Golden padhuka of 56th acharya in Rameswaram

Thanks to Karthi for correcting the context to this video and pointing me to detailed post on this shared by Sri Ganapathisubramanian.

 

18-02-2021 : ராமேச்வரத்திற்கு எழுந்தருளிய ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஆசார்யாள் அவர்களுக்கு பூர்ணகும்பத்துடன் மஹாராஷ்ட்ர அந்தண ஸமூஹத்தினர் வரவேற்பு அளித்தனர்.
அது சமயம் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 56வது ஆசார்யாளுடைய ஸ்வர்ண பாதுகைகளையும் பூஜ்யஸ்ரீ ஆசார்யாள் அவர்கள் தரிசனம் செய்து கொண்டார்கள்..
ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 56வது ஆசார்யர்களாக அருளாட்சி புரிந்த பூஜ்யஶ்ரீ ஸர்லஜ்ஞ ஸதாஶிவபோதேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் ப்ரவீர ஸேதுபதி என்ற ராமனாதபுரம் ஸேதுபதி அரசரால் வெகுவாக மதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் ஸ்வாத்ம நிரூபணம் என்கிற க்ரந்தத்தையும் அருளியுள்ளார்கள்.
பூஜ்யஶ்ரீ ஸதாஶிவபோதேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் அவர்கள் விளம்ப வருஷம் (1539) ராமேஶ்வரத்தில் ஸித்தியடைந்தனர்.
இவர்களது திவ்ய பாதுகை ராமேச்வரம் க்ஷேத்ரத்தில் இவர்களின் ஸமாதி ஸ்தலத்தில் வெகுகாலமாகப் பூஜிக்கப்பட்டு வந்தது.
பிற்பாடு ஸ்ரீகாமகோடி பீடத்தின் 59வது ஆசார்யர்களான பூஜ்யஸ்ரீ பகவந்நாம போதேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் ராமேச்வர க்ஷேத்ரத்திற்கு விஜயம் செய்த சமயம் இந்த திவ்ய பாதுகைகளைத் தரிசித்தது பற்றிய வரலாறு ராமேச்வரம் (மஹாராஷ்ட்ர) ஆர்ய மஹாஜனங்களிடம் கர்ணபரம்பரையாக வழங்கி வருகிறது.
பிற்பாடு சத்ரபதி சிவாஜி மஹாராஜர் இந்த பொற் பாதுகைகளுக்கு ஜீர்ணோத்தாரணம் செய்திருப்பது பற்றிய விபரமும், காலமும்- பாதுகைகளின் மேற்புறம் மராட்டி மொழி மோடி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 65வது ஆசார்யாள் பூஜ்யஸ்ரீ ஸுதர்சன மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் (பூஜ்யஸ்ரீ இளையாற்றங்குடி பெரியவாள்) 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராமேச்வரம் விஜயம் செய்து ஸ்ரீராமனாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் செய்து 56ஆவது ஆசார்யாளின் அதிஷ்டானத்திற்குப் பூஜைகள் செய்தார்கள்.
1929ஆம் ஆண்டு ராமேச்வரம் விஜயம் செய்தபோது பூஜ்யஸ்ரீ 68ஆவது ஆசார்யர்கள் இந்த திவ்ய பாதுகைகளை மஹாராஷ்ட்ர ஸமூஹத்தினர் தங்களது ஸமூஹ மடத்தில் அன்றாடம் பூஜித்து வருவதற்காக வழங்கியருளினார்கள் என்பதும் அவர்களது அருள் வரலாற்றில் காண்கிறது.
अथोत्तरपिनाकिनीतटभवः स बोधेश्वरः सुतश्चिरुतचिक्कणाध्वरिवरस्य भक्तो हरेः ।
अभूत् किल जगद्गुरुर्नियमिचन्द्रचूडाज्ञया सदाशिवपदावहश्चर(२६)समाः प्रवीरार्चितः ॥ १ ॥
स *सेतुम् अधिजग्मिवान् अधिपवित्ररामेश्वरं* श्रितः पदम् अनश्वरं च प्रतिविलम्बिचैत्राष्टमि ।
दधत्परमयुक्छिवं निजपदे प्रतिष्ठापितं शिवाय बहुले नृणां सुबहुलाय पक्षे मुनिम् ॥ २
(பூஜ்யஶ்ரீ ஸதாஶிவபோதேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் புண்ய ஶ்லோகங்கள்- புண்ய ஶ்லோக மஞ்ஜரீ)
प्रवीर-सेतु-भूपाल-सेविताङ्घ्रि-सरोरुहान् ।
भजे सदाशिवेन्द्र-श्री-बोधेश्वर-गुरून् सदा ॥ ५७ ॥
ப்ரவீர ஸேதுபதி என்ற ராமநாதபுர ஸம்ஸ்தானாதிபதியால் பூஜிக்கப்பட்ட திருவடியுடையவரும் போதேச்வரர் என்று புகழப்பட்டவருமான ஸதாசிவ போதேந்த்ரரை வணங்குகிறேன்.
(பூஜ்யஸ்ரீ இளையாற்றங்குடி பெரியவாள் அவர்கள் இயற்றிய ஜகத்குரு பரம்பரா ஸ்தவம்)


Categories: Periyava TV

9 replies

  1. Anega koti koti namaskarams to Sri.Sri Kanchi SankaraAcharyals..

  2. பெரியவா கருணை
    Mahesh

    Rameawaram Datta Padhuka அல்ல.

    நம்ம 56 ஆவது ஆச்சார்யாள் பாதுகா

    காரைக்கால் சூரி அண்ணா அவர்களை contact செய்யவும்

    மேல் விவரங்கள் பெற

  3. A divine blessing indeed. Just today I concluded the Parayanam Sri Guru Charitam, and now I am blessed to see this video. My happiness is immeasurable. Jeya Jeya Shankara Hara Hara Shankara

  4. Many thanks for the info.

Trackbacks

  1. Details corrected – Sage of Kanchi

Leave a Reply

%d