128. Sri Sankara Charitham by MahaPeriyava – Call for Service to the World! Propriety of conduct for Humans and Mystery of Incarnation


Jaya Jaya Sankara Hara Hara Sankara – The ways and means of Avatara Purushas and Eswara cannot be comprehended by normal human minds? Sri Periyava explains with some examples.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a great drawing and Shri ST Ravikumar for the great translation.  Rama Rama

____________________________________________________________________

உலகப் பணி அழைத்தது! மனித தர்மமும், அவதார மர்மமும்!

லோகத்துக்கெல்லாம் பண்ண வேண்டிய கார்யத்தை ஆரம்பித்துவிட வேண்டுமென்று ஆசார்யாள் நினைத்தார். பிறந்தது முதற்கொண்டே அடி மனஸில் அந்த எண்ணம்தான் அவருக்கு ஸதாகாலமும் இருந்து வந்தது. ஆனாலும் ‘ப்ரைவேட் லைப்’ மாதிரி ப்ரம்மசர்ய நியமங்களைப் பண்ணுவதும், மாத்ரு சுச்ரூஷை பண்ணிக் கொண்டிருப்பதும்கூட லோகத்திற்குப் பாடமாகத்தானே என்பதால் செய்து வந்தார். அதற்காக உலகம் பூரா அம்மாக்கள் இருக்கும்போது இந்த ஒரு அம்மாவுக்கே பணி செய்து கொண்டிருந்தால் போதுமா என்று நினைக்க ஆரம்பித்தார். ‘நாம் ஒரு தாயாருக்கு மட்டும் குழந்தை இல்லை. லோகத்துக்குக் குழந்தை, லோகம் பூராவுக்கும் செய்ய வேண்டியதை ஒரு தாயாரை முன்னிட்டு எத்தனை காலம் ஒத்திப் போட்டுக் கொண்டே போவது? லோகம் ஒரேயடியாகக் கெட்டுப் போயிருக்கிறதென்றுதானே வந்தோம்? ஜ்வரம் முற்றிக் கொண்டே போகிறபோது மருந்து கொடுக்கத் தாமஸம் செய்யலாமா?’ என்று நினைத்தார்.

என்ன மருந்து? ஒன்றும் பண்ணாமல் சும்மா இருக்கும் மருந்து! அந்த நிலையை அடைவிக்கும் அத்வைத மருந்து! ‘எல்லோருக்கும் சும்மா இருக்கிற தத்வத்தைச் சொல்வதற்காக ஒரு நிமிஷம்கூட சும்மாயில்லாமல் சுற்ற வேண்டுமென்று வந்தோம்! எத்தனை காலம் இந்த க்ராமத்தையே சுற்றி வந்து கொண்டிருப்பது?’ என்று மனஸிலே ஒரு முடிவு பண்ணிவிட்டார்.

தாயாருக்கு ஒரே குழந்தை என்பதால் அவளுக்கு ஆனதைச் செய்யாமலிருந்தால் எவ்வளவு தப்பு, அவள் எவ்வளவு கஷ்டப்படுவாள் என்று கொஞ்ச காலம் மாத்ரு ஸேவை செய்தார். அப்புறம் லோகத்தின் கஷ்டத்தைப் பார்த்து அதைத் தீர்ப்பதற்கானதைச் செய்யாமலிருப்பது எவ்வளவு தப்பு என்று நினைத்து அம்மாவை விட்டு, வீடு வாசலை விட்டு ஸந்நியாஸியாகப் புறப்பட முடிவு பண்ணினார்.

‘வயஸானவள், விதந்து, இந்த ஒரு பிள்ளையை விட்டால் வேறே நாதி இல்லாதவள் – அவளுக்குக் குழந்தையாகச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டுப் போகிறவர் லோகத்துக்குக் குழந்தை என்று மட்டும் அத்தனை பேருக்கும் என்ன ஸாதித்து விடமுடியும்?’ என்று தோன்றலாம்.

மநுஷ்ய ரீதியில் பார்த்தால் ஸந்தேஹந்தான் வரும்.

ஆனால் ஈச்வர லீலை, அவதாரம் என்று வரும்போது நமக்குப் புரியாமல், பதில் சொல்லத் தெரியாமல் அநேகம் நடக்கிறது. அவனுக்குத்தானே தெரியும், யாருக்கு என்ன கர்மம், எவருக்கு எத்தனை நாள் எப்படி (தன் அவதார காலத்தில்) பண்ணணும், எங்கே கருணை காட்டணும், எங்கே கருணை இல்லாத மாதிரி லோகத்துக்குத் தோன்றினாலுங்கூட அப்படித்தான் நிர்தாக்ஷிண்யம் மாதிரிப் பண்ணணும் – என்பதெல்லாம்? அப்பா, அம்மா, பெண்டாட்டி, பிள்ளை என்று தனி மநுஷர்களுக்காகவா அவதரிப்பது? இல்லையோல்லியோ? லோகத்துக்காகத்தான் அவதாரம். அதிலே ஓரொரு தனி மநுஷ்யாளுக்கும் அவர்களுடைய பூர்வ புண்யத்திற்காக, தபஸுக்காக, ப்ரார்த்தனைக்காகப் புத்ரன் என்றும், பர்த்தா என்றும், ஸகா என்றும் கொஞ்சம் பண்ணுவதுண்டு; அவ்வளவுதான். தசரதருடைய புத்ரகாமேஷ்டிக்காகப் புத்ரனாகப் பிறந்து ராமர் கொஞ்சகாலம் அவருடைய பிள்ளையாக வளர்ந்தார். அப்புறம் அவதார கார்யம் கூப்பிட்டுவிட்டது. தசரதருடைய புண்யமும் தீர்ந்து போயிருந்தது. அதனால், நமக்குப் பார்த்தால் ரொம்பக் கடுமையாகத்தான் தோன்றினாலும், அவர் அழுது அழுது ப்ராணனை விட்டாலும் ஸரி என்று ராமர் வனவாஸத்துக்குப் போய்விட்டார். ப்ராணனை விட்டதுதான் நமக்குத் தெரியும். அப்புறம் அவருக்கு பகவான் பரலோகத்தில் எப்படியெல்லாம் அநுக்ரஹம் பண்ணியிருப்பானோ? அது தெரியுமா?

சிவகுரு – ஆர்யாம்பாளின் தபஸுக்காக ஆசார்யாள் அவர்களுடைய புத்ரனாக அவதாரம் பண்ணினார். இந்த லோகத்தில் அவரைப் பிள்ளை என்று கொஞ்சும் புண்யம் தகப்பனாருக்குக் கொஞ்சம் வருஷத்திலேயே தீர்ந்துவிட்டதால் காலகதி அடைந்துவிட்டார். அப்புறம் சிவலோகத்துக்குப் போனாரா, அத்வைதமாகக் கலந்துவிட்டாரா என்பது நமக்குத் தெரியாது. ஆகையினால் அவருடைய ஆயுஸை இப்படிப் பறித்திருக்கக் கூடாது என்று சொல்ல நமக்கு வாயில்லை.

அந்த அம்மாளுக்கு அவளுடைய கர்மாநுஸாரம் இன்னம் பல தினுஸாகப் புடம்போட்டுக் கடைசியில் ஆசார்யாள் கையாலேயே வைகுண்ட ப்ராப்தி உண்டாக்கணுமென்று ஈச்வரன் கணக்கு வைத்திருப்பான் போலிருக்கிறது! அதனால் இப்போது பிரிந்துதான் போகணுமென்று அவர் மனஸைக் கெட்டிப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

அவதாரமென்றால் பேருக்கு ஒரு மநுஷ்ய தம்பதிக்குக் குழந்தை மாதிரி வருவதுதானே? அதனால் ஸ்ட்ரிக்டாக நம் ரூல்களை அவர்களுக்கும் (அவதாரங்களுக்கும்) பொருத்திப் பார்ப்பதற்கில்லை. மஹா பெரிய லோக கல்யாண கார்யம் காத்துக் கொண்டிருக்கும்போது, அம்மா அப்பா என்று ஸொந்த உறவைப் பார்க்காமல், ஒருத்தர் இரண்டு பேருக்குத் தன்னால் கஷ்டம் வந்தாலும் வரட்டும் என்று புறப்பட்டால் அதைக் கருணை, த்யாகம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களும் (அப்பா, அம்மா முதலானவர்களும்) அவர்களை (அவதாரமாக வந்தவர்களை) லோகத்திற்காகத் த்யாகம் பண்ணிப் பெரிய புண்யத்தை ஸம்பாதிக்கவே இப்படி நடப்பது என்று வைத்துக் கொள்ளலாம்.

இவர் ஸந்நியாஸியாகப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாரென்றால், தாயாரும் பந்துக்களுமோ கல்யாணம் பண்ணி வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்! குருகுலவாஸம் முடிந்து வந்தவுடன் ப்ரஹ்மசர்யத்திலிருந்து அடுத்த ஆச்ரமத்திற்கு ஏற்றிவிடுவதே வழக்கம். இவர் பன்னிரண்டு வருஷத்தில் படித்து முடிக்க வேண்டியதை மூன்று வருஷத்தில் முடித்துவிட்டுக் குழந்தையாகவே திரும்பியிருந்தாரே என்றால், அந்த நாளில் பால்ய விவாஹமும் உண்டுதானே? குழந்தைகளுக்குக் கல்யாணம் பண்ணிவிடுவது, அப்புறம் அதுகள் பாட்டுக்கு மனஸில் விகாரமில்லாமல் பிள்ளை தன் வீட்டோடு இருப்பது, பெண்ணும் பிறந்தகத்திலேயே இருப்பது, ‘பெரியவ’ளான அப்புறம் புக்ககம் வந்து குடித்தனம் ஆரம்பிப்பது என்று நடந்து வந்தது.

இரண்டு பக்கத்திலே இரண்டு தினுஸான உத்தேசங்கள். கல்யாணமென்றும், ஸந்நியாஸமென்றும் இருந்து வந்தன! அவதார உத்தேசப்படிதானே நடக்கும்?

தாய்க்குமேல் தெய்வமில்லை, அவள் உத்தரவுக்கு மேல் சாஸ்த்ரமில்லை என்று சாஸ்த்ரமே சொல்கிறது. சாஸ்த்ரங்களை நிலைநாட்டவே ஆசார்யாளவதாரம். அதற்காக அவர் அம்மா இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக் கொண்டு அகத்தோடு இருந்துவிட்டால் ஆசார்யாளாகவே ஆக முடியாதே! ஸ்வாமி மநுஷராக வந்தால் இப்படியெல்லாம் ஏற்படுகிறது! அப்போது அவர் என்ன பண்ணுகிறாரோ அதுதான் அவதார தர்மம்.

ஒரு பிள்ளை அவனுடைய ஆதீனத்திலேயே தாயார் இருக்கும்போது அவளுடைய அநுமதி இல்லாமல் ஸந்நியாஸியாகக் கூடாது. மாதா பிதாக்களோ, பத்தினியோ யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு ஏற்பாடு பண்ணி வைத்து, அவர்களுடைய ஸம்மதத்துடன்தான் வீட்டை விட்டுப் போகலாம். இப்படித்தான் சாஸ்த்ரம். ‘இதையாவது நாம் உதாரணமாகப் பண்ணிக் காட்ட வேண்டும்’ என்று ஆசார்யாள் நினைத்தார். ஒரே வைராக்யமாக க்ஷணத்தில் ஏற்பட்டு, திட்டம் கிட்டம் போட முடியாமல் ஆச்ரமம் வாங்கிக் கொள்வது வேறே விஷயம்.

இப்போது இவர் நன்றாகத் திட்டம் போட்டுத்தானே அவதாரம் பண்ணியிருந்தது? அவதாரத்தில் ஒவ்வொரு கார்யமும் பண்ணியது? அதனால் தாயாரின் அனுமதி பெற்றே ஸந்நியாஸி ஆவதென்று நினைத்தார். ‘எப்படிக் கேட்பது? கல்யாணம், கல்யாணம் என்பவளிடம் ஸந்நியாஸம் என்றால் ரொம்ப துக்கப்படுவாளே!’ என்று நினைத்தார். ‘ஸமயம் வரட்டும், வரும். அப்போ சொல்லிக்கலாம்’ என்று உத்தேசத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருந்தார்.

__________________________________________________________________

Call for Service to the World! Propriety of conduct for Humans and Mystery of  Incarnation

Acharya thought that he should commence forthwith the service to be rendered to the entire world.  This thought was constantly in the deep recesses of his mind, right from the time he was born.  Nevertheless, since observing the |rules meant for a Brahmachari (ब्रह्मचर्यम्‌) and rendering service to the mother (मातृ शुश्रूष्) were also lessons for the world, He continued to do them as if leading private life.  He started thinking whether it would be enough to serve only this mother when there were so many mothers throughout the world.  He thought “I am not the child of only one mother.  I am the child of this entire world.  How long can I postpone serving the world on account of my duty to one mother?  Did I not descend to the earth because the world has degraded so much?  When fever is getting worse, should there be a delay in administering the medicine?”.

What is that medicine?  The medicine of doing nothing and remaining still! The medicine of Advaita, which enables one reach that state!  He made a decision: “I came to teach everyone the philosophy of remaining still, by constantly moving around without being idle even for a minute! For how long I can keep moving around within this village itself?”.

Him being the only child, not serving the mother was wrong; it will also make her suffer. With this thought, He rendered service to his mother (मातृ सेवा) for some time. Subsequently, seeing how much the world was suffering, He thought that it would be a mistake if he doesn’t carry out what is required to rectify that, and decided to leave his mother, home and go as a Sanyasi.

A thought may arise in the mind: ‘What can he achieve as a child to the outside world if he was going away to without doing what was required for his own mother, who was old, widowed and did not have any hope other than this only son?’.

This doubt will arise if seen from the point of view of a normal human being.

However, when it comes to the games (लीला) of Eswara, or His incarnations, many things happen which we do not comprehend and for which we do not have an answer.  Is He not the only one who knows how much karma balance is there for whom, who should be served for what duration (during the period of his incarnation), where mercy should be shown, where a harsh stand (निर्दाक्षिण्य) needs to be taken even if it appeared to the world to be merciless, etc.?  Is an incarnation only for the sake of a few individuals such as mother, father, wife, son, etc.? No. An incarnation is for the entire world.  In that process, something is done even for individuals – as a son, husband or friend – on account of the virtues (पुण्य) they had earned in their previous births, the penance (तपस्) done, and prayers rendered; That is all.  Rama was born to Dasaratha in deference to the Putrakaameshti Yajna performed [by Dasaratha] and grew up as his son for a short time. Subsequently, the purpose of his incarnation called him.  The punyam of Dasaratha had also got exhausted.  Therefore, Rama proceeded to the forest fully aware that Dasaratha may weep to the extent that he may even lose his life, though this [act of Rama] may appear to us as being very harsh. We only know the fact that Dasaratha lost his life.  Later, would Bhagawan not have blessed him [अनुग्रहम्‌] in several ways in the other world?  Do we know anything about that?.

In deference to the penance of Sivaguru and Aryambal, Acharya incarnated as their son. The virtues which enabled Sivaguru to shower affection on his son in this world got exhausted soon and he died within a few years.  We do not know whether he reached the abode of Siva [शिवलोकम्‌] or got merged in Advaita.  Therefore, we do not have any right to say that his life should not have been taken away in this manner.

Probably Eswara had also worked out that this noble woman had to go through more troubles as per her karma (कर्मानुसार), and finally gain her place in Vaikuntam at the hands of Acharya himself!  Hence, he [Acharya] had to take the hard stand of going away from her at that time.

An incarnation should seem to come into this world only as the child of a human couple, isn’t it? It is therefore not appropriate to strictly apply our rules to them (the incarnates).  When the much larger issue of worldly welfare was waiting to be addressed, if one had to set aside relations like mother and father and leave, despite causing sorrow to them, it should be interpreted only as compassion and sacrifice.  It can be considered that these people (Mother or Father) also give them away to the world only to earn enormous punyam.

While he was contemplating to become a Sanyasi, his mother and other relatives were planning to get him married!  It was the convention to elevate the boy who came back from Gurukulavasam, from Brahmacharyam to the next ashrama [grihastashrama]. To the argument that he completed twelve years of study in just three years and was still a child, we did have the practice of child marriages then, didn’t we? Children were married while still young; the boy stayed at his house and the girl at her maternal house, both devoid of feelings of passion; she started life with her husband after attaining puberty.

Two different intentions (उद्देश), that of marriage and renunciation, were there on the two sides!  Ultimately the intention for which the incarnation took place will prevail, isn’t it?.

Sastra itself says that there is no deity beyond one’s mother and no Sastra beyond her command.  Acharya’s incarnation itself was only to establish the Sastras. However, if he got married as per the wishes of his mother and remained in the house, he will never become an Acharya!  These kinds of things happen when Swami comes as a human being.  Whatever he does then [under such circumstances] is the Dharma meant for that incarnation (अवतार धर्म).

A son should not become a Sanyasi without his mother’s permission while his mother is dependent on him.  Be it his mother, father or wife, he must make an alternate arrangement for them, obtain their permission and only then leave his house. This is what Sastras says. Acharya thought ‘at least this should be demonstrated as an example’. It is an entirely different matter if one suddenly develops detachment towards everything, and not having time to make elaborate plans, instantly takes up a life of renunciation [सन्न्यासम्‌].

Did he not now incarnate only after making elaborate plans? Did he not carry out each task [only after planning]? So, he decided that he will become a Sanyasi only after obtaining the permission of his mother. He thought ‘How do I ask her? She is talking about marriage, and if I were to speak about Sanyasam she will feel sad! Let the appropriate time come; it will come. I will tell her then’. He kept this thought to himself.
____________________________________________________________________

Audio

 

Loading

One Response

  1. MAHA PERIAVA SARANAM. THE WHOLE LIFE IS EXPLAINED IN A SIMPLE WAY AND THE NEED FOR TAKING PERMISSION FROM THE PARENTS ESPECIALLY FROM MOTHER AND IF MARRIED FROM THE WIFE ALSO. EXCELLENT WAY IT IS EXPLAINED. THANKS FOR THE POST. Jai Ma Bharath.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading