120.10.1. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The flaw in orientalists research with respect to our Sanatana Dharma has been clearly pointed out by Periyava, citing some strong evidences.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for etching an effervescent sketch and audio and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama


ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்

மையக் கேள்வி : மெகஸ்தனிஸ் சொல்லும் ‘ ஸன்ட்ர கோட்டஸ் ‘ யார் ?

வேண்டுமென்று, மனஸறிந்து வெள்ளைக்காரர்கள் நம்முடைய சரித்ர காலங்களை ரொம்பவும் பிற்காலத்துக்கு இழுத்துவிட்டு நமக்குப் புராதனப் பெருமை இல்லாமல் பண்ணியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களையும் ஒரேயடியாகக் குறை சொல்வது ஸரியில்லைதான். அவர்களில் எல்லாருமே பக்ஷபாதிகள் தான் என்று நினைப்பது ந்யாயமில்லை. அதனால், அவர்களுக்கும் தெரியாமலே, உள்நோக்கமில்லாமலே, அவர்கள் ஸரியல்லாத ஒரு ஆதாரத்தை ஸரியென்று நிஜமாக நம்பி அந்த அஸ்திவாரத்தின் மேல் காலக் கணக்குகளை நிர்ணயித்திருக்கிறார்களோ என்று தோன்றும் ஒரு விஷயத்தையும் சொல்கிறேன்.

புராதன இந்திய சரித்ரத்தில் ஸர்வ நிச்சயமாக உறுதிப்படுத்தக்கூடிய தேதி என்று ஒன்றை அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஒன்றை அடிப்படையாக வைத்துத்தான் அதற்கு முன் பின்னாகப் பழைய கால நிகழ்ச்சிகளை நிர்ணயித்திருக்கிறார்கள். ஒரு மாதிரி அதுதான் பழைய சரித்ரத்திற்கே key-யாக இருக்கிறது.

அது என்ன?

அலெக்ஸாண்டருக்கு அடுத்தாற்போல் க்ரீஸில் (கிரேக்க நாட்டில்) ஆட்சிக்கு வந்த அவனுடைய ஸேனாதிபதி ஸெல்யூகஸ் நிகேடார் என்பவன் இந்தியாவின் மேல் படையெடுத்தான். ஆனால், பாடலிபுத்ரத்திலிருந்து ஆட்சி பண்ணிக் கொண்டிருந்த மகதச் சக்கரவர்த்தி ஒருவனிடம் தோற்றுப் போனான். இரண்டு பேரும் ஸமாதான உடன்படிக்கை பண்ணிக் கொண்டார்கள். விவாஹ ஸம்பந்தம் கூடப் பண்ணிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்புறம் அவன் பாடலிபுத்ர ராஜஸபைக்குத் தன்னுடைய அம்பாஸிடராக (அரசாங்க தூதராக) மெகஸ்தனிஸ் என்பவரை அனுப்பி வைத்தான். அந்த மெகஸ்தனிஸ் இந்தியாவில் தான் கண்டதையும் கேட்டதையும் எழுதி வைத்திருக்கிறார். அதுதான் வெள்ளைக்காரர்களுக்கு நம் தேச சரித்ரம் பற்றிக் கிடைத்த முதல் authentic document-ஆக (பூர்ண நம்பிக்கைக்குரிய சாஸனமாக) இருக்கிறது.

அலெக்ஸாண்டர், ஸெல்யூகஸ் நிகேடார், மெகஸ்தனிஸ் முதலியவர்களின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டு என்று அவர்களுக்கு ஸர்வ நிச்சயமாகத் தெரியும். அதனால் மெகஸ்தனிஸ் குறிப்பிடும் பாடலிபுத்ர ராஜாவும் அந்தக் காலம்தான் என்று தீர்மானமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ராஜா யார்?

Sandracottus என்று மெகஸ்தனிஸ் குறிப்பிட்டிருப்பவன்தான்.

இந்த ஸ்ன்ட்ரகோட்டஸ் மௌர்ய வம்சத்தை ஸ்தாபித்துச் சக்ரவர்த்தியாக இருந்த சந்த்ரகுப்தன் என்று வைத்துக் கொண்டே வெள்ளைக்காரர்கள் நம்முடைய பழைய சரித்ர காலங்களை நிர்ணயிருத்திருக்கிறார்கள். தங்களுக்குத் தீர்மானமாகத் தெரிந்த ஸெல்யூகஸ் நிகேடாரின் ஸமகாலத்தவனான சந்த்ரகுப்த மௌர்யன் கி.மு. நான்காம் நூற்றாண்டின் முன் பாதியில் இருந்தவன் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

அதைக் கொண்டே அவனுக்கு முன்னால் அரசாண்ட நந்த வம்சம், அதற்கு முந்தி ஆண்ட சிசுநாக வம்சம் என்றிப்படியும், அவனுக்குப் பின்னால் மௌர்ய வம்சத்தில் வந்த அவனுடைய பிள்ளையான பிந்துஸாரன், பேரனான அசோகர் முதலானவர்கள், மௌர்யர் வம்சத்துக்கு அப்புறம் வந்த சுங்க வம்சம் முதலானவற்றுக்கும் காலம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

இது ஸரிதானா என்பதே கேள்வி. பெரிய கேள்வி!

‘ஸன்ட்ர கோட்டஸ்’ என்று, அதாவது ‘சந்த்ர குப்தன்’ என்று மட்டும் தான் மெகஸ்தனிஸ் சொல்லியிருப்பது; சந்த்ரகுப்த மௌர்யன் என்று அல்ல. அவன் என்ன வம்சம் என்பதைப் பற்றிச் சொல்லவில்லை. அவனுக்கு முன்னால் நந்த வம்சம் ஆட்சியில் இருந்ததென்றோ, அவனுக்குப் பிள்ளை பிந்துஸாரன் என்றோ எதுவும் சொல்லவில்லை. பாடலிபுத்ரத்தை ‘போலிபோத்ரா’ (Polibothra) என்று சொல்லி, அங்கே இருந்து கொண்டு இவன் ஆட்சி செய்ததாகவும் அப்போது அவனுடைய ராஜ்யம் எத்தனை உன்னத ஸ்திதியில் இருந்தது என்பதையும்தான் விவரித்திருக்கிறார்.

அதனால்தான் கேள்வி வருகிறது. மெகஸ்தனிஸ் சொல்லும் ஸன்ட்ரகோட்டஸ் ஏன் மௌர்ய வம்ச சந்த்ரகுப்தனாக இல்லாமல் குப்த வம்சத்து சந்த்ரகுப்தனாக இருக்கக் கூடாது என்பதுதான் கேள்வி. குப்த வம்சமும் இதே பாடலிபுத்ரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்திருக்கிறது. அதிலே இரண்டு சந்த்ரகுப்தர்கள். இரண்டாமவன் தான் சந்த்ரகுப்த விக்ரமாதித்யன் என்று புகழ் பெற்றவன். மெகஸ்தனிஸ் ஏன் இந்த குப்த சந்த்ரகுப்தர்களில் ஒருத்தருடைய ஆட்சியின்போது இருந்திருக்கக் கூடாது?

புராணங்கள், ராஜதரங்கிணி, நேபாளி வம்சாவளி ஆகியவற்றிலிருந்து மகத தேசத்தை ஆண்ட வம்சங்களின் காலத்தை கணித்துப் பார்த்தால் மெகஸ்தனிஸின் காலமான கி.மு. நாலாம் நூற்றாண்டில் சந்த்ரகுப்த மௌர்யன் இருந்தானென்பது ஸரியாக வரவில்லை. இவற்றிலிருந்து நாம் பெறுகிற விவரப்படி மௌர்ய சந்த்ரகுப்தனுடைய காலம் கிட்டத்தட்ட கி.மு. 1500-ஆக இருக்கிறது1. இப்போது ஓரியன்டலிஸ்டுகள் அவன் ஆட்சிக்கு வந்ததாகச் சொல்லும் கி.மு.- 300க்கும் இதற்கும் 1200 வருஷ வித்யாஸம்! ஆசார்யாள் விஷயமாக நாம் சொல்வதற்கும் அவர்கள் சொல்வதற்கும் 1300 வருஷ வித்யாஸம்!

விஷ்ணு புராணத்தில் ஒரு இடத்தில் கலி ஆரம்பத்தில் ஆட்சிக்கு வந்த பரீக்ஷித்துக்கு 1500 வருஷத்துக்கப்புறம் நந்தன் (சந்த்ரகுப்த மௌர்யனுக்கு முன் மகதாதிபதியாயிருந்த மஹாபத்மநந்தன்) பட்டத்துக்கு வந்தானென்று இருக்கிறது2. அதாவது நந்தன் கி.மு. 1600-ல் ஆட்சிக்கு வந்திருக்கிறான். அடுத்தவன் சந்த்ரகுப்தன் என்றால் முன்னே சொன்னதற்குக் கிட்டத்தில்தானே, 3500 வருஷத்துக்கு முற்பட்ட ஸம்பவங்களை கணிக்கும்போது?

இப்படி வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து தெரிய வருவதால் மெகஸ்தனிஸ் சொல்வது மௌர்ய சந்த்ரகுப்தனைத்தான் என்று முடிந்த முடிவாகத் தீர்மானம் பண்ணுவற்கில்லை என்றே தோன்றுகிறது.

அந்த ஸ்ன்ட்ரகோட்டஸ் குப்த வம்சத்தின் இரண்டு சந்த்ரகுப்தர்களில் ஒருத்தனாக இருக்க இடமுண்டு என்றும் தோன்றுகிறது.

ரிஸர்ச்காரர்களின் முடிவுப்படி சந்த்ரகுப்த மௌர்யன் கி.மு. நாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம்; குப்த வம்ச சந்த்ரகுப்தர்களில் முதல்வன் கி.பி. நாலாம் நூற்றாண்டின் முற்பகுதி; இரண்டாமவன் அதே நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்தவன்.

அதாவது அதற்கும் இதற்கும் எழுநூறு எண்ணூறு வருஷ இடைவெளி இருக்கிறது.

இந்த எண்ணூறு வருஷ இடைவெளியிலும் இதே போல அநுமானங்களில் பலருடைய காலம் முன்பின்னாகப் போகக் கூடுமாதலால் எண்ணூறு என்பது ஆயிரமாகக்கூட, அதற்கும் அதிகமாகவும்கூட, ஆகலாம்.

ஆக, குப்த வம்ச சந்த்ரகுப்தனே மெகஸ்தனிஸின் காலத்தவன் என்றால் அதற்கு முற்பட்ட நம்முடைய சரித்ர நிகழ்ச்சிகளெல்லாமே சுமார் ஆயிரம் வருஷம் முந்திப் போய்விடும். நம்மவர் சும்மாவுக்காகப் பழம் பெருமை கொண்டாடிக் கொள்ளவில்லை, வாஸ்தவத்திலேயே வெகு புராதனமான காலத்திலிருந்தே நம் தேசத்தில் நாகரிக ஸமுதாய வாழ்க்கை இருந்துதானிருக்கிறது என்று prove ஆகிவிடும்.

வெள்ளைக்காரர்களிடம் நாம் சண்டைக்குப் போக வேண்டாம். ஸர் வில்லியம் ஜோன்ஸ், வில்ஸன் முதலானவர்கள் மெகஸ்தனிஸ் யாரோ ஒரு சந்த்ரகுப்தனைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரென்று கண்டுபிடித்துச் சொல்லியிருப்பது நாம் ஸரியாக ஆராய்ச்சி பண்ணிப் பார்க்க நிரம்ப உபகாரம் பண்ணும் ஒரு தகவலாகும். அதனால் அவர்களுக்கு நன்றி தான் தெரிவிக்கணும். மேற்கொண்டு அவர்கள் சொல்வதைக் காரணம் கேட்காமல் நம்பிவிடும் அசடுகளாக நாம் இருப்பதுதான் தப்பு. அவர்களை வைய வேண்டாம். ‘நம் தேச ஸமாசாரம் பிறத்தியார் சொல்கிறார்களே! ஸரியாகத் தான், ஸரியான நோக்கங்களோடுதான் சொல்கிறார்களா?’ என்று நாம்தானே ஆலோசிக்க வேண்டும்?

1 நமது பூர்விக நூல்களின்படிக் கலியுகத் தொடக்கத்திலிருந்து மகதத்தை ஆண்ட வம்சங்களின் காலம் பற்றி அறிஞர்கள் தரும் விவரம்:

பார்ஹத்ரத வம்சம்  — 22 அரசர் கி.மு. — 3102 – 2096 (கலியின் முதல் 1006 ஆண்டுகள்)
ப்ரத்யோத வம்சம்     — 5  அரசர் கி.மு. — 2096 – 1958
சிசுநாக வம்சம்          — 10  அரசர் கி.மு. — 1958 – 1598
நந்த வம்சம்                 — 2   அரசர் கி.மு. — 1598 – 1498
மௌர்ய வம்சம்        — 12  அரசர் கி.மு. — 1498 – 1182

மௌர்யகளில் முதல்வனான சந்த்ரகுப்தன் கி.மு. 1498-ல் பட்டத்துக்கு வந்ததையே ஸ்ரீ சரணர்கள் ‘கிட்டத்தட்ட கி.மு. 1500’ என்று கூறியுள்ளார்கள்.

2  யாவத் பரீக்ஷிதோ ஜந்ம யாவந்-நந்தாபிஷேசநம் |
ஏதத் வர்ஷ ஸஹஸ்ரம் து ஜ்ஞேயம் பஞ்ச-சதோத்தரம் || (விஷ்ணு புராணம் IV.24.104)

______________________________________________________________________

Determining the period of Sri Sankara’s life

The main question: Who is the Sandracottus referred to by Megasthenes?

Let us set aside the fact that the westerners had intentionally and consciously brought our historic periods much closer to recent times so as to deprive us of our pride regarding our ancient culture. To say that they were entirely at fault is also not correct.  It is also not right to think that all of them were prejudiced (पक्षपाती).  Let me tell you about a matter which will lead us to think that they might have determined the time period without any ulterior motive, but by believing a wrong evidence as correct, and have based all their calculations on this evidence.

They have reckoned a date in our ancient history as an unambiguous one. Taking that as the basis, they have determined the various historic events as either before or after that date.  In a way, that date serves as a key to ancient history.

What is that?

Seleucus Nicator, the commander of Alexander, who also succeeded the throne after Alexander of Greece invaded India.  But he lost to an emperor of Magada, who was ruling from Pataliputra.  The two of them entered into a peace treaty.  It is also said that they established relations through marriage. Subsequently, he [Nicator] sent a person by name Megasthenes as his ambassador (royal messenger) to the royal court of Pataliputra. Megasthenes has recorded what he heard and saw in India.  His writings are considered by the Westerners as the first authentic document (as the most credible record) about our country’s history.

They knew for certain that Alexander, Seleucus Nicator and Megasthenes belonged to fourth century BC.  Therefore, they have decided that the period of the king of Pataliputra referred by Megasthenes is also the same.

Who is that king?

The one referred to by Megasthenes as Sandracottus.

Simply assuming that this Sandracottus is Chandragupta, the emperor who had established the Mauryan dynasty, Whites have determined our ancient historical dates. They have determined that the period of Chandragupta, the contemporary of Seleucus Nicator, is the first half of 4 BC.

Taking that as the basis, they have determined the time periods of Nanda dynasty which ruled before him, Sisunaaga [शिशुनाग] Dynasty which ruled prior to that, the period of his son Bindusara who succeeded him in the Mauryan dynasty, his grandson Emperor Ashoka, etc. and the Sunga dynasty which rose after the Mauryan dynasty.

The question is whether this is correct and that is a big question!

Megasthenes has only mentioned the name ‘Sandracottus’, that is ‘Chandragupta’; not as Chandragupta Maurya.  He has not indicated which dynasty he belonged to.  He has also not said that Nanda dynasty ruled before him or that his son was Bindusara.  He has only described that he [Chandragupta] ruled from Pataliputra, mentioning it as ‘Polibothra’, and how his kingdom flourished.

That is why this question crops up. Why should the Sandracottus talked about by Megasthenes be the Chandragupta of Maurya dynasty; Why not the Chandragupta of Gupta dynasty. Gupta dynasty had also ruled with the same Pataliputra as its capital. There were two Chandraguptas in that.  Only the second one was famous as Chandragupta Vikramaditya.  Why Megasthenes should not have been there during the regime of one of these Chandraguptas of the Guptas?

Working out the period of all dynasties that ruled Magadha kingdom from the details available in Puranas, Rajatarangini (राज तरङ्गिणी), Nepali chronicle, etc., the conclusion that Chandragupta Maurya lived during 4 BC – the time period of Megasthenes – does not seem to match.  Based on the details from these, the period of Chandragupta of the Mauryas, works out to approximately 1500 BC1. The Orientalists claim 300 BC as the period he ascended the throne; There is a difference of 1200 years between the two claims!  Incidentally, the difference between what we say and they claim in the matter of Acharya’s time period is also 1300 years!

There is a mention in Vishnu Purana that 1500 years after Manu’s rule which started at the beginning of Kali, one Nandan (Mahapadmanandan, the King of Magadha before Chandragupta Maurya) had ascended the throne2.  That is, Nandan began his reign in 1600 BC.  If the next king was Chandragupta, is his time period not near about what was said earlier, that too when we are estimating events that have taken place 3500 years back?

As we gather such proofs from various sources, it transpires that it cannot be said conclusively that Megasthenes was referring only to the Chandragupta of Maurya dynasty.

There is a possibility that the Sandracottus could have been one of the two Chandraguptas of the Gupta dynasty.

As per the conclusions of researchers, Chandragupta Maurya belonged to the starting period of 4th century BC; Among the Chandraguptas of the Gupta dynasty, the first one belonged to first half of 4th century AD; the second belonged to the later part of the same century and first part of 5th century AD.

That is, there is a gap of seven hundred to eight hundred years between that and this.

Even within these eight hundred years, the time period of personalities may get pushed back or pushed forward, making this difference of eight hundred into a thousand or even more.

Thus, if Chandragupta of Gupta dynasty was the contemporary of Megasthenes, the events of our history that have taken place before that would get advanced by about thousand years.  It will be proved that our people do not boast about being ancient without any basis, and our country indeed had an advanced civilisation since very ancient times.

We need not get into arguments with the Whites.  The fact that Sir William Jones, Wilson, etc. found out that Megasthenes has talked about some Chandragupta is itself an important information which has greatly helped us conduct a research on this topic.  Hence, we should only thank them.  The only wrong thing is to be foolish enough to believe whatever they say without ascertaining the reasons. We need not abuse them.  Shouldn’t we at least contemplate “someone else is talking about matters pertaining to our country; are they saying the right thing with the right intention.”

1 Details given by scholars as per our ancient books, the period of dynasties which ruled Magada, since the beginning of kali:

Baarhadratha dynasty [बार्हद्रथ वंश] ​- 22 kings 3102-2096 BC (the first 1006 years from the beginning of Kali)

Pradyota dynasty [प्रद्योत वंश]​ – 5 kings 2096-1958 BC

Sisunaaga dynasty [शिशुनाग वंश]​​ – 10 kings 1958-1598 BC

Nanda dynasty ​​-   2 kings 1598-1498 BC

Maurya dynasty​​ – 12 kings 1498-1192 BC

The fact that Chandragupta, the first of Mauryas, had come to the throne in 1498 BC has been mentioned by Sri Charana as ‘approximately 1500 BC’,


2
 Yaavat pareekshito janma yaavan-nandaabhishechanam |

Etat varsha sahasram tu jneyam pancha-satottaram || (Vishnu Purana IV.24.104)

यावत् परीक्षितो जन्म यावन्-नन्द्भिषेचनम् । एतत् वर्ष सहस्रं तु ज्ञेयं पञ्चशतोत्तरम्।। (विष्णु पुराणम् IV.24.104)

_________________________________________________________________
Audio

 



Categories: Uncategorized

1 reply

  1. What a detailed research and introspection by Maha Periva our our history! Goose bumping!

Leave a Reply

%d bloggers like this: