்டு ஆயுஸை நீடித்தாலும் நீடிக்கக் கூடும்’ என்று நினைத்துச் சொன்னாள்.
“நீ என்ன செய்தாலும் ஸரி” என்று அவள் சொல்லிவிட்டதால் தாயாரின் அநுமதி இல்லாமலில்லை என்று ஆகிவிட்டது! இதுதானே அவருக்கு வேண்டியிருந்தது? அதனால் இது அர்த்தாங்கீகாரம்தான் (முழுச் சம்மதமாயில்லாத பாதிச் சம்மதம்தான்) என்று எடுத்துக் கொள்ளாமல், அநுமதி கிடைத்துவிட்டதாகவே வைத்துக் கொண்டு, ப்ரைஷோச்சாரணம் பண்ணி ஸந்நியாஸாச்ரமம் வாங்கிக் கொண்டு விட்டார்.
‘தன்னால் ஒரு ப்ராணிக்கும் ஒருவித பயமும் உண்டாகப்படாது’ என்பதாகப் பரம ப்ரேமையைத் தெரிவிப்பது அந்த (ப்ரைஷ) மந்த்ரம். ஸந்நியாஸி என்றால் அவனைப் பார்த்து ஒரு ப்ராணி பயப்படக் கூடாது. ஜீவகுலம் முழுதற்கும் அவனைப் பார்க்கிறபோதே ஆனந்தம் ஏற்பட வேண்டும். க்ருஹஸ்தன் அவனுடைய தர்மத்தை உத்தேசித்துப் பல பேரை வேலை வாங்குவதில் விரட்டியடிக்க வேண்டியும் வரும், தண்டிக்கும்படியும் வரும். ‘ஐயோ வந்துட்டானா?’ என்று இரண்டு பேர் அவனிடம் பயப்பட நேரலாம். அவன் தான்யம் கொண்டு வருகிறான், காய்கறி கொண்டு வருகிறானென்றால் அப்போது அந்தப் பயிர், ‘என்னைப் பிடுங்க வந்து விட்டானே?’ என்று பயப்படும்; செடி, ‘என்னைக் கிள்ளி (கறிகாய்) எடுத்துக் கொண்டு போக வருகிறானே!’ என்று நடுங்கும். ஸந்நியாஸிக்கோ இந்த மாதிரி ஹிம்ஸைக் கார்யம் எதுவுமே விதிக்கப்படவில்லை. யாராவது பிக்ஷை பண்ணிப் போட்டால்தான் அவன் ஆஹாரம் பண்ணலாமே தவிர, தானாக ஒரு இலையைகூடப் பறிக்கப்படாது என்று வைத்திருக்கிறது. யாருமில்லாத வனத்திலிருந்தால்கூட, அதுவாகவே உதிர்ந்து விழுந்த பழம், சருகு முதலியவற்றைத்தான் அவன் எடுத்துக் கொள்ளலாம். ஜைன – பௌத்தங்கள் சொல்லும் பூர்ண அஹிம்ஸை நடைமுறை உலகத்தில் இவனுக்குத்தான் ஸாத்யம் என்று நம் தர்ம சாஸ்த்ரத்தில் இப்படி ஸந்நியாஸ தர்மத்தை வைத்திருக்கிறது.
ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதில் இரண்டு மூன்று விதம் இருக்கிறது. ஸந்நியாஸி ஆகவேண்டுமென்று ஒருத்தனுக்கு இருந்தால் சாஸ்த்ர ப்ரகாரம் detailed-ஆக ச்ராத்தாதிகள், ஹோமாதிகள் எல்லாம் பண்ணி குரு முகமாக ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதுதான் முறை – க்ரம ஸந்நியாஸம் என்பது. நோய் வாய்ப்பட்டு மரணத்தை எதிர்பார்த்திருக்கும்போது விரக்தி, வைராக்யம் ஏற்பட்டு ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதற்கு ‘ஆதுர ஸந்நியாஸம்’ என்று பேர். பலஹீன ஸ்திதியிலுள்ள இவன் விஸ்தாரமாக ஹோமம், ச்ராத்தம் என்று பண்ண முடியுமா? அதனால் சுருக்கி ஸுலபமாக்கி தீக்ஷா க்ரமத்தைக் கொடுத்திருக்கிறது. இதையும்விட இன்னொரு விதம், ‘அத்யாதுர (அதி ஆதுர) ஸந்நியாஸம்’ என்று இருக்கிறது. ‘ஆபத் ஸந்நியாஸம்’ என்று பொதுவாகச் சொல்வது அதுதான். வ்யாதி முற்றி ப்ராணாபாயமான நிலையே ஏற்படும்போதோ, அல்லது ஏதாவது பெரிய விபத்து ஏற்பட்டு சீக்ரமே மரணம் ஸம்பவிக்கலாமென்று இருக்கும்போதோ சட்டென்று ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு விடுவதுதான் ஆபத் ஸந்நியாஸம். இந்த நிலையில் ப்ரைஷோச்சாரணம் மட்டுமே போதும். (குரு முகமாக இன்றித்) தானே அதை ஸ்வீகரித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறது.
ஆசார்யாள் இப்போது ஸந்நியாஸியானது அப்படித்தான். ஆனாலும் கொஞ்சம் யதோக்த ஸந்நியாஸம் மாதிரியே ஜல மத்தியில் இருந்து கொண்டு ஆச்ரம ஸ்வீகாரம் செய்து கொள்ளும்படியாக அவருக்கு வாய்த்தது!
உடனே முதலையும் அவர் காலை விட்டுவிட்டது!
_____________________________________________________________________
He (Acharya) became an Ascetic
One day, he helped his mother have her bath in the river which had come closer to home. Later, he got down to have his own bath.
As he did so, a crocodile caught hold of his leg. (Even now, that bank of the river is known by the name ‘Mudhalai Kadavu’ [Crocodile Ghat].)
The mother who had already reached the shore got extremely distressed. How a woman will feel when her husband is no more and there is such a danger to her only son?
On the other hand, Acharya thought ‘this is the moment I have been waiting for’ and started talking to her. He said “Freeing myself from the clutches of this crocodile is an impossible task. This is not an ordinary death. It is an unnatural death [दुर्मरणम्]. I will have to go through the hardships experienced by those spirits which meet with an untimely death [अपमृत्यु]. You will also not attain the higher abode [Sadgati-सद्गति] which happens only when the son performs the obsequies [पुत्रकर्म]. However, one thought occurs to me now – which may help in getting out of this situation. If that is agreeable to you, I will do it. If I do it, I will not incur the blemish of having had an untimely death and you will also attain liberation. It is…..
If I take to Sanyasam [सन्न्यासम्] now, it will be equivalent to having got another birth. Then, the death which had to happen in this life may also not happen. The crocodile which is pulling the leg might let it go free. If one person takes up Sanyasam, twenty-one generations prior to him will attain Sadgati. So, you will also attain it.”
“Even if the crocodile does not let go of the leg and death does occur, if I become a Sanyasi, it will not be considered an unnatural death, and the spirit will not keep wandering.
Thus, whichever way we may look at it, this seems to be the only solution.”
“One should stand in the water, chant the Praisha mantra (प्रैष मन्त्र – Mantra for taking up Sanyasa deeksha) and renounce all attachments mentally. Incidentally, I am already standing in water”.
“If this opportunity is let off, nothing else will happen except for the crocodile swallowing me. It will end with an unnatural death for me and no Sadgati for you as well. So, I feel this is the only way. Still, I do not have the right to take up Sanyasam without your permission. You have to make the decision.”
The lady was perplexed. ‘Can I ask an eight-year-old child to become a Sanyasi? If I don’t, will this crocodile not take him away?’ She thought ‘Even if he will not live with me, let him be an ascetic somewhere, but holding on to his life (Periyava says with the compassion of a mother “Usira Vechundu” [“holding on to life”]). I can at least see him once a while; Even if I do not get to see him, it is enough if the child is alive somewhere’.
Still, she could not get herself to say the words ‘Okay, Take up Sanyasam’. Instead, she said “You may act as per your decision”.
She was confused as to what stand she should take – what they term as ‘dilemma’ – for the second time in her life. Before this, the first time she faced a dilemma was regarding Acharya’s birth. The question posed by Swami “Do you want one hundred sons who would be unintelligent but with long life span? Or only one son, who would be extraordinarily intelligent, but with a very short life span?” was her first dilemma! What did she say then? Did she not say, “Do as per your wish”? Now, when the second dilemma came up regarding his death, she gave the same reply!
She thought, ‘Could it be that the short life span that Swami had mentioned then, was coming to an end now? Instead of saying anything now, if I leave it to Him, He may change his mind and lengthen the life span’.
Since she said, “Whatever you do is acceptable”, it meant that it was not without the permission of the mother! Is this not what he [Acharya] wanted? Without taking it as a semi- acceptance (Half approval and not a full approval), taking it as permission granted, he took up Sanyasam by chanting the ‘praisha’ mantra.
That (Praisha) mantra says, ‘I should not be the cause of fear for any living being’, thereby conveying the highest form of love. A Sanyasi is one who is never the cause of fear for any living being. The entire living world should derive joy on seeing him. A householder, in the process of observing his prescribed conduct, may have to be harsh while getting work done, or even punish someone. It could happen that a couple of people might fear him ‘Oh! He has arrived?’. When he brings grains or vegetables, those crops might fear ‘Oh, has he come to pull me out!’; A plant might shiver ‘Oh, he has come to cut me and take away (the vegetable)!’. For a Sanyasi, no such tasks involving violence are prescribed. It is prescribed that he should eat only if someone offered him food and should never pluck even a leaf on his own. Even if he were living in a forest where no one else lived, he can only take those fruits or dry leaves which have fallen to the ground on their own. Our Sastras have prescribed this as the code of conduct only for Sanyasis – the Ahimsa way of life prescribed by Jainism and Buddhism – as it can be followed only by him (an ascetic).
There are two or three ways for taking up Sanyasam. If one desired to become a Sanyasi, the proper way is to perform sraaddham [श्राद्ध], homam [होम] etc. in a detailed manner as given in the Sastras, and take Sanyasam through a Guru. This is called ‘Krama Sanyasam’ [क्रम सन्न्यासम्]. Taking up Sanyasam when one is on his death-bed due to illness, thereby developing detachment and indifference to all worldly desires, is called ‘Aatura Sanyasam’ [आतुर सन्न्यासम्]. Can such a person who is very weak perform homam, sraaddham etc. in an elaborate manner? Hence a shortened and simplified procedure [दीक्षा क्रम] is prescribed by the Sastras for him. There is one more type called ‘Atyaatura’ [अत्यातुर] (ati aatura – अति आतुर) Sanyasam. That is what is generally called as ‘Aapat Sanyasam’ (आपत् सन्न्यासम्). Taking up Sanyasam instantly either at a time when one is in an advanced stage of illness and there is danger to life, or when a terrible accident takes place and death is imminent, is called ‘Aapat Sanyasam’. In such a situation, chanting the ‘praisha’ mantram alone is sufficient. In such cases, Sastras permit a person to take up Sanyasam on his own (not necessarily through a Guru).
This is how Acharya became a Sanyasi now. Still, it happened that he could take up Sanyasam, partly in the prescribed way by standing in water!
Immediately the crocodile let go off his leg!
___________________________________________________________________
Audio
![]()
One Response
OMSRI ADHI SHANKARA BHAGAWAT PADHA NAMAHA. OM SRI MAHA PERIAVA SARANAM. JAI MA BHARATH.