Jaya Jaya Sankara Hara Hara Sankara – On the auspicious occasion of HH Sri Bala Periyava Jayanthi a beautiful rendition composed and sung by Amritha Varshini team. Please read below and listen to the song. Sri Periya Thiruvadi Sharanam. Rama Rama
ஸ்ரீ பால பெரியவா ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பால பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் – திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் – திருமதி லதா ஸ்ரீதரன்
ராகம் – பேஹாக் ; ஆதி தாளம்
பல்லவி
சாலப் பரிந்து அருள் புரியும் நம்
பாலப் பெரியவா பதம் பணிவோம்
அனுபல்லவி
இருபதாம் நூற்றாண்டிலே எழுபதாம் பீடம்
அமர்ந்த ஞான ஸ்வரூபியாம்
(சாலப் பரிந்து அருள் புரியும்)
சரணம்
ஸ்ரீ விஜயேந்திர நாமம் கொண்டவராம்
விஜயம் செய்து நமக்கருள் புரிபவராம்
தண்டலத்தில் பிறந்த எழில்மிகு பாலகனாம்
தண்டம் ஏந்தி வழிகாட்டும் குரு பீடமாம்
(சாலப் பரிந்து அருள் புரியும்)
குருவின் வழி நமக்கு ஒருங்கே காட்டுவராம்
திருவின் ஒளி நமக்கு என்றும் அருள்பவராம்
குறை அனைத்தும் பாங்காய் செவி மடுப்பவராம்
நிறை அனைத்தும் நமக்கு தந்தருள் புரிபவராம்
(சாலப் பரிந்து அருள் புரியும்)
Categories: Krithis
💐🙏💐🙏💐🙏