120.15. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

 Jaya Jaya Sankara Hara Hara Sankara – Is Bhagawathpadhal’s period is after Thiru Gnanasambandar? Sri Periyava explains.

Many Jaya Jaya Sankara to Smt. Sowmya for a classy sketch and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்

த்ரவிட சிசு” விஷயம்

‘த்ரவிட சிசு’ ஸமாசாரத்தைப் பார்ப்போம். ஆசார்யாளே த்ராவிட சிசுதான் – தமிழ்க் குழந்தைதான் – என்று சொன்னேனல்லவா? அவரேதான் குழந்தையாயிருந்த போது அம்பாளின் க்ஷீரத்தைப் பானம் பண்ணி அற்புதமான கவிதாவிலாஸம் பெற்றாரென்று மலையாள தேசத்தில் சொல்கிறார்கள்.

காலடிக்கு ரொம்பக் கிட்டேயே மாணிக்க மங்கலம் என்று க்ராமம் இருக்கிறது. அங்கே அம்பாளுக்குக் காத்யாயனி என்ற பெயரில் கோவிலிருக்கிறது. ஆசார்யாளின் அப்பா தினமும் அங்கே போய்ப் பூஜை பண்ணுவாராம். பால் நைவேத்யம் பண்ணிப் புத்ரருக்கு கொண்டு வந்து கொடுப்பாராம்: “அம்பாள் ப்ரஸாதம்” என்று சொல்லிக் கொடுப்பாராம். குழந்தையாயிருந்த ஆசார்யாள், அப்பா கொண்டு போகும் பாலை அம்பாளே பானம் பண்ணிவிட்டு கொஞ்சம் நமக்காகப் பாக்கி வைத்து அனுப்புகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். ஒரு ஸமயம் அப்பா வெளியூர் போக நேர்ந்ததால் ஆசார்யாளே அங்கே போய்ப் பூஜை பண்ணி, “அம்மா, சாப்பிடு!” என்று சொல்லிப் பால் நைவேத்யம் செய்தாராம். ஒரு பெரிய அநுக்ரஹ லீலை செய்யவேண்டுமென்று உத்தேசித்திருந்த அம்பாள் பாக்கி வைக்காமல் அந்தப் பால் முழுவதையும் ஸுக்ஷ்மமாக ஸ்வீகரித்துக் கொண்டு விட்டாளாம்! அப்புறம் குழந்தை சேஷ ப்ரஸாதம் வைக்கக் காணோமே என்று வருத்தப்பட்டவுடன் தன் க்ஷீரத்தையே அநுக்ரஹித்தாளாம்.

இப்படி அங்கே ஐதிஹ்யம் இருக்கிறது.

‘ஸெளந்தர்ய லஹரி’யின் ப்ரஸித்த பாஷ்யங்களான ‘லக்ஷ்மீதரா’, ‘ஸெளபாக்ய வர்தநீ’, ‘அருணாமோதிநீ’ ஆகிய புஸ்தகங்களிலும் ‘த்ரவிட சிசு’ என்பதற்கு இப்படித் தான் வ்யாக்யானம் செய்திருக்கிறது. ‘லக்ஷ்மீதரா’வில் ‘த்ராவிட சிசு’ என்பதற்கு ‘த்ராவிட ஜாதியில் அவதாரம் பண்ணிய குழந்தையான இந்த ஸ்தோத்ர கர்த்தா’ என்று மட்டும் சொல்லி, விட்டிருக்கிறது1. மற்ற இரண்டு பாஷ்யங்களிலும் விரிவாகவே (மேலே சொன்ன) கதையைக் கொடுத்திருக்கிறது.

ஆனபடியால், ‘ஞானஸம்பந்தருக்கு அப்புறம்தான்; அதாவது ஏழாம் நூற்றாண்டுக்கு அப்புறம்தான் ஆசார்யாள்’ என்று சொல்வதற்கில்லை.

1 “த்ரவிட- ஜாதி-சமுத்பவ: பால: எதத் ஸ்தோத்ர கர்த்தா”

______________________________________________________________________

Determining the period of Sri Sankara’s life   “Dravida Shishu” matter

Let us look at the ‘Dravida Shishu’ (द्रविड शिशु) matter. Did I not mention that Acharya [Sri Adi Sankara] himself was a Dravida Shishu – a Tamizh child?  In the Malayalam region it is said that when he was a child, he had consumed the ksheera of Ambal and gained the extraordinary poetic talent.

There is a village by name Manicka Mangalam very close to Kaladi.  There is a temple there for Ambal, by the name, Kaathyaayani (कात्यायनी).  It seems Acharya’s father used to go there daily and perform pooja.  He used to offer milk to the deity and then give it to his son.  He used to give it saying “Prasadam (प्रसादम्‌) of Ambal”.  As a child, Acharya used to think that the milk taken by his father as offering was actually consumed by Ambal and a little was left by her for his sake. Once when the father happened to go to another town, Acharya himself took the milk there and offered it to the deity saying, “Amma, please take it”.  Ambal, who had decided to carry out a drama of benevolence (अनुग्रहलीला), accepted the entire milk in a subtle form (सूक्ष्म रूपम्) without leaving any balance! When the child felt sad that there was no balance milk as prasadam, she seems to have showered her grace by giving him her own ksheeram (क्षीरम्).

This is the legend in vogue there.

This is how the explanation for ‘Dravida Shishu’ is mentioned in the popular (प्रसिद्ध) commentaries of ‘Soundarya Lahari’ like ‘Lakshmidhara’ (लक्ष्मीधरा), ‘Saubhagya Vardhani’(सौभाग्य वर्धनी), ‘Arunamodini’ (अरुणमोदिनी), etc.  In ‘Lakshmidhara’, for the word ‘Dravida Shishu’ it is only mentioned ‘the writer of these verses who is a child incarnate of Dravidian descent’.1 In the other two commentaries the story (mentioned above) is narrated elaborately.

Hence, it cannot be said that ‘Acharya’s period is only later to Jnanasambandar; in effect, Acharya’s period is only after 7th century’.

1”dravida – jaati-samudbhava: bala: etat stotra kartaa” [“द्रविड जाती समुद्भव: बाल: एतत् स्‍तोत्र कर्ता”]

____________________________________________________________________
Audio

 

 



Categories: Announcements

1 reply

  1. Excellent drawing as well voice recordings ! The translation is very nice !!
    Periyava sharanam !

Leave a Reply

%d bloggers like this: