Divine experience of an anonymous devotee

Thanks to Smt Saraswathi Thyagarajan mami for this share. Periyava always responds to true bakthi. This is yet another fine incident.

Mahaperiyava Padham Sharanam.

நான் பத்து தினங்களுக்கு முன் என் மன உளைச்சல்கா ரணமாக பெரியவா அதிஷ்டானத்துக்குச் செல்ல நினைத்து, என் குடும்ப நண்பர் வயதானவர் ஒருவரிடம்
என்னென்ன வாங்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டபோது அவர் வில்வ மாலை, ஏலக்காய் மாலை வாங்கிச் செல்லுமாறு பணித்தார். அத்துடன் பெரியவா அதிஷ்டானத்தை 108 முறை வலம் வரும்படியும் எனக்கு அறிவுறுத்தியதால் நானும் அவ்வாறே அவர் சொன்னதையெல்லாம் மறு பேச்சில்லாமல் செய்தென் இன்னொரு நண்பரின் உதவியோடு. ப்ரதக்ஷிணம் செய்யும்போது மானசீகமாக என் மனக் குறையை பெரியவாளிடம் சொன்னேன்.

இது முடிந்து என் சொந்த ஊர் சென்று அங்கிருந்தபடியே என் வயதான குடும்ப நண்பரிடம் நான் சென்று வந்த விவரங்களையும்ப கிர்ந்து கொண்டேன். அவர் நீ திரும்ப நீ உன் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்லு முன் இதற்குண்டான பலனை அனுபவபூர்வமாக உணர்வாய் என்றார். என் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு இடத்தில் தங்கி அங்கிருந்து ஸ்ரீ பால பெரியவாளை தரிசித்து, பின் நான் தங்கின இடத்திற்கு வந்தேன். மாலை எனக்கு ஆறு மணிக்கு என் வேலைக்குச் செல்லும் இடத்திற்கு ஃப்ளைட் மாலை நாலு மணிக்கு திடீரென்று அந்த வீட்டு மாடியில் ஓர் மாத்வக் குடும்பம் இருப்பதையும், அவர்கள் தேவி புவனேச்வரி பூஜை செய்வதையும் அறிந்து அங்கு சென்றேன்.

அந்த பூஜை செய்யும் அம்மா என்னிடம் பெரியவா ,ஸ்ரீரமண மஹரிஷி, புவனேச்வரி இவர்களின் சிறப்பு பற்றி அளவளாவினார்கள். எனக்குத் தெரிந்த சில அனுபவங்களை நானும் பகிர்ந்து கொண்டேன்.

திடீரென்று அந்த அம்மா”கொஞ்சம் இரு, நான் வருகிறேன்” எனக் கூறி உள்ளேசென்றவர்கள் வரும்போது பெரியவா பாதுகைகள் சிறிய அளவில் உலோகத்தால் ஆனவை, ப்ராணப்ரதிஷ்டை செய்தவை என்னிடம் கொடுத்து, “நீ தக்க பாத்திரம், ஆகையால் உனக்குக் கொடுக்கிறேன்.பூஜை செய்து வா” என ஆசிர்வதித்து அளித்தார்கள்!

என் ஆச்சரியத்திற்கும் சந்தோஷத்திற்கும் எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்தம்பித்து பின் சமாளித்து, பாதுகைகளை சிரசில் தாங்கி நான் இருக்குமிடம் வந்து சேர்ந்தேன். சிறித் நேரத்தில் ஃப்ளைட் பிடித்து நான் வேலை பார்க்குமிடம் வந்து விட்டேன். மறுனாள் காலை புஷ்பம் சார்த்தி பூஜை செய்து வேலை முடிந்தபின் அசதியில் தூங்கி விட்டேன். சிறிது நேரத்தில் பெரியவா கனகாபிஷேகம் செய்யும் போது அமர்ந்திருந்த சிம்ஹாசனத்தில் உட்கார்ந்தபடி என் முன் காட்சி கொடுக்கிறார். அவரை நோக்கி நான் இரு கையையும்
குவித்துக்கொண்டு முன்னே செல்கிறேன். அருகில் செல்லச் செல்ல அருனாசலேச்வரர் அவர்தாம் என்பதனை உணர்த்தும்விதமாக அக்னியின் சூடு என்னைத் தாக்குகிறது! மனதில்
அவரை இருத்தி,நாகு முறை சாஷ்டாங்க குரு வந்தனம் செய்கிறேன்.

அவர் என்னைப் பார்து”நீ அங்கு வந்து என்னிடம் ப்ரார்த்தனை செய்தது நிச்சயம் நடக்கும், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்கிறார்.

சங்கரா என் பாக்யம் என்னே!

உடனே எனக்கு விழிப்பு வந்துவிட்டது.

இதில் இரண்டு அம்சங்கள்! என் வயது முதிர்ந்த குடும்ப நண்பர் ”நீ ஊர் திரும்புமுன் உனக்கு இதன்பலன் தெரியும் என்று சொன்னபடி பாதுகை எனக்கு கிடைத்த பாக்யம்;
மற்றொன்று நான் அவர் முன் வைத்த என் கோரிக்கை ஊர் திரும்பியவுடன் தான் ஏற்றுக்கொண்டதாக ஸ்ரீசரணாள் எனக்கு அபய ஹஸ்தத்துடன் காட்சி
கொடுத்து அருளியது!

என் தெய்வமே சங்கரா!
என் வாழ் நாள் முழுதும் இவ்வாறு உறு துணையாக வர ப்ரார்த்திக்கும் உன் அடிமை….

இனி வரும் இளைய சமுதாயத்தினர் யாவருக்கும் பெரியவாளின் பேரில் பக்தி தூண்டுகோலாக
அமையும் வண்ணம்..

ஜய ஜய சங்கரா….Categories: Announcements, Devotee Experiences

5 replies

 1. English translation

  Ten days back, I wanted to go to MahaPeriyava Adhishtanam since I was experiencing mental stress; I consulted my elderly family friend as to what are the items I should purchase and take before I go there. He directed me to buy Vilvam maalai and Elakkai maalai. He also asked me to do Pradakshinam to the Adhishtanam 108 times. I followed his directions without questioning him. As I was doing Pradakshinam to the Adhishtanam along with another friend, I mentally prayed to Periyava about my problems

  After this, I went to my hometown and conveyed all the details of my trip to my elderly family friend. He said that I would completely experience the fruits of my trip before I re-joined my office. I started from my hometown, halted temporarily in a place in Chennai, took Shri BalaPeriyava’s Darshan and came back to Chennai. My flight back to my workplace was at 6 PM. At around 4 PM, suddenly, I learnt that there was a Madhwa family on one of the upper floors of that building and that they were doing Devi Bhuvaneshwari Poojai; I went there.
  The lady who was doing the Pooja told me the greatness of MahaPeriyava, Ramana Maharishi, Bhuvaneshwari Amman. I also shared with them a few experiences.

  Suddenly, that lady went inside saying “Wait a minute, I will be right back”. She brought back miniature, metal Periyava Padukas which had undergone ‘Prana Prathishtai’, handed them over to me saying, “You are qualified to receive this; take them and do Poojai to them”. She then blessed me!

  I had no words to express my surprise and happiness. I recovered from the surprise, placed the Padukas on my head and came back to my place. I soon caught my flight and came back to my workplace. The next day, I did Pooja with flowers, went to work, returned home and went to sleep exhausted. In a little while, Periyava sitting on the throne in which Kanakabhishekam was done to Him, gave Darshan to me. I proceed towards him with folded hands. But as if to remind me that He is Arunachaleshwara personified, I could feel the heat emanating from Him as I approached Him! Keeping Him in my mind, I prostrate myself in front of Him 4 times, as Guru Vandanam

  HE looks at me and says, “Whatever you prayed to me in that place will definitely happen, I will take care”
  Shankara! How fortunate I am!

  I woke up just then.

  There are two parts to this. My elderly family friend saying, “You will get the fruits of this before you return to your workplace”. As per this, I got the treasured Padukas.
  The second was how Periyava said He would take care of my prayer by giving me Darshan of His Abhaya Hastam.

  My Lord Shankara!
  I wish to stay with you for as long as I live as your slave!
  May the future generations also get devotion towards Periyava!

  Jaya Jaya Shankara

 2. Truly blessed!!
  Maha Periyava Thiruvadi Saranam

 3. Blessed soul to get Padhuka & Dream Darahsan.

  it was easier to do pradakshinam before but now they barricaded so we have to distrub many people crossing inside the hall. I hope Shri matam people help in removing the barriacade for pradakshinam.

 4. Mahaperiava engal Deivam. Mahaperiava padam saranam. Mahaperiava ellorukum Deivam. Hara hara Shankara Jaya Jaya Shankara. Gurubhyo namaha. Jeevan mukthi tharavendum.

Leave a Reply

%d