120.8. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

 Jaya Jaya Sankara Hara Hara Sankara – Loss of faith in our own scriptures has been sighted as one of the key reason in determining the time period of Bhagawathpadhal laments Sri Periyava.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a nice drawing and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama


ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்
 

கலியுகத்தில் நமது காலக் கணக்குகள்

முன்னேயே சொன்னாற்போல பூர்வ யுகங்களின் ஸமாசாரத்தை விட்டுவிடுவோம். கலியுகத்தில் வந்த ராஜ வம்சங்களைப் பற்றி முழு விவரமும் புராணங்களில் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு ராஜாவையும் பேர் சொல்லி இத்தனை வருஷம் ஜீவித்தான் என்றும் வரிசையாகச் சொல்லியிருக்கிறது. இதில் நம்ப முடியாததாக எதுவும் இல்லை.

விஸ்தாரமான இந்த தேசத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த காலங்களிலே எழுதப்பட்டதால் ஒவ்வொரு ப்ரதேசத்தில் எழுதியவர்கள் இன்னொரு ப்ரதேசத்தைப்பற்றிச் சொல்லும்போது சில தவறுகள் நேர்ந்திருக்கும். அதனால் புஸ்தகங்களுக்கிடையில் ஒன்றுக்கொன்று முரணாகவும் தகவல்கள் இருக்கும்தான். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுக் கொண்டு deep -ஆக comparative study பண்ணினால் நிச்சயம் ஏகோபித்த முடிவுகளுக்கு வரமுடியும். அப்படிப் பண்ணப் பொறுமையில்லை. அடிப்படையில் உண்மை என்ற நம்பிக்கையே போய்விட்டபின் என்ன பண்ணுவது?

தினமும் ‘ஸங்கல்பம்’ என்று எந்த வைதிக கார்யத்திலும் செய்து வருகிறோம். என்றைக்கு இந்த பழக்கம் ஆரம்பித்தது என்றே சொல்ல முடியாதபடி அத்தனை பூர்வகாலத்திலிருந்து இந்த பரந்த தேசத்தின் அத்தனை இடங்களிலும் அன்றன்றும் இப்படி ‘ஸங்கல்பம்’ சொல்லி வருகிறோம், அதிலே ப்ரம்மாவின் வயஸிலிருந்து ஆரம்பித்து, கலியுகத்துக்கு வந்து, நடப்பு வருஷம்-மாஸம்-திதிவரை ஒவ்வொரு நாளாகக் கூட்டிச் சொல்லி வந்திருக்கிறோம். இதிலே இந்த வருஷத்தை1 கலியுகப்படி 5064 என்றே காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமரி வரை வித்யாஸமில்லாமல் சொல்கிறோம். நம்பமாட்டேன் என்றால் எப்படி?

ஆசார்யாள் கால விஷயமாக சிவரஹஸ்ய இதிஹாஸத்தில் “ஸஹஸ்ர த்வியாத்-பரம்” என்று சொல்லியிருக்கிறது அப்படியென்றால் ‘கலியில் இரண்டாயிரம் வருஷத்துக்கு அப்புறம்‘ என்று அர்த்தம். ‘அப்புறம்’ கரெக்டாக எந்த வருஷமென்று சொல்லவில்லை’. நாமெல்லாம் போட்டு மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டுமென்றே இப்படிச் சொல்லி விட்டுவிட்டாற் போலிருக்கிறது! எப்படியும் கலியில் மூவாயிரம் வருஷத்துக்கு முந்தித்தான் அவதாரம் என்று இதிலிருந்து ஆகிறது.

பவிஷ்யோத்ர புராணத்தில் “கல்யாதௌ த்விஸஹஸ்ராந்தே” என்று இருக்கிறது. ‘கலியில் இரண்டாவது ஆயிரத்தின் முடிவுப் பகுதியில் என்று அர்த்தம்.

வேறு பல புராணங்கள், (சங்கர) மடங்களைச் சேர்ந்த புஸ்தகங்கள்-குருபரம்பரைகள்-சாஸனங்கள் முதலானதுகள், இதர ஆதாரங்கள் கர்ண பரம்பரையாக வந்துள்ள நம்பிக்கை ஆகியவற்றிலிருந்து நாங்கள் ஆசார்யாளின் காலம் கலியில் 2593லிருந்து 2625வரை என்று கருதி வருகிறோம். கலியின் இரண்டாவது ஆயிரம் வருஷங்களில் அறுநூறு வருஷத்துக்கு முன்னும் பின்னுமாக இது இருப்பதால் இதை “முடிவுப் பகுதியில்” என்று பவிஷ்யோத்தர புராணம் சொல்லியிருக்கலாம். கலி 2593-2625 என்பது கி.மு. 509-477 ஆகிறது.
____________
1 1963

_____________________________________________________________________ 

Our calculation of time in Kaliyuga

As mentioned earlier, let us leave out the matters pertaining to previous eons (yugas). The Puranas contain the details of all royal lineages of Kali Yuga. In a chronological order, the name of each king is given along with how many years he lived.  There is nothing to disbelieve in this.

Our country being very large, these details were written during bygone times when transport facilities were minimal; hence, some mistakes could have occurred when a person of one region wrote about another region.  Thus, there will indeed be some contradictions in the information given in these books.  However, if all of them are taken together and a deep comparative study is undertaken, it is possible to arrive at unanimous conclusions. People have no patience to do that.  When belief in the basic truth is lost, what can be done?

Everyday, when we commence a religious task, we do a ‘Sankalpam’ (सङ्कल्पम्). Since ancient times we have been reciting this ‘Sankalpam’ every day in all the places in this vast country, with no way of ascertaining from when this convention started.  While reciting this, we start from the age of Brahma, come up to the count of Kaliyuga, then to the current year-month-tithi [तिथि], adding one day at a time. In this manner, as per Kali Yuga this year1 is being referred to as 5064 right from Kashmir to Kanyakumari without any variation.  How can one say that he won’t believe in this?

In the context of Acharya’s life period, the Sivarahasya Ithihasa [शिवरहस्य इतिहास] mentions it as ‘sahasra dviyaat-param’ [‘सहस्र द्वियात्-परम्’].  It means ‘after two thousand years in Kali’.  The exact year has not been mentioned!  Seems that it has been left that way to make us all break our heads!  Anyway, it can be concluded from this that the incarnation happened in Kali [कलि], and about 3000 years back.

The Bhavishyottara Purana mentions “kalyaadou dvisahasraante” [कल्यादौ द्विसहस्रान्ते].  It means ‘at the end of the second thousand years of Kali’.

Based on many other Puranas, books belonging to (Sankara) Matams, Guru Paramparas, inscriptions, other evidences and the belief passed on across generations (Karna Paramparai), we are of the opinion that Acharya’s life period was from 2593 to 2625 of Kali. In the second thousand years of Kali this period falls just before and after the sixth century; hence Bhavishyottara Purana could have mentioned it as ‘end period’.  Kali 2593 to 2625 works out to be 509-477 BC.
_________________ 

1 1963
_____________________________________________________________________Categories: Deivathin Kural

Tags: ,

2 replies

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

  2. 🕉Hara Hara Sankara Jaya Jaya Sankara! Kanchi Sankara Kamakoti Sankara!!!🙏🙏🙏🕉

Leave a Reply

%d bloggers like this: