What an amazingly blessed person he is! As he has said, what more one would want in life!!
Mahaperiyava padam sharanam
வாழ்க்கையில் நான் பெரிதும் செல்வமாக போற்றுவது மூன்று பொருள்கள்
- இந்த தாமிரபஞ்ச பாத்ரம் உத்தரணி. 1957 ல் நடந்த என்னுடைய உப நயணத்தின் போது பிரும்ம உபதேசம் முடிந்தவுடன் மஹாபெரியவளே பூணல் நடந்த பழயமாம்பலம் சங்கர மடத்துக்கு நேரில் வந்து ஆசீர்வாதம் பண்ணி தினமும் விடாமல் சந்தி பண்ணு என்று ஆஞ்கை இட்டு கொடுத்தார். எனக்கு பூணல் போட ஏற்பாடு செய்தவரும் அவர்தான்.

- ருத்ராக்ஷம் போடும் ஆசையால் ஒரு வியழக்கிழமையன்று குரு வார சதஸ் அன்று காலை 10 மணிக்கு இந்த பஞ்சமுக ருத்ராக்ஷத்தை பெரியவாளிடம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு கையில் வைத்து உருட்டி ஜபம் செய்ய ஆரம்பித்து மாலை 4 மணிக்கு ஜபத்தை பூர்த்தி செய்து எனக்கு ஆசீர்வாதம் செய்து தினமும் ஐந்து தடவையாவது ஓம் நமச்சிவாய என்று சொல்லச்சொல்லி அணிந்து கொள்ளச் சொன்னார்.

- மூன்றாவது இந்தப் படம். மாஹாபெரியவாளின் கனகாபிஷேகம் 1957 ல் தி. நகர் ராமேஸ்வரம் ரோடில் உள்ள கல்யாண் பாகில் நடந்தது. பெரியவாளே யார்யார் என்ன பண்ணவேண்டும் என்று உத்தரவு. மிகவும் சிறியவானான எனக்கு “ நீ எனக்கு பக்கத்திலேயே நின்று தோடாகஷ்டகம் சொல்லவேண்டும்.” — மஹாபெரியவாளுக்கு மிக அருகில் சிகையுடன் நெற்றி முழுக்க விபூதியுடன் பாதி முகம் மட்டும் தெரியும் படி நின்று கொண்டு , எட்டு ஸ்லோகங்களையும் நான் சொல்லும்போது ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் தன் குருவுக்கு நமஸ்காரமாய் என்னைக் கனிவுடன் பார்த்தார்.
இந்த ஜன்மத்துக்கு இது போதும் எனக்கு.
சந்த்ரஶேகர ரமண தே பதே |
பக்திரஸ்து மே வந்தனம் தவ ||
ஹே சந்த்ரசேகர குருவே. எங்களை காக்கும் தெய்வமே. உங்கள்மீது அப்பழுக்கில்லாத பக்தியைத் எங்களுக்குத் தாருங்கள் உங்களுக்கு என் நமஸ்காரம்.
![]()

10 Responses
Blessed person 🙏
பூர்ண ஆசிகள் பெரியவாளிடம் இருந்து!! Very much blessed !! What else needed in life? Shankara
SIR YOU ARE EXTREMELY LUCKY TO GET THE BLESSINGS FROM MAHA PERIAVA . I AM A DEVOTEE OF MAHA PERIAVA. Jai Bharath.
Ayya You are abundantly blessed by Maha Periyava 🙏🙏
Jaya Jaya Shankara Hara Hara Shankara! Namaskarams to Sri Chandrasekaran Mama.
Maha periyava charanam. At least we happen to read about such blessed people. Very deep prayers “உங்கள்மீது அப்பழுக்கில்லாத பக்தியைத் எங்களுக்குத் தாருங்கள் உங்களுக்கு என் நமஸ்காரம்.”.. How to attain this is a big question for me?
Paadhamey charanam .. பாதமே சரணம்
Mahaperiyavaa charanam
Namaskaram to Ramasamy chandrasekaran mama
Very blessed soul
🙏💐🙏💐🙏💐
Blessed are those who have no scepticism but unwavering devotion and accept whatever happens as divine will. Pranaamaalu to such