Sankara Sankara Poem by Sri Sethu Narayanan

Jaya Jaya Sankara Hara Hara Sankara – A beautiful poem on Sankara by our good friend Sethu Narayanan….Rama Rama

நினைவுக்குள் உனையிருத்தி
புனையுமிப்பா உனக்கு
பனிவுடனே தந்திட்டேன்
கனிவுடனே இதையேற்பாய்
காலமெல்லாம் உன் காலடியில்
கிடக்க ஓர் வரமருள்வாய்

திக்கெங்கும் உனைத்துதிக்க
பக்திக்கு எல்லையேது
சங்கரனே உனையழைக்க
பங்கமெல்லாம் பறந்தோடும்
பாவியெந்தன் கவலையெல்லாம் கரைந்துவிடும்

தாயெனவே காத்திடுவாய்
தயவான உன்கருணை
செயலாற்ற வந்திட்டால்
பயமில்லா துணிவெனக்கு
எப்பாரம் வந்திடினும்
சங்கரனே உன்னாலே
தகர்ந்திடுமே

செயலதுவும்
தன்னாலே நடந்திடுமே
முக்காலம் உணர்ந்திட்ட உனை
எக்காலமும் துதித்திடவே
சாக்காடும் பிணியும் கூட
சட்டெனவே மறைந்திடுமே

எல்லையில்லா உன் கருணை
உலகமெல்லாம் வியாபிக்க
என்ன தவம் செய்தோமோ
உந்தன் பார்வை வரம் வேண்டியே
எந்தன் மனம் நாடிடுதே



Categories: Krithis

Tags:

1 reply

  1. அருமை எளிமை அவன் கருணை

Leave a Reply

%d bloggers like this: