Beautiful poems on Mahaperiyava by Pollachi Sri Senthilkumar

Thanks to Smt Jayalakshmi for the share.

Sri Senthil Kumar is gifted with Tamil poetry and he seems to have penned lots of poems on Mahaperiyava. I have few of his beautiful poems…

He used to run a small business, which got affected by current COVID situation. In order to keep moving, he has recently started making some cut-outs on Hindu gods and gurus. I have added some photos. Pl contact him for your needs and support him at this difficult times.

Mahaperiyava Padham Sharanam!

Poem 1

சங்கரம் லோக சங்கரம்*
என் கருவறை தொடங்கி
நான்கல்லறை அடங்கி
முடிவுறும் நாள்வரை…
சங்கரனை நான் தொழுவேன்!

எத்தனை அழகு
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனைத் தொழுவேன்!

காணவும் களிக்கவும்
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய்த் தொழுவேன்!

கேட்கவும் கிறங்கவும்
கேட்டதை உணரவும்
ஒலி புரியச் செவி தந்த
வலியோனைத் தொழுவேன்!

சாப்பிடவும் கூப்பிடவும்
சண்டையின்றிப் பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழுவேன்!

சுவாசிக்கும் நாசியாகவும்
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழுவேன்!

கையும் காலும்
கச்சித உடலும்
வாகாய்த் தந்த
வல்லோனைத் தொழுவேன்!

முடிந்த இரவை முழுமையாக்கி
விடியும் முன்பு தொழுவேன்…
புதிய பூவாய்ப் பூரிப்போடு
மதிய நேரம் தொழுவேன்…

மாலை மகுடம் காத்திருக்கு
மாலை வேளையும் தொழுவேன் …
மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழுவேன்…

இன்று நன்றாய் முற்றுப்பெற
இரவு நேரம் தொழுவேன்!
காலநேரம் கடக்குமுன்
கவனமாகத் தொழுவேன்!

கடமையுணர்ந்து தொழுவேன்!
கற்பித்தவாறு
கவனமுடன் தொழுவேன்!

உறுதியாகத் தொழுவேன்!
உபரியையும் தொழுவேன்!
என் உடல் கிடத்தி ௭ன்னை(சடலத்தை)
ஊர் தொழு முன்
உயிரோடும் நான் தொழுவேன்
இறந்து போன பின்னும்
என் சங்கரனை நான் தொழுவேன்……
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!

Poem 2

மாயா உடம்பெடுத்து மண்ணுக்கிரை ஆகாமல் மாயாண்டி ஈசனுக்கு தொண்டு செய்வது எக்காலம்.
ஓயாமல் பொய்யுரைத்து உன் பக்தனாய் வாழாமல் சீரார் பெருந்துறையை சேருவது எக்காலம்.
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி வாடாமல் கண்ணார கண்டு உன்னை கைதொழுவது எக்காலம்.
பண்ணோடும் பாட்டோடும் பலபேரை புகழாமல் உன்னோடு நான் சேர்ந்து ஒன்றாவது எக்காலம்.

எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம்.
எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம்.

மாயா உடம்பெடுத்து மண்ணுக்கிரை ஆகாமல் மாயாண்டி ஈசனுக்கு தொண்டு செய்வது எக்காலம்.
ஓயாமல் பொய்யுரைத்து உன் பக்தனாய் வாழாமல் சீரார் பெருந்துறையை சேருவது எக்காலம்.
மண்மூடி போகும் இந்த மாய உடம்புக்குள்ளே கண்மூடி அற்புதங்கள் கொண்டிருப்பது எக்காலம்.
சிறுமதி சொல் கேட்டு சித்தம் கலங்காமல் குருவடியை தெரிந்து கூடுவதும் எக்காலம்.
பூதப்புலன்கள் கெட்டு போகும்முன்னே உந்தன் பாதம் கீழிருந்து பாடுவதும் எக்காலம்.
வேதாந்தம் சித்தாந்தம் வித்தகங்கள் பேசாமல் நாதாந்தா உன்கீழே நானிருப்பது எக்காலம் நானிருப்பது எக்காலம்.

எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம்.
எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம்.

வஞ்ச நஞ்ச நஞ்சியரின் கண்ணொளியில் வீழாமல் அஞ்செழுத்தை சொல்லி சொல்லி அழுவதும் எக்காலம்.
மோனதவமிருந்து மெல்ல மெல்ல வீடேறி ஞான தரிசனத்தை நான் பெறுவது எக்காலம்.
பித்தனைப்போலே திரிந்து பந்தபாசம் விட்டெறிந்து சித்தாதி சித்தர்களை சிந்தை செய்வது எக்காலம்.
பேசா அணுகூடி பெற்றவரை தேடி தேடி தாசானு தாசனுக்கு தொண்டு செய்வது எக்காலம்.

எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம்.
எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம்.

ஆசாபாசங்களால் மயக்கம் கொள்ளாமல் ஈசா உன் பொன்னடியை போற்றுவது எக்காலம்.
ஓடுவிட்டு புளியம்பழம் போல வீடு விட்டுவிட்டு கூடுவிட்டு கூடுபாய்ந்து நானிருப்பது எக்காலம்.
மென்பொருள் ஆசையென்னும் புதைகுழி வீழாமல் பொன்னார் திருவடியை போற்றுவது எக்காலம்.
காலபாசம் வந்து கூட்டிக்கொண்டு போகாமல் மூலக்கனல் எழுப்பி முக்தி கொள்வது எக்காலம் சிவனே எக்காலம்.

எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம்.
எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம்.

மாயா உடம்பெடுத்து மண்ணுக்கிரை ஆகாமல் மாயாண்டி ஈசனுக்கு தொண்டு செய்வது எக்காலம்.
ஓயாமல் பொய்யுரைத்து உன் பக்தனாய் வாழாமல் சீரார் பெருந்துறையை சேருவது எக்காலம்.
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி வாடாமல் கண்ணார கண்டு உன்னை கைதொழுவது எக்காலம்.
பண்ணோடும் பாட்டோடும் பலபேரை புகழாமல் உன்னோடு நான் சேர்ந்து ஒன்றாவது எக்காலம்.

எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம்.
எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம்.
எக்காலம் சிவனே எக்காலம் உன்னோடு நான் சேர்வது எக்காலம்.
எக்காலம் சிவனே எக்காலம் இந்த ஜீவன் சிவமாவது எக்காலம்.

எக்காலம் சங்கரா எக்காலம்.
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!

Poem 3

கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய்? வினை தீர்த்தவனே!
எங்கள் சங்கரனே!!!!

எம்பெருமானே உனக்கு பூசை செய்யும் நேரத்தில் கை ஒன்று செய்து கொண்டிருக்கிறது , விழி ஒரு காட்சியை கண்டு கொண்டு இருக்கிறது.வஞ்சகத்தையே பேசும் நாவோ வேறு ஒன்றை பேசிகொண்டிருக்கிறது.துர்நாற்றம் வீசும் புலால் வேறு பரிசத்தை உணர்ந்து கொண்டிருக்கிறது , செவியும் புற விஷயங்களில் ஆர்வம் காட்டி அதைக் கேட்க விரும்புகிறது. இவ்வாறு ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தாமல் நான் செய்யும் பூசையை
நீ எவ்வாறு ஏற்பாய் இரு வினைகளையும் தீர்க்கும் ஆண்டவனே எங்கள் தயாபரா சங்கரா தாயுமானவனே!!!
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!

Categories: Announcements, Bookshelf

5 replies

  1. Very sorry…Was misguided about the poems.

  2. மூன்றாவது கவிதை பட்டினத்தார் எழுதியது

  3. இரண்டாவது கவிதை அவர் எழுதவில்லை .ராம் ஷங்கர் என்பவர் எழுதியது …சிலர் எழுதியதை தான் எழுதியது போல போடும் வழக்கம் உண்டு அவருக்கு
    .https://ltposts.info/title/kpumh8CAqJ-136g/m-y-u-ampe-uttu-maayaa-udambedutthu

  4. The First Poem , i read in the rhytham of Mahaperiyavaa Akshara Paamalai, This is excellent, will reach soon to the devotees as MP3, or a video

  5. Contact details of Mr. Senthil Kumar, Pollachi
    Mobile: 87787 25358 / 63836 71473

    whatsapp:number 75981 49277

Leave a Reply

%d bloggers like this: