120.7.1. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

Jaya Jaya Sankara Hara Hara Sankara – How the westerners and the orientalists try their best to tamper with our Bhagawadpadhal’s timeline along with the reasons has been explained clearly by Periyava.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a slick drawing and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama


ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்

மேல்நாட்டவரின் பரிஹாஸமும் உள்நோக்கமும்

இப்படிக் காரணங்கள் காட்டிக் கால நிர்ணயம் பண்ணி நம்முடைய கணக்கைப் பரிஹாஸம் பண்ணுகிறார்கள்.

Old is gold என்று பழசையே கொண்டாடுவது நமக்கு வழக்கம். பூர்விகமாகப் போகப்போக ஒன்றுக்கு உயர்வு ஜாஸ்தி, தெய்விகம் ஜாஸ்தி, அதாரிடி ஜாஸ்தி என்று நமக்கு ஸூபர்ஸ்டிஷன் (மூடநம்பிக்கை). அதனால் மநுஷ்ய ஜீவ உற்பத்தியே ஏற்பட்டிருக்க முடியாத எத்தனையோ லக்ஷம், கோடி வருஷத்துக்கு முந்தியே மநு இருந்தார். மாந்தாதா இருந்தார் என்று கதை பண்ணுகிறோம். க்ருதயுகம் கிட்டதட்ட 18 லக்ஷம் வருஷம் (17,28,000), த்ரேதாயுகம் அதில் முக்கால் (12,96,000 வருஷம்) த்வாபரம் பாதி (8,64,000) வருஷம், கலி கால் (4,32,000 வருஷம்) என்றெல்லாம் சொல்லி க்ருத யுகத்திலிருந்து ராஜவம்சங்கள் சொல்வதாக லிஸ்ட் கொடுத்து, அந்தக் காலத்தில் பல நூறு, பல ஆயிரம் வருஷம் ஜீவித்து ஆட்சி நடத்தியவர்களும் உண்டு என்று ஒரே புரளியாகப் பண்ணி வருகிறோம். இப்படி ஏதோ 43 லக்ஷம் வருஷம் முந்தி க்ருதயுகம் ஆரம்பித்ததோடு மட்டும் நிறுத்தாமல், இதற்கும் முன்னாடி எத்தனையோ சதுர்யுக ஸைகிள்கள், மன்வந்தரம் கல்பம் என்றெல்லாம் லக்ஷத்திலிருந்து கோடிக்கணக்கான வருஷங்களுக்குத் தாண்டிப் புளுகு மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிறோம். அந்த ரீதியில் வருவதுதான் நாம் traditional ஆகச் சொல்லிவருகிற ஆசார்யாள் காலம் — என்று இவ்வாறாக (கி.மு. 509-477 என்ற) நம்முடைய அபிப்ராயத்தைத் தப்பு என்று சொல்லிப் பரிஹாஸம் செய்கிறார்கள்.

த்ரேதாயுக, க்ருதயுக விஷயங்கள் இங்கே ஸம்பந்தமில்லை. கலியில் கிட்டத்தட்ட 2600 வருஷமான போதே ஆசார்யாள் அவதாரம் என்று நாம் சொல்வதால் பூர்வ யுக, மன்வந்தரச் சண்டைக்குப் போக வேண்டாம். இப்படிச் சொன்னதால் நமக்கு அந்த விஷயமாகப் பாயிண்ட் இல்லை என்று அர்த்தமில்லை.

அவர்களுடைய (மேல் நாட்டினருடைய) ஸிவிலிஸேஷன் (நாகரிக வாழ்வு) தோன்றியது சில ஆயிரம் வருஷம் முந்திதான். அதிலும் அது முன்னேறியது 2000 வருஷத்திற்கு முன்வந்த கிறிஸ்துவுக்கு அப்புறந்தான். இன்று நவநாகரிகம் என்பதன் உச்சியிலிருக்கிற இங்கிலீஷ்காரர்கள், ஜெர்மனிக்காரர்கள் முதலியவர்களெல்லாம் 1500 வருஷம் முந்திக்கூட pirate என்று கப்பல்களைக் தாக்கி அழிக்கும் கூட்டம் முதலியனவாக இருந்து அப்புறம்தான் இங்க்லாண்ட், ஜெர்மனி ஆகிய இடங்களில் ‘ஸெட்டில்’ ஆகி ஸமுதாய வாழ்க்கை என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பாஷைகள் ரூபமானதும் அதற்கப்புறம்தான்.

அவர்களை மட்டம் தட்டுவதற்காகச் சொல்லவில்லை. [சிரித்து] யாரையும் மட்டம் தட்டிப் பேசுவதுதான் எல்லாவற்றையும் விட மட்டம்! தற்பெருமை அடித்துக் கொள்வதும் மட்டம்தான், அஹங்காரம்தான். ஆனால் நம்மை அவர்கள் தாக்கிக் கேலி பண்ணும்போது ஏன் அப்படிப் பண்ணுகிறார்களென்று பார்க்க வேண்டியதாகத்தானே இருக்கிறது? அந்த ரீதியில்தான் சொல்வது. 1500 வருஷத்துக்குள் இலக்கியம், அரசாட்சி, வியாபாரம், ஸயன்ஸ், ஹைஜீன் என்று எல்லாவற்றிலும் அவர்கள் எப்படி அதிசயமான அபிவ்ருத்தி கண்டிருக்கிறார்கள் என்பதைப் புகழ்ந்து பாராட்டவும்தான் வேண்டும். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் எப்படி விடாமுயற்சியுடன் அடிவரையில் போய் ஆராய்கிறார்கள் என்பதையும் போற்றிச் சொல்ல வேண்டும். நஷ்டப்பட்டுப்போன நம்முடைய அநேக சாஸ்த்ரங்களை, எங்கெங்கேயோ ஏட்டுச் சுவடிகளில் அரிபட்டுப்போய்க் கொண்டிருக்கும் போது தேடிக் தேடிக் கண்டுபிடித்துப் பெரிசு பெரிசாக Index, Concordance என்றெல்லாம் அவர்கள்தான் புஸ்தகம் போட்டு ரக்ஷித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு நாம் அவர்களிடம் எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உழைப்பு, ‘பங்க்சுவாலிடி’ போன்ற பல விஷயங்களில் நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

ஆனாலும் அவர்களுடைய கண்ணோட்டத்திலுள்ள சில தப்பான போக்குகளையும் சொல்லாமலிருக்க முடியவில்லை — குறிப்பாக நம்மை அவர்கள் தாக்க வரும்போது. Offensive -ல் போகாமல் (நாம் அவர்கள் மேல் முதல் தாக்குதலில் இறங்காமல்) defensive -ல் (நம்மை அவர்கள் தாக்கும் போது நம் தற்காப்புக்கான எதிரடியாக) தான் சொல்வது.

அவர்கள் (ஓரியன்டலிஸ்டுகள்) சொல்வதில் மூலாதாரக் கோளாறு மனோதத்வ ரீதியிலானது. அதோடு ஒரு உள்நோக்கமும் உண்டு.

என்னதான் ‘ஸயன்டிஃபிக் ரிஸர்ச்’, அது, இது என்று அப்படியே நடுநிலை தப்பாமல் சொல்வதாகச் சொல்லிக் கொண்டாலும் மநுஷர்களாகப் பிறந்தவர்களை ‘ஸைகலாஜிகல்’ அபிமானங்கள் விடுவதே இல்லை. நம்மூரிலேயே ப்ரத்யக்ஷமாய் பார்க்கிறோம்: ‘மூட நம்பிக்கைகளைக் குழி தோண்டிப் புதைக்கவேதான் நாங்கள் வந்திருக்கிறோமாக்கும்’ என்று சொல்லிக் கொண்டு பகுத்தறிவு வாதிகள் என்றே ஒரு கட்சியாகப் புறப்பட்டிருப்பவர்களைப் பார்க்கிறோம். சாஸ்த்ர, புராணங்களை இவர்கள் பகுத்தறிவினால் ஆராய்ந்தே ஏகமாகக் கண்டனமும் கேலியும் செய்கிறார்கள். ஆனால் வெள்ளைக்காரன் வார்த்தையை நம்பிக் கொண்டு தங்களுடைய தனி இனம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிற இனம் என்றும், தாய் பாஷை என்றும் வந்துவிட்டால் இவர்களுடையை பகுத்தறிவு போன இடம் தெரிவதில்லை! ஜாதியிலே உசத்தி சொல்கிறவர்களென்று சில பேரைத் திட்டிக் கொண்டே, ‘எங்கள் இனத்தைப் போல உசத்தி எதுவுமே கிடையாது’ என்றும் இவர்கள் சொல்வது எப்படிப் பகுத்தறிவு என்று புரியவில்லை! தங்கள் பாஷையை விடவோ அதற்கு ஸமதையாகவோ எதுவுமே எங்கேயுமே கிடையாது, தங்களுடைய பண்பாட்டைவிடப் புராதனமாகவோ, அதற்குக் கிட்டே வரக்கூடிய லாயக்கோ உள்ளதாக எதுவுமே கிடையாது என்று ஒரே பிடிவாதமாகச் சாதிக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது சாஸ்த்ரஜ்ஞர்களைவிட இவர்களுக்குத்தான் ஜாஸ்தி ஸூபர்ஸ்டிஷன் என்று நினைக்க வேண்டிருக்கிறது. எந்த பாஷையில், எந்தப் பண்பாட்டில் உயர்வாக எது இருந்தாலும், ‘அதெல்லாம் எங்களிடம் இரவல் வாங்கியது தான்’ என்கிறார்கள். வாஸ்தவத்தில் கொடுக்கல் – வாங்கல் பரிவர்த்தனையில் கொஞ்சங்கூட குறுகிய நோக்கமோ, தயக்கமோ இல்லாமல் நல்லதுகளை எல்லாம் அன்போடு வரவேற்றுத் தனதாக்கிக் கொண்டிருப்பதில் முதலாவதாக நிற்பது தமிழ் பாஷையும் பண்பாடும்தான். ஆனாலும் ‘நாங்கள் பகுத்தறிவாளர்கள்’ என்று சொல்லிக் கொண்டே, நடுநிலைமையில் பார்க்காமல், தாங்கள் கொடுக்கல் மட்டுமே செய்தவர்கள், வாங்கலே கிடையாது என்கிறார்கள்! ‘தன் இனம்’ என்று ஒன்றை நினைத்துவிட்டால் அதில் இப்படி அறிவுவாதங்களை மீறிய அபிமானம் ஏற்பட்டு விடுகிறது!

‘ஸயன்டிஃபிக் ரிஸர்ச்’ என்று புறப்பட்ட ஓரியன்டலிஸ்ட்களையும் இந்த அபிமானம் விடவில்லைதான்! இன்றைக்குத் தாங்கள் மேல் கையாக ஓங்கியும், இந்தியா கீழ்க் கையாகத் தங்களிடம் தாழ்ந்தும் இருந்தாலும்1, ஆதியில் தங்களுக்கு நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் இந்தியா மஹத்தான கலாசாரத்துடன் விளங்கியிருக்கிறது என்பதை அவர்களால் ஏற்று ஜீர்ணித்துக் கொள்ள முடிவதில்லை!

அவர்கள் தற்காலத்தில் பார்த்த ஹிந்து ஸமுதாயத்தில் பல குறைகள் இருப்பதாக நினைத்தார்கள். அவர்களுடைய நவீன ஸயன்ஸ் அறிவு இங்கே இல்லை; அவர்கள் சொல்லிக் கொடுத்துத்தான் இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அவர்களைப்போல ஸுகாதாரமாயில்லாமல் ஏராளமான ஜனங்கள் ஒரே அசுசியான சூழ்நிலையில் வ்யாதியும் வக்கையுமாகச் சிறு வயதிலேயே செத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களிடமுள்ள ஸமத்வம் இங்கே இல்லாமல், ஜாதி, கிளை ஜாதி என்று ஒரேயடியாகப் பிரித்துப் பிரித்து வைத்து, ஜாதியே இல்லாத பஞ்சமர் என்று வேறு ஒரு பெரிய கூட்டத்தை ஒதுக்கி வைத்திருந்ததும் அவர்களுக்குப் புரியவில்லை. நம்மில் கல்வியறிவு, ஸுகாதாரம் முதலியவற்றில் முன்னேறியுள்ள ஜாதிக்காரர்களுக்கும் அவர்களுடைய ஸயன்ஸுக்கு ஒத்துவராத சாஸ்த்ரக் கொள்கைகளையும், கார்யங்களையும் பின்பற்றி வருவதும் அவர்களுக்கு ஏற்கவில்லை.

இதையெல்லாம் பார்த்து இந்த தேசமே ரொம்ப backward (பின் தங்கியது) என்று சொல்லி, “உங்களுக்கெல்லாம் அறிவுச் சுடர் கொளுத்துகிறோம். எங்கள் மாதிரி உங்களையும் முன்னேற்றுகிறோம்” என்று ஆரம்பித்தார்கள்.

நவீன ஸயன்ஸ் கிறு கிறுவென்று அவர்களுடைய நாடுகளில் தோன்றி அபிவ்ருத்தி அடைந்த காலத்தில் நம் தேசம் துருக்கர் ஆட்சியில் இருந்து, கொஞ்சங்கூட முன்னேறாமல், நம்முடைய பழைய ஸயன்ஸுகளையும் மறந்துவிட்டது. இப்போது அவர்களுடைய ஸயன்ஸ் ஸாதனை நம்மவர்களுக்கு ப்ரமிப்பு உண்டாக்கிற்று. அதைப் பார்த்து, அவர்கள் காலடியில் விழுந்து அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தோம்.

தங்கள் காலடியில் வந்து விழுந்து தங்களையே வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்ளும் இதே ஹிந்துக்கள்தான் மிகப் புராதனமான காலத்திலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முந்தி வரை ஸகல துறைகளிலும் முன்னேறி லோகத்துக்கே வழிகாட்டியாயிருந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ள அவர்களுடைய ஸ்வயாபிமானம் விடவில்லை!

1 இந்தியா சுதந்திரம் பெறுமுன் கூறியது.

__________________________________________________________________________________________

Determination of Life time of Sri Sankara

Ridicule and inner motive of Westerners

By quoting these reasons and deciding on the period [of Sri Adi Sankara] they are making fun of our calculations.

They ridicule us for many things like: It is our habit to extol the antique, saying old is gold. We have a superstition that anything that is old is more honorable, more divine and has more authority. We have spun stories, claiming that Manu [मनु] and Maandhata [मान्धाता] were there several lakh years earlier – when human life would not have been created at all.  They say that we are speaking blatant lies by saying that Krita Yuga (कृतयुग) consisted of nearly 18 lakh years (17,28,000 years), Treta Yuga (त्रेतायुग) was 3/4th of that (12,96,000 years), Dwapara (द्वापर) was half (8,64,000 years), Kali Yuga (कलियुग) was one quarter (4,32,000 years), etc. and providing a list of royal dynasties starting from Krita Yuga, claiming that there were people who lived and ruled for several hundreds and thousand of years.  Not stopping with saying that Krita Yuga started about 43 lakh years back, we have also been piling up lies by speaking about several Chaturyuga cycles (चतुर्युग) prior to Krita yuga, Manvantaram (मन्वन्तर), Kalpam (कल्पम्) etc. the total time going back by several crores of years’. They mock saying that life period that we have traditionally ascribed to Acharya (509-477 BC) falls under this category.

The matters relating to Treta Yuga, Krita Yuga are not relevant here. Since we say that the incarnation of Acharya was about 2600 years after the birth of Kaliyuga, we need not join issues regarding previous Yugas, Manvantarams, etc.  Saying this does not mean that we do not have a point on that matter.

Their civilisation started merely a few thousand years ago.  Further, it developed only after the birth of Christ – about 2000 years ago.  The English, Germans, etc. who are at the top of today’s modern civilization, were a community of pirates attacking and destroying ships till about 1500 years ago; it was later that they ‘settled’ in England, Germany, etc. and created a social life for themselves.  Their languages also took a refined form only later.

I am not saying this to belittle them. (Laughing), Talking low of someone is the meanest thing to do!  Self-boasting is also very bad – it is bloated ego [ahankar – अहङ्कार].  However, when they attack and make fun of us, don’t we need to be aware of why they are doing it?  I am saying this only with that perspective.  We have to commend and appreciate how within 1500 years they have seen wonderful advancements in all spheres like Literature, Governance, Commerce, Science, Hygiene, etc. We have to laud the efforts they make to do research very deeply with perseverance, in whatever matter they take.  Many of our Sastras which were getting eroded in Palm leaves at random places have been salvaged by them and brought out as books with a large index, Concordance, etc.  We are indeed indebted to them for this.  There are several things like hard work, punctuality, etc. which we have to learn from them.

Nevertheless, we cannot overlook some of their wrong views – especially when they attempt to attack us.  This is being said not in the sense of being offensive (launching an attack on them first) but for being defensive (for self-protection when they attack us,).

The problem in what they (Orientalists) say is basically psychological. There is also an inner motive to it.

Though one may speak about ‘scientific research’, and make claims of being impartial, human beings are unable to let go their psychological attachments.  We see that very clearly in our own country:  We observe that some people claiming to be rationalists have emerged as a party saying “We have come only to bury superstitions”They are condemning Sastras and Puranas, viewing them from a rationalistic point.  However, believing the [words of] westerners, when it comes to the issue of their race – which they think is different – and their mother tongue, their rationalism goes for a toss! They abuse people who they consider are from a higher caste but also claim ‘There is no race superior to ours’; how is such a view rationalistic? They dogmatically argue that there is nothing superior or equal to their language; there is no culture more ancient than theirs or none which can even come anywhere near theirs. Looking at these people, it makes one think that these people have more superstitions than even the Sastrajnas (शास्त्रज्ञ – people who are acquainted with Sastras). Whatever is found to be great in any other language or culture, they say it is borrowed only from them. Actually, in the matter of giving and taking, Tamizh language and Culture has been in the forefront in welcoming and absorbing all the good things without any narrow view or hesitation.  However, while claiming ‘We are rationalists’, they do not view things impartially and declare that they have only given [to others] and never accepted anything from others!  When it comes to the thought of ‘our own race’, fondness over-powers sensible arguments!

This attachment has not spared even the Orientalists, who started the so called, ‘Scientific Research’! Although they have an upper hand and India is submissive to them1, they are unable to digest the fact that in the very olden days, when they had not even known what culture was, India had a highly evolved civilisation!

They thought that there were lots of shortcomings in the Hindu community that they saw in the current days. Their modern scientific knowledge was lacking here; These people [Indians] had to be taught by them. They [Indians] were not hygienic like the westerners and since they lived in an environment of dirt and squalor, many were dying at a very young age – being afflicted by diseases and problems.  They [Westerners] could not understand the several divisions of castes and sub-castes, as against the equal society that they had, with a big casteless community further isolated as ‘Panchama’.  They could not understand why people of certain castes who had progressed in literacy and hygiene continued to follow the principles of Sastras and carry out activities which did not align with their [western] science.

Observing all these, they said that this entire country was backward and started with “We will light the lamp of intellect for you. We will make you also progress like us”.

When modern science had appeared and developed rapidly in their countries, our country was under the regime of Turks without any [opportunity for] advancement and had also forgotten our ancient sciences. Their scientific achievements created a feeling of awe in our people now. Seeing that, we surrendered at their feet and started accepting whatever they said.

Their self-pride did not allow them to acknowledge that the same Hindus who have surrendered to them now and are accepting them as guides, had shown the way to the entire world since time immemorial – even up to even a few centuries earlier!

1This was stated before independence

_____________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. தத்ரூப மா ஆச்சு அசலா பெரியவா ! அதுவும் கண்கள் ! பெரியவா சரணம்..

Leave a Reply to Saraswathi ThyagarajanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading