
Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this chapter Sri Periyava beautifully explains in details how Adi Acharyal seeks enlightenment which seemingly asking for material for the poor woman when singing Kanakadhara Stothram.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for another contextual drawing and Shri ST Ravikumar for the great translation. Rama Rama
__________________________________________________________________
பொன்மழை பொழிவித்தது; லௌகிகத்திலேயே ஆத்மிகமும்
அந்தச் சின்ன வயஸிலேயே அவருக்கு இருந்த கவி உணர்ச்சியால்தான் அப்படிச் சொன்னார்! ஆசார்யாளின் க்ரந்தங்களைப் பார்க்கப் பார்க்க நமக்கு ஆச்சர்யமாயிருக்கும் – எத்தனை விஷயம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் மஹாபுத்திமானாக அவர் இருந்திருக்கிறாரென்று மட்டுமில்லை; கவி என்ற ரீதியிலேயே எப்படியெல்லாம் வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறார், எப்படி அலங்காரங்களை (உபமானம் முதலான அணிகளை)க் கையாண்டிருக்கிறார், வார்த்தை விநோதங்கள் என்னவெல்லாம் பண்ணியிருக்கிறார், கவிகள் தங்களுக்குள் ஒரு ‘ட்ரெடிஷ’னாக – மரபாக – பின்பற்றும் கருத்துக்களையெல்லாம் தாமும் எப்படிப் பின்பற்றியிருக்கிறாரென்று ஆச்சர்யமாயிருக்கும். நிர்குண ப்ரஹ்மம் என்று கல்பனா ரஹிதமாக, வெட்ட வெளியாயிருப்பதைப் பிடித்துக் கொண்டிருந்தாலும் நூதன கல்பனைகளைத் தம்முடைய நூல்களில் கொட்டிக் கவித் திலகமாக இருந்திருக்கிறார்!
குழந்தையாய் அவர் அநுக்ரஹித்த இந்த முதல் ஸ்தோத்ரத்திலேயே இப்படிப் பல இருப்பதில், poetic tradition ஒன்றின்படியே பக்ஷிக் குஞ்சு என்று “விஹங்க சிசு” என்று, சொல்லியிருக்கிறார்.
நம்முடைய கவி மரபிலே சகோரம், சாதகம் என்று இரண்டு பக்ஷிகளைச் சொல்வார்கள். இப்போது நாம் லோகத்தில் பார்க்க முடியாத இரண்டு விசித்ரமான பக்ஷிகள்! ‘சகோரம்’ என்பது சந்த்ரிகையை (நிலவொளியை) மாத்ரமே ஆஹாரம் பண்ணும் பக்ஷி. வேறே எதுவும் சாப்பிடாது.
‘ஸெளந்தர்ய லஹரி’யில் அம்பாளின் மந்தஹாஸ காந்தியை வர்ணிக்கும்போது2 சகோரத்தைச் சொல்கிறார். ‘மதி வதனம்’ என்பது வழக்கமல்லவா? அம்பாளுடைய மதி வதனத்திலிருந்து சந்த்ரிகையாக அவளுடைய சிரிப்பொளி வீசுகிறது. அந்த சந்த்ரிகையை சகோர பக்ஷி பானம் பண்ணிற்று. சொல்லி முடியாத தித்திப்பாக இருந்தது. இப்படியிருந்தால் திகட்டிவிடுமல்லவா? தித்திப்பில் அதன் அலகு மரத்தே போய்விட்டதாம்! திகட்டாமலிருக்க அப்பப்போ ஒரு வாய் புளிக் கஞ்சி குடிக்கலாமே என்று பார்த்ததாம். ஆகாசத்திலே சந்த்ரனிலிருந்து நிலா அடித்துக் கொண்டிருந்தது. அதை அந்தச் சகோரம் ருசி பார்த்ததாம். அம்பாளுடைய முக சந்திரனிலிருந்து பெருகும் மந்தஸ்மித நிலாவின் தித்திப்பு ஏறிய அதன் அலகுக்கு ஆகாசத்துச் சந்த்ரனின் நிலா (அதற்குத் தேவைப்பட்ட) புளிக்கஞ்சி மாதிரியே இருந்ததாம்! மரத்துப்போன உணர்ச்சியும் போயிற்றாம்! அதற்கப்புறம் தான் சகோர பக்ஷி நிலாவைக் குடிப்பது என்று ஏற்பட்டது என்று விநோதக் கல்பனையாகப் பாடியிருக்கிறார்.
வாஸ்தவத்தில் சந்த்ரிகையில் அம்ருதமே நிறைந்திருக்கிறது. அந்த அம்ருதத்தையும் புளிக் கஞ்சியாக்கிவிடும் அப்பேர்ப்பட்ட மாதுர்யத்தோடு அம்பிகையின் மந்தஹாஸ காந்தி இருக்கிறது என்று அங்கே சொல்லியிருக்கிறார். “காஞ்ஜிக தியா” — ‘கஞ்சி என்ற எண்ணத்தால்’ (நிலாவைச் சகோரம் குடிக்கலாயிற்று) என்கிறார். மலையாளத்தில்தான் கஞ்சி குடிப்பது ஸகல ஜாதியாருக்கும் வழக்கமாயிருக்கிறது. ‘மலையாளம் கஞ்சி’ என்றே இருக்கிறது.
‘ஸெளந்தர்ய லஹரி’ ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஜகதாசார்யாளாகக் கீர்த்தி பெற்ற பிறகு பண்ணினது. அதில் சகோரத்தைச் சொன்னவர் பால்யத்தில் மஹாலக்ஷ்மியைப் பாடினபோது சாதகத்தைச் சொல்லியிருக்கிறார். ‘விஹங்க சிசு’ என்பது சாதக பக்ஷியின் குஞ்சைத்தான்.
சாதகத்தைப் பற்றி, என்ன விசித்ரமென்றால், அதற்குத் தொண்டையிலே த்வாரம் இருக்கும். இப்படியிருந்தால் எப்படி சாப்பிடுவது? அலகினால் எதைச் சாப்பிட்டாலும் அது தொண்டை ஓட்டை வழியாக வெளியில் வந்து விடுமல்லவா? நாம் கையை வளைத்து வாயில் ஆஹாரம் போட்டுக் கொள்கிறதுபோல அது அலகை வளைத்து ஓட்டைக்குள் ஆஹாரத்தைப் போட்டுக் கொள்ளவும் முடியாது. அதனால், இந்தப் பக்ஷிக்கு ஆஹாரம் என்னவென்றால் ஆகாசத்திலிருந்தே நேரே அந்தக் கண்ட த்வாரத்துக்குள்ளேயே விழுந்து வயிற்றுக்குள் போய்விடக் கூடிய மழைத் துளிதான். மழை இல்லாவிட்டால் அது பசியில் வாடவேண்டியதுதான். ‘மழைக்காக ஏங்கும் சாதகம் போல்’ என்று அதனால்தான் சொல்வது.
லக்ஷ்மி த்ரவிண தாரையை வர்ஷிக்க வேண்டும் என்று சொன்னவுடன் பால ஆசார்யாளின் கவியுள்ளத்துக்கு, ‘மழை தாரையைத் தவிர வேறே ஆஹாரமே இல்லாத சாதக பக்ஷி இருக்கிறதே! அதைத்தான் இவளுடைய த்ரவிண வர்ஷத்திற்காக ஏங்கி வாடிக் கொண்டிருக்கிற இந்த ப்ராஹ்மண குடும்பத்திற்கு ரூபமாகச் சொல்ல வேண்டும்’ என்று தோன்றி, அப்படியே பாடிவிட்டார். வாயால் சாப்பிடுவது கர்மாவை அநுபவிக்கிறமாதிரி, கர்மா ப்ரதிகூலமாயிருப்பதால், வாயால் முழுங்கினது தொண்டை ஓட்டையால் ஒழுகி விடுகிற மாதிரி, இவர்களுக்கு ஸம்பத்து சேராமல் நழுவிப் போய்விடும். கர்மாவைப் பார்க்காமல் அம்பாள் க்ருபை பண்ணும்போது, நேரே தொண்டை ஓட்டைக்குள்ளேயே ஆஹாரத்தைப் போட்டு உள்ளே விடுவதுபோல, ஸம்பத்து நழுவாமல் சேர்ந்துவிடும்.
பக்ஷி என்று மட்டும் சொல்லாமல் சிசுவான பக்ஷி என்று, குஞ்சு என்று சொன்னார். குழந்தைக்குத்தான் பசி தாங்கவே தாங்காது. பசித்தால் அது ‘வீல்’, ‘வீல்’ என்று கத்துகிற மாதிரி நாம் கத்துகிறோமோ? அதோடு, ஒரு சின்னக் குழந்தை கஷ்டப்படுகிறது என்றால் எந்தக் கல் மனஸும் இறங்கும். லக்ஷ்மியோ ‘தாயார்’ என்றே சொல்லப்படுபவள். அதனால் குழந்தை, விஹங்க சிசு என்று சொல்லிவிட்டால் அவள் நிச்சயம் மனஸுருகி அருளுவாளென்று அப்படிச் சொன்னார்.
குழந்தையாயிருந்த ஆசார்யாள் அந்த ப்ராஹ்மண ஸ்த்ரீயைக் குழந்தையாகப் பார்த்து அவள் behalf-ல் வேண்டினார். அவளுக்கு, அவளுடைய பதிக்கு (பதி, பத்னி என்று பேதமே இல்லாமல் பாப-புண்யங்கள் இரண்டு பேருக்கும் சேர்ந்துதான்) கர்மா கெட்டதாயிருப்பதால் அநுக்ரஹிப்பதற்கில்லையென்று லக்ஷ்மி சொன்னாளள்ளவா? அதனால் அவள் சார்பில் வாதாடினார் : ‘துஷ்கர்ம – கர்மம் சிராயதூரம் அபநீய நயநாம்புவாஹ: த்ரவிணாம்புதாராம் தத்யாத்’. “துஷ்க(ka)ர்ம-க(gha)ர்மம்” – கெட்ட கர்மாவான கோடை காலம். கர்மம் என்றால் நல்ல வேனிற்காலம். “அப்படி இவர்களுடைய துஷ்கர்மம்தான் தரித்ரமாக வறுத்தெடுக்கிறது என்கிறாய்! அதனால் ஒன்றும் நிவர்த்தி கிடையாதா? கெட்ட கர்மாவின் ‘நேச்சர்’ கொளுத்தி எடுப்பது என்றால் உன்னுடைய கடாக்ஷத்தின் ‘நேச்சர்’ குளுகுளு என்று மழைமேகம் போல இருப்பதாயிற்றே! அது எங்கேயோ, இது எங்கேயோ இருக்கிறதென்பாயானால் அதை இங்கே அடித்துக் கொண்டு வரத்தான் தயை என்ற காற்று இருக்கிறதே! அந்த க்ருபா வேகத்தைவிட ஒன்று உண்டா? லோகம் தபிக்கும் போது கொட்டும் கோடை மழை மாதிரி, இந்தச் சாதகக் குஞ்சு தவிக்கிற இப்போது அருளைக் கொட்டு. சாதகக் குஞ்சு ஆஹாரத்துக்கு மட்டுமே தவிப்பது. இந்த தம்பதியோ பொருளில்லாமால் ஆஹாரம், வஸ்த்ரம், வீடு எல்லாவற்றுக்குமே தவிக்கிறார்கள். வீடு என்று பொக்கையும் போறையுமாக இடிந்து விழுகிற மாதிரி ஏதோ இருப்பது தான். இந்தக் குழந்தையை வறுத்தெடுக்கும் வெயிலான ஜன்மாந்தர பாபத்தை உன் குளிர்ந்த கடாக்ஷமானது, “அபநீய” — நிவர்த்தி பண்ணி, “சிராய” — எத்தனையோ காலமாகச் சுமந்து வந்த பாபத்தை எங்கே போச்சு என்று தெரியாமல் நிரந்தரமாக, “தூரம் அபநீய” — ரொம்ப தூரத்துக்கு விரட்டி, ‘த்ரவிணாம்புதாராம் தத்யாத்’ — த்ரவ்ய மழையைக் கொடுக்கட்டும்” என்றார்.
தாரித்ரிய நிவ்ருத்தி என்று லோக வாழ்க்கைக்கான ஸமாசாரத்தை வேண்டுகிறாற்போல வேண்டும்போதே கர்ம நிவ்ருத்தி, பாப நிவ்ருத்தி என்பதான ஆத்ம ஸம்பந்தமான வேண்டுதலையும் கலந்து கொடுத்துவிட்டார்!
பணம், படிப்பு, எல்லாம் அதற்குத்தான் (ஆத்ம விஷயமாகக் கொண்டு விடுவதற்குத்தான்). காமம் உள்பட எல்லாமே அதற்குத்தான் ஸ்ருஷ்டியில் வைத்திருக்கிறது. ஸ்ருஷ்டியில் யாரும் சிரஞ்ஜீவியாக இருக்க முடியாது — பகவானே ரொம்ப அபூர்வமாக அப்படி வைத்த ரொம்பக் கொஞ்சம் பேரைத் தவிர, பாக்கிப் பேர் செத்துத்தான் போகணுமென்று ஸ்ருஷ்டி நியதி. ஆனால் செத்துப் போகும் போது கர்மா பாக்கி தீர்ந்து nil balance-ஆக இருப்பதில்லையே! அப்படியிருந்தால்தானே ஸ்ருஷ்டியிலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவுடன் சேரலாம்! ஆனால் அப்படியில்லையே! இந்த மாதிரி இருக்கும்போது அந்த ஆவிக்கு இன்னொரு சான்ஸ், அதுவும் தப்பினால் அப்புறமும் பல சான்ஸ்கள் என்று ஜன்மா ஜன்மாவாகக் கொடுத்துத்தானே அவற்றிலாவது கர்மாவைக் கழித்துக் கொள்ள வாய்ப்புக்கள் தரவேண்டியிருக்கிறது? இப்படி ஒரு ஜீவன் ஜன்மாக்கள் எடுக்கணுமென்றால் அதற்காக ஒரு அப்பா, அம்மாவுக்குக் காமம் இருந்தால்தானே முடியும்? அதாவது, காமம் என்று வைத்திருப்பதும் இன்னொரு ஜீவன் கடைத்தேறச் ‘சான்ஸ்’ கொடுக்கும் நல்ல உத்தேசத்தில்தான் என்று தெரிகிறது. இப்படித்தான் பணத்தால், சாப்பாட்டால், வீட்டால், வைத்தியத்தால் சரீர ரக்ஷணை செய்து கொள்வதும், படிப்பால் அறிவு அபிவ்ருத்தி செய்துகொள்வதுங்கூட ஒவ்வொரு ஸ்டேஜ் வரை ஆத்ம விஷயமாகப் போவதற்கே உதவி செய்யத்தான். என்ன அளவில், எந்த, ஸ்டேஜ் வரையில் என்று தெரியாமல் நாம் ‘மிஸ்-யூஸ்’ பண்ணிக் கொள்வதில்தான் ஒரே அனர்த்தமாகிறது. “அர்த்தம் அனர்த்தம்” என்று ஆசார்யாளே “பஜ கோவிந்த”த்தில் இதைச் சொல்கிறார். அது “மூட மதி”க்கு ‘அட்ரஸ்’ பண்ணியது (“பஜ கோவிந்தம், மூட மதே”!) என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்! புத்திசாலியாயிருந்தால் லௌகிகம் என்று இருக்கிறவைகளைக் கொண்டே, அவற்றைத் தக்க அளவில் தக்க காலம் வரை ‘யூஸ்’ பண்ணிக் கொண்டே, ஆத்மிகத்துக்குப் போய்ச் சேரலாம்.
நம் சாஸ்த்ரங்கள் எல்லாம் அப்படி வழிகாட்டுபவைதான். ஆசார்ய க்ரந்தங்கள் எல்லாமும் அப்படித்தான். பணம் கேட்டு லக்ஷ்மி ஸ்துதி பாடினாலும், வ்யாதி போகணுமென்று ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கு “புஜங்கம்” பாடினாலும் ஆத்ம லக்ஷ்யத்தை அவர் மறக்கவே மாட்டார். அதற்காகவேதான் இவற்றைக் கேட்பது. அன்னம் போடும் அன்னபூர்ணேச்வரியிடம் “பிக்ஷாம் தேஹி!” என்று போய் நிற்கிற போதும் “ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம்” என்றுதான் முடிப்பார்.
‘அகிஞ்சன’ என்று பணத்தில் ஏழ்மையைச் சொல்லும் போதும் ‘கர்ம-கர்மம்’ என்று அதையும் ஆத்ம ஸம்பந்தமான கர்மத்தோடு சேர்த்துக் காட்டி, ஏழ்மை நிவ்ருத்தி மாத்ரமல்ல வேண்டியது, கர்ம நிவ்ருத்தியும்தான் என்று புரிய வைத்திருக்கிறார்.
இந்த ஸ்தோத்தரத்தில் ஒரு பாடப்படி 18 ஸ்லோகம், இன்னொன்றின்படி 20-21 ச்லோகம் என்று இருந்தாலும் இந்த ஒரு ஸ்லோகத்தில்தான் செல்வத்துக்கு அதிதேவதையான லக்ஷ்மியிடம் பொருட் செல்வம் வேண்டுவது. அடுத்த ஸ்லோகத்தில்3 வேண்டுமானால், “இஷ்டாம் புஷ்டிம் க்ருஷீஷ்ட மம” என்று தாம் விரும்பிக் கேட்கிற (தமக்காக அல்ல, அந்த ப்ராம்மண தம்பதியை முன்னிட்டுக் கேட்கிற) செழிப்பைத் தரட்டும் என்று சொல்லும் போதும் தனத்துக்கான ப்ரார்த்தனையை hint செய்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். மற்றபடி ஸ்தோத்ரம் முழுக்கப் பெருமாளும் தாயாரும் எப்படிச் சேர்ந்து சேர்ந்து அநுக்ரஹ மூர்த்திகளாக இருக்கிறார்கள், (அவர் கார்மேகம் போல வ்யாபித்து இருக்கும்போது, மேகத்துக்கு நடுவில் மின்னுகிற மின்னலைப்போல் இவள் எப்படி அவருடைய வக்ஷஸ்தலத்தில் ஸ்வர்ண காந்தியுடன் ப்ரகாசிக்கிறாள்4 — என்பது போன்ற விஷயங்கள்), ஸர்வ சக்தியான பராசக்தியின் ஒரு ரூபமாகவே இருக்கப்பட்ட லக்ஷ்மி இன்னும் என்னென்ன மூர்த்திகளாக இருக்கிறாள், லக்ஷ்மீ ரூபத்தில் அவளுடைய வர்ணனை என்ன, பெருமை என்ன — என்றிப்படியான ஸமாசாரங்கள்தான் இருக்கின்றனவே தவிர திரவியத்திற்கான ப்ரார்த்தனை இல்லை.
இப்படி அநேக விஷயங்களை, கவிதை அழகுகளை, பக்தி பாவங்களைத் தெரிவித்து ச்லோகங்கள் சொல்லிக் கொண்டு போகும்போது ஒரு ச்லோகத்தில்தான், எதற்காக ப்ரார்த்திக்க ஆரம்பித்தாரோ அந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘லோக மாதாவிடம் போய் ரொம்ப ஒன்றும் முறையிட வேண்டியதில்லை. துளிப்போறக் காட்டி விட்டாலே போதும்’ என்கிற ரீதியில் பாடியிருக்கிறார். அதிலேயே முறையீட்டை ஸாரமாக வடித்துக் கொடுத்து விட்டார்! ‘ரொம்ப தீனமாக, பக்ஷிக் குஞ்சு மாதிரி ஸ்வயமாக ஒன்றும் பண்ணிக் கொள்ளத் தெரியாமலிருக்கும் இந்த அம்மாளுக்கு அருள் மழையைக் கொட்டு’ என்று சொல்ல வந்ததையும்கூட, ‘அம்மாள்’ என்று சொல்லாமலே வ்யங்கியமாகத் தெரிவித்திருப்பது ரஸமானது.
2 63-வது ச்லோகம்
3 “இஷ்டா விசிஷ்ட” எனத் தொடங்குவது.
4 காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ (ஆறாவது ச்லோகம்)
_________________________________________________________________
Getting gold rain showered ; Spirituality in Material life itself
He said so by virtue of the poetic talent he possessed at that young age itself! When we go through the treatises (Grantas – ग्रन्थाः) of Acharya, it is amazing – not only as a highly intelligent person who knew so much, but also about how he has strung words together as a poet, how he has handled alankaras (उपमान – similes, etc.), how he has played with words and how he has followed the principles which are traditionally followed by poets. Though he was attached to Nirguna Brahmam, which, like the vast space, is beyond imagination, he was also a jewel among poets whose works are filled with creative ideas!
While many such unique features are there in the very first sloka rendered by him while he was still a child, he has mentioned the word ‘Vihanga Shishu’, a hatchling, only as per a poetic tradition.
There is reference to two birds in our poetic traditions – chakoram and chaatakam [चकोरः, चातकः]. They are two strange birds which cannot be seen in the world now! ‘Chakora’ is said to consume only the moon light as its food. It will not eat anything else.
In the ‘Soundarya Lahari’2, while describing the brightness of Ambal’s enchanting smile (मन्दहास कान्ति), he mentions the Chakora bird. Don’t we say ‘moon-like face’ (மதி வதனம்)? From Ambal’s moon like face, her smile shines like the moonlight. The Chakora bird drinks that moonlight which was indescribably sweet. Too much sweetness leads to a feeling of cloy, isn’t it? It seems the beak of the bird got numb on account of the sweetness! In order to overcome this sense of feeling cloyed, it looked out for a mouthful of sour porridge. The moon was shining in the sky. It tasted that moonlight. For its beak, which had become numb due to the sweetness of the smile emanating from Ambal’s moon-like face, the moonlight from the moon in the sky was indeed like sour porridge needed by it! The feeling of numbness vanished too! It was only after this that the Chakora bird started drinking the moonlight – is the unique imagination he has created.
Moonlight is full of nectar. There he says that the charming smile of Ambal is so sweet that it will make even the nectar [of moonlight] into a sour porridge. “Kaanjika Dhiya” – he says ‘Thinking it to be porridge, (the Chakora started drinking the moonlight). Drinking porridge is common practice for people of all castes in Malayalam region. There is also a ‘Malayalam kanji[porridge]’.
‘Soundarya Lahari’ was written many years later, after he had attained fame as Jagadaacharya [Acharya of the world]. He, who mentioned Chakora in that, has mentioned Chataka in his childhood, while singing the verse on Mahalakshmi. ‘Vihanga Shishu’, is the young one of a Chataka bird.
The strange thing about this Chataka is that it has a hole in its throat. How will it then eat? Whatever it consumes with its beak will come out of that hole in the throat, isn’t it? It cannot bend its beak and place the food in the hole the way we bend our hand and put food into our mouth. Therefore, the food for this bird is the rain drop which falls directly from the sky into this hole in its throat and goes straight into the stomach. If there is no rain, it has to suffer from hunger. That is why there is this saying “like the Chataka which is yearning for the rains”. (மழைக்காக ஏங்கும் சாதகம் போல்).
While seeking out to Lakshmi to pour the rain of wealth, it occurred to the poetic mind of child Acharya thus: ‘there is this Chataka bird which has no food other than rain drops! It should be quoted as an allegory [a symbolical narrative] for this Brahmin family’; He composed the verse accordingly. Eating through the mouth is like experiencing Karma. If Karma is bad, what is taken through the mouth will come out from the hole in the throat; likewise, wealth will also slip away from this couple [if their karma is bad]. When Ambal showers her blessings overlooking the karma, wealth will get added without slipping off, like the food which is put directly into the hole in the throat.
Instead of saying ‘bird’, he has said ‘a young bird’, ‘a hatchling’. A child is not capable of bearing hunger at all. Do we cry out like a child when we are hungry? Moreover, if a small child is suffering, even the heart of a merciless person will melt. And Lakshmi is referred to as ‘Mother’. Therefore, if it is mentioned as a child, Vihanga Shishu, she would certainly feel pity and shower her blessings.
Acharya, who was himself a child, looked at that Brahmin woman as a child and prayed on her behalf. Did not Lakshmi say that it was not possible to bless them owing to the woman’s and her husband’s karma? [Without any discrimination of who accrued them, papam and punyam belong to both husband and wife]. That is why he pleaded on her behalf.
‘Dushkarma – gharmam chiraayadooram apaneeya nayanaambuvaaha: dravinaambudhaaraam dadyaat’ [दुष्कर्म-घर्मम् चिरायदूरं अपनीय नयनाम्बुवाहः द्रविणाम्बुधाराम् दद्यात्] “Dushkarma-gharmam” – the scorching time of bad Karma. Gharmam means hot summer. “You are saying that their bad Karma has manifested as poverty and is frying them! Is there no relief for that? If the ‘nature’ of bad karma is to burn them [like summer], the ‘nature’ of your glance is cool like the rain-bearing clouds! If you say that [your glance] is somewhere and this [their poverty] is elsewhere, is there not the wind of your compassion which can bring that here! Is there anything faster than your grace? Like the summer rains that fall when the earth is burning, pour your blessings on this young Chataka bird. A young Chataka bird yearns only for food. Whereas this couple is suffering without food, clothes, or a house, because of lack of wealth. Even this namesake house is fully damaged and ready to crumble anytime. Your cool glance should, “apaneeya” – provide relief – to this child suffering from the extremely hot situation of papam from previous births, “chiraaya”- remove the sins borne since many previous births permanently without a trace of where they have gone, “dooram apaneeya” – remove them to a far-off place, and ‘dravinambudaaraam dadyaat’ – shower the rain of material wealth”.
Even while praying for relief from poverty, which is a matter related to material life, He has included prayers related to Atma also, by praying for relief from [past] Karma and relief from sins!
Money, education are all only for that (to reach to the state related to Atma). Everything in creation, including desire, is only for that. It is the rule of creation that nobody can be immortal – except for those few, rare people whom Bhagawan himself has identified; all others shall die as per the rule of creation. However, when a person dies, his Karma is not at nil balance, not fully over! One can get away from [the cycle] of creation and reach Paramatma only if it [karma] is fully over! But it is not so! Under these circumstances, does it not become necessary that the entity is given a chance, and may be many more chances in the form of subsequent births, to enable it to get rid of its Karma? If a life must take birth like that, there should be desire between the father and the mother, isn’t it? Thus, it is evident that even the emotion of lust is granted only with the good intention of giving a chance to another life to get redeemed of karmas. Likewise, nurturing of the body with [material things such as] money, food, shelter, and medical treatment, and enhancement of knowledge through education, are, to a certain level, only to facilitate an individual move towards self-realisation. It becomes disastrous when we misuse the above without knowing where to stop in terms of quantity or the level. Acharya himself has mentioned this in his ‘Bhaja Govindam’ as “artham anartham” (अर्थं अनर्थम्). We should also bear in mind that it was addressed to “Mooda Mati”. (“Bhaja Govindam, Mooda Mate” – भजगोविन्दं भजगोविन्दं गोविन्दं भज मूढमते ।)! If one is smart, by using the material things in right quantities till an appropriate time, he can reach spirituality.
All our Sastras are showing only that path. All the treatises of Acharya are also like that. Whether he is seeking wealth from Lakshmi through his verses or seeking relief from disease through his “Bhujangam” to Subramanya Swamy, he never forgets the goal of self – realisation. These are all sought only for that purpose. Even when he stands in front of Annapoorneswari with the plea “bhikshaam dehi”, he only ends it saying, “jnana vairagya sidhyartham” (ज्ञानवैराग्यसिद्ध्यर्थं) [Give me the bhiksha of attainment of jnana, vairagya and siddhi].
Even while mentioning the word ‘Akinchana’ (अकिञ्चन), referring to the paucity of money, he has combined it with karma that is related to the atma as ‘karma-gharmam’, seeking relief not only from poverty but also from [previous] karmas.
Although as per one school there are 18 verses in this stotram and 20-21 as per another, only in this Sloka he has prayed to Lakshmi for material wealth, the Ultimate Incharge [अधिपति] for wealth. We may consider that he has given a hint for material wealth in the next verse3 too when he says, “ishtaam pushtim krusheeshta mama” [इष्टां पुष्टिं कृषीष्ट मम] (not for himself, but on behalf of the Brahmin couple). Otherwise, in the entire Stotram he has only talked about things like how Perumal and Thaayar are combined icons of benevolent grace, (matters like, when He is like the vast expanse of rain bearing clouds, she is shining on His chest like a lightning appearing between clouds), how Lakshmi – who is one of the forms of the omnipotent Parasakti – is in the form of various other murthys, her description when she is in the form of Lakshmi, her greatness etc., but no prayer seeking material wealth.
In this way, when he goes about saying the Slokas touching upon many things like poetic beauty, feeling of devotion etc., only in one verse he has made a mention of the issue for which he started the prayer. He has sung in a manner that indicates that it is not necessary to go and plead much to the Mother of this Universe [लोक माता] but would be enough to indicate just a little bit. He has given the plea in the form of an essence within that [one sloka]! It is quite delightful to observe that whatever he wanted to convey – “on this woman who is like a weak hatchling which is incapable of doing anything on its own, pour the shower of grace” – he has not directly mentioned the word ‘woman’, but has made only an indirect reference.
2 63rd verse
3 Begins with “Ishtaa visishta”
4 Kaalaambudaali lalithorasi kaitabhaare:
Dhaaraadhare sphurati ya tatidanganeva (sixth verse)
कालाम्बुदालिललितोरसि कैटभारे:
धाराधरे स्फुरति या तडिदङ्गनेव ।
__________________________________________________________________
Audio
![]()
2 Responses
Thanks also to Ravikumar Ji
Very Beautiful drawing and excellent explanation by Sowmya Ji. Thank you