Thanks to Sri Halasya Sundaram Iyer for the share. Sundaram has been involved in this temple for quite some time. He asked me to share this prior to the balalayam only as informational to all readers and not for any fundraising. I was busy traveling and couldnt post on time. We both felt that it is important for our readers to know such a purathana temple completely ignored and great devotees like Sundaram are taking up this renovation work.
Sundaram & Team – hats off for this work and hopefully you will do the kumbabishekam soon.
Aum Nama Shivaya!
தூத்துக்குடி மாவட்டம் நாணல்காடு அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத திருக்கண்டீஸ்வரர் ஆலய கோபுர பாலாலய விழா அழைப்பிதழ்
நிகழும் சோபகிருது ஆண்டு ஆவணி மாதம் 17ம் நாள் 03.09.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியில் இருந்து 11.00 மணிக்குள் நமது திருக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு ஆலய கோபுரத்திற்கு பாலாலயமும் அதை தொடர்ந்து இதர தேவதா மூர்த்திகளின் சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் இனிதே நடந்தது.
இந்த ஆலயம் சுமார் 800 வருடங்களை கடந்த பழமையான திருக்கோவில். ஈஸ்வரனுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
ஆலயத்திற்கு செல்லும் வழி
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் வல்லநாடு என்ற ஊர் வரும். அங்கு இறங்கி அங்கிருந்து இரண்டு கிமீ தொலைவில் இருக்கிறது நாணல்காடு. சிறிய கிராமம். கடைகள் கிடையாது. அதனால் பூஜைக்குரிய பொருட்களை திருநெல்வேலியில் இருந்தே வாங்கி வருவது நல்லது.
Categories: Announcements
யெஸ். நானும் போயிருந்தேன் இந்த விழாவிற்கு. மிகவும் நொந்து போய் விட்டேன் அந்த ஊருக்கு செல்வதற்குள். ஆனால் கோவிலில் இருக்கும் ஈஸ்வரனையும் அம்பாளையும் பார்த்த உடன் கண்களில் இருந்து வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கோவிலுக்கு தான் நாம் கைங்கர்யம் பண்ணனும். அது தான் முக்திக்கு வழி. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் முன்வாசல். ஏற்கனவே பெரும்பாலும் இடிந்து விட்ட மடப்பள்ளி. மாடியில் நாலு பேர் நடந்தாலே அதிரும் உள் பிரகாரம். சீக்கிரம் கட்டுமான வேலையை ஆரம்பித்தால் நல்லது
New Jersey Koilukku spent pannina amounta inga transfer pannungo
👏👏👏🙏🙏🙏
நமஸ்காரம். எத்தனையோ கிராமத்தில் இருக்கும் கோவில்கள் வழிபட முடியாமல் இடிந்து போய் இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறது. அது மாதிரி கோவில்களை தேடி கண்டிபிடித்து புனருத்ராணம் செய்ய வேண்டும் என்ற மஹாபெரியவாளின் வார்த்தையை ஓரளவு நிறைவேற்றி அதில் வெற்றியும் பெற்று விட்டோம்.. நான் வாழ்ந்த காலத்தில் என் ஆயுளுக்குள் இந்த கோவிலுக்கு என்னால் ஆனதை பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்ட மாதிரியே நான் ஒவ்வொரு விநாடியும் நினைத்துக் கொண்டிருக்கும் லோகமாதா காமாக்ஷியின் அனுக்ரஹத்தால் இந்த விழா நடைபெற்றது.
இதனால் நானும் எங்கள் குழு உறுப்பினர்களும் வாங்கிய கெட்ட பெயர்கள், வசவுகள் ஏராளம். பெரியவா சொல்றது போல அம்பாளுக்கு தானே பண்ணுகிறோம் என்ற வார்த்தையை மனதில் வைத்துக் கொண்டு பலரிடமும் பிச்சாந்தேஹி கேட்டு இப்போது இந்த நிலைமைக்கு கொண்டு வந்தாச்சு. இனி நடக்கப் போகிறதை ஈஸ்வரன் பார்த்துக் கொள்வான்