Mahaperiyava at Rameswaram Temple – 1963 – Important post


28-4-1963 ஸ்ரீசங்கர ஜயந்தி புண்ய காலத்தன்று காலையில்.. ஸ்ரீராமநாத ஸ்வாமிக்கும், ஸ்ரீபர்வதவர்தனி அம்பாளுக்கும் – ஸ்ரீமடத்திற்கென்று விசேஷமாக ஏற்பட்ட நெடுங்கால மரபு வழக்கப்படி தமது திருக்கரங்களால் அபிஷேக ஆராதனைகளைச் செய்து மஹாராஷ்ட்ர அர்ச்சகர் ப்ரஹ்மஸ்ரீ பாலாஜி பட்டருக்கு ஆசி அருளுதல்…

ராமேச்வரம் விஷயத்தில் நாம் இதுவரையிலும் பதிவிட்டவற்றின் ஸாரம்:
1. ஸ்ரீராமநாதஸ்வாமி திருக்கோயிலில் நடந்து வருவது வைதிக பூஜைதான். ஸித்தாந்த சைவாகம பூஜை அல்ல.
2. அதைச் செய்யும் பொறுப்பைத் தொடக்கத்தில் ஏற்றிருந்தவர்கள் திருவானைக்கா பஞ்சஸ்தலகர்த்தர்கள் எனப்பட்ட தீக்ஷிதர்கள்..
3. அவர்களிடம் தீக்ஷையும், அனுமதியும் பெற்று ராமேச்வரத்தில் பூஜை செய்யத் தொடங்கியவர்கள் பஞ்சதேசத்து ஸ்மார்த்தர்கள். இவர்கள் பாசுபதர்கள் அல்லர். இவர்கள் அத்வைதிகள்.
4. ராமேஸ்வரம் அர்ச்சகர்கள் 512 பேர்களும் ஐந்து தேசத்தவர்கள் ஆவர்.
5. இவர்களுள் மஹாராஷ்ட்ர ஸ்மார்த்த அர்ச்சகரும் அடங்குவர்.
6. ராமேச்வரம் திருக்கோயிலில் வைதிக பூஜை.. வேதம் மற்றும் புராணோக்த மந்த்ரங்களுடன் வைதிக மிச்ரமான மகுடாகமம் உத்தரபாகத்தை அனுஸரித்து ஸ்மார்த்த அர்ச்சகர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
7. இந்த அர்ச்சகர்கள் அனைவரும் ஸ்மார்த்தர்களே.. இவர்களை சிவத்விஜர்கள் என்று சொல்வது பிசகு.
8. ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் ராமேச்வரம் ஸ்ரீராமநாதஸ்வாமிக்குத் தாமே பூஜைகளைச் செய்ததான விபரம் பல சங்கரவிஜயங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இதையொட்டியே பூஜ்யஸ்ரீ காஞ்சீகாமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஆசார்யர்களும் ஸ்ரீராமநாதஸ்வாமிக்கு நேரில் அபிஷேகம் ஆராதனைகளைச் செய்யும் நெடுங்கால மரபு வழக்கத்தில் உள்ளது.
9.ராமேச்வரத்தில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் பூஜ்யஸ்ரீ 56ஆவது ஆசார்யர் ஸித்தியுற்றனர். அவர்களது ஸ்வர்ண கவசமிட்ட திவ்ய பாதுகைகளுக்கு சத்ரபதி சிவாஜி மஹாராஜரால் 1661ஆண்டு ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டது.
10. இந்த ஸ்வர்ணபாதுகைகளை பூஜ்யஸ்ரீ போதேந்த்ராள் அவர்களும் தரிசித்துள்ளார்கள்.
11. ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ 68ஆவது ஆசார்யர்கள் அவர்கள் இந்த திவ்ய பாதுகைகளை
மஹாராஷ்ட்ர அர்ச்சகருக்கு அருளினார்கள் என்பது வரலாறு.
12. கடந்த 18-02-2021 அன்று ராமேச்வரம் மஹாராஷ்ட்ர அந்தண ஸமூஹத்தினர் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஆசார்யஸ்வாமிகள் அவர்களைத் தங்களது ஸமூஹ மடத்திற்குப் பூர்ண கும்ப மரியாதைகளுடன் வரவேற்றனர். பூஜ்யஸ்ரீ ஆசார்யஸ்வாமிகள் அவர்கள் தமது பூர்வாசார்யாளின் ஸ்வர்ண பாதுகைகளைத் தரிசனம் செய்துகொண்டு அங்கிருந்த மஹாராஷ்ட்ர ஸமூஹத்தினர் அனைவரையும் ஆசீர்வதித்தார்கள்.

Thanks to Sri Ganapathisubramanian, Audior for sharing this rare photo and lots of these great info.

This photo should end all controversies triggered around Sri Periyava’s recent visit to Rameswaram temple. There is one Iyengar mama from Srirangam who has been releasing videos talking bad about Sri Periyava’s visit (without any basis) and there are some so-called Kanchi devotees, who are shamelessly sharing those videos in Facebook etc and very smartly not posting counter videos given by Valasai Sri Jayaraman. IF these devotees’ main objective is to state the truth then they should post both videos, right?

Anyways, Sri Periyava’s visit was carefully planned – not done in a rush as described by that Iyengar mama – all necessary data pointers/approvals etc were submitted to all right authorities and I heard including the district collector. I know Sri Ganapathisubramanian was one of the key members in the team who did these. So no protocols were violated and all are done properly as per our tradition. Clearly this Iyengar mama is misguided by someone else.

Only request to many of you is not to spread fake videos/messages by certain individuals who have clear agenda just to attack our Matam and our acharyas. Also be smart enough to identify who are real devotees of Kanchi Matam. In the past 15+ years I have seen so many “devotees” who have/had real bad intentions against Matam and still these individuals walk around with the title of “devotee of ….” etc…Avoid them – you lose nothing!

Periyava SharanamCategories: Announcements

2 replies

  1. ஆனால் நாங்கள் செய்தித்தாள் மூலம் அறிந்தது யாதெனில் ராமேஸ்வரம் கோவில் அர்ச்சகர்கள் நம் பாலபெரியவாளை ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யக்கூடாது …கருவறைக்குள் நுழையக்கூடாது என வாக்குவாதம் செய்ததாக அந்த செய்தி தாளில் போட்டிருந்தார்கள் .தி க , தி மு க வினர் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அந்த செய்தித்தாளில் போட்டிருந்தார்கள் இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்ததா என விஷயம் அறிந்தவர்கள் சொன்னால் நல்லது ….எந்த இடத்திலும் நம் பெரியவாளுக்கு அவமரியாதை நடக்கக்கூடாது

  2. Advaitees believe that this prapancham is unreal, it never exist, existed, will never exist. It is Maya. Vedantic enquiry dispel Maya, lock stock and barrel,and reestablishes the relevance of the Supreme consciousness, (Brahman). Now the prevailing, age-old, perpetual controversy between Mutts, prove time and again that Maya is only too powerful

%d bloggers like this: