125.1. Sri Sankara Charitham by Maha Periyava – Getting gold rain showered; Spirituality in Material life itself

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The birth of Kanakadhara Sthavam by Sri Adi Acharyal has been brought right in front our our eyes by Sri Periyava in his own words and through wonderful visuals by Smt. Sowmya.

Many Jaya Jaya Sankara to Shri ST Ravikumar for the great translation.  Rama Rama

 _______________________________________________________________

பொன்மழை பொழிவித்தது; லௌகிகத்திலேயே ஆத்மிகமும்

அந்த மாதிரி ஒரு நாள் காலம்பற – அன்றைக்கு த்வாதசி என்று சொல்வார்கள் – ஒரு வீட்டுக்குப்போய், முறைப்படி, “பவதி! பிக்ஷாம் தேஹி!” என்று கேட்டார்.

அது பரம தாரித்ரிய தசையிலிருந்த ஒரு ப்ராம்மணனின் வீடு. அவனுக்கு அநுக்ரஹம் பண்ணவே பால ப்ரஹ்மச்சாரி அங்கே போனார் போலிருக்கிறது! பிக்ஷை என்று சாக்காகப் போய், பெரிய அநுக்ரஹ பிக்ஷை போடுவதற்காக!

மலையாளத்தில் எல்லாரும் ஸுபிக்ஷமாயிருந்தார்கள். ‘அத்ருதி’க்குள்ளேயே குடித்தனத்துக்கு வேண்டிய ஆஹார ஸாமான்கள் கிடைத்துவிடும் என்றெல்லாம் சொன்னால்கூட, கர்மா என்று ஒன்று இருக்கோல்லியோ? அப்படியிருந்தால் கல்பக வ்ருக்ஷத்திற்குக் கீழேயே இருந்தால்கூட தரித்ரம்தான் பிடுங்கித் தின்னும்! ஜன்மாந்தர கர்மாவினால் இந்த ப்ராம்மணன் ரொம்பவும் ஏழ்மை நிலையிலிருந்தான். வீட்டுக்கு அத்ருதி இருந்ததேயொழிய அதற்குள் மரமா, செடியா எதுவும் பயிராகாமல் பொட்டலாயிருந்தது!

உஞ்சவ்ருத்திக்கு (வீடு வீடாக அரிசி தானத்துக்கு) அந்த ப்ராம்மணன் போவான். ஸாதாரணமாக உஞ்சவ்ருத்தி ப்ராம்மணன் வந்தால் போடாமலிருக்க மாட்டார்கள். ஆனாலும் கர்மா ப்ரதிகூலமாக இருந்தால் எங்கேயும் பழி வாங்காமல் விடாது – இவன் போகிற வேளை அஸந்தர்பமாயிருந்து காலிப் பாத்ரமாகவே திரும்ப வேண்டி வரும். எப்படியோ அந்த தம்பதி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வந்தார்கள்.

ஆசார்யாள் பிக்ஷைக்குப் போயிருந்த அன்றைக்கு வீட்டுக்கார ப்ராம்மணன் வீட்டிலில்லை. அவனுடைய ஸம்ஸாரம் மட்டுமே இருந்தாள்.

பிக்ஷை போடுவதற்கு அந்த வீட்டில் எதுவுமில்லை. ஆசார்யாளைப் பார்த்த மாத்திரத்தில், “அடடா, எப்படிப்பட்ட தேஜஸ்வியான ப்ரஹ்மசாரி! இவருக்கு பிக்ஷை போட்டால் ஸகல புண்யமும் உண்டாகும்!” என்று நினைத்தாள். ஆனால் போடத்தான் மணி அரிசி இல்லை. அவள் நல்ல உள்ளம் படைத்தவள். ‘இருக்கிறவர்களை’ விட ‘இல்லாதவர்’களுக்கே கொடுக்கிற எண்ணம் இருப்பதுண்டு. இவளுக்கு அப்படி இருந்தது. ‘அபர ஸூர்யனாக நிற்கிற குழந்தைக்குக் கொடுக்கிறதற்கு இல்லையே! இப்படியொரு தெய்வக் குழந்தை நம் ஆத்து வாசலில் வந்து நிற்கிறபோது ‘இல்லை போ!’ன்னு சொல்லுவாளா?’ என்று மிகவும் வேதனைப்பட்டாள். என்னவாவது கிடைக்குமா என்று தேடித் தேடிப் பார்த்தாள்.

ஒரு புரையில் அழுகிப்போன நெல்லிக்காய் ஒன்று அகப்பட்டது. அந்தப் ப்ராம்மணன் பரம ஸாது. தோப்பில், கீப்பில் உதிர்ந்து கிடக்கிறதுகளில்கூட நல்லதாக உள்ளதை எடுத்தால், “ஏண்டா, எடுத்தே?” என்று யார் சண்டைக்கு வருவார்களோ என்று இந்த அழுகலைப் பொறுக்கிக் கொண்டு வந்து வைத்திருந்தான். அதுவும் அவளுக்குத் தெரியாது. இப்போது தேடியதில் அகப்பட்டது. த்வாதசியன்று போஜனத்தில் நெல்லி அவச்யம் சேர்க்க வேண்டும். அதற்காக அவன் ‘சேமித்து’ வைத்திருந்த நெல்லி!

“போயும் போயும் இதையா தெய்வக் குழந்தைக்குப் போடுவது?” என்று மனஸு குமுறி வேதனைப்பட்டாள். ஆனாலும் “பவதி பிக்ஷாம் தேஹி!” கேட்டுவிட்ட ப்ரஹ்மசாரியை வெறுமே அனுப்பப்படாதே என்பதால் வாசலுக்குப் போனாள். அங்கே மஹா தேஜஸ்வியாக நிற்கிற பால சங்கரரைப் பார்த்துச் சொல்லி முடியாத வெட்கத்தோடும் அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள். வந்த பிறகு, ஐயோ, தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா?” என்று நினைத்து வாசலுக்குப் போனாள். இப்படி வாசலுக்கும் உள்ளுக்குமாகத் தவித்துத் தடமாடி விட்டு, கடைசியில், ‘அழுகலோ, மட்டமோ? நம்மிடம் இருப்பதைத் தானே நாம் கொடுக்க முடியும்?’ என்று ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக் கொண்டு அழுகல் நெல்லிக்கனியை ஆசார்யாளுக்குப் போட்டாள். தாரை தாரையாகக் கண்ணால் ஜலத்தைக் கொட்டிக் கொண்டு போட்டாள்.

பொருளில் தரித்ரமாயிருந்தாலும் அவளுடைய மனஸு எத்தனை பெரியது, அது ஆகாசம் மாதிரி விரிந்து அதிலிருந்து தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதை ஆசார்யாள் கண்டு கொண்டார். அவர் மனசு அவளுக்காக உருகிற்று.

உடனே அவளுக்காக மஹாலக்ஷ்மியை ப்ரார்த்தித்து ஸ்தோத்ரம் பாடினார். அதுதான் “கனகதாரா ஸ்தவம்” என்பது. அந்தப் பேர் ஏற்பட்டதற்குக் காரணம் பின்னால் தெரியும்.

ஆசார்யாளின் வாக்கிலிருந்து வந்த முதல் ஸ்துதி இதுதான்.

அந்த ப்ராம்மண குடும்பத்தின் தாரித்யத்தைப் போக்கி, ஸம்பத்தை அநுக்ரஹிப்பதற்காக லக்ஷ்மியை ஸ்துதித்தார்.

ஆகாசத்திலிருந்து அசரீரி வாக்குக் கேட்டது. “இந்த தம்பதி பூர்வ ஜன்மத்தில் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்ரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்கு ஸம்பத்தைத் தருவதற்கில்லை” என்று லக்ஷ்மி அசரீரியாகச் சொன்னாள்.

உடனே ஆசார்யாள், “இவர்கள் இப்போதிருப்பதைவிட ஜாஸ்தியாக வேண்டுமானாலும் ஜன்ம ஜன்மாந்தரங்களாகப் பாவம் பண்ணியிருக்கட்டும்! அப்படியிருந்தால் கூட, இத்தனை அன்போடு அகத்திலிருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக்கனியை இவள் எனக்குப் போட்டிருக்கிறாளே, இந்த அன்பும் த்யாகமும் எத்தனை புண்யமானவை? சாப்பாட்டுக்கே இல்லாதவள் எனக்கு பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாபத்தையும் சாப்பிட்டுவிடுமே! அதோடு, எத்தனை கர்மாவானாலும் நான் ப்ரார்த்தித்ததால் போய்விடாதா?” என்று கேட்டார்.

“அம்மா மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் அன்பு நிறைய உண்டாச்சே! அதனால், ரொம்பக் கண்டிப்போடு ந்யாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்ரஹம் பண்ணு!” என்று ப்ரார்த்தித்தார். “இவர்களுடைய துஷ்கர்மம் கடும் கோடைக்கால வெய்யிலாக ஸம்பத்து ப்ராப்தியை வற்றடிப்பதாகவே இருக்கட்டும். ஆனால் எந்தக் கோடையையும் தணிவிக்கக் கூடியதாக ஒரு பெரிய காற்று மழைமேகத்தைக் கொண்டு வந்து விடலாமோ இல்லியோ? (மலையாளத்தில் ‘எடவப் பாதி’ என்பதாக வைகாசி மாஸ மத்தியில் நல்ல வெய்யில் நாளிலேயே தென்மேற்கிலிருந்து காற்றடித்து நல்ல மழைமேகங்களைக் கொண்டு வந்து மான்ஸூன் கொட்ட ஆரம்பித்து விடும்!) இவர்களுடைய துஷ்கர்ம வெய்யிலைப் போக்க உன்னிடமுள்ள தயை என்ற காற்றினல் ஸம்பத்து மேகத்தை அடித்துக்கொண்டு வந்து கொட்டிவிடேன்!…. உன்னுடைய கடாக்ஷமாகிய கார்மேகத்தை தயை என்ற காற்றினால இவர்கள் பக்கம் திருப்பிவிட்டுப் பொருள் என்ற மழையைப் பொழியேன்!” என்று சொன்னார்.

ஏழை ப்ராம்மண ஸ்த்ரீக்காக அவர் லக்ஷ்மியிடம் முறையிட்டதற்கு “கனகதாரா ஸ்தவ”த்திலேயே internal evidence இருக்கிறது:

தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மிந் அகிஞ்சந விஹங்க சிசௌ விஷண்ணே |
துஷ்கர்ம கர்மம் அபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயிநீ நயநாம்புவாஹ : ||1

பெருமாளிடம் நிறைந்த ப்ரேமையை வைத்திருக்கும் தாயாரானதால் “நாராயண ப்ரணயினீ !” என்று கூப்பிட்டுச் சொல்கிறார். கூப்பிடுவது நாலாம் வரியில். எடுத்தவுடன் “தத்யாத்” – “கொடுத்து விடட்டும்!” என்று அவளுடைய அருட்காற்று அடித்து மழையாக ஸம்பத்துத் தர வேண்டியதைப் பளிச்சென்று தெரிவித்து விடுகிறார்.

“தயாநுபவனோ” – தயையாகிய காற்றோடு கூடிய; “நயனாம்புவாஹ:” – நேத்ரமாகிய மேகம். அதாவது கடாக்ஷம். லக்ஷ்மீ கடாக்ஷம் ஏற்பட்டுவிட்டால் அமோகமாக ஸம்பத்துப் பொழிந்து விடும். கர்மா பாதகமாயிருக்கும்போது அந்தக் கடாக்ஷம் எந்தப் பக்கமோ பார்த்துக் கொண்டிருக்கும். கருவிழி, மை இட்டுக் கொண்டிருப்பது இரண்டும் சேர்ந்து கறுப்பிலேயே பளபளவென்று ஜ்வலிப்பது அந்தக் கடாக்ஷம். அதனால் கார்மேகமாகச் சொல்வது வழக்கம். அந்த மேகம் எந்தப் பக்கமோ இருக்கிறது – ரொம்ப தூரத்தில். அதனாலென்ன? எங்கேயோ அந்தமான் தாண்டியிருக்கிற மழைமேகத்தை மான்ஸுன் காற்று நம் ஊருக்கு அடித்துக் கொண்டு வருகிறதா, இல்லையா? அப்படியொரு பெரிய காற்றாகத் தாயாருடைய தயை இருக்கிறதே! தயைக் காற்று கடாக்ஷமேகத்தை அடித்துக் கொண்டுவந்து இந்த துஷ்கர்மக்காரர்களிடமுந்தான் கொட்டட்டுமே! இம்மாதிரி தகுதி இல்லாதவர்களுக்கும் நல்லது செய்யத்தானே தயை, தயை என்று ஒன்று அவளிடம் இருக்கிறது? தகுதியுள்ளவர்களுக்குத் தகுதிக்காகவே செய்துவிட வேண்டியதுதான். ‘தயை’ காட்ட வேண்டியதில்லை. லௌகிகத்திலுங்கூட தகுதிப்படி நமக்குக் கிடைக்கவேண்டியதைக் கேட்கும் போது ‘தயவு காட்டுங்கள்!’ என்று சொல்வதில்லையே! ‘அவன் தயவு இவனுக்கு வேண்டியிருக்கிறது’ என்றால் இவனுடைய தகுதியைப் பார்க்காமலே அவன் உபகாரம் பண்ணுவானென்று அர்த்தம். வெய்யிலில் வறண்டு போன பூமிக்கு “தகுதி” என்ன இருக்கிறதென்று பார்த்தா மான்ஸூன் காற்று அங்கே மேகத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது?

“தயைக் காற்றோடுகூடி உன் கடாக்ஷ மேகமானது த்ரவிணாம்பு தாராம் தத்யாத். ‘த்ரவிணம்’ என்றால் செல்வம். ‘அம்புதாரா’: ‘அம்பு’, ‘அப்பு’ இரண்டும் ஒன்றுதான் – ஜலம் என்று அர்த்தம். “அம்புதாரா” – ஜலம் தாரையாக வர்ஷிப்பது, அதாவது மழை. “உன் கடாக்ஷமேகம் கருணைக் காற்றினால் கொண்டுவரப்பட்டுப் பொருள் தாரையை வர்ஷிக்கட்டும்!”

பொருளைப் பொன் என்றே சொல்வது வழக்கம். ‘பொன்னும் பொருளும்’ என்றே சேர்த்துச் சொல்கிறோம். ரூபாயே gold standard – படிதானே (பொன்னின் கையிருப்பை வைத்துத்தானே) இருந்திருக்கிறது? ‘த்ரவிணம்’ என்றால் பொதுவாக ‘பொருள்’ என்பதோடு ‘பொன்’ என்றும் அர்த்தம் உண்டு. ஸ்வர்ணம், ஹேமம், ஹிரண்யம், கனகம் என்பவை போல த்ரவிணம் என்றும் தங்கத்துக்கு ஒரு பேர். “த்ரவிண (அம்பு)தாரா” என்று இங்கே ஆசார்யாள் வாக்கில் வந்திருப்பதுதான் ஸ்தோத்ரத்தின் பேரில் “கனகதாரா” என்று இருக்கிறது!

“உன் கடாக்ஷமேகம் அருட்காற்றோடு கூடி வந்து த்ரவிணதாரையைப் பொழியட்டும்!” என்றால் யாருக்கு? ஸ்தோத்ரம் பண்ணும் பால சங்கரருக்கா? அவருக்கு எதற்கு? பெரிய செல்வக் குடும்பத்தில் வந்தவரல்லவா அவர்? அதுவுமன்னியில் ப்ரஹ்மசாரியாக குருகுலவாஸம் பண்ணிக் கொண்டிருப்பவர் பணமே வைத்துக்கொள்ளப்படாதே!

அவருக்கில்லை. வேறே யாருக்கு? அதைச் சொல்கிறார்: “அஸ்மின் அகிஞ்சன விஹங்க சிசௌ விஷண்ணே“. அப்படியென்றால், ‘மனஸ் சோர்ந்து வாடிப் போயிருக்கிற இந்த ஏழையான பறவைக் குஞ்சுக்கு’ என்று அர்த்தம்.

மநுஷ்யர்களுக்கு என்றே சொல்லவில்லை! பக்ஷிக்கு, அதிலும் வளராமல் குஞ்சாகவுள்ள பக்ஷிக்கு என்கிறார்! ‘விஷண்ணே’ – வாடிச் சோர்ந்துபோன; ‘அஸ்மின்’ — இந்த (கிட்டத்தில் இருக்கும் ப்ராம்மண ஸ்த்ரீயைக் காட்டிச் சொல்வதால் ‘இந்த’ என்கிறார்) ; ‘அகிஞ்சன’ – கொஞ்சங் கூட உடைமை இல்லாத. ‘கிஞ்சன’, ‘கிஞ்சித்’ என்றால் ‘கொஞ்சம்போல’. ‘கிஞ்சன’தான் ‘கொஞ்ச’மாச்சோ என்னவோ? ‘அகிஞ்சன’ என்றால் அந்தக் கொஞ்சங்கூட இல்லாத முழு தரித்ரமாக என்று அர்த்தம். ‘விஹங்கம்’ என்றால் பக்ஷி, ‘விஹங்க சிசு’ என்றால் குஞ்சாக உள்ள பக்ஷி. ‘விஹங்க சிசௌ’: பக்ஷிக் குஞ்சினிடத்தில். “பக்ஷிக் குஞ்சினிடத்தில் உன் கடாக்ஷ மேகத்தால் பொருள் மழையைக் கொட்டுவாயாக.”

ப்ராஹ்மண பத்னியை உத்தேசித்துத்தான் சொல்கிறாரென்பது ஸ்பஷ்டம். ஆனால் ஏன் அப்படிச் சொல்லாமல் பக்ஷிக் குஞ்சு என்றார்?

எட்டாவது (சில பதிப்புகளின்படி ஒன்பதாவது) ச்லோகம்.

___________________________________________________________________

Getting gold rain showered; Spirituality in Material life itself

As per that routine (of going for Bhiksha), one morning – it is said that it was a Dwadasi day— he went to a house and as per tradition called out “Bhavati! Bhikshaam dehi” [भवति भिक्षां देहि].

That house belonged to a Brahmin who was going through utter poverty.  It looks like the child Brahmachari went there only to shower his blessings on that person!  Going there on the pretext of seeking alms, it was mainly to give them the bhiksha of blessings!

Although it is said that all people in the Malayalam region were prosperous with all the things required to prepare food for the family being available within the ‘Adruti’ itself, is there not something called Karma?  In such a situation, even if one were to be under the Kalpakavriksha, poverty will prevail!  Owing to the Karma of previous births (जन्मान्तर कर्म), this Brahmin was in a state of utter poverty.  Even though there was a Adruti in the house, it was barren without any tree or plant!

That Brahmin used to go for Unchavritti (उञ्छवृत्ति – to live by gathering food from door to door).  Normally, no one would deny a Brahmin who has come seeking Unchavritti.  Inspite of that, if karma was not in his favour, it will not leave him without taking revenge– the time he approaches them could be inappropriate and he might have to return with an empty bowl.  The couple was somehow sustaining their lives.

On the day Acharya had gone for bhiksha, the Brahmin was not at home.  Only his wife was at home.

There was nothing in the house to offer as Bhiksha.  The instant she saw Acharya, she thought, “He is such a radiant Brahmachari.  If only we could offer Bhiksha to him, we would indeed be bestowed with all punyam”.  But there was not even a grain to offer. She was a good-hearted woman.  Usually, the have-nots are more large hearted than those who have. She was one such person. She felt extremely pained; “Alas, there is nothing to offer to such a glorious sun-like bright child.  When such a divine child is standing in front of our house, can anyone say ‘there is nothing to give; go away’”. She searched and searched to see if something could be found.

A rotten Nellikkai (Gooseberry-Emblic myrobalan fruit) was found in a niche.  That Brahmin was a very timid man.  Apprehensive that someone may wrangle with him if he picked up the good ones even from those that had fallen on their own on the ground in the orchards, he had picked up this rotten one and brought it home.  Even that was not known to her.  It was found when she was searching now.  It is mandatory to include gooseberry fruit in the food eaten on a Dwadasi (द्वादशी – 12th day of the fortnight).  This was the gooseberry he had saved for that purpose!

She felt miserable with the thought “Should such a thing be offered to this divine child?” Still, since it was not proper to send away empty-handed a Brahmachari who has come and called out “bhavati bhikshaam dehi”, she went towards the entrance.  Upon seeing the child Sankara who was standing there so vibrant, she returned back in shame and tears.  On returning inside, she thought “Oh! How can I be without offering anything to this divine child?”, and again went to the entrance.  After going to the entrance and coming back many times in distress, she somehow consoled herself thinking “Whether it is rotten or otherwise, we can only offer what we have” and offered the rotten gooseberry fruit to Acharya.  Shedding tears copiously, she offered it.

Acharya recognised that even though she was materially impoverished, she had a large heart that was expansive like the sky and was brimming with affection for him.  His heart melted for her.

Instantly, for her sake, he sung a hymn praying to Mahalakshmi.  That is the “KanakaDhaaraa Stavam” (कनकधारा स्तवम्‌).  The reason for its name will be understood later.

This was the first ever Stuti which had come out from the mouth of Acharya.

He prayed to Lakshmi to remove the poverty of the Brahmin family and bestow them with prosperity.

A voice [without physical form] (अशरीरी – incorporeal) was heard from the sky.  Goddess Mahalakshmi spoke as a voice without form: “This couple has committed sins in their previous births.  Their poverty is the punishment for that.  It is not possible to bestow them with wealth till the time their sins are redeemed”.

Immediately Acharya asked, “Let it be that they have committed much more sins in the previous births than what they are now!  Inspite of that, how much love and sacrifice has been made by this lady in offering me the Nellikani, the only thing that was available in the house; Is this love and sacrifice not meritoriously superior?  Would not the fruits of her virtuous act in offering me Bhiksha when she herself did not have anything to eat, consume all the sins committed!  Moreover, whatever may be the karma, would they not go away if I prayed?”

He prayed, “Mother Mahalakshmi! Just like this lady, you also have a lot of love! Therefore, instead of only meting out strict justice, show love and bless her”.  “Let their sins – like the heat of summer – dry up the opportunity to obtain wealth.  However, is it not possible for a heavy wind to bring rain-carrying clouds and cool down the hot summer?  (In the state of Malayalam, winds from south-west blow even during the hot days – in the middle of the month of Vaikasi – bringing rain-bearing clouds and monsoon showers! This is known as ‘Edava Padhi’.)  Please bring the cloud of wealth with the winds of compassion you possess, to remove their summer of ‘dushkarma [bad karma]!…..Using your compassion as the wind, make the cloud of your blessings shower the rain of wealth on them!

There is internal evidence in “Kanakadhara Stavam” itself for his appeal to Lakshmi for the sake of the poor brahmin lady:

Dadyaad dayaanupavano dravinaambudhaaraam
Asmin akinchana vihanga shishou vishannae |
Dushkarma gharmam apaneeya chiraaya dooram
Narayana-pranayinee nayanaambuvaaha: ||1

दद्याद् दयानुपवनो द्रविणाम्बुधाराम्_
अस्मिन् अकिञ्चन विहङ्ग शिशौ विषण्णे ।
दुष्कर्म घर्मम् अपनीय चिराय दूरं
नारायण-प्रणयिनी नयनाम्बुवाहः II

As she is the mother who has boundless love for Perumal, he is addressing her as “Narayana Pranayinee!”  He is addressing her in the fourth line.  He is clearly conveying at the very outset that her breeze of benevolence should blow and shower wealth as rains, saying “Dadyaat” (दद्यात्‌) – “Let it be given!”

“Dayaanupavano” – The breeze of compassion; “Nayanambuvaha:” – The clouds which are her eyes.  That is, her benevolent glance.  When Lakshmi’s benevolent glance graces someone, wealth will pour.  When Karma is unfavourable, those eyes will be looking in some other direction.  That glance is shining in black on account of both – the black eyeballs and the black kajal applied to her eyes.  That is why it is conventional to refer to her eyes as black clouds.  Those clouds are in some other location – very far.  So what?  Do not the monsoon winds bring to our areas the rain bearing clouds which are beyond the Andamans?  Mother’s compassion is like those strong winds!  Let the winds of compassion bring the clouds of benevolent glance and pour on even these sinned people! She has that compassion only to do good to even such ineligible people, isn’t it?  For meritorious people, it is granted according to their merits.  There is no need to show compassion (दया).  Even in our mundane world, when we are asking something that is due to us, there is no need to say, “Please show mercy!”!  If a man needs the kindness of another person, it means the other person will render help without seeing the eligibility of the man.  Do the monsoon winds look for the “merits” of the land which is dried up due to heat, and then bring the rain-bearing clouds?

Let your merciful glance of clouds, along with the winds of compassion ‘dravinaambudhaaraam dadyaat’.  ‘Dravinam’ means, wealth.

‘Ambudhaaraa’: ‘Ambu’ and ‘Appu’ are one and the same – they mean water.

“Ambudhaaraa” means pouring of water, that is, rains.  “May the cloud of your glance, brought by the winds of compassion, shower rain of wealth!”

Wealth is generally defined in terms of gold.  We speak of them together as “Gold and wealth” (பொன்னும் பொருளும்).  Is not the Rupee also based on gold standard (based on the quantum of gold on hand)?  ‘Dravinam’ normally means wealth, but also refers to gold.  Like Swarnam, Hemam, Hiranyam, Kanakam etc. Dravinam is also another name for gold.  What appeared in Acharya’s words as “Dravina (Ambu)dhaaraa”, has come to be the name of the sloka – “Kanakadhaaraa”.

When it is said, “Let the clouds of your merciful glance, along with the winds of compassion pour rain of wealth”, it is for whom? Is it for the young Sankara who is making the request?  Why does he need it?  He hails from a very wealthy family, doesn’t he?  Moreover, since he is leading the life of a Brahmachari at the residence of his Guru, he should not possess any wealth at all!

It is not for him.  Then for whom?  He says that: “Asmin akinchana vihanga shishou vishannae” (अस्मिन् अकिञ्चन विहङ्ग शिशौ विषण्णे).  What it means is ‘For this poor young bird who is mentally tired and worn out”.

He did not say that it was for human beings!  He says it is for a bird, that too for a very young bird  ‘Vishannae’ – cheerless and downcast; ‘Asmin’ – this (since he is indicating the lady standing nearby, he is saying ‘this’); ‘Akinchana’ – one who has no possessions at all; ‘Kinchana’, ‘Kinchit’ means  a little bit. Probably, ‘Kinchana’ became ‘konjam’ [கொஞ்சம்]? ‘Akinchana’, means absolute poverty, without having even that little bit. ‘Vihanga’ means bird.  ‘Vihanga shishu’ means bird which is young, a hatchling. ‘Vihanga Shishou’:  on the young bird.  “Please pour the rain of material wealth on this young bird, with your merciful glance as clouds.”

It is clear that he is only referring to that brahmin lady.  But, why is he not saying that but referring [to her] as a young bird?

1 Eighth Verse; (ninth in some of the publications)
____________________________________________________________________

Audio

 



Categories: Deivathin Kural

Tags: ,

2 replies

  1. Good lord, only Periyava can highlight the nuances of the verses in such a beautiful way. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

  2. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d