Jaya Jaya Sankara Hara Hara Sankara – How did Abinava Sankarar get misinterpreted as Adi Sankarar based on haphazard research and timelines? Did Orientalists who calculated the time period take into consideration some key points? Sri Periyava explains.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a fine sketch and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama
___________________________________________________________________
ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்
அபிநவ சங்கரர்
அவர்களுடைய ஆர்க்யுமென்டில் இன்னும் இரண்டு பாக்கி இருக்கின்றன. கம்போடியக் கல்வெட்டில் ஒரு ‘பகவத் சங்கர’ரின் காலில் அறிஞருலகம் முழுதும் தாமரையை வண்டுகள் மொய்ப்பதுபோலத் தங்களுடைய சிரஸுகளைத் தாழ்த்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத்பாதாளைத் தவிர யாராயிருக்க முடியும்? “கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முடிவு பாகத்திலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை ஆசார்யாளின் காலம்’ என்பதற்கும் ஒத்துப்போகிறதே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்பது ஒரு ஆர்க்யுமென்ட். இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும் ஸங்கேதக் கணக்கு ச்லோகம் – கலியில் 3889-ம் வருஷமான கி.பி. 788-ஐச் சொல்லும் “நிதிநாகேபவஹ்ந்யப்தே” ச்லோகம்.
இந்த இரண்டும் ஒன்றையே, ஒருவரையே குறித்ததாகத் தெரிவதால் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலாகச் சொல்லி விடலாம்.
ஆசார்ய பீடங்களில் ஆதி பகவத்பாதாளுக்கு அப்புறமும் மஹாபெரியவர்களாக லோக ப்ரஸித்தியுடனிருந்த சில ஸ்வாமிகள் வந்திருக்கிறார்கள். இப்போது ஆசார்யாளின் க்ரந்தங்களாக, ஸ்தோத்ரங்களாக வழங்கி வருகிறவற்றில் சில இப்படிப்பட்டவர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றேன் அல்லவா? நமக்கு நல்ல சரித்ர ஆதாரங்களுடன் தெரிபவராக வித்யாரண்ய ஸ்வாமிகள் இருக்கிறார். பதினாலாம் நூற்றாண்டில் அவதாரம் பண்ணிய அவர்தான் விஜயநகர ஸாம்ராஜ்யம் ஏற்படுவதற்கே காரணமாயிருந்தவர். அவர் அவதாரம் செய்திருக்காவிட்டால் தக்ஷிணதேசம் முழுவதையும் துருஷ்க மதம் கபளீகரம் பண்ணியிருக்கும். துருஷ்கர்களை அடக்கி ஹிந்து ஸாம்ராஜ்யம் ஏற்பட வழி வகுத்தார். ஹிந்து மதத்திலேயே அப்போது கர்நாடகம், அதையொட்டிய ஆந்த்ர ஸீமைப் பகுதிகள் ஆகியவற்றில் மத்வ மதமும் வீரசைவமும் அத்வைதத்தைக் கபளீகரம் பண்ணாமலும், அவர்தான் ரக்ஷித்துக் கொடுத்தார். ச்ருங்கேரி மடத்துக்கு ஒரு புது சோபையை உண்டாக்கித் தந்து இன்னும் அநேக மடங்களையும் அந்தப் பிரதேசத்தில் ஸ்தாபித்து நம் ஆசார்யாளின் ஸம்ப்ரதாயம் தழைத்தோங்கும்படிச் செய்தார். ‘பஞ்சதசீ’, ‘ஜீவன் முக்தி விவேகம்’, ‘வையாஸிக ந்யாயமாலை’ முதலான அநுபவ க்ரந்தங்களான உசந்த அத்வைத நூல்களை உபகரித்த அவரேதான் பூர்வாச்ரம ஸஹோதரருடன்கூட நாலு வேதங்களுக்கும் பாஷ்யம் ஏற்படவும் காரணமாயிருந்தவர். ஸாயண பாஷ்யம் என்று அதற்குப் பேர். அவரை ஆசார்யாளுக்குள்ளது போலவே ஸ்தோத்ரங்களும் பிருதாவளிகளும் சொல்லி அந்த மடங்களில் கொண்டாடுகிறார்கள்.
இம்மாதிரி இங்கே “அபிநவ சங்கரர்” என்றே ப்ரஸித்தி பெற்ற ஒருவர் இருந்திருக்கிறார்1. ‘அபிநவ’ என்றால் ‘மறு அவதாரம்’ என்று அர்த்தம். ஆதி ஆசார்யாளே இவராக மறுபடி வந்திருக்கிறார் என்று அவரை உலகம் கொண்டாடியிருக்கிறது. அதனால்தான் “தீர சங்கரேந்த்ர ஸரஸ்வதி” என்ற அவருடைய பெயர் மறைந்து போய் “அபிநவ சங்கரர்” என்றே வழங்கலாயிற்று. ‘சங்கரேந்த்ர விலாஸம்’ என்பதும் ‘ஸத்குரு ஸந்தான பரிமளம்’ என்பதும் அவருடைய சரித்ரத்தைச் சொல்லும் இரண்டு புஸ்தகங்கள்.
ஆசார்யாளுக்கு அப்புறம் சில நூற்றாண்டுகள் வைதிக மதம் மட்டும் கொடி கட்டிப் பறந்தாலும் அப்புறம் மறுபடி பௌத்தம் முதலிய மதங்களும், காபாலிகம் முதலான வாமாசார மதங்களும் கிளம்பின. முன்மாதிரி இவை ஜன ஸமூஹத்தில் பெரிய செல்வாக்குப் பெறமுடியாதபடி ஆசார்யாள் போட்டுக் கொடுத்த அஸ்திவாரமே உறுதியாயிருந்தது. ஆனாலும் ராஜாக்களிலும், தத்வ வாதத்தில் ப்ரியமுள்ளவர்களிலும் சிலர் பௌத்தத்துக்கு ஆதரவு தந்ததால் அது கணிசமான following பெற்ற மாதிரித் தெரிந்தது. நாகரிகம் போதாதவர்களும், ‘ரஹஸ்ய அநுஷ்டானம்’ என்று பெத்தப் பெயர் கொடுக்கும் சில பேரும் வாமாசார மதங்களில் போனார்கள். ஆசார்யாளுக்கு 1300 வருஷத்துக்கப்புறம் அபிநவ சங்கரர் தோன்றி ஆசார்யாளை போலவே தேசம் பூராவும் ஸஞ்சாரம் பண்ணி, அந்த மற்ற மதங்களை நிராகரணம் செய்து ஸர்வஜ்ஞ பீடமும் ஏறியிருப்பதாக அவருடைய சரித்ரங்களிலிருந்து தெரிகிறது. அவர் அந்நிய தேசங்களுக்கும் போய் தர்மோத்தரணம் செய்தாரென்றும் சொல்லியிருக்கிறது. சைனாக்காரர்கள், துருஷ்கர்கள், பாஹ்லீகர்கள் (Balkh என்று ஆப்கானிஸ்தானில் உள்ள இடம்) முதலியவர்கள்கூட அவரைத் தங்கள் ஆசார்யராகப் பூஜித்தார்கள் – சீன – துருஷ்க – பாஹ்லிகாத்யைஸ் – ஸ்வபராசார்யதயா ஸ்துதம் என்று “குரு ரத்ந மாலா” சொல்கிறது. (ச்லோகம்-66)
இவரையும் ஆதிசங்கர பகவத் பாதரையும் ஒன்றாகவே நினைத்துத்தான் சில சங்கரவிஜய புஸ்தகங்களிலேயே மாறுபாடான விஷயங்களைச் சொல்லியிருக்கக்கூடும்.
ஆதி ஆசார்யாளின் அவதார காலத்தைச் சொல்வதாக நினைக்கப்படும் “நிதிநாக” ச்லோகமும் வாஸ்தவத்தில் இந்த அபிநவ சங்கரரின் அவதாரத்தைச் சொல்வதுதான் என்று பண்டிதர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்…
“ஸுஷமா” வ்யாக்யானத்தில்2 சங்கரேந்த்ர விலாஸத்திலிருந்து இவருடைய அவதார காலத்தை quote செய்திருக்கிறது. அதுவும் ஸங்கேத ஸங்கியையில்தான் இருக்கிறது.
“சேவதி-த்விப-திசா- (அ)நல வர்ஷே திஷ்ய” என்பது இங்கே கொடுத்துள்ள காலக் கணக்கு3. ‘சேவதி’ என்றால் நிதி. ‘நவநிதிகள்’ என்பதால் அது 9-ஐக் குறிக்கும். ‘த்விபம்’-யானை. ‘அஷ்ட கஜங்கள்’ என்பதால் அது 8. ‘திசா’ என்றால் திசைதான். திசைகளும் 8 தானே? ‘அநல’-அக்னி. அது 3. அதனால் இந்த எண் 9883 என்றாகும். திருப்பிப் போட்டால் 3889. ‘திஷ்ய’ என்பது கலி. கலியில் 3889-ம் வருஷம். கி.பி. 787-788.
இப்போது ஹிஸ்டரி புஸ்தகங்களில் சொல்லும் கி.பி. 788 அபிநவ சங்கரரின் அவதார வருஷமே என்று ஏற்படுகிறது! இதே வருஷத்தைத்தான் “நிதிநாக”ச்லோகத்திலும் சொல்லியிருக்கிறது! அது ஆதி ஆசார்யாளின் அவதார காலமாக்கும் என்று நம்மிலேயே பல பேர் பல காலமாக நினைத்து வந்திருக்கிறார்கள்!
இதை அடிப்படையாகக் கொண்ட ஓரியன்டலிஸ்ட்கள் தங்களுடைய theory-ஐ build பண்ணியிருக்கிறார்கள்.
பக்கபலமான இன்னொரு பாயிண்டும் இருக்கிறது. “நிதிநாக” ச்லோகம், அபிநவ சங்கர சரித்ர ச்லோகம் இரண்டிலும் கல்யப்தம் (கலியில் இத்தனாம் வருஷம் என்று) சொல்லியிருப்பதோடு ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரத்தில் (ப்ரபவ முதலான அறுபது வருஷங்களில்) இன்ன வருஷம், மாஸம், திதி என்றும் சொல்லியிருக்கிறது. அதுவும் முழுக்க ஒன்றாகவே இருக்கிறது! விபவ வருஷம், வைசாக மாஸம், சுக்ல பக்ஷ தசமி என்றே இரண்டிலும் இருக்கிறது!
ஆதி ஆசார்யாள் ஜனனம் நந்தன வருஷம் என்று மற்ற ஆதாரங்களிலிருந்து தெரிகிறது. இங்கேயோ விபவ வருஷம் என்று இருக்கிறது. நாம் சொல்கிற கி.மு. 509 ஒரு நந்தன வருஷமாகவும், அவர்கள் சொல்லும் கி.பி. 788 ஒரு விபவ வருஷமாகவுமே இருக்கின்றனவென்றும் கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள்.
அதைவிட இன்னொன்று : தெய்விக புருஷர்கள் எந்த ப்ரபவாதி வருஷத்தில் பிறந்தார்கள் என்று பெரும்பாலும் தெரியவில்லை. ராமர் எந்த வருஷம்? க்ருஷ்ணர் எந்த வருஷம்? பண்டிதர்கள் வேணுமானால் மண்டையை உடைத்துக் கொண்டு கண்டு பிடிக்கலாமே தவிர லோகத்தில் ஜயந்தி என்று கொண்டாடும்போது வருஷத்தை யாரும் நினைப்பதில்லை. மாஸம், பக்ஷம், திதி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு வருஷமும் ஜயந்தி கொண்டாட வேண்டியிருப்பதால் இவைதான் முக்யமாகத் தெரிகின்றன. ராமர் சைத்ர மாஸ சுக்ல பக்ஷ நவமி, க்ருஷ்ணர் ச்ராவண மாஸ க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி-என்றிப்படி. அதிலும் திதிக்குத்தான் ரொம்ப முக்யம், ரொம்ப ப்ரஸித்தி-ராம நவமி, கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி, ஸ்கந்த ஷஷ்டி என்பதாக ஜயந்தியின் பேரிலேயே திதிதான் இருக்கிறது.
ஆசார்யாள் விஷயமாக, இன்றைக்கும் தேசம் பூராவிலும் அவருடைய ஜயந்தி வைசாக மாஸத்தில் சுக்ல பக்ஷ பஞ்சமியில்தான் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு ச்லோகத்திலுமோ பஞ்சமியைச் சொல்லாமல் தசமியைச் சொல்லியிருக்கிறது. அதனால் அந்த தசமியை அவதார தினமாகக் கொண்டவரும் பஞ்சமியை அவதார தினமாகக் கொண்டவரும் வெவ்வேறான இரண்டு பேர் என்று வைத்துக் கொள்ள இடமேற்படுகிறது.
நடைமுறையில் திதிதான் ஒரு ஜயந்திக்கு முக்யமாயிருந்தது, ப்ரபவாதி வருஷத்தையோ, கலியில் எந்த வருஷம் என்றோ எவரும் நினைத்துப் பார்க்காமலிருக்க, இங்கேயோ திதியை விட்டு விட்டு கலியில் இன்ன வருஷம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு 788-தான் என்று நிர்ணயம் பண்ணியிருப்பது கொஞ்சம் ஆச்சர்யமாயிருக்கிறது! திதி tally-யாவது அவச்யம்.
இந்தக் காரணங்களைக் கொண்டு கி.பி. 788 என்று ஓரியண்டலிஸ்ட்கள் நிர்ணயித்திருப்பது அபிநவ சங்கரரை ஆதி சங்கரராக நினைத்ததால்தான் என்று கி.மு. 509 என்று நம்புகிறவர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.
பாதுகாஸித்தி பெற்று அந்நிய தேசங்களிலும் திக்விஜயம் செய்த அபிநவ சங்கரரையே கம்போடியாக் கல்வெட்டில் இந்த்ரவர்மன் தன்னுடைய குருவான சிவஸோமரின் குரு என்று சொல்கிறானென்றும் கருதுகிறார்கள்.
ஆசார்யாளின் ப்ரதான சிஷ்யர்களாக இருந்த நாலு பேரோடு ப்ருத்வீதவர், சித்ஸுகர், சித்விலாஸர், ஞானகந்தர், விஷ்ணுகுப்தர், அனந்தானந்தர், உதங்கர் (இவரேதான் தோடகர் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு), ஷண்மதங்களைப் ப்ரசாரம் பண்ணிய ஆறுபேர் என்றெல்லாமும் அநேகம் சிஷ்யர்களின் பேர்கள் ‘சங்கரவிஜய’ங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. சிவஸோமன் என்ற பெயர் எங்கேயும் காணோம். அந்நிய தேச ராஜாவின் குருவாயிருந்த ஒருத்தரின் பெயர் இப்படி விட்டுபோயிருக்குமா?
ஆராய்ச்சி என்று போகாமல் அநுக்ரஹம் என்று போகும்போது ‘ஆதி’ என்றும் ‘அபிநவம்’ என்றும் வித்யாஸப்படுத்தவே கூடாதுதான். ‘ஆதி’யினுடைய புது அவதாரமே இவர் என்பதால்தானே ‘அபிநவ’ என்பது? அதனால் இவருக்கு உண்டான ப்ரக்யாதி எல்லாம் அவரைச் சேர்ந்ததாகவே சொல்லிவிடலாம்4. ஈச்வராவதாரமாக முதலில் வந்த ஆதி ஆசார்யாளிடமே அனன்ய பக்தியாகப் பண்ணும்போது அவருக்கும் அபராவதாரமான (அவரே எடுத்த பிற்கால அவதாரமான) இன்னொருவரை அஸலே அவராக வைத்துவிடலாம். எல்லா ஸ்துதியும் அந்த ஆதி புருஷருக்கே என்று வைத்துப் பார்க்கும்போது சிவஸோமன் அவருடைய சிஷ்யரே என்றால் நேர் சிஷ்யரென்று அர்த்தம் பண்ணாமல் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் என்று வைத்து விடலாம். இப்போது நாம்கூட, ‘நாங்கள் ஆசார்யாள் சிஷ்யர்கள்’ என்று சொல்லிக் கொள்ளவில்லையா? அது மாதிரி நமக்கு 1200 முன்னாலிருந்த கம்போடிய ராஜகுருவை ஏன் சொல்லக் கூடாது? இதெல்லாம் பக்தி பாவத்தில். இப்போது நாம் பக்தியை மூட்டை கட்டி வைத்துவிட்டு கால நிர்ணயம் என்றல்லவா ஆராய்ச்சிச் சர்ச்சையில் இறங்கியிருக்கிறோம்? அதனால் அவர்-இவர் என்று வித்யாஸப்படுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது!
1 ஸ்ரீகாஞ்சி மடத்தின் முப்பத்தெட்டாவது பீடாதிபதிகளாக விளங்கியவர்.
2 61-வது ச்லோகம்.
3 முழு ச்லோகம் வருமாறு:
ஹாயநே(அ)த விபவே வ்ருஷமாஸே சுக்லபக்ஷ தசமீ திந மத்யே |
சேவதி த்விப திசாநலவர்ஷேதிஷ்ய ஏ நமதஸோஷ்ட விசிஷ்டா ||
4 இந்த ரீதியில்தான் போலும், ஆதி அச்சார்யாளைப் பற்றி ஸ்ரீசரணர்கள் குறிப்பிட்டுள்ள ஸந்தர்பங்கள் பலவற்றில் கம்போடியக் கல்வெட்டு ச்லோகத்தை அவருக்கான துதிபோலவே மொழிந்திருக்கிறார்கள்.
____________________________________________________________________
Determining the period of Sri Sankara’s life
Abhinava Sankara
Two more points from their argument still remain. One argument is this: The Cambodian inscription says that the entire world of scholars are bowing their heads at the feet of one Bhagawat Sankara, just like bees swarm a lotus flower; Who else could it be other than our Adi Sankara Bhagawadpada? “The time period given in the inscription as the later part of 8th century AD to the beginning of 9th century AD tallies with the time period of Acharya [Sri Adi Sankara]! What do you have to say about this?” This is one argument. The second one is the sloka which pertains to our own country, which contains coded calculations [संकेत संख्या] – the “Nidhinaagebhavahnyabde”sloka [निधिनागेभवह्नयब्दे ], indicating the 3889th year of Kali, which corresponds to 788 AD.
Since both these appear to have pointed to the same thing or person, a single reply can be given to both the questions.
Even subsequent to Adi Bhagawadpada, there have been Swamijis who were very renowned scholars with universal fame. Did I not mention that some of the treatises and verses which are now believed to have been written by Acharya, could have been written by some such people? There is one Vidyaranya Swamiji who is known to us, based on reliable historical evidences. Born during the fourteenth century, it was he who was responsible for the Vijayanagara empire to be established. Had he not been born, the entire southern region would have been overtaken by Turkish religion. He overcame the Turks and paved the way for establishment of Hindu empire. Even within the Hindu religion, it was he who protected and saved Adwaita [philosophy] from being overtaken by Madhwa religion and Veera Saivism in the erstwhile Karnataka the adjoining boundary regions of Andhra. He revitalised the Matam in Sringeri and also established several other Matams in that area and ensured that our Acharya’s tradition flourished well. He is the same person who had written the great texts, considered as experiential treatises in Advaita, namely ‘Panchadasi’ (पंचदशी), ‘Jeevanmukti Vivekam’ (जीवन मुक्ति विवेकम्), ‘Vaiyaasika nyayamala’ (वैयासिकन्यायमाला) etc., and was also responsible along with his brother of Purvashrama, for the creation of commentary [Bhashyam] for all the four Vedas. It is known as SaayaNa Bhashyam (सायण भाष्यम्). He is celebrated in those Mutts with recitation of hymns and praises, similar to what is done for Acharya [Sri Adi Sankara].
Likewise, there has been a Sankaracharya here, who was very famous by the same name “Abhinava Sankara”1. ‘Abhinava’ (अभिनव) means reincarnation. The world celebrated him saying Sri Adi Sankara himself has come again in this form. That is why his name “Dheera Sankarendra Saraswati’ got obscured and he came to be known only as “Abhinava Sankara”. ‘Sankarendra Vilasam’ [शङ्करेन्द्र विलासम्] and ‘Sadguru Sandhaana Parimalam’ [सद्गुरु सन्धान पररिमळम्] are the two works which narrate his biography.
Although the Vedic religion flourished well for a few centuries after Acharya, subsequently religions like Buddhism, and religions like Kaapaalikam which believed in extreme practices, resurfaced. The foundation laid by Acharya was firm enough to ensure that these religions did not receive much patronage in the society the way they did in earlier times. Notwithstanding that, owing to the support extended to Buddhism by some of the kings and by those who were interested in philosophical debates, it appeared to garner a large following. People who lacked good culture and some who donned the big name of ‘Rahasya Anushtanam’ started following religions of Vamachara [वामाचार]. From his life history it is learnt that Abhinava Sankara, who was born 1300 years after Acharya, travelled across the entire country – just like Acharya did, banished these other religions and ascended the seat of omniscience [Sarvajna Peetam – सर्वज्ञ पीठम्]. It is also mentioned that he travelled to foreign countries and re-established Dharma. Guru Ratna Mala says ‘cheena-turushka-baahlikaadyais – svaparaachaaryatayaa stutam’ [चीन-तुरुष्क-बाह्लिकाद्यैस्-स्वपराचार्यतया स्तुतम् ] – that even Chinese, Turks, Balkhis (Balkh is a place in Afghanistan) worshipped him as their Acharya. (Verse-66)
It is possible that some people thought that he and Adi Sankara were one and the same, because of which certain mixed up views were given in the Sankara Vijayam books.
Scholars are of the opinion that the “Nidhinaaga” (निधिनाग) sloka, said to be talking about the life period of Adi Acharya, could actually be describing only the life period of this Abhinava Sankara.
In the commentary of “Sushama”, his life period is quoted from Sankarendra Vilasa. That is also expressed in coded numbers [संकेत संख्या ] only.
The calculation for the period given here is “sevadhi-dvipa-disa-(a)nala varshe tishya” [शेवधि-द्विप-दिश-(अ)नल वर्षे तिष्य]. ‘Sevadhi’ (शेवधि) means treasure or ‘nidhi’ [निधि]. Since there are nine types of treasures [नवनिधि – navanidhi] it denotes 9. ‘Dvipa’ (द्विपः) is elephant. As there are ‘Ashta Gajas’ (अष्टगज) it denotes 8. ‘Disa’ (दिशा) means direction. Are not directions also 8? ‘Anala (अनल:) Agni is 3. Therefore this number is 9883. When reversed it becomes 3889. ‘Tishya’ [तिष्य] is Kali. It is 3889th year in Kali, that is 787 -788 AD.
Now, it transpires that the 788 AD mentioned in history books, refers to the year of birth of Abhinava Sankara! The same year is mentioned in the “Nidhinaaga” sloka also! Many of our own people have been believing for a long time that it actually refers to the year of incarnation of Adi Acharya.
Orientalists have also built their theory based only on this.
There is one more point as reinforcement. In both the “Nidhinaaga” sloka and the sloka about the history of Abhinava Sankara, apart from Kalyabda [कल्यब्द] (denoting which year in Kali), it is also mentioned which year, month and tithi (तिथि) in Prabhavaadii Shashti Samvatsara [प्रभवादि षष्ठि संवत्सरः] (in the sixty years, beginning with the year Prabhava). That also happens to tally entirely! In both it is given as Vibhava year, Vaisaka month, Sukla Paksha Dasami [tithi]!
It is known from other evidences that the birth of Adi Acharya was in the Nandana year. Whereas here it is said to be the Vibhava year. Calculations show that the year 509 BC which we claim, is a Nandana year and 788 AD which they claim, is a Vibhava year.
There is one more thing: The year in which divine persons were born is mostly not known. Which year was Rama (born)? Which year was Krishna (born)? Scholars may break their heads to find out but when it comes to celebrating their births [jayanti] in this world, nobody thinks about the year. Since the celebrations are carried out based on the month, paksha, tithi, etc. only these appear to be important. Chaitra Masa Sukhla Paksha Navami for Rama, Sravana Masa Krishna Paksha Ashtami for Krishna and so on. Only the Tithi is important; the most famous [jayanti(s)] are Rama Navami, Gokulashtami, Vinayaka Chathurti, Skanda Sashti, etc. where the name of the jayanti is based on the tithi.
In the case of Acharya, even today, his birth festival is celebrated in the Vaisaka month, Sukla Paksha Panchami (पञ्चमी) Tithi only, across the country. Whereas in these two verses, instead of mentioning Panchami, they have stated Dasami (दशमी). Therefore, there is a possibility to consider that they are two different persons, one with Dasami as his day of birth and another with Panchami as the day of birth.
In practice, Tithi alone has been important for determining the day of birth. While no one bothered about the year of Prabhavaadi or the year of Kali, here it is surprising to note that it has been determined as 788 AD, taking only the particular year and not considering the Tithi. It is important that at least the Tithi should tally.
People who believe in 509 BC are of the opinion that only on account of these reasons the Orientalists have determined the year as 788 AD, mistaking Abhinava Sankara to be Adi Sankara.
They also feel that Abhinava Sankara who attained Padukasiddi (पादुकासिद्धि) and also travelled to foreign countries, is referred to by Indravarma in the stone inscription of Cambodia as the Guru to his own Guru Sivasoma.
Along with the names of the four primary disciples of Acharya [Sri Adi Sankara], the names of disciples like Pruthveedhava, Chidsukha, Chidvilaasa, Jnaanakanda, Vishnugupta, Anantaananda, Udhanga (there is a belief that he is Thotaka) – the six disciples who propagated the six religions, many other names are mentioned in the Sankara Vijayam books. The name of Sivasoman is nowhere to be seen. Will the name of a person who was the Guru to the king of a foreign country be left out?
When we consider only the divine grace, and avoid getting into research, we should certainly not discriminate between ‘Adi’ (आदि) and ‘Abhinava’ (अभिनव). He was called ‘Abhinava’ only because he was considered as the reincarnation of ‘Adi’, isn’t it? Therefore, it can be said that whatever fame he obtained, it only belonged to Sri Adi Sankara4. When we have unwavering Bhakti towards the Adi Acharya who came first as Eswara’s incarnation, we can consider the other person – his other incarnation (his later incarnation) also as the Adi Acharya himself. If all the adulation are meant only for the Adi Purusha, then, if Sivasoman is said to be his disciple, we can take it to mean that Sivasoman was not his direct disciple but had come in the traditional order of disciples [of the Adi Acharya]. Now, do we also not make claims that we are all disciples of Acharya [Sri Adi Sankara]? Likewise, why should we not say the same about the Rajaguru who was there 1200 years before us? All these are from the perspective of devotion. However, have we now not cast away the aspect of devotion and gotten down to the argument of determination of life period? That is why, we are compelled to discriminate and say ‘that person-this person’ etc !
1 He was the 38th pontiff of Kanchi Mutt
2 61st verse
3 The complete verse is as follows:
Haayanae(a)tha vibhavae vrushamaase suklapaksha dasamee dina madhyae I
sevadhi-dvipa-disa-(a)nala varshe tishya ae namatasoshta visishtaa” [
हायने(अ)थ विभवे वृषमासे शुक्लपक्ष दशमी दिन मध्ये ।
शेवधि-द्विप-दिश-(अ)नल वर्षे तिष्य ए नमत सोष्ट विशिष्टा।
4 Perhaps in this way only, the verse in the stone inscription of Cambodia, has been mentioned by Sri Charanar[MahaPeriyava], as meant for Adi Acharya himself, during the several occasions he has talked about Adi Acharya.
______________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
💐🙏💐🙏💐🙏