Jaya Jaya Sankara Hara Hara Sankara – There is another time period of Bhagawathpadhal that Sri Periyava references quoting a few researchers.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for an classic drawing and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama
ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – கி.மு. முதல் நூற்றாண்டு என்னும் கருத்து
‘ஆசார்யாள் காலம் கி.பி. 788-820 இல்லை; கி.மு. 509-477ம் இல்லை. கி.மு. 44-12 தான்’ என்றும் ஒரு அபிப்ராயமிருக்கிறது. கன்னட தேசத்தில் இந்த அபிப்ராயம் இருந்து வந்திருக்கிறது. அதாவது நாம் சொல்வதைவிட 460-470 வருஷத்துக்குப் பிற்பாடு அவர்கள் ஆசார்யாளின் காலத்தைச் சொல்கிறார்கள்.
இந்த 460-470 வருஷ வித்யாஸத்திற்கு டி.எஸ். நாராயண சாஸ்த்ரி1 போன்றவர்கள் ஒரு காரணம் காட்டுகிறார்கள். அதாவது: ஜைனர்களும் பௌத்தர்களும் யுதிஷ்டிர சகம் என்று ஒன்றைப் பின்பற்றுகிறார்கள். இது கலியுகம் ஆரம்பித்து 468 வருஷத்துக்குப் பிறகு ஆரம்பிப்பது. யுதிஷ்டிரர் என்பது பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்ரர்தான். க்ருஷ்ணர் பரமபத ஆரோஹணம் செய்ததைக் கேள்விப்பட்டு உடனே அவரும் ‘மஹாப்ரஸ்தானம்’ என்பதாக ஜீவயாத்ரையை முடித்து ஸ்வர்க்கத்துக்குப் புறப்பட்டுவிட்டார். க்ருஷ்ணரின் பரமபத ஆரோஹணத்திலிருந்துதான் கலி பிறந்தது. அப்போது யுதிஷ்டிரர் 36 வருஷம் ஆட்சி நடத்தியிருந்தார். ஆகையால் நாம், அதாவது ஹிந்துக்கள், கலிக்கு 36 வருஷம் முன்னால் (கி.மு. 3138-ல்) யுதிஷ்டிர சகாப்தம் ஆரம்பிப்பதாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஜைன, பௌத்தர்கள் கலி ஆரம்பித்தபின் 468 வருஷத்திற்கு அப்புறமே தங்களுடைய யுதிஷ்டிர சகாப்தத்தை ஆரம்பிக்கிறார்கள். ‘யூனிஃபார்மா’க அவர்களுடைய புஸ்தகங்களில் அப்படித்தான் இருக்கிறது.
ஜைனமதம் ஆதியிலிருந்தே கன்னட தேசத்தில் வேர் பிடித்திருக்கிறது. மௌர்ய சந்த்ரகுப்தனே கடைசி நாளில் ஜைன பிக்ஷுவாகி ச்ரவண பௌகொளாவுக்கு வந்துதான் ப்ரயோபவேசம் பண்ணி (உண்ணா நோன்பிருந்து) உயிரை விட்டானென்று சொல்வதுண்டு. அதனால் அங்கே ஜைனர்கள் பின்பற்றும் யுதிஷ்டிர சகம் பிறரிடமும் வழக்குக்கு வந்தது என்றும், அதனால் கலியில் 2600 வருஷம் என்று ஆசார்யாள் காலத்தைச் சொல்லிருப்பதை ஜைன யுதிஷ்டிர சக 2600 என்று அவர்கள் நினைத்துக் கொண்டு 460-470 வருஷம் தள்ளிக் கொண்டு வந்து விட்டிருக்கலாம் என்றும் அவர் (நாராயண சாஸ்த்ரி) சொல்கிறார்.
‘கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்ற அத்தனை முன்னேயும் போக வேண்டாம். கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்று அத்தனை பின்னுக்கும் தள்ள வேண்டாம்; [சிரித்து] ‘காம்ப்ரமை’ஸாக இந்த கி.மு. முதல் நூற்றாண்டை வைத்துக் கொண்டு விடலாமே’ என்று சிலர் சொல்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் ஒரு காரணம்: நம்முடைய மடத்தின் ஆரம்ப காலத்து ஏழெட்டு ஸ்வாமிகள் 80-90-100 வருஷங்களுக்கு பீடத்திலிருந்ததாக நம்முடைய குரு பரம்பரையில் இருக்கிறது. ‘புண்ய ச்லோக மஞ்ஜரி’யில் அப்படித்தான் தேதிகள் கொடுத்திருக்கிறது. ‘இது ரொம்ப ஜாஸ்தியாகத் தெரிகிறது. ப்ராசீனத்வம் (தொன்மை) கொடுக்க வேண்டுமென்றே, வாஸ்தவத்தில் 20-30-40 வருஷம் பட்டத்திலிருக்கக் கூடியவர்களுக்கு ஒரு அறுபது வருஷ ஸைகிள் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகிறது. நிஜமாக அவர்கள் ஸித்தியான ப்ரபவாதி வருஷப் பெயர், மாஸம், பக்ஷம், திதி ஆகியவற்றை மாற்றாமலே புண்ய ச்லோகங்களில் வைத்துக் கொண்டு, அவர்களுடைய பதவிக் காலத்தை ஸரியாக அறுபது, அறுபது வருஷம் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். தலா அறுபது வருஷமாக அந்த ஏழெட்டுப் பேருக்குக் குறைத்து விட்டோமானால் ஸரியாகிவிடும். அப்போது ஆசார்யாள் அவதாரம் கி.மு. 44 என்பதும் ஸரியாக வந்துவிடும்’ என்று சொல்கிறார்கள்.
1 “The Age of Sankara” என்ற நூலில்.
______________________________________________________________________
Determining the period of Sri Sankara’s life – Opinion that it was 1st Century BC
There is also an opinion that Acharya’s life period was neither 788-820 AD nor 509-477 BC, but 44-12 BC. This opinion has been there in the Kannada region. That is, they are citing Acharya’s period to be around 460-470 years later to what we are saying.
People like T. S. Narayana Sastry1 cite a reason for this difference of 460-470 years. It is this: Jains and Buddhists follow a time count [calendar] called Yudhishtira Sakam [युधिष्ठिर शकम्]. This commences 468 years after the beginning of Kaliyuga. Yudhishtira is Dharmaputra – the eldest of the Pandavas. On coming to know that Krishna had ascended to the eternal world, he [Yudhishtira] also immediately ended his journey of life [Mahaprasthanam – महाप्रस्थानम्] and left for Swarga. The ascension of Krishna to his Divine abode marked the beginning of Kaliyuga. At that time Yudhishtira had already reigned for 36 years. Therefore, we, that is Hindus, have taken it that the Yudhishtira Sakaabdam [युधिष्ठिर शकाब्दम्] had started 36 years before Kali (in 3138 BC). But Jains and Buddhists start their Yudhishtira Sakaabdam only 468 years after the advent of Kali. This is mentioned uniformly in all their books.
Jainism had taken roots in Karnataka region right from the beginning. It is said that even Chandragupta Maurya had become a Jain Bhikshu during his last days, gone to Sravana Belagola, did Prayopavesam [प्रयोपवेशम् – observed complete fast] and gave up his life. He (Narayana Sastry) says that the Yudhishtira era followed by the Jains of that region also came to be followed by others; thus, the 2600th year of Kaliyuga which is quoted as the birth year of Acharya could have been mistaken by the Jains as Yudhishtira Saka 2600, and [Acahrya’s time] could have been brought forward by 460-470 years.
Some people say, ‘Let us not go as far back as 6 BC. Nor push it to as late as 8 AD. (Laughing) why not accept this 1st century BC as a compromise?’ One reason they quote for this is: It is mentioned in our Guru Parampara that the first seven or eight pontiffs of our Matam had been headed the Peetam for 80-90-100 years. These are the dates given in the ‘Punya Sloka Manjari’. They say ‘this appears to be too long. Just for the sake of maintaining antiquity, it appears that one cycle of 60 years has been deliberately added to the actual 20-30-40 years that they headed the Peetam. Without changing the name of the Prabhavaadi year [प्रभवादि सम्वत्सर], the Month [मास], Paksha [पक्ष] or Tithi [तिथि] of their attainment of Siddhi, and retaining these details in the Punya Sloka Manjari, for each of these seven-eight people exactly sixty years could have been added to the number of years they headed the Matam. If we reduce sixty years in the case of each of these seven-eight people, Acharya’s time of incarnation will tally with 44 BC’.
1 In the book, ‘The Age of Sankara’
___________________________________________________________________
Categories: Deivathin Kural
Leave a Reply