ஸ்மரணாத் அருணாசலம்

Parameshwaran on the move….

Thanks to Sri Varagoor Narayanan for the share.

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.

ஒரு கிராமத்தில் முகாமை முடித்துக் கொண்டு, அடுத்த முகாமுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் பெரியவாள்.
வழியில் ஒரு பிச்சைக்காரன் வந்தான். தொலைவிலிருந்து பார்த்தபோதே, ‘இவர் ஒரு சாமியார். ரொம்பப் பேர் கூட வருகிறார்கள். நல்ல சில்லறை தேறும்’ என்று எண்ணியிருப்பான் போலும்.

அருகில் வந்ததும், “அண்ணாமலைக்கு அரோஹரா’ என்று கூவிக் கொண்டே, பெரியவா பாதங்களில் விழுந்தான. பெரியவாள், உடன் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“இவன் நமக்கு ரொம்பவும் உபகாரம் செய்திருக்கான்”– பெரியவா.

‘இவன் என்ன உபகாரம் செய்தான்?’- (தொண்டர்கள் மனதில்)

“ஸ்மரணாத் அருணாசலம் என்று சொல்வார்கள். அருணாசலேஸ்வரை நினைத்தாலே போதுமாம். ரொம்ப புண்ணியம்!.இவன் நமக்கெல்லாம் அருணாசலேஸ்வரை ஞாபகப்படுத்தி, உபகாரம் செய்திருக்கான்.”- பெரியவா.

பிச்சைக்காரன் இன்னும் நின்று கொண்டிருந்தான். பத்து பைசா கூட கிடைக்கவில்லை.

பெரியவாள், அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள்.
“இன்னிக்கு, எங்கேயும் பிச்சைக்குப் போக வேண்டாம்..”– பெரியவா.

“அப்படியானால், சாப்பாட்டுக்கு என்ன வழி”— பிச்சைக்காரன்.

“மடத்திலேயே சாப்பிடலாம்…. அப்புறமா வெளியூர் போ”- பெரியவா.

பெரியவாள் பக்தர்களைப் பார்த்துச் சொன்னார்கள்;
“எந்தரோ மஹானுபாவுலு. எங்கெங்கெல்லாமோ.. எத்தனையோ மகான்கள், சித்தர்கள்,பக்தர்கள் இருக்கிறார்கள். இந்தப் பண்டாரத்தைப் பாருங்கள். நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அன்றன்று கிடைக்கும் பிட்சையில் காலம் தள்ளுகிறான்.இவனுக்குள்ள ஞானம் கூட நமக்கு வருவதில்லை” -பெரியவா.

ஒரு பண்டார – பிச்சைக்காரனிடம் கூட ஈஸ்வரனைப் பார்த்தார்கள் பெரியவாள். உடன் வந்து கொன்டிருந்த ஒரு வித்வான் சொன்னார்’

“ஈஸ்வரனே அவதாரம் செய்து வந்தால்கூட, நாம் அவரை வெறும் மனிதராகப் பார்க்கிறோம்!””
பெரியவாளைத்தான் குறிப்பிட்டாரோ?

தெய்வம், தெய்வ வடிவிலேயே வந்தாலும், நம்பாத பாமரர்கள் நாம். என்னத்தைச் சொல்ல



Categories: Devotee Experiences

3 replies

  1. Telugu Translation

    శ్రీ వరగూర్ నారాయణన్ గారికి శేర్ చేసినందుకు ధన్యవాదాలు.

    రచన – శ్రీమఠం బాలు
    పుస్తకం – కంచి మహాన్ దర్శనం
    టైపిస్టు – వరకూరన్ నారాయణన్. (తమిళం)
    అనువాదం – బాలాజి కంచి సిస్టల

    ఒక గ్రామంలో శిబిరాన్ని పూర్తి చేసిన తరువాత, పెరియవా తరువాతి శిబిరానికి వెళుతున్నారు.

    దారిలో ఒక బిచ్చగాడు వచ్చాడు. అతను దూరం నుండి పెరియవాని చూసి అనుకున్నాడు, ‘ఈయన గురువులా ఉన్నారు. చాలా మంది కూడా వస్తున్నారు. మంచిగా ఏమైన దొరకవచ్చు ‘ అని అతను భావించాడో ఏమో..

    పెరియవా సమీపిస్తుండగా, ఆయన పాదాలపై పడి, ‘అన్నామలైకి ఆరోహర’ అని అరిచాడు. పెరియవాతో వచ్చిన వారందరు వాడి వైపు తిరిగి చూశారు.

    “ఇతను మనకు చాలా మంచి చేశాడు” అన్నారు పెరియవా.

    “ఏం మేలు చేశాడు?” – (అందరు ఇల అనుకున్నారు)

    “స్మరనాత్ అరుణాచలం అని అంటారు. అరుణాచలేశ్వరుని గురించి ఆలోచిస్తే సరిపోతుంది, అది చాలా పుణ్యాన్ని తెచ్చి పడుతుంది! ఇతను మనందరికీ అరుణాచలేశ్వరుని గుర్తు చేసి, మనకు ఒక ఉపకారం చేశారు.” అన్నారు పెరియవా.

    బిచ్చగాడు ఇంకా అక్కడే నిలబడి ఉన్నాడు. ఎవరు కూడా ఏమీ ఇవ్వలేదు ఇంక.

    పెరియవా అతని వైపు చూసి చిరునవ్వు నవ్వారు.

    “ఈ రోజు ఎక్కడా భిక్ష చెయ్యడానకి వెళ్ళవద్దు.” – పెరియవా.

    “అలాగైతే, తినడానికి మార్గమేమిటి”—బిచ్చగాడు.

    “మఠంలో తిను… తర్వాత వెళ్ళు.” – పెరియవా.

    పెరియవా భక్తుల వైపు చూసి ఇలా అన్నారు;

    “మహానుభావులు అంటే ఏమిటి? ఎందరో సాధువులు, సిద్ధులు, భక్తులు ఉన్నారు. ఇతని చూడండి. రేపటి రోజు గురించి పట్టించుకోడు. రోజు తనకు లభించే దానితో తృప్తి చెంది తన సమయాన్ని గడుపుతాడు. అయితే అతని జ్ఞానం కూడా మనకు లేదు.” – పెరియవా.

    “ఈశ్వర దర్శనాన్ని ఒక బిచ్చగాడిలో కూడా చూశారు పెరియవా” పెరియవాతో పాటు వచ్చిన ఒక విద్వాంసుడు ఇలా అన్నాడు.’

    “ఈశ్వరుడు అవతరించినా, మనం ఆయనను కేవలం మనిషిగానే చూస్తాం!”

    బహుశా విద్వాంసుడు పెరియవా గురించి ఇలా ప్రస్తావించాడా ఏమో.

    దేవుడు తన రూపంలో వచ్చినా భగవంతుణ్ణి నమ్మని సామాన్య ప్రజలం మనము, అంతే కదా.

  2. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply to Balaji Canchi SistlaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading