126.1. Sri Sankara Charitham by Maha Periyava – Seeds for teachings of the later years in the first Stuti itself  

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The take away of this big chapter has been summarized beautifully in the above drawing by Sowmya. Bottom line, do not show indifferent attitude between deities nor the paths. All leads to one, Advaitha and Eka Paramathma.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for capturing the essence in her sketch and Shri ST Ravikumar for the great translation.  Rama Rama

முதல் துதியிலேயே பிற்கால உபதேசங்களின் வித்து

இதில் இரண்டு விஷயம் தெரிவிக்கணும். குழந்தையாக ஆசார்யாள் பாடிய இந்த முதல் ஸ்தோத்ரத்திலேயே பிற்காலத்தில் அவர் பெரிதாக ‘டெவலப்’ பண்ணிய இரண்டு கொள்கைகளுக்கு வித்து இருக்கிறது. ஒன்று – அவர் கர்மாவை பக்தியில் சேர்த்தது. ‘கர்மா தானே பலன் தரவில்லை. ஈச்வரன்தான் பல தாதா. அவனுக்கே ஸகல கர்ம பலனையும் அர்ப்பணம் பண்ணிவிடு. அப்போதுதான் இந்தச் சின்னப் பலன் போய் சித்த சுத்தி என்ற ஆத்மார்த்தமான பெரிய பலன் கிடைக்கும்’ என்றது. இது கர்ம மார்க்கக்காரர்களைப் பக்தி மார்க்கத்தில் சேர்ப்பதற்கு சொன்னது. இன்னொன்று — பக்தி மார்க்கக்காரர்களிடம், ‘என்னுது, உன்னுது’ என்று தெய்வ பேதம் பார்க்காமல், ஏதோ ஒன்றிடம் தான் உனக்கு இயல்பாக பக்தி சுரக்கிறதென்பதால் அதையே நீ இஷ்டமூர்த்தி என்று பக்தி பண்ணினாலும் மற்றவற்றைத் தாழ்த்தியாக நினைக்காமல், எல்லாம் ஏக பரமாத்மாவின் ரூப பேதங்களே என்ற உணர்ச்சியை ஏற்படுத்திக்கொள்’ என்று சொன்னது. முதலில் இப்படி ஸ்வாமிகளுக்குள் பேதமில்லை, எல்லா ஸாமியும் ஒரே பரமாத்மாதான் என்று ஆரம்பித்தால்தான் அப்புறம் எல்லா ஆஸாமியுங்கூட அதுதான் என்ற ஞானத்துக்குப் போக முடியும். அதாவது, இது பக்தி மார்க்கக்காரர்களை ஞான மார்க்கத்தில் சேர்ப்பதற்காகச் சொன்னது. இந்த இரண்டு அபிப்ராயங்களையும் கனகதாரா ஸ்தோத்ரத்தில் பார்க்கிறோம்.

சாதகக் குஞ்சைச் சொல்லி ஸம்பத்து தாரை வேண்டியதற்கு அடுத்த ஸ்லோகத்தில்:

இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டப-பதம் ஸுலபம் லபந்தே

என்று சொல்லுமிடத்தில் இஷ்டிகள் என்பதான யஜ்ஞ கர்மாக்களிலேயே உயர்ந்த அபிப்ராயத்தை வைத்து, அவற்றை ஸ்வர்க்க பலனை விரும்பிச் செய்கிறவர்களும் மஹாலக்ஷ்மியின் கருணாகடாக்ஷத்தால்தான் அந்தப் பலனை ஸுலபமாக அடைகிறார்களென்று சொல்கிறார். அவர்களுக்கு அப்படித் தெரியாமல் தங்கள் கர்மாவே பலன் தருகிறதென்று நினைத்தாலும், லக்ஷ்மி என்று ரூபம் கொடுத்துச் சொல்கிற பகவத் சக்திதான் அதை வாஸ்தவத்தில் பண்ணுவிக்கிறதென்று ஆசார்யாள் சொல்வது இங்கே ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.

ஸகல தெய்வமும் ஏக பரமாத்மாவின் ரூப பேதங்களே என்று அவர் தெரிவிப்பது இதற்கு அடுத்த ஸ்லோகத்தில்:

கீர்தேவதேதி கருட-த்வஜ-ஸுந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர-வல்லபேதி |
ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரலய-கேலிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக-குரோஸ்-தருண்யை ||

ஒரே பரமாத்மா த்ரிமூர்த்திகளாகி ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரம் (ப்ரளயம்) என்று விளையாட்டுப் பண்ணும்போது (“கேலிஷு”) அவர்களுக்குள்ளே பத்னி ரூபத்தில் ஒவ்வொரு சக்தியாக இருப்பது மஹாலக்ஷ்மியே தானென்று சொல்கிறார். அப்படியுள்ள சக்திகளின் பெயர்களை கீர்தேவதை, கருட த்வஜ ஸுந்தரி, சாகம்பரி, சசிசேகர வல்லபா என்கிறார். மூன்று மூர்த்திகளுக்கு நாலு சக்திகளைச் சொல்லியிருக்கிறது! ஏன்?

ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்கிறபடி முதலில் ப்ரம்ம பத்னி-‘கீர்தேவதை’ என்னும் வாக்தேவியான ஸரஸ்வதி; அடுத்தாற்போல் கருடக் கொடியுடைய மஹாவிஷ்ணுவின் ரூப லாவண்யம் மிக்க பத்னியான ‘கருட த்வஜ ஸுந்தரி’ (ஸ்தோத்ரத்தின் நேர் மூர்த்தியான லக்ஷ்மி); அப்புறம் ருத்ர பத்னிகளாக மட்டும் இரண்டு பேர் ‘சாகம்பரி’ என்றும் ‘சசி சேகர வல்லபா’ என்றும் இருக்கிறது!

சாகம்பரி யாரென்று தேவீ புராணங்களில் இருக்கிறது1. ஒரு பஞ்ச காலத்தில் அம்பாள் தன்னுடைய தேஹத்திலிருந்தே கறிகாய்கள், கீரை வகைகள் எல்லாவற்றையும் முளைக்கப் பண்ணி ஜனங்கள் பறித்துச் சாப்பிடுமாறு க்ருபை பண்ணினாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட பேர்தான் சாகம்பரி, இவளும் சிவனுடைய சக்தியே.

“ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரளய” என்று சொல்லியுபடி (ப்ரளயமான) ஸம்ஹாரத்துக்கு உதவி பண்ணாமல் ஸ்திதிக்கு உதவி செய்வதாக அல்லவா இவள் ஜனங்களுக்கு ஆஹாரத்தைக் கொடுத்து ரக்ஷித்திருக்கிறாள்? த்ரிமூர்த்திகளுக்கு த்ரிசக்திகள் என்றில்லாமல் நாலாவதாக ஒன்றை ஏன் இப்படிச் சொல்லணும்?

பொருத்தமாகத்தான் சொல்லியிருக்கிறார். ஜனங்களின் மனப்பான்மை ஆசார்யாளுக்கு நன்றாகத் தெரியும். தனலக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி என்றெல்லாம் அஷ்ட லக்ஷ்மிகளை சொன்னாலும், ஜனங்கள் ‘லக்ஷ்மி’ என்றால் தனத்தைத்தான் நினைப்பார்களென்று அவருக்குத் தெரியும். ஆனால் ரூபாயைச் சாப்பிட முடியுமா? ஆனபடியால் சாப்பாடு போடுகிற அம்மாவாகத் லக்ஷ்மியைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் விடக்கூடாது என்று அவருக்கு இருந்தது. அதனால்தான் சாகம்பரியைச் சொன்னார். அப்புறம் ப்ரளயத்திற்கு ஸ்வாமியான ருத்ரனின் சக்தியாக ‘சசி சேகர வல்லபா’ என்றார். அப்படியென்றால் சந்திரனைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பவரின் ப்ரிய பத்னி. ஸம்ஹார மூர்த்தியே மஹேச்வரனாக மாயா நாடகம் பண்ணும் போதும், ஸதா சிவனாக மோக்ஷாநுக்ரஹம் பண்ணும்போதும்கூட சசி சேகரராகத்தான் இருக்கிறார். அதனால் ‘சசி சேகர வல்லபா’ என்னும்போது ப்ரளய சக்தி, திரோதான2 சக்தி, அநுக்ரஹ சக்தி எல்லாமும் அவளேதான் என்று வைத்துக் கொள்ளாலாம். இவளேதான் ப்ரம்ம சக்தி, விஷ்ணு சக்தி ஆகியவர்களும் என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டதால் பஞ்ச க்ருத்யங்களுக்கும் மூலமான பரப்ரஹ்ம சக்தி ஒன்றுதான் இத்தனை மூர்த்தியுமாகியிருக்கிறது என்ற அத்வைதம் வந்துவிடுகிறது.

லக்ஷ்மிதான் ஸரஸ்வதி, பார்வதி ஆகிய எல்லாரும் என்று இங்கே சொல்லிவிட்ட பிறகு சிவ-விஷ்ணுக்களை மட்டும் வித்யாஸம் மாதிரி விட்டுவிடலாமா? அதனால்தான் முடிக்கிற இடத்தில் ‘த்ரிபுவநைக குரோஸ் தருணி’ என்று சொன்னது. ‘த்ரிபுவநங்களுக்கும் குருவாக இருக்கப்பட்டவர் மஹாவிஷ்ணு. அவருடைய ப்ரிய பத்னியான சக்தி லக்ஷ்மி’ என்று அர்த்தம். தக்ஷிணாமூர்த்தியான மூலகுரு ஸ்வரூபத்திலிருந்து அவதாரம் பண்ணினவர் மஹா விஷ்ணுவை குருவாகச் சொல்லும்போது சிவ-விஷ்ணு அபேதமும் வந்துவிடுகிறது. குருவின் சக்தி என்று லக்ஷ்மியை சொல்லும்போது அவள் ஏதோ பணம், கிணம் கொடுப்பவள் மட்டுமில்லை, ஞான சக்தியாகவுமிருக்கிறவள் என்று காட்டியதாகிறது.

நம் குரு பரம்பரை நாராயணனிலிருந்துதானே ஆரம்பிக்கிறது? அதனால் ‘த்ரி புவந குரு’ என்றார். அஷ்டோத்தரங்களைப் பார்க்கும்போது சிவாஷ்டோத்தரம் மாதிரியே க்ருஷ்ணாஷ்டோத்தரம், ராமாஷ்டோத்தரம் ஆகியவற்றிலும் “ஜகத்குரவே நம:” என்று வருகிறது.

குரு என்று — த்ரிபுவன குரு என்று — இங்கே ஆசார்யாள் சொல்லும்போது ஞானோபதேசம் பண்ணுபவர் என்றில்லாமல் மூவுலகத்திற்கும் பிதாவாக இருப்பவரென்றும் அர்த்தம் செய்யலாம். தாயார், தாயார் என்று லக்ஷ்மியைச் சொல்வதால் மூவுலகத் தகப்பனாரின் பத்னி என்று சொன்னதாகவும் கொள்ளலாம்.

லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் “ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம:” என்று கடைசி நாமாவுக்கு இரண்டு நாமா முன்னால் வருவதன் தாத்பர்யத்தையே இந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்.

இதற்கு அடுத்த ஸ்லோகம்:

ச்ருத்யை நமோ(அ)ஸ்து சுப-கர்ம-பல-ப்ரஸூத்யை
ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீ-குணார்ணவாயை |
சக்த்யை நமோ(அ)ஸ்து சத-பத்ர-நிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம-வல்லபாயை ||

ச்ருதிதான் ஆசார்யாளுக்கு மூச்சு. அவைதிகம், அரைகுறை வைதிகம் ஆகியவற்றை விரட்டி, சுத்தமான ச்ருதி மார்க்கத்தையே ஸ்தாபனம் செய்ய வந்தவரல்லவா? “ச்ருதி-ஸ்ம்ருதி-புராணாநாம் ஆலயம்” என்றே அல்லவா அவரை ஸ்தோத்ரிப்பது? அப்படிப்பட்ட ச்ருதி வடிவமாக, வேத ஸ்வரூபிணியாகத் தாயாரைச் சொல்லாமல் தாம் பண்ணிய முதல் ஸாஹித்யத்தை முடிப்பாரா? “ச்ருத்யை நமோஸ்து” என்று ஆரம்பிக்கிறார். ஞானாவதாரமானாலும் வைதிக கர்மாநுஷ்டானத்திற்கு அதற்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுப்பதில் பாடுபட்டவரல்லவா? அதனால் (லக்ஷ்மியை) ச்ருதி ஸ்வரூபமாகச் சொன்னவுடன், அதில் சொல்லியிருக்கும் சுபமான கர்மாநுஷ்டானங்களின் பலனைப் பிறப்பிக்கிறவள் அவள்தான் என்கிறார்: “சுப கர்ம பல ப்ரஸூத்யை”. இங்கேயும் மீமாம்ஸகர்களுக்கு பதில் இருக்கிறது!

நல்ல குணங்களெல்லாம் ஸமுத்ரம் மாதிரி நிறைந்த இன்பங்களின் உருவமாகத் தாயார் இருப்பதை “ரத்யை நமோஸ்து, ரமணீய குணார்ணவாயை” என்று சொல்கிறார்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நமக்கு ச்ருதி வேண்டும். நாம் செய்யும் கர்மங்கள் ச்ருதி ப்ரயுக்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவை சுப கர்மாவாக இருக்கும். அப்படிப்பட்ட கர்மாவினாலேயே இன்பங்களை உலக இன்பங்களோ, ஆத்மாத்தமான இன்பங்களோ, எதுவானாலும் பெற வேண்டும்.

குணம்-கர்மம் என்று இரண்டு. ஒன்றுக்கொன்று ஸம்பந்தப்பட்டவை. “குண-கர்மங்களாலேயே நான்கு வர்ணங்களை (ஜாதிகளை) ஸ்ருஷ்டித்திருக்கிறேன்” என்று கீதையில் (பகவான்) சொல்கிறார்3. குணப்படியே கர்மா போகும். அதை சாஸ்த்ரத்தில் வகுத்துக் கொடுத்துள்ளபடி செய்து ஈச்வரார்ப்பணம் செய்தால் அந்த சுப கர்ம விசேஷத்தால் எப்படிப்பட்ட குணமானாலும் அது பக்வமாக ஆகும். முதலில் ‘சுப கர்ம பலனைத் தருபவள்’ என்று சொல்லி, அடுத்தாற்போல ‘நல்ல குணங்களுக்கு ஸமுத்ரமாயிருப்பவள்’ என்று ஒன்றோடொன்று பிணைத்துச் சொல்லியிருக்கிறார்.

அப்புறம், சக்திதானே எல்லாவற்றுக்கும் தேவை? அதுவும் அவள்தானென்று சொல்லி நமஸ்காரம் தெரிவிக்கிறார்: “சக்த்யை நமோஸ்து”. ‘சத பத்ர நிகேதனா’ என்றால் கமலாஸனை, தாமரைப் பூவுக்குள் உட்கார்ந்திருப்பவள். ‘சத பத்ரம்’ என்றால் நூறு இதழ் (கொண்ட தாமரை) என்று கணக்காக நினைக்க வேண்டாம். சதம் என்பது எந்தப் பெரிய நம்பரையும் குறிப்பது. ஸஹஸ்ர தள பத்மம் என்றும் சொல்வதுண்டு. நம் சிரஸில் பராசக்தி ஸஹஸ்ர தள பத்மத்தில்தான் பரசிவத்தோடு கலந்தவளாக இருக்கிறாள் என்று குண்டலிநீ யோகத்தில் இருக்கிறது. இங்கே ஆசார்யாளும் பத்மவாஸினியாக லக்ஷ்மியைச் சொல்லும்போது “சக்தி” — “சக்த்யை நமோஸ்து”- என்றே சொல்கிறார்!

“புஷ்ட்யை நமோஸ்து”. போஷிப்பினால் ஏற்படும் நிறைவே புஷ்டி. பரிபாலன மூர்த்தியின் பத்னியாக, உலகத்துக் குழந்தைகளுக்கெல்லாம் தாயாராகப் போஷித்து வளர்ப்பவள் அவள்தான்.

ரதி (இன்பம்), சக்தி, புஷ்டி எல்லாவற்றையும் தரும் மந்த்ரங்கள் ச்ருதியில்தான் அடங்கியிருக்கின்றன. அதனால் முதலில் அதைச் சொல்லி அப்புறம் இவற்றைச் சொன்னார். நம்முடைய திறமை (சக்தி), நிறைவு (புஷ்டி), ஆனந்த அநுபோகங்கள் (ரதி) ஆகிய எல்லாம் வேத வழியில் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமென்று, (இப்படிச்) சொன்னார்.

‘ஒவ்வொரு ப்ராணிக்குள்ளேயும் ஆனந்த ஸ்வரூபமாக இருப்பது நீதான்! ஒவ்வொரு ப்ராணிக்குள்ளேயும் சக்தி ஸ்வரூபமாக இருக்கிறது நீதான்! நிறைவு என்கிறதாக இருக்கிறதும் நீதான்!’ என்று சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ‘நமோஸ்து, நமோஸ்து’ என்று நமஸ்காரம் தெரிவிக்கிறார்.

முடிவாக மஹாவிஷ்ணுவுக்கே உரிய அஸாதாரண நாமாவான புருஷோத்தமன்4 என்பதைச் சொல்லி அவனுடைய சக்தியாக அவள் இருப்பதை “புருஷோத்தம வல்லபாயை” என்கிறார்.

பிற்காலத்தில் பெரிய ஸித்தாந்தமாக டெவலப் செய்த கருத்துக்களையும் உள்ளே வைத்து குழந்தையாசார்யாள் இப்படி பாடி முடித்தார்.

1 சாகம்பரியின் கதை சற்று விரிவாக இனி வரவிருக்கும் நம் நூற்பகுதிகளிலொன்றில் வெளியாகலாம்.


2
 திரோதானம், பஞ்ச க்ருத்யம் முதலியவற்றின் விளக்கம் “குருமூர்த்தியும் த்ரிமூர்த்திகளும்” எனும் உரையில் ‘ருத்ரன்-சிவன் (சிவம், நடராஜா)-மஹேச்வரன்’ என்ற பிரிவில் காணவும்.

3 IV. 13

4 புருஷோத்தம நாமம் குறித்து ‘விஷ்ணு அவதாரமும் சிவாவதாரமும்: சிவ-விஷ்ணு ஒற்றுமை வேற்றுமைகள்‘ என்ற உரையில் பார்க்க.

__________________________________________________________________

Seeds for teachings of the later years in the first Stuti itself

Two things have to be mentioned in this. The seed for the two principles that Acharya developed in a big way during later years is found in this very first hymn that he composed as a child. One – his linking of Karma with Bhakti. His saying ‘Karma does not bestow benefits on its own. It is Eswara who is the bestower of the fruits (फलदाता). Offer the fruits of all Karma unto Him. Only then, instead of this measly benefit, the biggest reward of purification of mind (चित्तशुद्धि) of the self (आत्मार्थम्) will be obtained’. This was conveyed with a view to bring people following the path of Karma to the path of Bhakti. The other one was said for people following the path of Bhakti – ‘Do not discriminate among the deities as ‘mine’ and ‘yours’. If devotion towards a Devata comes naturally, consider that Devata as your favourite murthy [इष्ट मूर्ति – Ishta Murti] and be devoted to it. But do not denigrate the other Devatas. Develop the outlook that all are different forms of the One Paramatma’. Only if it is conveyed in the beginning itself that there is no difference between deities and that all deities are the different forms of the same Paramatma, it is possible to later acquire the jnana that all people are also the same [different forms of the same Paramatma]. This statement was to bring people following the path of Bhakti to the path of Jnana. We find these two ideas in the Kanakadhara Stotram.

In the verse next to the one where he prays for shower of wealth by referring to the hatchling of a Chataka bird, he says.

Ishtaa visishta matayopi yayaa dayaardra
Drishtya trivishtapa-padam sulabham labante |

इष्टा विशिष्टमतयोऽपि यया दयार्द्र_
दृष्ट्या त्रिविष्टपपदं सुलभं लभन्ते ।

He says that people who consider performance of Yajnas as the ultimate, and perform them with the desire of attaining heaven, obtain that result with ease only because of the merciful glance [करुणाकटाक्षम्‌] of Mahalakshmi. Though they may be under the impression that it is their karma which is giving them the desired result, it is the divine power in the form of Lakshmi, who bestows it. This opinion of Acharya is obvious here.

In the next verse he conveys that various deities are only the different forms of the One Paramatma:

Geerdevateti garuda-dhwaja-sundareeti
Saakambhareeti sasisekhara-vallabheti |
Srishti-stithi-pralaya-kelishu samsthitaayai
Tasyai namastribhuvanaika-guros-tarunyai ||

गीर्देवतेति गरुडध्वजसुन्दरीति
शाकम्भरीति शशिशेखरवल्लभेति ।
सृष्टिस्थितिप्रलयकेलिषु संस्थितायै
तस्यै नमस्त्रिभुवनैकगुरोस्तरुण्यै ॥

He says that when the One Paramatma takes form as Trimurtis and indulges in the game (Khelishu) of Srishti (Creation), Stithi (Sustenance), and Samhara (Pralaya – destruction) processes, it is Mahalakshmi who is within them [the Trimurtis] as their Sakti, in the form of their consorts. He mentions the names of such Saktis, as Geerdevata (गीर्देवता), Garuda-dwaja-sundari (गरुडध्वजसुन्दरी), Saakambhari (शाकम्भरी) and Sasisekhara Vallabha (शशिशेखरवल्लभा). Four Saktis are mentioned for three people! Why?

In the order of Brahma, Vishnu and Siva, first is the spouse of Brahma- ‘Geerdevata’ who is Saraswati, the Goddess for speech; next is the extremely beautiful consort of Mahavishnu – who has Garuda as his vehicle – ‘Garuda-Dhwaja-Sundari’ (the deity Lakshmi to whom the stotram is addressed directly); then two names of the consorts of Rudra given as Saakambhari and Sasisekhara-Vallabha!

It is mentioned in the Devi Puranas who this Saakambhari1 is. Once during a famine, by her grace Ambal made vegetables, greens and fruits grow from her body and allowed people to pluck them and eat them. The name given to her at that time is Saakambhari. She also is a Sakti of Siva.

Instead of helping in dissolution (Pralaya) in accordance with the Srishti-Stithi-Pralaya, did she not help in Stithi (sustenance) by giving people food for their survival, thereby protecting them? Rather than mention three Saktis for Trimurtis, why should there be a mention of a fourth one?

His saying this is very appropriate. Acharya knows the attitude of people very well. He knows that even when the eight names of Lakshmi (Ashtalakshmi) are mentioned [beginning with] Dhanalakshmi, Dhaanyalakshmi, etc., people will think only of Dhanam [wealth] when they hear the name Lakshmi. But can rupee notes be eaten? So, he felt that he should not omit making a mention of Lakshmi as also the mother who gives food. Hence, he mentioned Saakambhari. Subsequently, he mentioned the name ‘Sasisekhara-Vallabha’ the Sakti of Rudra – the Swamy of dissolution. It means the dear wife of the person who has the moon on his head. Whether the Samhara Murti [Rudra] is playing out the game of Maya as Maheswara, or grants moksha as Sadasiva, he is seen with the cresent moon on his head [Sasisekhara]. Therefore, when it is mentioned as ‘Sasisekhara-Vallabha’, it can be construed that She is the Pralaya Sakti (प्रलय शक्ति), Tirodhaana2 Sakti (तिरोधान शक्ति) and Anugraha Sakti (अनुग्रह शक्ति) et al. Since in the beginning it is mentioned that She herself is Brahma Sakti and Vishnu Sakti, Advaita comes to the fore, that there is only one supreme Parabrahma Sakti, which is the source for all the five tasks and that it takes all these different forms.

After having concluded that it is Lakshmi who is present as Saraswati and Parvati, can Siva and Vishnu be shown to be different? That is why it is stated in the end as ‘tribhuvanaika-guros-taruni’ (त्रिभुवनैकगुरोस्तरुणि). It means ‘Mahavishnu is the Guru of the three worlds (त्रिभुवनम्‌). His affectionate wife Lakshmi – also His Sakti’. When the person who has incarnated from the original Guru Dakshinamurti mentions Mahavishnu as the Guru, the inseparableness of Siva-Vishnu also comes to the fore. When Lakshmi is mentioned as the Sakti of the Guru, it also shows that she is not considered as someone who just bestows material wealth but is also the Sakti for Jnana.

Our Guru tradition [गुरु परम्परा] starts from Narayana, doesn’t it? That is why he said ‘Tri Bhuvana Guru’. When we look into the 108 names in the Krishnashtottaram (कृष्ण अष्टोत्तरम्‌) and Ramashtottaram (राम अष्टोत्तरम्‌), like in the Sivashtottaram (शिव अष्टोत्तरम्‌) the name “Jagat Gurave Namaha” (जगत् गुरवे नमः) appears in the others too.

When Acharya makes a mention of the word Guru in ‘Tri Bhuvana Guru’, apart from referring to one who imparts Jnana [Ultimate Knowledge], it can also be interpreted as referring to one who is the Father of the three worlds. Since Lakshmi is referred to as ‘Mother’, it can be construed as having referred to her as the wife of the father of the three worlds.

The essence of the nama [नाम] “Brahma-Vishnu-Sivaatmikayai namaha:” which comes two names before the last one in Lakshmi Ashtottaram, is brought out by Acharya in this [the above] Sloka.

The next verse is:

Srutyai namo(a)stu subha-karma-phala-prasootyai
Ratyai namo(a)stu ramaneeya-gunaarnavaayai |
Saktyai namo(a)stu sata-patra-niketanaayai
Pushtyai namo(a)stu purushottama-vallabhaayai ||

श्रुत्यै नमोऽस्तु शुभकर्मफलप्रसूत्यै
रत्यै नमोऽस्तु रमणीयगुणार्णवायै ।
शक्त्यै नमोऽस्तु शतपत्रनिकेतनायै
पुष्ट्यै नमोऽस्तु पुरुषोत्तमवल्लभायै ॥

Sruti [Vedas] are [as important as] the breath for Acharya. Did he not incarnate to only establish the pure path of Sruti, driving away non-Vedic and half- baked Vedic ways? Is he not hailed as, ‘Sruti-Smriti-Puranaanaam Aalayam’ (श्रुति स्मृति पुराणानाम् आलयम्‌)? Will he end his first hymn without mentioning the Mother as personification of the Sruti – personification of the Vedas? He starts with “Srutyai namostu”. Though he was an incarnation of Jnana [Ultimate knowledge], did he not strive to ensure that the Karmanushtanams prescribed in the Vedas got the importance they deserved? So, after mentioning (Lakshmi) as the embodiment of Sruti, he says that she is the one who bestows the good results of the karmaanushtaanams: “subha karma phala prasootyai” (शुभकर्मफलप्रसूत्यै). In this comes the response to the Meemamsakaas!

He states that the Mother is like an ocean of all good qualities, a personification of all happiness [in the lines] “ratyai namostu ramaneeya gunaarnavaayai” (रत्यै नमोऽस्तु रमणीयगुणार्णवायै).

We should have Sruti [Vedas], as the basis for everything. All the Karmas that we undertake should conform to Sruti. Only then will they become sacred acts. Be it [acquiring] worldly pleasures or [striving for] the welfare of the atma, they should be got only by performance of these karmas.

There are two things – Guna [qualities] and Karma. They are linked to each other. Bhagawan says ‘I have created the four Varnas (castes) based on Guna-Karmas3.’ Karma follows as per the Guna. If it [karma] is carried out as prescribed in the Sastras and offered to Eswara, because of the good effects of such karma any kind of qualities [even if adverse] will get better. After initially mentioning that She is the giver of the benefits of Karmas, he has subsequently stated ‘She is an ocean of virtuous qualities’, linking the two with each other.

Further, Sakti is needed for everything, isn’t it? He says that She is also that Sakti and offers his Namaskarams to her. “Saktyai Namostu” (शक्त्यै नमोऽस्तु). ‘Sata patra niketana’ (शतपत्रनिकेतना) means Kamalasana (कमलासना)- one who is seated inside the Lotus flower. One need not take the word ‘shata patra’ literally as (Lotus) flower containing 100 petals. Satam (शतम्), refers to any big number. It is also called ‘sahasra dala  padmam’ (सहस्र दल पद्मम्‌). The Kundalini Yoga says that Parasakti, along with Paramasiva, is seated on the sahasra dala padmam on the top of our siras [ शिरस् – head]. Here Acharya also, when referring to Lakshmi as one seated on the lotus flower, says “Sakti” – “Saktyai Namostu” !

“Pushtyai Namostu” (पुष्ट्यै नमोऽस्तु). Fulfilment is the result of good nourishment. As the consort of the deity of protection, she is the mother who provides nourishment and brings up all the children of the world.

Mantras that bestow happiness, strength, nourishment etc. are present only in the Vedas [Sruti]. That is why, he mentioned it [Sruti] first and then mentioned the others. He said this to convey that our energy (Sakti), fulfilment (Pushti), pleasure and enjoyment (Rati) etc., should be obtained only by going in the Vedic path.

‘You are the joy that is present within every living thing! You are the strength present in every living thing! You are also the sense of fulfilment’. Saying these, he He offers his namaskaram for each with the word ‘Namostu’.

While concluding, he mentions the name Purushottama – the unique name of Mahavishnu – and addresses her as ‘purushottama vallabhaayai – to indicate that she is the Sakti of Mahavishnu.

The Child Acharya concluded his hymn this way, including the concepts he was to develop as great philosophies during his later days.

1 The story of Saakambhari is likely to be published more elaborately in the books to be printed later

2 Please see in the section, ‘Rudran-Sivan (Sivam, Nataraja)-Maheswara’, in the text, “Gurumurti and Trimurtis” for the explanation for Tirodaanam, Pancha krityam, etc.

3 IV. 13

4 Please see the text, ‘Vishnu Avataram and Siva Avataram: Siva-Vishnu Otrumai Vetrumaigal’ regarding the name Purushottama.

____________________________________________________________________
Audio

 

 

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading