லௌகிகமாக வெளி அசுத்தியைப் போக்குவதை விட முக்யம், வைதிகமாக அது உள் அசுத்தியையும் போக்குவதே. மற்ற ஜந்துக்கள் விஷயத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு அலம்பித் தள்ள வேண்டியதாக இருக்கிற மலத்தையே அது கோவிடமிருந்து கோமயமாக வருகிறபோது நம்முடைய உள்ளழுக்கைப் போக்கிக் கொள்வதற்காக நாம் உட்கொள்ளும் பஞ்ச கவ்யத்தில் ஒரு வஸ்துவாகச் சேர்க்கும்படி சாஸ்திரத்தில் விதித்திருக்கிறது. ‘பஞ்சகவ்யம்’ என்றால் என்ன? ‘கவ்யம்’ [gavyam] என்றால் கோஸம்பந்தப்பட்டது. அப்படிப்பட்ட ஐந்து சேர்ந்ததே பஞ்சகவ்யம். அதில் மூன்று -– பாலும், பாலிலிருந்து பெறுகிற தயிரும், நெய்யுமாகும். பாக்கி இரண்டு? இங்கேதான் எதிரிடையானவையும் வருகின்றன. கோமயமும், கோமூத்திரமும்தான் அந்தப் பாக்கி இரண்டு. பால், தயிர், நெய், கோமூத்திரம், கோமயம் என்ற ஐந்தையும் கலந்து செய்வது பஞ்ச கவ்யம். க்ஷீரம், ததி, ததா சாஜ்யம், மூத்ரம், கோமயம் ஏவ ச என்று சொல்லியிருக்கிறது. ஒருவருக்கு ஏற்பட்ட விழுப்பு, தீட்டுகளைப் போக்குகிற புண்யாஹவாசன கர்மாவில் ‘பஞ்சகவ்ய ப்ராசனம்’ என்பதாக இந்த ஐந்தையும் சேர்த்த ஒன்றைக் கொடுப்பார்கள். அதை உட்கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Rather than cleaning the external impurities in worldly terms, it is all the more important to cleanse the internal impurities in spiritual terms. The same excreta while coming from other animals happen to be something shunned by us and set us clean them immediately with disgust but when it comes as Ghomayam (cow dung) from a cow, it has been prescribed by the Shastras themselves to be included as one of the products used in the Panchagavyam, which is given to remove our mental impurities. What is “Panchagavyam?” “Gavyam” means that which is related to cows. Five such products are collectively called as “Panchagavyam”. Three among them are milk, the byproduct of milk namely curd and ghee. What about the rest of the two? It is here that the contradictory things appear. Cow dung and cow’s urine are the remaining two. The concoction prepared by mixing milk, curd, ghee, cow’s urine and cow dung is called Panchagavyam. “Ksheeram, Dhathi, Dhathasajyam, Moothram, Ghomayam Yeva Cha”, it has been said. It is customary to give this mixture of five during the ritual of “Punyahavachanam”, a ritual being done to remove one’s impurities like ‘Theettu’ and ‘Vizhuppu’. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
___________________________________________________________________
Jaya Jaya Sankara Hara Hara Sankara – By Sri Periyava Anugraham and all of your support we managed to rescue 56 Gho Mathas/Rishabams/Calves last month. All of them were saved just before they were about to be sold to slaughterhouse or onboard to Kerala. Below are the details. Posting just a couple of pics. The rest of the pictures along with the details can be found in the link HERE
Sri Periyava Thiruvadi Sharanam
Rama Rama
Categories: Uncategorized
🙏