
Many Jaya Jaya Sankara to Smt. Mahalakshmi for penning this beautiful poem and share. Rama Rama
Tamil Version:
பார்க்கவோ பாலனின் பால் மணம் மாறவில்லை
ரோஜா இதழ்களோ நெஞ்சத்தின் மென்மையை மிஞ்சவில்லை
புனிதமோ அக்னியின் வெம்மை
தன்னொளியோ ஹிதமானா சூடிய நிலவொளி
சொற்பொழிவோ மென்மையான அலையோசை
அதன் சாரமோ வீணையின் பண்ணிசை
அருட்பொழிவோ வற்றாத கங்கை நதி
இவை அளித்திடுமே ஞானத்தின் பேரின்ப தேனமுதை
பாம்பினை பார்த்ததும் படையே நடுங்கும்
அதனைக் கண்டத்தில் கொண்ட இவரின் தண்டத்தைக் கண்டால்
துன்பங்கள் துலைந்து ஒழியும்
இன்பங்கள் ஓங்கித் தழைக்கும்
நல்லோரின் மேன்மையை மெருகேற்றிடுவார்
இருளில் சூழ்ந்திருக்கும் இளையோற்கு சுடராய் ஒளிர்ந்திடுவார்
தண்டளத்தில் ஜனனமெடுத்து காஞ்சியில் காவியணிந்து
உலகோர் உயர்வோங்க உபதேசம் உரைத்திடுவார் ஜகத்குருவாய்!


English Version:
Paarkavo Balanin Pal Manam Maaravillai
Roja Idhargalo Nenjathin Menmayai Minjavillai
Punidhamo Agniyin Vemmai
Thannoliyo Hithamaana Soodiya Nilavoli
Sorpozhivo Menmayaana Alayosai
Adhan Saaramo Veenayin Pannisai
Arutpozhivo Vatradha Gangai Nadhi
Ivai Alithidume Jyanathin Perinba Thenamudhai
Paambinai Paarthathum Padaye Nadungum
Adhanai Kantathil Konda Ivararin Dandathai Kandaal
Thunbangal Thulayindhu Ozhiyum
Inbangal Ongi Thazhaikkum
Nallorin menamayai merugetriduvaar
Irulil Soozhndhirukkum Ilayorku Chudaraai Olirndhiduvaar
Thandalaithil Jananameduthu Kanchiyil Kaaviyanindhu
Ulagor Uyarvonga Upadesham Uraithiduvar Jagadguruvaai
Categories: Krithis
Beautiful!
JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
ஆசானின் திருவடிகள் என்றும் அடியேனின் சென்னியில் நிலைக்கட்டும். ஆசானின் அருள் இருக்கும் வரை ஆகாது என்று ஒன்றும் இல்லை.
Great