Jaya Jaya Sankara Hara Hara Sankara – A very small chapter where Periyava tells us the need to watch out for a few things when analyzing history.
Many Jaya Jaya Sankara to Smt. Sowmya for a cool drawing & audio and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama
ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்
கிறிஸ்து சகாப்த பௌத்த நூலாசிரியர்கள் விஷயம்
அடுத்த பாயிண்டுக்கு வருவோம். திங்நாகருடைய வைபாஸிகம், அஸங்கரின் ஸெளத்ராந்திகம், நாகார்ஜுனரின் சூன்யவாதம் ஆகியவற்றை ஆசார்யாள் கண்டனம் பண்ணியிருப்பதால், கி.பி. இரண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டுக்குள் வந்த பௌத்த ஸித்தாந்திகளுக்குப் பிற்பட்ட காலத்தவர்தான் ஆசார்யாள் என்ற ஆர்க்யுமென்டைப் பார்ப்போம்:
மேற்படி ஸித்தாந்தங்களை ஆசார்யாள் கண்டித்திருப்பது வாஸ்தவந்தான். ஆனால் அவற்றைச் சொன்ன திங்நாகர், அஸங்கர், நாகார்ஜுனர் முதலிய ஸித்தாந்திகளில் எவர் பெயரையுமே ஆசார்யாள் குறிப்பிடவில்லை. இந்த ஸித்தாந்தங்களும் ஸரி, இன்னும் நம் தேசத்திலுள்ள அநேக ஸித்தாந்தங்களும் ஸரி, இப்போது அவை யாரார் பெயரில் ப்ரஸித்தமடைந்திருக்கின்றனவோ அவர்களாலேயேதான் தோற்றுவிக்கப்படவில்லை. அவர்களுக்கும் முந்தி எத்தனையோ காலமாக அந்த ஸித்தாந்தங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் நன்றாக ரூபம் பண்ணி, codify பண்ணி இல்லாமல் ஒரு மாதிரி vague-ஆக இருந்திருக்கும். அப்புறம் அவற்றை இப்போது நாம் தெரிந்து கொண்டுள்ள அந்த ப்ரஸித்தமான ஸித்தாந்திகளே நன்றாக ரூபம் பண்ணி, ஒரு கோட்பாடாக, சாஸ்த்ரமாக ஆக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
அத்வைதமும் ஆசார்யாளுமே இப்படித்தானே? அநாதி காலமாக இருந்தது வந்த அத்வைதத்தைத்தானே ஆசார்யாள் ஒரு கட்டுக்கோப்பான சாஸ்த்ரமாக்கிக் கொடுத்தார்? அவரே அதைத் தோற்றுவிக்கவில்லையே!
__________________________________________________________________
Determining the period of Sri Sankara’s life
Matter relating to Buddhist authors belonging to the Christian era
Let us come to the next point. Let us look at the argument that since Acharya has refuted the philosophies of Tingnaga’s Vaibhashika (वैभाषिक), Asanga’s Sautrantika (सौत्रान्तिक), Nagarjuna’s Sunyavada (शून्यवाद) etc., he should only belong to the period later to that of the above mentioned Buddhist philosophers who lived between 2 and 6 AD.
It is true that Acharya has refuted the above philosophies. However, Acharya has not mentioned the names of any of these philosophers, Tingnaga, Asanga or Nagarjuna.These philosophies as well as many other philosophies in our country which are popularly known after the names of certain personalities, were actually not propounded by them. These philosophies have been there even before them for many years. However, these [the philosophies] would not have been in a proper codified form, but would have existed in a vague manner. Subsequently, these famous philosophers we know now, have given a shape and made it a doctrine and Sastra.
Is this not the case with Advaita philosophy and Acharya also? The Advaita philosophy which was there since time immemorial, was made into a concise one by Acharya isn’t it? He was obviously not the founder of that philosophy!
__________________________________________________________________
Audio
Categories: Uncategorized
Thank you so much. May I make a request? Is it possible to provide a link to the post/s that come just before and after each of these? It will help those who join in in between and who want to study the earlier posts.
Sowmya’s drawing beautifully conveys the idea that acharya parsed through vedas and upanishads and presented us advaitha as a structured philosophy. Thank you.