Jaya Jaya Sankara Hara Hara Sankara,
In this chapter, Sri Periyava stresses on the importance of not losing sight of the big picture and not get sidelined with timelines and petty arguments.
As always, a splendid theme based drawing along with the audio by Smt Sowmya and Shri Ravikumar’s great translation. Rama Rama
___________________________________________________________________
ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்
அநுக்ரஹமே லக்ஷ்யம், ஆராய்ச்சி அல்ல!
ஆசார்ய பீடத்திலேயே வந்தவர்கள் இயற்றிக் கொடுத்து, எத்தனையோ காலமாக ஆசார்யாள் செய்ததாகவே நினைத்துப் பாராயணம் பண்ணப்பட்டுப் பலனும் தந்து வந்து இருக்கிற உத்தமமான ஸ்தோத்ரங்களையும் — அதே போல ப்ரகரணங்களையும் – அவருடையவை என்றே வைத்துக் கொள்வதும் ந்யாயம்தான்! அவருடைய இன்ஸ்பிரேஷனில், அவரே உள்ளே புகுந்து பண்ணியவைதான் இவை! அதனால் பொதுவாக இப்படியுள்ள நம்பிக்கைகளைக் குலைக்க வேண்டியதில்லை. ரொம்பவும் ஆராய்ச்சி என்று இறங்கினால் பக்தி போய்விடுவதில்தான் முடியும்! ஆனாலும் சிலர் சில தினுஸாக ஆராய்ச்சி பண்ணி அதுதான் ஸத்யம் என்று ஸ்தாபிக்கப் பார்க்கும்போது வேறே அபிப்ராயங்களும் உண்டு, அவற்றுக்கும் ஆதாரமுண்டு என்று காட்டாமலிருக்கக் கூடாது என்றும் தோன்றுகிறது. அப்படித்தான் இன்றைக்கு என்னவோ கால நிர்ணயம் என்று பார்க்க ஆரம்பித்துச் சொல்லும்போது ஆசார்யாள் போலிருக்கிற நூல்களைப் பற்றி சொல்ல நேர்ந்தது. ஆராய்ச்சிப் பூர்வமாக ஆதி ஆசார்யாள் செய்தது வேறே, பிற்கால ஆசார்யாள் செய்தது வேறே என்று வேறுபடுத்தி வைத்துக் கொண்டாலும், அநுபவ பூர்வமாக அவையெல்லாம் ஒரே குரு ப்ரஸாதத்தில் உண்டானவைதான்! அதனால் அவர் – இவர் என்று ஒன்றும் பேதப்படுத்தாமல் பாராயணம் பண்ணிப் பலன் அடைவோம் என்ற பாவம் இருப்பதுதான் நல்லது.
காலம் எதுவானால் என்ன? நமக்கு முக்யம் அநுக்ரஹம். ரொம்பப் பூர்வகாலத்தில் வந்திருந்தால்தான் அநுக்ரஹ மூர்த்தியாயிருக்க முடியும் என்றில்லை. எத்தனை பூர்வ காலமானாலும் அப்போதும் ஆசார்யாளுக்கு ஸமகாலத்தவர்களாகவே இருந்தவர்கள்தானே இப்போது நமக்கெல்லாம் கிடைப்பதைவிட ஜாஸ்தி அவருடைய அநுக்ரஹத்தைப் பெற்றிருக்கிறார்கள்? ஸமீபகாலத்தையும் தற்காலத்தையுமே சேர்ந்த மஹான்களிடமிருந்தும் நம்மால் அநுக்ரஹம் பெற முடியவில்லையா?
அதனால் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்ன, இன்னும் அப்புறம் ஆசார்யாள் வந்திருந்தாலும்கூட அதனால் நாம் பெறுகிற அநுக்ரஹத்திற்கு எந்த ஹானியுமில்லை! (நாம்) கதை கேட்பது அந்த அநுக்ரஹத்திற்குப் பாத்திரராவதற்குத்தான். அந்த முக்ய லக்ஷ்யம் மறந்து போகப்படாது.
அதற்காக யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லி நிலை நாட்டிவிட விடக்கூடாதுதான். இதற்காக நாம் செய்யவேண்டியதையும் கொஞ்சம் கவனித்துதான் ஆகவேண்டும். இப்படிப் பண்ணும்போது இரண்டு மூன்று ஸமாசாரங்கள் முக்யம்: ஒன்று, அவர்கள் பிடிவாதமாகச் சொல்கிறார்களே என்று நாமும் பிடிவாதமாக இருக்கக்கூடாது. நம் அபிப்ராயத்துக்கு மாறான ஒன்றுக்கு ப்ரமாணமிருக்கிறது என்றால் அதைத் திறந்த மனஸோடு அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவது, மாற்று அபிப்ராயக்காரர்களிடம் கோபமே கூடாது. ஆசார்யாளைக் குறித்த எந்த விஷயமும் பேதங்களைப் போக்குவாகத் தான் இருக்க வேண்டுமே தவிர கோபத்திலும் வெறுப்பிலும் கொண்டு விடுவதாக இருக்கக் கூடாது. மூன்றாவது, அநுக்ரஹம்தான் நமக்கு முக்யம் என்ற நினைப்பு மறந்து போகாமலிருப்பது.
______________________________________________________________________
Determining the period of Sri Sankara’s life
Objective is to obtain His grace and not to do research [about his life period]
It is also justified to treat all those excellent stotras [उत्तम स्तोत्राः] which have been recited regularly since long yielding all the desired benefits, and the treatises [प्रकरणाः] composed by those who have come in the Acharya order, as Acharya’s own compositions! These have been created with his inspiration and with him being present in the composers! Therefore, there is no need to spoil such common beliefs. If we get into too much research, it will only result in missing out on Bhakti! However, when some people engage in research in some strange ways and try to establish that as the truth, I feel that we should not refrain from pointing out that there are other opinions also, and they too have proof. That is how when we were looking into determination of the life period of Acharya, we happened to talk about books presumed to have been written by Acharya. Research wise, even if we separate the compositions as those done by Acharya and those done by the Gurus who came later, in terms of experiencing them, they are all due the same Guru Prasadam! Therefore, we should have the spirit to read them and derive the benefits without discriminating as to who did it.
How does the life period matter? What is important to us is his grace [अनुग्रहम्].
It is not that he can be a bestower of grace [अनुग्रह मूर्ति] only if he belonged to very ancient times. Howsoever old the time period it may be, those who lived during his own time have gained his grace much more than what we are getting now, isn’t it? Are we not able to obtain grace from the Mahans belonging to the recent past and the present times?
Thus, even if Acharya had incarnated in 9th century AD or even much later, there is no deficiency [हानि] in the grace we receive because of that! (We) are all listening to the story, so that we become deserving of that grace. That important objective should not be forgotten.
However, it is also important [to ensure] that people cannot say anything [they wish] and get those views affirmed. We may have to focus on what we also need to do for this. While doing this, there are two or three things that are important: One, we should not be stubborn just because they are arguing adamantly. If there is proof [प्रमाणम्] to an opinion contrary to our own, we should accept it with an open mind. Secondly, we should not be annoyed with people who have a contrary opinion. Any matter pertaining to Acharya should only enable resolve differences and should never lead to anger and hatred. Third, to never forget the thought that only his grace is important for us.
_____________________________________________________________________
Audio
Categories: Announcements
After a long time enjoying Sowmya”s voice as well drawing ! Very nice Sowmya ! Keep going ! With Periyava kataksham !
Jaya Jaya Shankara!