121. Sri Sankara Charitham by Maha Periyava – Prodigiously Brilliant Child


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Can we call the exceptional intelligence of great Avatara Purusha’s like Bhagawathpadhal and Thirugnanasambandar as fiction? Sri Periyava explains.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a very apt drawing and Shri ST Ravikumar for the great translation.  Rama Rama
____________________________________________________________________________________


அதிமேதைக்
குழந்தை

ஆசார்யாள் குழந்தையாக வளர்ந்தார்.

குழந்தையாயிருந்தபோதே மஹாமேதையாக இருந்தார். மூன்றாவது வயஸு வரையில் அவர் தேச பாஷைகளைக் கற்றுக் கொண்டார். ஐந்தாவது வயஸு வரையில் ஸம்ஸ்க்ருத பாஷையை அப்யாஸம் செய்து தேர்ச்சி பெற்றாரென்று சொல்லியிருக்கிறது. மூன்றாவது வயஸு வரையில், ஐந்தாவது வயஸு வரையில் என்றால், அந்த வயஸுகள் முடிவதற்குள்ளேயே அந்த பாஷைகளை நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டார். தேச பாஷைகள் என்பதில் முக்யமாகத் தமிழ்தான் இருந்திருக்க வேண்டும். மூன்று வயஸில்தான் ஞான ஸம்பந்தர் தமிழ் மறை என்கிற தேவாரம் பாட ஆரம்பித்தது.

இதெல்லாம் கட்டுக்கதை என்று சொல்லிவிடலாமா என்றால், கதையைவிட ஆச்சர்யமாக இப்போதும் அங்கங்கே கேள்விப் படுகிறோமே! சின்னக் குழந்தைகள் பத்து ஸ்தானம் பதினைந்து ஸ்தானம் இருக்கிற பெருக்கல் கணக்குகளை நிமிஷத்தில் போட்டு விடுகிறதுகள்! ஸ்லேட்-கீட், பலப்பம், பென்ஸில் இல்லாமல் போட்டு விடுகிறதுகள்! ஸ்கூல்களில் இந்தக் குழந்தைகளை வரவழைத்து டெமான்ஸ்ட்ரேஷன் காட்டுகிறார்கள். ஜன்மாந்தர வாஸனை என்று சொல்கிறோம். அதைத் தவிர என்ன காரணம் சொல்வது? ஜன்மாந்தரங்களையே வேறே சில குழந்தைகள் சொல்கிறதுகள்! முந்தின ஜன்மாவில் இன்ன ஊர், இன்னார் பந்துக்கள் என்று சொல்கிறதுகள். அழைத்துக் கொண்டு போய்க் காட்டினால் அப்படியே இருக்கிறது! Para-psychology என்று சொல்லி இதைப்பற்றி இப்போது ஸயன்ஸ் முறையிலேயே ஆராய்ச்சி பண்ணுகிறார்கள்.

அவைதிகமான ஜைன-பௌத்த மதங்களில்கூட ஜன்மாந்தர நம்பிக்கையுண்டு. புத்தரே ‘ஜாதகக் கதை’கள் என்பதாக தம்முடைய அநேகப் பூர்வ ஜன்ம வரலாறுகளைச் சொல்லியிருக்கிறார்.

ஆசார்யாளுக்கும் ஸம்பந்தருக்கும் ஜன்மாந்தரம் சொல்வது அஸம்பாவிதம். ஆனால், மநுஷர்களாகப் பூர்வ ஜன்மத்தில் அடைந்த புத்தி வளர்ச்சியே அடுத்த ஜன்மத்தில் ஒரு குழந்தையை ‘ப்ராடிஜி’ என்று ப்ரமிக்கும்படியான மேதையாக்க முடிகிறதென்றால், ஸர்வஜ்ஞனான ஈச்வரனின் அநுக்ரஹத்திலிருந்தே தோன்றிய அவதாரக் குழந்தைகளுக்கு ஏன் அதிசயமான மேதாவிலாஸமிருக்க முடியாது?

__________________________________________________________________________________
Prodigiously Brilliant Child

The infant Acharya grew.

Even when he was a child he was extraordinarily intelligent.  Up to the age of three he learnt the native languages.  It is said that he studied Sanskrit language up to the age of five and mastered it.  When we say, up to the age of three or up to the age of five, it means that he had learnt the languages very well even before the completion of that age.  Among the native languages, Tamil must have been the main one.  It was at the age of three that Jnana Sambandhar had started singing Dhevaram, considered as the Tamil Vedas.

To the question whether these things can be dismissed as imaginary tales, we do hear more incredible things here and there even now!  Small children complete within minutes multiplication of ten digit and fifteen-digit numbers!  They do it without even the help of a Slate,  or pencil! Schools invite these children and organise demonstrations.  We call it as knowledge from previous birth [जन्मान्तर वासना].  What other reason can be said?  Some other children are able to recall their previous life itself!  They recall the place, who their relatives were etc.  When they are taken to that place, things are exactly as described by them.  It is termed Para-psychology and people are doing scientific research about such things nowadays.

Belief in previous births is there even in the non-Vedic religions of Jainism and Buddhism.  Buddha himself has narrated many of his previous life histories as ‘Jataka Tales’.

It is inappropriate to talk about [knowledge from] previous life [जन्मान्तर] in the case of Acharya and Sambandhar. If the development of intellect attained in the previous human life could make a child so astoundingly brilliant as to be called a ‘prodigy’ in their next birth, why will children who were born because of the anugraham of the Omniscient Eswara not have this amazing intelligence?

__________________________________________________________________________________
Audio

 



Categories: Deivathin Kural

Tags:

4 replies

  1. After my joining this group, the first I saw was 120.7.2. This went on to 120.27 and this week we see 12`. Please let me where the prior episodes of this GREAT WORK are available.

  2. மஹா பெரிவா திருவடிகளுக்கு ஷாஸ்டங்க நமஸ்காரம்

  3. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: