Answer to Periyava Quiz – The Solution

கறிகாய்த் தோல் மாதிரியே சாதம் வடித்த கஞ்சியும் பசுவுக்கு ஆஹாரமானதால் அதையும் சேகரித்துப் பசுக்களுக்குச் சேர்க்கலாம். ஆனால், இப்போது பெரும்பாலான வீடுகளில் குக்கர் சமையல் வழக்கம் வந்து விட்டது. அப்படியில்லாத இடங்களில் இந்தக் கைங்கர்யமும் செய்யலாம். அரிசியை ஜலம் விட்டு அலம்புகிற கழுநீர் என்கிற கழிவு நீருங்கூடப் பசுவுக்கான ஆஹாரம்தான். அதுவும் பசு வயிற்றுக்குப் போகும்படிச் செய்யலாம். செய்ய வேண்டும். வீட்டுத் தோட்டங்களில் ஒரு சின்ன திட்டில் பசுவுக்கென்றே அகத்திக் கீரை பயிரிடுவது என்று ஏற்பட்டுவிட்டால் அதுவும் கோ வதை நின்று கோரக்ஷணம் நடப்பதற்குக் கணிசமான உபகாரம் செய்ததாகும். அகத்திக் கீரையைப் பசு பரம ப்ரீதியோடு சாப்பிடும்.

பகவான் வாஸுதேவனின் வயிற்றுக்கே போடுவதாக நினைத்து இப்படியெல்லாம் எந்த முறையிலேனும் நாம் ஒவ்வொருவரும் பசுக்களை அவச்யம் ரக்ஷிக்க வேண்டும். அந்த உணர்ச்சி வந்துவிட்டால், சிரமமே ஏற்பட்டாலும் அது சிரமமாகத் தெரியாது. மனமிருந்தால் வழியுண்டு. இந்த விஷயத்தில் நிச்சயமாக மனம் இருந்தேயாக வேண்டும். அப்போது வழியும் தானே பிறக்கும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Just as Vegetable peels, the extra water collected while cooking rice in a pot, (Kanji in Tamizh) is also consumed by the cow and so it can be collected and given to the cows. But then the habit of cooking in pressure cooker has come in most of the households. So this could be done in houses where cooking is done in the old fashion. The water used to wash the rice called Kazhuneer (in Tamizh) is also a good cow feed. We can make arrangements for it to be given to the cows. We ought to make it happen indeed. In the garden of every house, a small patch of land has to be maintained to grow Agathi Keerai (sesbania grandiflora, a type of spinach) and if this becomes regular, it would contribute a lot in stopping cow slaughter and developing protection of cows. Cows consume the Agathi Keerai with a great zeal.

Considering it that feeding cows is like feeding Lord Vasudevan Himself, each one of us should definitely protect the cows by some means or the other. If such an attitude sets in, no difficulty, even if there are any, will appear as troublesome. Where there is a will there is a way. As far as this issue is concerned there should definitely be a “will” by all means. Then a way will be found automatically. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
______________________________________________________________________
Jaya Jaya Sankara Hara Hara Sankara,

Here is the answer to the quiz I posted few days back (HERE and HERE) and the solution to end the deadly plastic menace for Gho Mathas. I’m not saying anything new but re-iterating what Sri Periyava said.

Watch the video clip below which is the solution for this problem. Thanks to Bharath for helping make this video. 

Doing it or not is pretty much in our hands. As Periyava says in the above quote, all is in our mind and the will to execute it. Apart from what Periyava said in #1 based on my experience have added a couple of more points. Below are the options.

1. Collect vegetables waste from our home and our community and feed your roadside neighborhood cows daily. This may be a bit tough to implement in the current circumstances.

2. Strike a deal with your local vegetable vendor and buy low cost vegetables in bulk everyday. Talk him about the noble cause it will be used for and convince him to sell it at a very less margin. Tomato, Carrot, Chayote (Chow Chow), Cabbage, Bananas, etc. can be got low cost which will be very much liked by the cows.

3. If you are abroad or not in a position to do either of the above please send in your contributions and we will feed the roadside cows eating plastics/ trash as much as possible.

By Periyava Anugraham, this kainkaryam is happening in Sholinganallur (the place I live), Pammal, Medavakkam, and Selaiyur where there are hardly any grazing lands for cows. Below are a few pictures, myself and a few kind volunteers in the respective areas are doing this daily. I’m sure many of the folks reading this post are living in various parts of the City or other metropolitan cities. I request you all to consider doing this very noble kainkaryam daily. As always, Consistency is the key. We may or may not be able to change the world but can change ourselves in the path prescribed by Periyava right?

Sri Periyava Thiruvadi Sharanam
Rama Rama

முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்ய வேண்டிய தர்மங்களை எண்-நான்கு — அதாவது முப்பத்திரண்டு -– அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன? ஒரு கோவுக்கு உடம்பிலே அரிக்கிறது. நமக்கு எங்கே அரித்தாலும் நாம் கையை வளைத்துச் சொறிந்து கொள்கிறோம். கோவோ பின்னங்காலைக் கொண்டுதான் சொறிந்து கொள்வது. அப்போது சில இடங்களில் அரித்தால் அதற்கு ஸரியாக சொறிந்து கொள்ள வராது. அந்த மாதிரி ஏற்படும்போது அது அரிப்பெடுக்கிற பாகத்தை நேரே வைத்துத் தேய்த்துச் சொறிந்து கொள்வதற்கு வாகாகக் கல்லை நட்டு வைப்பதுதான் ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’. ஆங்காங்கே இந்த மாதிரி நட்டு வைத்தார்கள். அந்த வழியில் போகிற மாடுகள் அவற்றில் சொறிந்து கொண்டு தினவு தீர்ந்தன. இப்படிச் சின்ன விஷயங்களைக்கூடப் பரம தர்மமாக நினைத்து கோவுக்குச் செய்த தேசத்தில் நாம் அதை எலும்பும் கூடுமாக்குகிறோம், வதையாவதற்கு விடுகிறோம் என்றால் அது நமக்குப் பெரிய அபக்யாதி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

I’ll quote an example which stands as a proof to show how people in olden days showered affection on the cows and protected them. It’s been mentioned that there are thirty two Dharmas which all beings born as humans ought to perform. Sometimes these thirty two are doubled and considered as sixty four. One among them has been mentioned as “Aatheendu Kutri Nirivudhal”. What is it? Imagine a cow has an itching in some part of its body. When we have an itching somewhere in our body, we can bend and use our hands to scratch that part and get relieved of itching. But the cow can scratch itself only by its hind legs. When there is an itching in some part of the body which cannot be accessed by its rear legs, it wouldn’t be able to scratch itself. It is to install stones at various places in order to help the cow in such circumstances is what is called ‘Aatheendu Kutri Niruvudhal’, which the cow could rub its body against and get relief from itching. Such stones were installed for this purpose those days. The cows which were going that way scratched themselves on the stones and got relieved of their itching. Like this in a country which considered even small deeds as these as a great Dharma and performed them for the sake of the cows, we are letting the cows starve and go malnourished and are sending them to slaughter houses and what a huge disgrace it is on our part! – Jagadguru Chandrasekharendra Saraswathy SwamigalCategories: Uncategorized

2 replies

 1. I use to do this kainkaryam till my age of 70 collecting excess vegetables ,fruits, kazhuneer (water used for washing rice) daily அகத்திக் கீரை ஓர் அருகம்புல் கட்டு, வாழைத்தோல் etc to cows in the morning hours .
  Sri Periyava many times insisted this to couple who don’t have children.
  Me used to advise the same to childlss couples and they did with good result !
  பசு மாட்டுக்கு தீனி கொடுத்தால் அது வீன் போகாது ! அவள் காம தேனு அல்லவா?
  எப்படி கற்பக வ்ருக்ஷம் நாம் வேறில்.ஊற்றும் நீரை தலை வழியாக இளநீர் , காய் தருகிறதோ அதுபோல் காம தேனுவான பசு நமக்குக்.கை மேல் பலன் கொடுக்கிறது !
  பால், தயிர், வெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் நமக்குக். கிடைக்கக பசுவன்றி யார் உதவுவார் !
  சிறந்த போஸ்ட் !
  கோ மாதா நம்.குலமாதா !!

 2. Excellent, message. Shri Periyava Charanam.

Leave a Reply

%d bloggers like this: