I vaguely remember sharing this site in the past. Regardless, please visit this site for all of Anna’s work. Other books written by Anna may not be widely known to all – so this site is intended to reach all devotees to enjoy other books too. Although these are copyrighted, they are giving to us for free. In return if you all want to contribute something, pl do as all the proceedings are given to veda patasala and ghosala purposes – very noble thought.
The site has been designed very nicely. I am going to start reading some of these books soon.
Randomly clicked on an article – nobody can say better than Periyava that poverty is better! Periyava Periyavathaan!
“இந்த நாள்ல ராஜாங்கத்துல, கம்பெனிகள்ல கொடுக்கற சம்பளத்துல வீசப் பங்குகூட ஒங்களுக்கெல்லாம் நான் தரேனோ இல்லியோ? அங்கேல்லாம் ஒரு ப்யூனுக்குத் தரதுதான் இங்கே மானேஜருக்கே இருக்கும்! எந்த ஹைதர் காலத்துலேயோ ஏற்படுத்தின சம்பளத் திட்டத்தை ஏறக்கொறய அப்படியேதான் விட்டு வெச்சிருக்கேன்.
“ஆசார்யாள் பேருக்காக ஊரார் கொண்டு வந்து கொட்றதை நாம் வாரிவிட்டுடப்படாது. ஸமூஹத்துக்கு நாம ‘அக்கவுண்டபிள்-ங்கிறது ஒரு காரணம். அதுவுந் தவிர, நம்ம சாஸ்த்ரமே ரொம்ப எளிமையாகத்தான் வாழணும்னு சொல்லி அதை நானும் ஊர் ஊராச் சொல்லிண்டு வரேன். அப்படி இருக்கச்சே இங்கேயும், இங்கே சேர்ந்தவாளும், வெளியில நடக்கற ‘தாட்பூட்’ மாதிரியே பண்ணினா சரியாயிருக்குமா? ‘தரித்ரமே நல்லதுதான், அப்பதான் சிக்கனம் வரும்’கிறதையும் இங்கேயாவது என்னால முடிஞ்ச மட்டும் அமுல் பண்ணிக் காட்டணும்னும்…………அதோட, இங்கே வேலை பாக்கறதுங்கறது மத்த எடங்கள்ல அந்தஸ்து, பர்ஸ் ரொம்பறது முதலானதுகளுக்காக உத்யோகம் பாக்கற மாதிரி இல்லே. ஆசார்யாளுக்குக் கைங்கர்யம்-ங்கிறதுதான் இங்கே வேலை பாக்கறதுக்கு உயிர்நிலை. அப்படியிருக்கச்சே இங்கேயும் மத்த எடம் மாதிரியே சம்பளம் சாடி-ன்னு ஒசத்தி செஞ்சுட்டா அது ஆபீஸ் உத்யோகந்தானே தவிர ஆசார்யாள் கைங்கர்யமா இருக்காது. கைங்கர்யம்னா, குறிப்பா குரு கைங்கர்யம்னா, அதுல ஒரு தியாக அம்சமும் இருந்தாத்தான் அந்தப் பேர் பொருந்தும்.
“இப்படிப் பல காரணம் சொன்னாலும், நடைமுறைல கூட்டிக் கழிச்சுப் பாத்தா ஒங்களையெல்லாம் ரொம்ப மட்டுச் சம்பளத்துல வெச்சுக் கஷ்டந்தான் படுத்திண்டு இருக்கேன். ஆசார்யாள் கைங்கர்யம்னுதான் நீங்கள்ளாமும் அதைக் கவனிக்காம ஒட்டிண்டிருக்கேள்……”
![]()

3 Responses
Aum Sri Maha Periyava Saranam
Namaskaram Anna,Many Thanks.
Great service you have done today Sir. I could download Sir’s Periya books. Namaskaram