ஆதிசக்தி ஸ்ரீகமலாம்பிகை மஹிமை:

ஶ்ரீ கமலாம்பிகை பிள்ளைத்தமிழ் :

“கைலை நாகேச்சுரம் வெண்காடு தில்லைநகர் கந்தபுரி காஞ்சி காழி
காருயவையாறு வேதிகுடி வலிவலம் கற்குடி நாகை தெங்கூர்
மயிலை யெழு மாகாளம் முதுகுன்று நெல்வேலி வாஞ்சியம் குடந்தை வாய்மூர்
மதுரை வீரட்டம் எட்டு அம்பர் மாயூரநகர் வண்டுறை சேது நல்லூர்
இயமனூர் சாய்க்காடு கஞ்சனூர் நல்லாறு இருக்கைநகர் துருத்தி வீழி
இடைமருது தஞ்சை நகர் நாரையூர் விரிஞ்சனூர் ஐயாறு ஏடகம் மறைசை காசி
செயவந்தியூர்க் கமலையுறை ராசக்தி செங்கீரையாடி அருளே”

திருக்கயிலையில் ஶ்ரீபார்வதிதேவியாக
திருநாகேச்வரத்தில் ஶ்ரீகிரிகுஜாம்பிகையாக
திருவெண்காட்டில் ஶ்ரீப்ரம்மவித்யாம்பிகையாக
திருத்தில்லையில் ஶ்ரீசிவகாமஸுந்தரி அம்மையாக
கந்தபுரி எனும் செம்பொனார்க்கோவிலேலே ஶ்ரீசுகந்தகுந்தளாம்பிகையாக
திருக்காஞ்சியிலே ஶ்ரீகாமாக்ஷி அம்பிகையாக
சீர்காழியிலே ஶ்ரீஸ்திரசுந்தரியாக
திருவையாற்றிலே ஶ்ரீதர்மஸம்வர்த்தினியாக
திருவேதிக்குடியிலே ஶ்ரீமங்கையர்க்கரசி அம்மையாக
திருவலிவலத்திலே ஶ்ரீமத்யாயதாக்ஷியாக
திருகற்குடியிலே ஶ்ரீஅஞ்சனாக்ஷி தேவியாக
திருநாகையிலே ஶ்ரீநீலாயதாக்ஷி அம்மையாக
திருத்தெங்கூரிலே ஶ்ரீப்ருஹந்நாயகியாக
திருமயிலையிலே ஶ்ரீகற்பகவல்லி அம்மையாக
திருமாகாளத்திலே ஶ்ரீபயக்ஷயாம்பிகையாக
திருமுதுகுன்றிலே ஶ்ரீவ்ருத்தாம்பிகை ஶ்ரீபாலாம்பிகையாக
திருநெல்வேலியிலே ஶ்ரீகாந்திமதிமதியம்மையாக
திருவாஞ்சியத்திலே ஶ்ரீமங்களநாயகியாக
கும்பகோணத்திலே ஶ்ரீமங்களாம்பிகையாக
திருவாய்மூரிலே ஶ்ரீக்ஷீரோபவசனியாக
மதுராபுரியிலே ஶ்ரீமீனாக்ஷி அம்பிகையாக

அட்ட வீரட்டமாம்
1) திருக்கண்டியூரில் ஶ்ரீமங்களாம்பிகையாக
2) திருக்கோவிலூரில் ஶ்ரீசிவாநந்தவல்லியாக
3) திருவதிகையில் ஶ்ரீதிரிபுரசுந்தரியாக
4) திருப்பறியலூரில் ஶ்ரீபாலாம்பிகையாக
5) திருவிற்குடியில் ஶ்ரீமங்களாம்பிகையாக
6) திருவழுவூரில் ஶ்ரீபாலாங்குராம்பாளாக
7) திருக்குறுக்கையிலே ஶ்ரீஞானாம்பிகையாக
8) திருக்கடவூரிலே ஶ்ரீஅபிராமவல்லியம்மையாக

அம்பர் எனும் தலத்திலே ஶ்ரீசுகந்தகுந்தளாம்பிகையாக
மாயூரத்திலே ஶ்ரீஅபயப்ரதாம்பிகையாக
திருவண்துறையிலே ஶ்ரீசக்தயாயதாக்ஷியாக
சேது எனும் ஶ்ரீராமேச்வரத்திலே ஶ்ரீபர்வதவர்த்தினியாக
நல்லூரிலே ஶ்ரீகல்யாணசுந்தரியாக
இயமனூரிலே — தலம் சரியாக அறியமுடியவில்லை
திருச்சாய்க்காட்டிலே ஶ்ரீகோஷாம்பிகையாக
திருநள்ளாற்றிலே ஶ்ரீப்ராணாம்பிகையாக
இருக்கை நகர் எனும் ருஷிவந்தியத்திலே ஶ்ரீபாகம்பிரியாள் அம்மையாக
திருத்துருத்தியிலே ஶ்ரீம்ருதுமுகிளகுசாம்பிகையாக
திருவீழிமிழலையிலே ஶ்ரீசுந்தரகுசாம்பிகையாக
திருவிடைமருதூரிலே ஶ்ரீப்ருஹத்சுந்தரகுசாம்பாளாக
தஞ்சாபுரத்திலே ஶ்ரீஆனந்தவல்லியம்மையாக
திருநாரையூரிலே ஶ்ரீதிரிபுரஸுந்தரியாக
திருவிரிஞ்சனூரிலே ஶ்ரீப்ரம்மஸம்பத்கௌரியாக
திருவேடகத்திலே ஶ்ரீசுகந்தகுந்தளாம்பிகையாக
திருவேதாரண்யத்திலே ஶ்ரீவீணாவாதவிதூஷணியாக
திருக்காசியிலே ஶ்ரீஅன்னபூர்ணா ஶ்ரீவிசாலாக்ஷியாக
செயவந்தியூராம் கமலாபுரியில் உறையும் தலைவியாக

இத்தனை வடிவங்களிலே அந்தந்த தலங்களிலே அந்தந்த தேவியராக விளங்கும் திருவாரூர் கமலையுறை பராசக்தியான கமலாம்பிகைத் தாயே!! எங்கே ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி தலையைத் தூக்கி செங்கீரை ஆடு பார்ப்போம்!!

அனைத்து க்ஷேத்ரங்களில் விளங்கும் அத்தனை தேவியரும் கமலாம்பிகை ஒருத்தியே என்பது கருத்து

உலகிலுள்ள அனைத்து தலங்களுக்கும் மூலாதாரமான மஹாசக்திபீடமாக திருவாரூர் உள்ளது என்றும், ஶ்ரீலலிதா பரமேச்வரி திருவாரூரிலே கமலாயலயமாம் சிதக்னியிலே தோன்றி பண்டாஸுரனை வதைத்தாள் என்பதும் ஶ்ரீவித்யோபஸகர்க்கு மிகவும் தெரிந்த விஷயங்களே!!

மூலாதாரமான மஹாபீடமாதலால் உலகிலுள்ள தேவியர் அனைவரும் கமலாம்பிகையிடமே தோன்றி, கமலாம்பிகையிடமே ஒடுங்குவர் என்பதாலும் இவள் மஹாகாமகலேசுவரி. ஶ்ரீராஜராஜேச்வரியே இவளுக்கு பரிவார தேவதையாவதால் இவள் ஸர்வமும் ஸங்கமிக்கும் ஆதியான மஹாகாமகலாக்ஷரத்திற்கு ஈச்வரி!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:

— மயிலாடுதுறை ராகவன்

 

Loading

4 Responses

  1. Dear Mayiladuthurai Raaghavan
    For long tie i have a doubt. Since you are a Sanskrit scholar, seek your inputs.
    एक अम्बर ईश्वर – Normally we wear single cloth only for apara kaaryam. So this doesn’t right.
    एक अम्र ईश्वर – Since Parvathi dEvi was suposed to have penance under A MANGO tree in Kanchipuram and obtaned layam with paramEzwara there EkaamreZwara sounds with meaning.
    However, almost any one whom i come across call the temple as EKAAMBAREZWARA एकाम्बरेश्वर temple. Is there a different intrepretation to this?
    SHanyosmi

    1. Shri Maathre Namaha

      Ekamranathar is the Correct Naama of Shri Parameshwara. In tamil he will be Called as Ekamban “ஏகம்பன்” Which denotes he is Agni SthambA (Represents Thiruvannamali Jyoti Sthamba RupA of Shiva).
      Ekambaranathar is not Right way of Pronouncing Swami’s Nama.

      ஏகாம்ரநாதர் அல்லது ஏகம்பர்

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading