120.7.2. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

 

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The ulterior and deceitful motives of British on destroying our Dharma has been explained by Sri Periyava in this chapter.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a fitting sketch and audio and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama


ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்

மேல்நாட்டவரின் பரிஹாஸமும் உள்நோக்கமும்

அது மட்டுமில்லை. உள்நோக்கம் என்றேனே, அதற்கு வருகிறேன். உறைக்குள் கத்தியை மறைத்து வைத்திருப்பது போல அவர்கள் ரஹஸ்யமாகப் போட்டு வந்த இன்னொரு திட்டத்துக்கு நம்முடைய புராதன கலாசாரத்தை ஒப்புக் கொள்வது இடைஞ்சலாயிருந்தது. அரசியல் ரீதியில் நம்மைத் தங்களுடைய ஆட்சிக்குள் கொண்டு வருவது மாத்திரம் அவர்களுடைய லக்ஷ்யமாயிருக்கவில்லை. நம் ஸமுதாயம் முழுவதையும் தங்களுடைய மதத்துக்குத் திருப்பிவிட வேண்டுமென்பதே அவர்களுடைய ரஹஸ்ய உத்தேசம். மறைந்து போயிருந்த நம்முடைய சாஸ்திரங்கள் வெளிவர நமக்கே உபகாரம் செய்தவர்கள் என்று அவர்களில் பலரைச் சொல்கிறோமல்லவா? அவர்களிலேயே சிலருடைய ஜீவ்ய சரித்ரம், அவர்கள் நடத்திய கடிதப் போக்குவரத்து முதலியவற்றைப் பார்த்தால் நமக்கு தூக்கிவாரிப் போடும்! ஹிந்துக்களோடு விச்வாஸமாகப் போகிற மாதரிப் போயே அவர்களை வளைத்துப் பிடித்து அவர்களுடைய ஸ்வ மதாபிமானம் போகும்படிச் செய்து அவர்களைத் தங்கள் மதத்திற்கு இழுத்துவிட வேண்டும் என்று அவர்கள் ப்ளான் போட்டிருந்தது இவற்றைப் பார்க்கும்போது தெரியும். வெளியிலே மிஷினரிகள் பஹிரங்கமாகச் செய்தது குறைச்சல். உள்ளூரக் குழிபறித்ததுதான் ஜாஸ்தி. வெளியிலே ‘அவரவருக்கும் மத ஸ்வதந்த்ரம் உண்டு. ஹிந்து சாஸ்த்ர விஷயங்களில் தலையிட மாட்டோம்’ என்று விக்டோரியா ப்ரகடனத்திலிருந்து ஆரம்பித்துச் சொல்லி வந்தார்கள். ஆறாயிரம் மைலுக்கு அப்புறத்திலிருந்து கொண்டு கோடிக் கணக்கான ஜனங்களை ஆளும் போது ஜாக்ரதையாகத்தானே இருக்க வேண்டும்? அதனால் வெளியில் நேர்மை மாதிரிப் பண்ணிக் கொண்டே உள்ளூர ஹிந்துக்களைத் தங்கள் மதத்திற்கு இழுக்க எல்லா ஸாமர்த்யமும் பண்ணினார்கள். ‘நம் மதத்திற்கு வராவிட்டால்கூடப் பரவாயில்லை. ஸொந்த மதத்தை இவர்கள் விட்டுவிடும்படிப் பண்ணிவிட்டால் போதும்’ என்ற ரீதியில் கார்யங்கள் செய்யலானார்கள். அதாவது ஹிந்துக்களுக்கு ஹிந்து மதத்தில் கௌரவ புத்திபோகும்படிப் பண்ணுவதைப் பல விதத்திலும் முயற்சி செய்தார்கள்.

பூர்வத்தில் எல்லாத் துறையிலும் இந்தியாவே முன்னேறியிருந்தது என்றேன். அது வாஸ்தவம். அதிலும் இந்தியா மிகவும் விசேஷமாக முன்னேறியிருந்தது — ஆத்ம ஸம்பந்தமான ஸமய சாஸ்த்ரத்திலும் அநுஷ்டானங்களிலுமேயாகும். வாழ்க்கையின் ஸகல அம்சங்களிலும், கலாசாரத்தின் அத்தனை இழைகளிலும் ஸமயமே ஊறியிருக்கும்படியாக இங்கே ஏற்பட்டிருந்தது. எதைத் எடுத்தாலும் அது ஆத்மாபிவ்ருத்திக்குக் கொண்டு விடுவதாகவே ரிஷிகளாலும், அப்புறம் வந்த பெரியவர்களாலும் அமைக்கப்பட்டிருந்தது. இப்படி மதவுணர்ச்சியையே மையமாகக் கொண்டு, மற்ற எல்லாப் பூர்விக ஸிவிலிலேஷன்களும் அழிந்த பின்னும் தான் மட்டும் அழியாமல் ஹிந்து நாகரிகம் இருந்து வந்திருக்கும்போது இங்கே போய்ப் புதிய மதம் ஒன்றைப் புகுத்துவது என்றால் அதற்கு எவ்வளவோ தந்திரமும் தகிடுதத்தமும் பண்ணத்தானே வேண்டியிருக்கும்?

அதில் ஒன்றுதான்- (இன்னம் எத்தனையோ இருக்கின்றன. முக்யமாக ஆர்யன் – த்ராவிடன் என்று ஒரு தாய் வயிற்றுக் குழந்தையாக இருந்தவர்களை பேதம் பண்ணியது. ஆனால் அதிலெல்லாம் இப்போது ப்ரவேசிக்க வேண்டாம். நமக்கு அவச்யமான அம்சத்தை மட்டும் பார்க்கலாம்.) — ஹிஸ்ட்ரி, ரிஸர்ச் என்று சொல்லிக் கொண்டே நம்முடைய மிகப் பழைய காலத்தை முடிந்த மட்டும் கிறிஸ்து சகாப்தத்துக்கு எவ்வளவு கிட்டே கொண்டு வரமுடியுமோ அப்படிக் கொண்டுவந்து விடுவது! ‘நம்முடையது ரொம்பவும் தொன்மையானது’ என்பதில் ஒரு பெரிய ஸைகலாஜிகல் நிறைவு இருக்கிறதென்று சொன்னேனல்லவா? ‘ஹிந்துக்களுக்கு அந்த நிறைவு இல்லாமல் பண்ணிவிட வேண்டும்’ என்று நினைத்தார்கள். நினைப்பைக் கார்யமாகச் செய்து கொள்ள அவர்களுக்குக் கிடைத்த ஒரு முக்யமான உபாயம் பௌத்த மதம்.

பௌத்தம் தற்காலத்தில் கிறிஸ்துவ மதத்துக்கு அடுத்த பெரிய மதமாகக் கிழக்காசிய நாடுகளில் ஜப்பான் வரை பரவியிருப்பதையும், ஆனால் அதன் பிறந்த வீடான இந்தியாவில் அதற்கு இடமில்லாமலிருப்பதையும் பார்த்தார்கள். அதே ஸமயத்தில் புத்தரின் அன்புள்ளம், த்யாகம் முதலியவற்றால் ஹிந்துக்களுக்கு அவரிடம் ஒரு ரெஸ்பெக்ட் இருப்பதையும் அவரை தசாவதாரத்தில் ஒன்றாகவே சேர்ந்திருப்பதையும் கவனித்தார்கள். நம்முடைய ஹிந்து மதாபிமானத்தைக் குலைப்பதற்கு இதை நன்றாக ப்ரயோஜனம் செய்து கொள்ளலாமென்று ப்ளான் போட்டார்கள். நம் ஜன ஸமூஹத்துக்குப் பரிசயமில்லாத கிறிஸ்துவைக் காட்டுவதற்கு முந்தி, பரிசயமுள்ள புத்தரைக் காட்டியே நம் சாஸ்திராபிமானத்தை நலியப் பண்ண ஆரம்பிக்கலாமென்று நினைத்தார்கள். ‘எப்படியும் பௌத்த மதத்தில் இவர்களை மதமாற்றம் செய்வதற்கு அந்த மதத்தில் விசேஷமாக ஸ்தாபனம் எதுவும் இல்லை. ஆகையால் புத்தரை நாம் விசேஷித்துச் சொல்வதால் அந்த மதத்திற்கு யாரும் போய்விடமாட்டார்கள். இது நமக்கு ஸெளகர்யமாயிற்று. இவர்கள் அவதாரமாகச் சொல்பவரே வைதிக கர்மாக்கள், வர்ண தர்மம் முதலியவற்றை ஆக்ஷேபித்திருப்பதை எடுத்துக் காட்டியே ஹிந்து மதவுணர்ச்சியை நலிவிக்கலாம். கிறிஸ்து சகாப்தத்துக்கு அப்புறம்தான் இந்தியாவில் பெரிய நாகரிகம் உண்டாயிற்று என்று காட்டாமல் அதற்குக் கொஞ்சம் முந்தி புத்தரின் இன்ஃப்ளுயென்ஸால், அவரையொட்டித்தான் இண்டியன் ஹிஸ்டரியே ரூபமாக ஆரம்பித்ததென்று காட்டலாம். பாரத கலாசாரத்துக்கே முக்யமாக இருக்கப்பட்ட முதல் பெரியவர் அவர்தான் என்று காட்டலாம். “ராமன், க்ருஷ்ணன் எல்லாம் கதாபாத்ரங்கள் தான்; அவர்கள் சரித்ர பூர்வமாக இருந்ததாகச் சொல்வதற்கில்லை; புத்தர்தான் சரித்ராதாரப்படியே இருந்தவர்” என்று காட்டலாம். ‘அத்வைதமா, மாயா டாக்ட்ரினா (மாயைக் கொள்கையா) — அவை பௌத்தத்திலிருந்துதான் வந்தன; சயனக் கோலத்தில் விஷ்ணு மூர்த்தியா, அது புத்தரின் மஹா பரிநிர்வாண சில்பத்திலிருந்துதான் வந்தது’ என்றிப்படி எதை எடுத்தாலும் பௌத்தத்திலிருந்துதான் ஹிந்து மதத்திலுள்ள உசந்த அம்சங்களெல்லாம் வந்திருக்கின்றன என்று காட்டி விடுவோம்.

‘எல்லாவற்றுக்கும் அடிப்படையிலேயே Dravidian Culture (த்ராவிடக் கலாசாரம்) என்று பேதமாக ஒன்றைப் பிரித்துச் சொல்லி அதிலிருந்தே வைதிக மதம் அநேக அம்சங்களை இரவல் வாங்கினதாகக் காட்டலாம்; மிஞ்சியதில் பல பௌத்தத்திலிருந்து கடன் வாங்கினதாகக் காட்டலாம் — ரொம்ப நைஸாக, எந்த ப்ரெஜுடிஸும் இல்லாமல் உள்ளது உள்ளபடி ஆராய்கிறாற்போலவே இப்படியெல்லாம் காட்டலாம். அப்படிப் பண்ணி இந்தியர்களுடைய ஹிந்து மதாபினமானத்தை உளுத்துப்போகப் பண்ணலாம். அப்புறம் நம் மிஷனரி இருக்கவே இருக்கிறது, நம்முடைய மதத்தில் இவர்களைத் தள்ளிக் கொள்ள’ என்று நினைத்தார்கள்.

இந்தவிதமான எண்ணங்களோடுதான் அவர்கள் ஹிஸ்டரி எழுதியது. ‘அநாதி என்று ஹிந்துக்கள் கொண்டாடும் வேதமே புத்தருக்கு ஆயிரம், ஆயிரத்தைநூறு வருஷத்துக்கு முந்தி ஏற்பட்டதுதான். அந்த வேதம்தான் ஹிந்து நாகரிகத்தின் அஸ்திவாரம் என்பதும் தப்பு. அதற்கும் சில நூற்றாண்டு முன்னால் வேறே ஹாரப்பா நாகரிகமென்று ஒன்று இருந்தது. அது த்ராவிட நாகரிகமாக இருந்தாலும் இருந்திருக்கலாம். அந்த ஜனங்களை அடக்கி ஒடுக்கி விரட்டிவிட்டு, ஆனாலும் அவர்களுடைய நாகரிகத்திலிருந்தே பல விஷயங்களை எடுத்துக் கொண்டு தான் வேத நாகரிகம் என்று ஏற்படுத்தினார்கள்’என்று ஹிஸ்டரியை ஆரம்பித்து மேலே படிப்படியாய் இதே மாதிரியான ‘கைங்கர்யங்கள்’ பண்ணிக் கொண்டு போயிருக்கிறார்கள்!

நம்முடைய பிள்ளைகளுக்குக் குழந்தைப் பருவத்திலேயே இந்த சரித்ர பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதால் அதுவே ஸத்தியம் என்று மனஸில் பதிந்து விடுகிறது. பெரியவர்களான பின்னும் அந்த நம்பிக்கை போவதில்லை. நம் சாஸ்த்ரங்கள் யாவும் அறிவுக்குப் பொருந்தாதவை, ஸூபர்ஸ்டிஷன் என்ற எண்ணம் நன்றாகப் பரப்பப்பட்டு எல்லார் மூளையையும் ஆக்ரமித்துக் கொண்டிருப்பதால் அவற்றில் கொடுத்திருக்கும் சரித்ர விஷயங்களில் நமக்கே நம்பிக்கையில்லை. நம்முடைய புராணங்களில் விவரமாக வம்சாவளிகள் கொடுத்து, ஒவ்வொருவரும் இவ்வளவு வருஷம் என்றும் சொல்லியிருப்பது அத்தனையும் கல்பனைதான் என்று தள்ளியே விடுகிறார்கள். அவற்றை நம்பிக் கொண்டிருக்கும் சாஸ்திரஜ்ஞர்களும் ஒன்று, வறட்டு மூடநம்பிக்கைக்காரர்கள் அல்லது அசட்டு முத்தண்ணாக்கள் என்றே வர்ணிக்கபபட்டு, அந்த வர்ணனை இளம் தலைமுறையினரின் மனஸில் வேரூன்றி இருப்பதால் இவர்கள் என்ன எடுத்துச் சொன்னாலும் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் ‘எங்கள் ப்ரொஃபஸர்கள், டாக்டர்கள் சொல்கிறதுதான் அதாரிடி’ என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஒரு ஸூபர்ஸ்டிஷன்தான்! ‘எதைக் கொண்டு புராணத்தைத் தப்பென்று ரிஸர்ச்காரர்கள் சொல்கிறார்கள்? அவர்கள் எது எதைக் கொண்டு இப்படி இப்படி என்று கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள்? இதற்கு வேறேயாகச் சொல்ல ஆதாரமேயில்லையா?’ என்றெல்லாம் யோசித்துப் பார்ப்பதில்லை. நவீனப் படிப்பாளிகள் எதைச் சொன்னாலும் அப்படியே அங்கீகரிப்பது, பூர்வகால அபிப்ராயத்தை அப்படியே திரஸ்கரிப்பது என்று இருக்கிறார்கள்.
______________________________________________________________________

Determination of Life time of Sri Sankara

Ridicule and inner motive of Westerners

Not only that. Let me come to what I mentioned as inner the motive. Like a knife hidden within the case, accepting our culture as ancient was an impediment to a plan they were secretly hatching. Bringing us under their governance was not their only objective.  Their secret mission was to convert our entire population to their religion.  Don’t we say that some of them had helped to bring to light our own Sastras which had disappeared?  If we see the biographies of these people and the letters written and exchanged by them, it is shocking!  When we have a look at these, it will become apparent how they had planned to gain the trust of the Hindus, make them lose their pride in their religion and drag them into their [Westerner’s] religion. What missionaries did by external activities was very less.  The pit they had dug discreetly was deeper.  Beginning with the Victoria declaration, outwardly they kept saying ‘each one had a right to his own religion, we will not interfere in the matters of Hindu Sastras’. Since they were ruling crores of people sitting six thousand miles away, they had to be guarded isn’t it?  Therefore, while appearing to be honest, they were discreetly resorting to all sorts of tricks to pull Hindus into their religious fold.  They went about doing things in such a manner where the thought was ‘even if the Hindus do not take up our religion, it would be enough if they can be made to forsake their own religion’. In effect, they tried out many tactics to make Hindus lose their pride in their religion.

I had mentioned that in the olden days India was very developed on all fronts.  It is a fact.  In particular, India was very much advanced in religious Sastras and practices related to atma [आत्मा – the inner self]. Every aspect of life and every thread of our civilization was steeped in religion.  The Rishis and the great people who came subsequently had prearranged things in such a way that whatever the matter, it would lead to elevation of the self [आत्माभिवृद्धि].  Considering the fact that religion was the central point for everything and the fact that Hindu civilisation alone had survived even after many of the other ancient civilisations had vanished, will it not require lot of cunning strategies and mischief if one has to introduce a new religion in such a country?

One of these was – (There are so many others – dividing people who were like off-springs of the same mother into Aryans and Dravidians. We shall not get into all that now.  We will look only into that aspect which is relevant to us.) – their attempt to bring our ancient record as close as possible to the Christian era, in the name of history, its research, etc! Did I not mention that there is a psychological contentment in our claim ‘Ours is very ancient’?  Their thought was ‘Hindus should be made to lose that contentment’. To achieve this, they used Buddhism as an effective tool.

They observed, that next to Christianity, Buddhism was the major religion that had spread to the East Asian Nations right up to Japan, but had hardly any presence in India – its place of birth.  At the same time, they also observed that because of Buddha’s emphasis on love and his sacrifice, Hindus had respect for him and had even included him as one of the ten incarnations [दशावतार].  They made a good plan to use this to destroy the Hindu pride.  They thought of weakening our pride in our Sastras by first showing Buddha, who the people were familiar with, before introducing Christ, who the people were not familiar with.  Their thoughts were on these lines: ‘There is no establishment in Buddhism for converting these people to that religion. So, even if we highlight Buddha, no one is going to move over to that religion.  This is very convenient for us.  We can weaken the Hindu religion by highlighting the fact that the same person who they consider an incarnation, has condemned Vedic Karmas, Varnashrama dharma, etc. Without stating that a great civilization had emerged in India only after the beginning of the Christian era, we can show that Indian history started taking shape a little before that, only on account of the influence of Buddha and also after his time.  We can highlight that he was the first among the great people of Indian culture.  We can say that ‘Rama and Krishna were only characters in stories; they cannot be considered as historical people; as per historical proof available, only Buddha has actually lived’. We can say that even Advaita or Maya doctrine came only from Buddhism; Vishnu in a reclining posture came from the Parinirvana sculpture of Buddha; On the whole, we will present everything that is considered as great aspects of Hinduism, as having originated only from Buddhism.

We can bring forth a division by stating that the Dravidian culture is basically different and that the Vedic religion has borrowed from many of its aspects; the remaining can be shown to have been borrowed from Buddhism – we can do all this smoothly under the guise of conducting research without any prejudice. By doing these we can weaken the affection the Hindu has for his religion. Anyway, our own missionaries are always there to herd these people into our religion’.

They wrote [our] history only with these intentions.  They started the narrative thus: ‘The Vedas celebrated by Hindus as without a beginning, have originated only about a thousand or thousand five hundred years before Buddha.  It is wrong to say that the Vedas are the foundation of the Hindu civilization. A few centuries before that, there was a different civilization called Harappa Civilisation.  That could have been a Dravidian civilization.  Vedic civilization was started by subjugating and driving those people away, but adopting several aspects of their civilization’! – and continued to proceed further with similar ‘services’.

Since we teach our children this history at a very tender age, it gets ingrained in their minds as the truth. That belief does not go away even after they grow up.  Since the view that our Sastras do not conform to reason and are based on superstitions is overwhelming in the minds of all of us, we ourselves do not have faith in the historic facts given in them.  People simply reject the details given in our Puranas about the different generations and the number of years for each of them as figment of imagination.  Since the people having faith in the Sastras [शास्त्रज्ञ] are considered superstitious or stupid country folks, that description so is deep rooted in the minds of the younger generation that they do not even attempt to listen to what is being said;  “Whatever our professors and Doctors say is the authority” is their belief.  This is also a kind of superstition!  They do not analyse ‘On what basis are these researchers saying that the Puranas are wrong?  How have they determined the period [of occurrence] of various events?  Is there no proof at all to show that things could be different?’ They blindly endorse whatever is said by the modern educated people and reject outright the view of the olden days.
___________________________________________________________________
Audio

 



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. JAYA JAYA SANKARA
    HARA HARA SANKARA
    🙏🙏🙏

Leave a Reply

%d bloggers like this: