ஸ்ரௌதிகளே இன்னிலந்து இவன் உன் சிஷ்யன் மட்டுமல்ல என்னோட சிஷ்யனும்

Thanks to Sri Ramaswamy Chandrasekaran for FB share. Sri Ramaswamy is a Honorary Secretary at Chellammal Education Society Mylapore, Vice President at Nanganallur Sri Thyagaraja Sangeetha Samajam, works at Director Hindu Mission Health Services Nanganallur.

விஷ்ணு ஸகஸ்ரநாமம் எனக்கு பரிச்சயமானது 10 வயதில்.

சென்னை தியகராய நகரில் ராமேஸ்வரம் ரோடில் கல்யாண்பாக் என்ற இடத்தில் மஹாபெரியவா உத்தரவின்படி ஒரு வேதம் சொல்லித்தரும் வகுப்பு ஶ்ரீ P N நாராயண ஸ்ரௌதிகளால் நடைபெற்றது. அதில் நான் அம்மாவின் விருப்பப்படி சேர்ந்து கொண்டேன்.

அங்குதான்குருவின் மூலம் விஷ்ணு சகஸ்ரநாமம் ,அமரம்,மூகபஞ்சசதி, லலிதாசகஸ்ரநாமம், ஶ்ரீருத்ரம் சமகம் , ஸூக்த்தங்கள் முதலியவற்றை கற்றுக்கொண்டேன். இதில் பரிக்‌ஷையும் உண்டு.

மைலாப்பூர் சம்ஸ்கிருதசாலையில் மஹாபெரியவா தங்கிஇருந்தார். எங்கள் குரு எங்களை கூட்டிக்கொண்டு அங்கே சென்றார்.

அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது மஹாபெரியவாதான் எக்ஸாமினர் என்று. எல்லோரையும் வரிசையாக வந்து ஸ்லோகங்களைச் மஹாபெரியவா முன் சொல்லவேண்டும். அவரும் மடக்கி மடக்கி நடுவில் இருந்து மற்றும் கடைசி ஸ்லோகம் என்று கேட்டார்.

என் முறை வந்தது. எனக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், அமரம் (சம்ஸ்கிருத இலக்கணம்). பெரியவளும் பத்து நிமிடம் பரிக்‌ஷை செய்தார். எல்லாவற்றிற்கும் சரியாக் பிழையின்றி அவர் அருளால் சொன்னேன்.எல்லார் பரிக்‌ஷையும் முடிந்தது.

என்னைத்தவிர அனைவரையும் கூப்பிட்டு மஹாபெரியவா கையால் புத்தகங்கள் , வெள்ளிக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

நான் சற்று பயத்துடன் குருவின் அருகில் நின்றேன்.மஹாபெரியவா குருவையும் என்னையும் கூப்பிட்டார்

“ஸ்ரௌதிகளே இந்த சிஷ்யனை நல்லா தயார் பண்ணிட்டேள்இ ன்றைக்கு முதல் பரிசு இவனுக்குத்தான்” என்று கூறி மூகபஞ்சசதிபுத்தகத்தை பரிசாக அவர் பொன்கரங்களால் பரிசாக அளித்தார். சரி என்று கிளம்பினேன்.

உடனே அவர் “ கொஞ்சம் இரு “ என்றார்.பக்கத்தில் இருந்த காரியஸ்தரிடம் “ஒரு மஞ்சக்காசு கொண்டா” என்றார். மஞ்சக்காசு என்றால் தங்கக்காசு. அதையும் அவர் திருக்கரங்களால் என்னிடம் கொடுத்து சொன்னார்.

“ தினமும் ஸகஸ்ரநாமம் விடமல் சொல்லு. ஒரு ஸ்லோகம் சொன்னாலும் பலன் உண்டு.”
அவர் அடுத்த சொன்ன வார்த்தைதான் என் வாழ்க்கையையே தடம் மாறி என்னை உச்சத்திற்கு கொண்டு சென்றது

“ ஸ்ரௌதிகளே இன்னிலந்து இவன் உன் சிஷ்யன் மட்டுமல்ல என்னோட சிஷ்யனும்”.
சரி ஒரு ஸ்லோகம் சொன்னாலும் பலன் உண்டு என்ற சொன்னதில் பலனை அறிய ஒரு வாய்ப்பும் வந்தது பின்னாளில். …

 

Loading

5 Responses

  1. எத்தனை ஜன்ம புண்யமோ, மஹாபெரியவாளா நேரில் பார்க்கவும், அவருடைய அனுக்ரஹத்தை பெறவும்….. மஹா பெரிவா ஶரணம்.

Leave a Reply to kasiviswanath ramanathanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading