Vaanam Partha Sivalingam – Sri Vilva Vana Nathar Temple Update

சாதுர்மாஸ்ய’த்தைப் பற்றிச் சொல்வதற்காக இந்த [ஸௌரமான, சாந்த்ரமான]ப் பேச்சு வந்தது. நம்முடைய ஆனி அமாவாஸ்யை ஆனவுடன் சாந்திரமானப்படியான ஆஷாட மாஸம் (ஆடி மாஸம்) பிறந்துவிடுகிறது. இந்த ஆஷாட மாஸ சுக்ல பக்ஷ ஏகாதசியன்று க்ஷீராப்திநாதனான பகவான் தூங்க ஆரம்பிக்கிறார். அதைத் தொடர்ந்து வருகிற ச்ராவண (ஆவணி) , பாத்ரபத (புரட்டாசி) , ஆச்வின (ஐப்பசி) மாஸங்களிலும் தூங்கியபடியே இருந்துவிட்டு, கார்த்திகை சுக்லபக்ஷ ஏகாதசியன்று விழித்துக் கொள்கிறார். ஆஷாட ஏகாதசியிலிருந்து கார்த்திக ஏகாதசி வரையிலான இந்த ‘பீரியட்டி’ல் அடங்குகிற நாலு மாஸ காலத்துக்கே சாதுர்மாஸ்யம் என்று பெயர். (ஆஷாட பௌர்ணமாஸ்யைக்குத்தான் வியாஸ பூர்ணிமை என்றும் குரு பூர்ணிமை என்றும் பெயர். பொதுவாக, இந்த வியாஸ பூர்ணிமையிலிருந்தான் சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பிப்பதாக அபிப்ராயமிருக்கிறது. ஸரியாகச் சொன்னால் பூர்ணிமைக்கு முந்திவரும் த்வாதசியன்றே அது ஆரம்பித்து விடுகிறது.)

இந்த சாதுர்மாஸ்ய காலத்தில்தான் அநேகமாக முக்யமான பண்டிகைகள் எல்லாம் வருகின்றன. கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்ரி, தீபாவளி, மஹாஷஷ்டி, கார்த்திகை எல்லாம் இந்த ‘பீரியட்’டில் வருபவைதான். ஆனாலும் தக்ஷிணாயனத்தைச் சேர்ந்த இந்த நாலு மாஸத்தில் கல்யாணம், உபநயனம், கும்பாபிஷேகம் முதலான சுபகார்யங்களைப் பண்ணினால் பலனில்லை. எல்லா ஜனங்களுக்குமான பண்டிகைகள் சாதுர்மாஸ்யத்தில் வந்தாலும் தனி மநுஷ்யர்கள் அல்லது ஆலயம் போலக் குறிப்பிட்ட ஒரு இடம் ஆகியவற்றுக்கான விழாக்களுக்கு இந்தக் காலம் ஏற்றதில்லை. –  ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

______________________________________________________________________

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The temple construction activities have been complete with the exception of painting and we are all set for Maha Kumbabishekam. However doing Maha Kumbabishekam during Dakshiyanam is of no use so we are targeting Thai month to do the Maha Kumbashikam. Will keep you all posted on the exact date. Few pics below. Rama Rama

 



Categories: Announcements

1 reply

  1. The Post Pandemic Tidal Waves 🌊💍 & the Data info Sciences 🌐 @ the Delta ~~~🪔💖🤖💍🌐
    ALL’ Devotees MUST have an Awareness for the
    Relevant Shrishti Chakra “” Connecting the Ecologically
    Balancing FACTORs & the ChaAthur MaAsiyam “‘: Pertinent to the Era of Evolution and the Awakening 🌐💨❣️ for Elevation and Selfupliftment ☸️🌧️🐳✌️🏝️🔂

    The Responsibility of the Humankind…. from the
    1sr Avataram….of the Mathsyaa… For imbibing the Sanskaars ( Resolves) Of the ⚙️🔆👁️ Aadhi- Madhyai-
    Antha… ( 3 d …iii ~~~ ThriKooti Sthapana )🔂 Begins 🗞️📽️🏦
    The Dhyanema Siddhim Gamaya 🪔💖🏝️
    Om Sri Gurubhyo namah 🎞️☁️🌐
    Om Shanthi 🌿🧭

Leave a Reply

%d