Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this small chapter Sri Periyava emphasizes the need for us to look into the various authentic sources, research and come to a logical conclusion rather than dismissing our Puranas as myth.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for the contextual sketch and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama
ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்
நமது சரித்ர ஆதார நூல்கள்
ஜெனரலாகக் கொஞ்சம் சொல்கிறேன். நம் ராஜ வம்சங்களின் காலங்களைப் புராணங்களில் கொடுத்திருக்கிறது. அது தவிர ஸுமார் ஆயிரம் வருஷம் முந்தி கல்ஹணர் என்ற கவி காஷ்மீர ராஜ வம்சத்தைப் பற்றி ஆதியோடந்தம் விசாரித்து, கர்ண பரம்பரையாக வந்த தகவலையெல்லாமும் சேர்த்து “ராஜ தரங்கிணி” என்று புஸ்தகம் எழுதியிருக்கிறார். (‘கர்ண பரம்பரை’ என்றவுடனேயே ‘கதை’ என்று தூக்கிப் போட்டு விடக்கூடாது. ஆதாரமில்லாமல் இப்படி வழிவழி வந்திருக்குமா என்று ஆராய்ந்து பார்த்து, மற்ற ஆதாரங்களோடு ஸரி பார்த்தால் அதில் ஏற்கத்தக்கதாக நிறைய இருக்கும்.) ஒரு ராஜா என்றால் பிற ராஜாக்களோடு யுத்தம் செய்வது, விவாஹ ஸம்பந்தம் வைத்துக் கொள்வது என்றெல்லாம் வரத்தானே வரும்? அதனால் காஷ்மீர வம்சாவளியை சொல்லிக் கொண்டு போகும் ‘தரங்கிணி’ அந்தந்தக் காலங்களில் இந்தியாவில் இருந்து வந்து இதர ராஜாக்களையும் பற்றித் தெரிவித்து விடுகிறது. அநேக இடங்களில் இதில் இருப்பதும் புராணங்களில் சொல்லியிருப்பதும் ஒத்துப் போய்விடுகின்றன.
நேபாளத்தில் ஆதியிலிருந்து ஆட்சி நடத்தியவர்களைப் பற்றி வரிசைவாரியாகக் காலம் சொல்லி ராஜ வம்சாவளி என்று இருக்கிறது. ‘Chronicle of Nepal’ என்று இங்கிலீஷில் சொல்கிறார்கள். பண்டிட் பகவான் லால் இந்த்ராஜி என்பவர் ஒரு புத்த பிக்ஷுவிடமிருந்து இந்த வம்சாவளியைப் பெற்று ப்ரகாசப்படுத்தியிருக்கிறார். மஹாபாரத காலத்திலிருந்து அதில் ராஜாக்களின் பெயர்களும் காலங்களும் கொடுத்திருக்கிறது. அதிலிருந்தும் நம் சரித்ர புருஷர்களின் காலத்தைப் பற்றி அறிய முடிகிறது. புராணம் முதலான மற்ற source-களிலிருந்து நாம் பெறும் தகவல்களில் பல இதோடு ஆச்சர்யமாக ஒத்துப் போகிறது.
லங்கையில் ‘மஹாவம்சம்’ என்று ஒரு புஸ்தகம். குறைந்தபக்ஷம் 1500 வருஷத்துக்கு முற்பட்டது. அந்த தேசத்தில் பௌத்த மதத்தின் வரலாறு என்ன என்று அது தெரிவிக்கிறது. ஹிந்து புஸ்தகங்களைவிட பௌத்தப் புஸ்தகங்களுக்கு ஸத்யத்வம் ஜாஸ்தி என்று காட்டுவது ரிஸர்ச்காரர்களின் வழக்கம். அதனால் அவர்களும் மஹா வம்சத்தைப் பெரும்பாலும் நம்பலாமென்கிறார்கள்.
ராஜாவின் ஆதரவு அல்லது அநாதரவிலேயே மதவளர்ச்சி அல்லது நலிவு ஏற்பட்டிருப்பதால் ‘மஹா வம்சம்’ ராஜ வம்சங்களைப் பற்றியும் தெரிவித்து விடுகிறது. ஆதியில் இந்தியாவினாலேயே லங்கையின் ஸமய கலாசாரம், அரசியல் வாழ்வு எல்லாம் ஏற்பட்டு, அப்புறமும் சண்டை — ஸ்நேஹிதம் என்று இரண்டு விதத்திலும் இந்த இரண்டு நாடுகளும் ஸம்பந்தப்பட்டிருந்திருப்பதால் இதிலேயும் நம்முடைய தேசத்தவர்களைப் பற்றிய கால விவரங்கள் வருகின்றன.
புராணங்கள், வடக்கே ஒரு கோடியில் காஷ்மீரத்தின் ராஜ தரங்கிணி, இன்னொரு கோடியில் நேபாளி வம்சாவளி, தென்கோடியில் லங்கையின் மஹாவம்சம் என்று எல்லாவற்றையும் அவை எங்கே ஒத்துப் போகின்றன என்று பார்த்து, அப்படிப்பட்டவற்றையாவது நாமும் ஒப்புக் கொள்வது என்று வந்தால் நன்றாயிருக்கும். இப்படிப் பல இருக்கவே செய்கின்றன.
நாம் சொல்வது History-யே இல்லை. வெறும் story-தான் என்று சொல்பவர்களும் நிஜமான History-ஐத்தான் சொல்லியிருப்பார்கள் என்று அப்படியே நம்பாமல் இதையும் அதையும் சேர்த்து அலசிப் பார்க்கலாம்.
_____________________________________________________________________
Determining the period of Sri Sankara’s life
Our historical books of evidence
Let me say a few things in general. The time period of our royal lineages have been mentioned in the Puranas. Apart from this, about thousand years back a poet by name Kalhana [कल्हण] has researched from beginning to end about the royal families of Kashmir and after adding other details passed on over generations by word of mouth (Karna Paramparai), has written a book called “Raja Tarangini” (राज तरङ्गिणी). (When I say ‘by word of mouth’, it should not be immediately dismissed as ‘fiction’. If it is examined as to how these details could have come down over generations if there is no basis, and if these are verified with other evidences, there will be many things which will be acceptable). For any king, wouldn’t wars with other kings, marriage alliances with other royal families, etc. indeed happen? Therefore ‘Tarangini’, when describing the lineage of Kashmir, also talks of other kings of India who were ruling during those times. Many instances mentioned in this book match with those stated in the Puranas.
There is a record on the royal lineage of Nepal, which sequentially describes the rulers right from the beginning, along with a mention of the period of their rule. In English it is known as ‘Chronicle of Nepal’. A person by name Pandit Bhagawan Lal Indraji has obtained this chronicle from a Buddhist monk and published it. Names of the kings and their period – right from the time of Mahabharata – is given in that. We are able to learn about our historical personalities from this too. A lot of information that we get from other sources like Puranas, etc. match with the above to an astonishing level.
There is a book called, ‘Mahavamsam’ in Lanka. It is at least 1500 years old. It narrates the history of Buddhism in that country. It is the wont of researchers to show that the credibility of Buddhist texts is higher than that of Hindu texts. Thus, they also agree that Mahavamsam can be relied upon.
Since the growth of a religion or its decline has always depended on the patronage extended or denied by kings, Mahavamsam also talks about Royal lineages [of those times]. Since the early days Lanka’s religious culture and political life has depended on the events that happened in India; further, these two countries have been interlinked by wars and friendships; thus, in this book also, details regarding our country men are provided.
It would be nice if the Puranas, Raja Tarangini from the northern corner, Chronicle of Nepal from the other corner and Lanka’s Mahavamsam from the southern corner are studied together, the common features analysed, and accepted. There are indeed so many things like this in common.
Some claim what we say is not history but only fiction and what they say is history; we need not entirely believe what they say; we only need to study and analyse both without any pre-conceived notions.
_____________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
Leave a Reply