Jaya Jaya Sankara Hara Hara Sankara – The prowess of Sri Adi Acharyal has been explained in full detail here by Sri Periyava including HIS all encompassing knowledge on all the other shastras and philosophies including Advaita..
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for another skillful drawing and Shri ST Ravikumar for the great translation. Rama Rama
____________________________________________________________________
அனைத்து சாஸ்திர அறிவும், அனைத்தும் அடங்கும் அத்வைதமும்
மூன்று வருஷத்துக்குள் ஸாங்கோபாங்கம் வித்யாப்யாஸம் பூர்த்தி பண்ணிவிட்டார். உபவேதங்கள், இன்னும் பாக்கியுள்ள எல்லா சாஸ்த்ரங்களும் படித்துவிட்டார்!1 ஆசார்யாள் அதி விரைவில் ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றுத் தேர்ந்ததைப் பற்றி ஒரு ச்லோகம் இருக்கிறது:
ஆந்வீக்ஷிக்யைக்ஷி தந்த்ரே பரிசிதிரதுலா காபிலே கா(அ)பி லேபே
பீதம் பாதஞ்ஜலாம்ப: பரமபி விதிதம் பாட்ட கட்டார்த்த-தத்த்வம் |
யத்-தை: ஸெளக்யம் ததஸ்யாந்தரபவத்-அமலாத்வைத-வித்யா ஸுகே(அ)ஸ்மிந்
கூபே யோ(அ)ர்த்த: ஸ தீர்த்தே ஸுபயஸி விததே ஹந்த நாந்தர்-பவேத்-கிம் 2 ||
ஆன்வீக்ஷிகி என்பது ராஜ்ய நிர்வாஹத்தைச் சொல்லும் சாஸ்த்ரம்3.
‘ஆன்வீக்ஷிகி-ஐக்ஷி’ என்பதற்கு அந்த சாஸ்த்ரத்தைக் கண்ணால் பார்த்த மாத்ரத்தில் தமதாக்கிக் கொண்டுவிட்டாரென்று அர்த்தம். ‘ஈக்ஷ்’ என்றால் பார்ப்பது. ‘ஐக்ஷி’: பார்ப்பதினால், பார்த்த மாத்ரத்தில்.
அப்புறம் கபிலர் செய்த சாஸ்த்ரம். ‘காபிலே தந்த்ரே’ என்று வருவது. அதுதான் ஸாங்க்ய சாஸ்த்ரம். அதிலும் ஈடிணையில்லாத பரி(ச்)சயம் பெற்றார்: ‘பரிசிதி: அதுலா லேபே’. பாஷ்யத்தில் மீமாம்ஸைக்கு அடுத்தபடியாக ஆசார்யாள் திட்டியது அதைத்தான்! மாற்று ஸித்தாந்தங்களையும் கசடறக் கற்றே கண்டனம் பண்ண வேண்டுமாதலால் அப்படிப்பட்டவற்றையும் ஆசார்யாள் போன்றவர்கள் deep-ஆகப் படித்திருக்கிறார்கள். அதுவுமன்னியில் மாற்று ஸித்தாந்தம் என்பவற்றிலும்கூட எல்லாமே கண்டனத்துக்குரியது என்று வைத்து விடாமல் நல்லதை நல்லதென்று ஒப்புக் கொண்டு பெரியவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இப்படி ஸாங்க்யம், மீமாம்ஸை எல்லாவற்றிலும் உண்டு. அதற்காகவும் ஆழப் படிப்பது. வித்யா ஸம்பாதனம் என்று வரும்போது bias (பக்ஷபாதம்) இல்லாமல், “களவும் கற்று மற” என்றபடி எல்லாம் தெரிந்து கொள்வதே நம் பூர்விகர் வழி.
இதனால்தான் அத்தனை ஒதுக்குப்புறத்தில் வைதிக ஸம்ப்ரதாயத்தையே அநுஸரித்து வந்த மலையாளத்திலும் இந்த சாஸ்த்ரங்கள் தெரிய வந்து குருகுலத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்! அடியோடு தெரிய வேண்டாத எதிர்க்கட்சி என்று எதையும் வைத்துவிடாமல் திறந்த மனப்பான்மையோடு வித்யையை அணுகியது நம் புராதனப் பண்பாட்டில் மிகவும் பெருமைக்குரிய ஒரு அம்சம். ஆசார்யாள் ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றுக் கொண்டதில் பாக்கி பார்க்கலாம்.
“பீதம் பாதஞ்ஜலாம்ப:” என்றால் பதஞ்ஜலியின் யோக சாஸ்த்ரத்தை தீர்த்தம் குடிக்கிறதுபோல அத்தனை ‘ஈஸி’யாக தமக்குள்ளே அனுப்பிவிட்டார் என்று அர்த்தம்.
“பாட்ட கட்டார்த்த-தத்த்வம்”: குமாரில பட்டர் செய்ததான “பாட்ட சாஸ்த்ரம்” என்னும் பூர்வ மீமாம்ஸை. அதையும் ஒரு தீர்த்த கட்டத்தை லேசாகத் தாண்டிப் போகிற மாதிரி- ஆஞ்ஜநேயர் ஸமுத்ரம் தாண்டின மாதிரி-தாண்டிவிட்டார். ‘தரோ’வாகத் தெரிந்து கொண்டு விட்டார்: “பரமபி விதிதம்”.
ஆசார்ய பாஷ்யங்களைப் பார்த்து அறிஞருலகமெல்லாம், “அதெப்படி இத்தனை சாஸ்த்ரங்களில் பாரங்கதராக இருந்திருக்கிறார்! இத்தனை ‘கொடேஷன்’ எந்தெந்தப் புஸ்தகங்களிலிருந்தோ கொடுத்திருக்கிறாரே!” என்று ஆச்சர்யப்படுகிறது. இங்கே சொல்லியிருப்பது அதிசயோக்தியே இல்லை. எந்த மதஸ்தரானாலும் தத்வத்தை ஆராய்கிறவர்கள், பின்னாலே ஒத்துக் கொள்கிறார்களோ இல்லையோ, ஆசார்யாளின் புஸ்தகங்களைத்தான் எடுத்துப் போட்டுக் கொண்டு பார்க்கிறார்கள். இன்றைக்கும் லோகம் முழுவதும் ஃபிலாஃஸபர்கள் நம்முடைய ஆத்ம சாஸ்த்ரமென்றால் ஆசார்யாளைத்தான் முதலில் பார்ப்பது, ஆழ்ந்து பார்ப்பது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அஹிம்ஸை, கருணை, ஸமத்வம் எல்லாம் பௌத்தம் முதலிய மதங்களில் தான் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவற்றைத் தழுவியவர்களில்கூட மஹா மேதாவிகளாக இருப்பவர்கள் தத்வம் என்று வந்தால் ஆசார்யாளின் க்ரந்தங்களைப் பார்த்தே தலைமேல் வைத்துக் கொண்டு ஸந்தோஷப்படுகிறார்கள். ஆகையினால் அவருடைய கூர்ந்த அறிவை, பரந்த அறிவைப் பற்றி எத்தனை சொன்னாலும் யதார்த்தமன்றி வேறில்லை.
இப்படி ஆசார்யாள் ஆன்வீக்ஷிகீ, ஸாங்க்யம், யோகம், மீமாம்ஸை — இந்த நாலு மட்டுமில்லை, ‘இவை முதலான ஸகல சாஸ்த்ரங்களையும்’ என்று அர்த்தம் – இப்படி எல்லா ஸித்தாந்தங்களையும் கற்றுக் கொண்டு விட்டாரானாலும், இவை அவருடைய ஆத்மார்த்தமான இஷ்ட சாஸ்த்ரங்களாக இல்லை. இவற்றின் கொள்கைகளை அந்தரங்க பூர்வமாக அவர் அங்கீகரித்துவிடவில்லை. ‘எல்லாம் தெரிந்த ஸர்வஜ்ஞனாக இருந்து கொண்டு, அத்வைதத்தைச் சொன்னாலே அதை லோகம் ஏற்றுக் கொள்ளும். இல்லாவிட்டால் தனக்குத் தெரிந்த ஒரு ஸித்தாந்தத்தை மட்டும் அதுவே ஸத்யம் என்று வீம்பாக ஸ்தாபிக்கப் பார்ப்பதாகத் தோன்றும். அதற்காகவே மற்ற சாஸ்த்ரங்களையும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்பதற்காகத்தான் அவர் இதர ஸித்தாந்தங்களையும் படித்தது. அவச்யம் நேர்ந்ததாலேயே படித்தாரேயன்றி, அவற்றில் பற்று வைத்து இல்லை. பின் அவருக்கு எதில் ஆத்மார்த்தமான பற்றுதல் இருந்தது?
யத்தை: ஸெளக்யம் ததஸ்யாந்தர பவதமலாத்வைத வித்யாஸுகே(அ)ஸ்மின்
“அமல அத்வைத ஸுகே”: கொஞ்சங்கூட மலம் – அழுக்கு, தோஷம், குற்றம் குறை – இல்லாமல் பரம ஸுகமாக, நித்யஸுகமாக இருப்பது எது என்றால் அது அத்வைதம்தான். ஆசைதான் அழுக்கு. மனஸ் உள்ள மட்டும் ஆசை இருக்கத்தான் இருக்கும். உசந்த பக்தியிலுங்கூட, ‘ஸ்வாமியோடு சேரணும், கொஞ்சணும்’ என்று ஆசை இருக்கத்தான் செய்யும். எத்தனை உசந்த பக்தியானாலும் அதைப் பண்ண மனஸ் இருந்துதான் ஆகணும்; ஆனபடியால் ஆசை இருந்துதான் தீரும். ஸத்ய ஸத்யமாக, ‘ஈச்வரன் வேறில்லை, நாம் வேறில்லை’ என்று அத்வைதமாக ஆகிறபோதுதான் மனஸ் இல்லை; ஆசை இல்லை. வேறாக எதுவுமில்லாதபோது எதனிடம் ஆசை வைப்பது? அதனால் ஆசை என்ற அழுக்கு, அரிப்பு இல்லாமல், ஸுகம் என்றால் அதுதான் ஸுகம் என்னும்படியாக இருப்பது அத்வைதம் ஒன்றில்தான் – “அமல அத்வைத வித்யா ஸுகே.” “ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” என்று அதனால்தான் திருமூலர் பாடினார்.
மீமாம்ஸையில் கர்மாநுஷ்டானம் செய்ய வேண்டுமென்ற ஆசை, ஸ்வர்க்கம் போகணும் என்று ஆசை. இப்படி ஒவ்வொரு தத்வத்திலும் ஏதாவது ஆசை அழுக்கு ஈஷிக் கொள்ளத்தான் செய்யும்.
அந்தத் தத்வங்களை அநுஸந்தானம் பண்ணி அநுபவிப்பதிலும் ஓரொருவிதமான ஸந்தோஷம் இருக்கவே இருக்கும். அப்படி இல்லாமலா ஒவ்வொரு ஸித்தாந்தத்தையும் பல பேர் ஏற்றுக் கொண்டு பின்பற்றியிருப்பது?
விசேஷமென்னவென்றால் அப்படி மற்ற ஸித்தாந்தங்களால் பெறக்கூடிய ஆனந்தங்களெல்லாமும் அத்வைதானந்த்திற்குள்ளேயே அடக்கம்தான்! அத்தனையுமாகத் தோன்றுவது ஒரே ப்ரஹ்மம். அதைத் தவிர வேறில்லை. அப்படியானால் அத்வைதமாக ஒருவன் ப்ரஹமானந்தம் பெறுகிறானென்றால் அத்தனை வித ஆனந்தங்களும் அவனுக்குள் அடங்கிவிடும்தானே?
மற்ற சாஸ்தரங்களினால் கிடைக்கக்கூடிய ஸெளக்யங்களையெல்லாம் உள்ளடக்கியதான அமலமான அத்வைத சாஸ்த்ரத்தின் பரம ஸெளக்யத்தையே ஆசார்யாள் தமக்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தார். தேவையை முன்னிட்டுப் வேறே எத்தனை பாடம் அவர் படித்தாலும் அவருக்கு ஆத்மார்த்தமான இஷ்ட பாடமாயிருந்தது, மற்ற பாடங்களின் லக்ஷ்யங்களையெல்லாமும் தனக்குள் கொண்டதான அத்வைத வித்யைதான்! “யத்-தை: ஸெளக்யம் தத் அஸ்ய அந்தர் அபவத் அமல அத்வைத வித்யா ஸுகே அஸ்மின் .” குருகுலவாஸம் பண்ணி வித்யாப்யாஸம் செய்துகொண்டிருக்கும் குழந்தையாசார்யாளின் ஹ்ருதயத்துக்குள்ளே அந்த அத்வைத ஸுகமே நிறைந்திருந்தது.
இதர வித்யைகளின் ஸுகங்களெல்லாம் அத்வைத ஸுகத்திலேயே கிடைத்துவிடுகிறது என்பதற்கு (ச்லோகத்தின் கடைசி வரியில்) உதாஹரணம் கொடுத்திருக்கிறது: கூபே யோ (அ)ர்த்த: ஸ தீர்த்தே ஸுபயஸி விததே ஹந்த ந (அ)ந்தர்-பவேத் கிம்?
_______________________________________
1 வேதங்கள் நான்கு. அவற்றின் அங்கங்கள் சிக்ஷை (உச்சரிப்பு சாஸ்திரம்), சந்தஸ் (சந்த முறைமைகள்), வியாகரணம், நிருக்தம் (பதங்களின் அர்த்த நிர்ணயம்), ஜ்யோதிஷம், கல்பம் (சடங்குகளின் விவரணம்) எனும் ஆறு, உபாங்கங்கள் மீமாம்ஸை, ந்யாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், புராணம் எனும் நான்கு. இப்பதினான்கும் “ஸாங்கோபாங்க வித்யை” என்பதில் அடங்கும். உபவேதங்கள் என்பன ஆயர்வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம் (இசை-நடன-நாடகம் முதலியன), அர்த்த சாஸ்திரம் (அரசியல்) என்னும் நான்கு. முன்கூறிய பதினான்கோடு இவற்றைச் சேர்த்து இப் பதினெட்டையும் வித்யா ஸ்தானங்கள் என்பர்.
2 மாதவீய சங்கர விஜயம் IV. 20
3 ‘ஆன்வீக்ஷிகி’ என்பது தர்க்கம் அல்லது ஆத்மவித்யை என்று ஆப்தேயின் அகராதி கூறுகிறது.
_____________________________________________________________________
Knowledge of all Sastras and the all-encompassing Advaita
Within three years, he completed his education [साङ्गोपाङ्ग विद्याभ्यासम्] [including the anga and upa-anga of the Vedas]. He completed studying the Upavedas (उपवेद) and the remaining Sastras also1. There is a verse about Acharya studying and acquiring expertise in all the Sastras at such rapid pace.
Aanveekshikyaikshi tantre parichitiratulaa kaapilae ka(a)pi lebhe
Peetam paatanjalaambha: paramapi viditam bhaatta ghattaartha-tatvam |
Yat-tai: soukhyam tadasyaantarabhavat-amaaladvaita-vidyaa sukhe(a)smin
koope yo(a)rtha: sa teerthe supayasi vitatae hanta naantar-bhavet-kim2 ||
आन्वीक्षिक्यैक्षि तन्त्रे परिचितिरतुला कापिले का(अ)पि लेभे
पीतं पातञ्जलाम्भः परमपि विदितं भाट्ट घट्टार्थ-तत्वम् |
यत्-तैः सौख्यं तदस्यान्तरभवत्-अमलाद्वैत-विद्या सुखे(अ)स्मिन्
कूपे यो(अ)र्थ: स तीर्थे सुपयसि वितते हन्त नान्तर्-भवेत्-किम् ||
Aanveekshiki (आन्वीक्षिकी) is the Sastra which talks about administration of the State3. ‘Anveekshiki aikshi’ means that he grasped the entire Sastra the moment he saw it with his eyes. ‘Eeksh’ (ईक्ष्) means to see. ‘Aikshi’ [ऐक्षि]- on seeing it, as soon as it it seen.
Next is the Sastra written by Kapila, which is mentioned as ‘kaapilae tantre’ [कापिले तन्त्रे]. That is the Saankhya Sastra [साङ्ख्यशास्त्र]. He attained unmatched knowledge in that also. ‘Parichiti: atulaa lebhe’. After Meemamsa, this was the Sastra denounced by Acharya in his Bhashyam! Since philosophies that do not conform to our belief should also be learnt thoroughly before they can be refuted, people like Acharya studied them also in depth. Moreover, in those days, without treating all the other philosophies as totally condemnable, great people would acknowledge and adopt the good practices from them too. Such aspects [good aspects] are there in Sankhyam [साङ्ख्य], Meemamsa [मीमांसा] and others too. For that reason, also, they are studied in depth. It is the approach of our ancestors that when it comes to acquiring education [विद्या सम्पादनम्], they will learn everything without any bias, in line with the saying “Kalavum Katru Mara” (களவும் கற்று மற – learn even the art of stealing and then forget it).
That is why even in that remote Malayalam region which was exclusively following the Vedic traditions, these Sastras were also known and they were taught in the Gurukulas! It is a matter of pride that our ancient culture considered nothing as absolutely unnecessary and had approached education with an open mind…. Let us look at the remaining Sastras that Acharya had learnt.
“Peetam paatanjalaambha:” means he assimilated within himself the Yoga Sastra of Patanjali as ‘easily’ as drinking water.
“Bhaatta ghattaartha-tatvam”: is the “Bhaatta Sastra”, the Purva Meemamsa developed by Kumarila Bhatta. He scaled that also, like jumping across and crossing a water body – the way Anjaneya crossed the ocean. He understood it ‘thoroughly’: “Paramapi viditam”.
Going through the Bhashyams written by Acharya, the entire world of Scholars wonders, “How is it he was so proficient [पारङ्गत] in so many Sastras! He has given ‘quotations’ from so many different books!”. What is stated here is not a matter of surprise at all. Whatever religion they may belong to, people who do research about philosophies choose primarily look into the books of Acharya – whether or not they accept them later. Even today, philosophers across the world look only into the works of Acharya and study them deeply as far as matters pertaining to ‘atma sastra’ [आत्म शास्त्रम्] are concerned. Learned people who have embraced Buddhism thinking that ahimsa, compassion, and equality are there only in such religions, look only into the books [ग्रन्थाः- granthas] of Acharya and celebrate them as most outstanding. Thus, however much is spoken about his sharp intellect and wide knowledge, it is all only the truth and nothing else.
Although Acharya had learnt Aanveekshiki, Sankhyam, Yogam, Meemamsa- not only these four- but all Sastras like these- they were not the Sastras which were close to his heart [आत्मार्थम्]. In his mind he had not approved the principles of these religions whole heartedly. ‘The world will accept Advaita philosophy only if it is presented by an Omniscient. Otherwise, it would appear that one knew only a single philosophy and was trying to establish this philosophy adamantly. Only for that sake should all other philosophies be learnt throughly’ – was his view because of which he studied all the philosophies in depth. He studied them only because he needed to know them and not because he liked them. If so, what was close to his heart?
‘yat tai: soukhyam tadasyaantara bhavatamalaadvaita vidyaasukhe (a)smin
“Amala advaita sukhe” [अमल अद्वैत सुखे]; To the question ‘What is totally devoid of any impurity – dirt, defect or shortcomings and is permanently blissful’- it is only Advaita. Desires are the dirt. As long as the mind is there, there will certainly be desires. Even in the highest level of Bhakti, there will be the desire ‘to reach Swami, to show love’. However superior be the Bhakti, a mind should be there to express it; Therefore, desires will certainly be there. Only in the state of absolute truth where one experiences the state of ‘Eswara is not different from us’ – the state of Advaita – there is no mind and no desire. When there is nothing else as ‘the other’, what can one desire for? Therefore, without the dirt of desire and its itching, it is Advaita alone which can be said to be the definition of bliss – “amala advaita vidyaa sukhe”. That is why Tirumoolar had said “easanodaayinum aasai arumingal” [ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்].
In Meemamsa there is the desire for carrying out one’s ordained duties, to reach heaven, etc. Thus, the dirt of some desire or the other will indeed remain smeared in each and every philosophy.
There has to be some kind of satisfaction in practicing those philosophies also; otherwise, how could so many accept them and follow them?
The specialty [of Advaita] is that all the happiness that can be obtained through all the other philosophies lie within the bliss of Advaita! The one Brahmam appears as so many forms. There is nothing else. So, if one attains the absolute bliss of Advaita, would not all the other types of joys be present within him?
Acharya had internalised the absolute bliss of spot-less Advaita which contained the pleasures that could be obtained through other philosophies too. Though he studied many other Sastras because of the need, the study which was very dear to him was the Advaita Vidya which encompassed the objectives of all other studies! “Yat tai: sowkhyam tat asya antar abhavat amala advaita vidyaa suke(a)smin”. Only that absolute bliss of Advaita was filled in the heart of the child Acharya, who was residing in the house of his Guru and pursuing his education.
Example is given (in the last sentence of the verse) to indicate that the happiness of other studies are realised in the bliss of Advaita itself: Koope yo (a)rtha: sa teerthe supayasi vitatae hanta na (a)ntar-bhavet kim?
___________________________________________________________________
1There are four Vedas. Their six limbs [ Anga-अङ्ग] are Shiksha [शिक्षा] (Sastra of Pronunciation), Chandas [छन्दस्] (study of poetic metres), Vyakaranam [व्याकरणम्], Niruktam [निरुक्तम्] (determining the meaning of words), Jyotisham [ज्योतिषम्] and Kalpam [कल्पम्] (description of rituals). Meemamsa, Nyaya Sastra, Dharma Sastra and Puranas, are the four sub-parts [upa-anga or upaanga – उपाङ्ग]. All these fourteen are included when we speak of “Saangopaanga Vidya” [साङ्गोपाङ्ग विद्या]. Supplementary Vedas [Upa-Vedas – उपवेदाः] are four. Ayurveda, Dhanurveda, Gandharva Veda (Music, Drama etc) and Artha Sastra (Politics). These together with the fourteen mentioned earlier are known as the eighteen Vidyaasthaanam(s) [अष्टादश विद्यास्थानम्].
2 Madhaveeya Sankara Vijayam IV.20
3 ‘Aanveekshiki’ – Apte’s dictionary says it refers to debate [Tarkam – तर्कम्] or study of self [Atma Vidya – आत्म विद्या].
____________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Wonderful drawing & AcharyaL explanation! Periyava sharanam!
🙏🙏🙏
🙏🙏🙏