119. Sri Sankara Charitham by Maha Periyava – SriSailam; “Arjuna” Kshetra(s)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Well, the answer to the quiz I posted few days back is Srisailam Maha Kshethram located on the banks of Krishna river in Andhra Pradesh. The greatness of this Maha Kshethram, the forms in which Eswaran and Ambal exist there has been beautifully expressed by Sri Periyava in this chapter.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya the magnificent drawing & audio and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama


ஸ்ரீசைலம்; “அர்ஜுன” க்ஷேத்ரங்கள்

அவருக்கு மூலமான பரமசிவனுக்கும் மல்லிகை ஸம்பந்தம் அதிகம் உண்டு. அவனே வெள்ளை வெளேரென்று மல்லிகைபோல இருப்பவன்தான். மல்லிகார்ஜுனன் என்றே பெயர் வைத்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பெயரில் அவன் இருக்கிற க்ஷேத்ரம் ஸ்ரீசைலம். அந்த ஸ்ரீசைலத்திடம் ஆசார்யாளுக்குத் தனியானதொரு அபிமானம். ‘சிவாநந்த லஹரி’ யில் அவர் ஸ்ரீசைலத்தை விசேஷமாகக் குறிப்பிட்டு ஸ்துதித்திருக்கிறார். நூறு ச்லோகங்கள் கொண்ட அந்த ஸ்துதியில் நடுமையாக உள்ள 50, 51-வது ச்லோகங்களில் ஸ்ரீசைல மல்லிகார்ஜுனரைச் சொல்லியிருக்கிறார். பக்தி ஸ்தோத்ரமாகச் செய்த ‘சிவாநந்த லஹரி’யில் மஹா சிவ க்ஷேத்ரமான ஸ்ரீசைலத்தைச் சொல்லியிருப்பது ஓரளவு எதிர்பார்க்கக்கூடியதே. இதைவிட விசேஷம் — ஒரே யோகமாக, ஞானமாக அவர் பண்ணியுள்ள ‘யோக தாராவளி’ என்ற ப்ரகரணத்தில்கூட, ஸ்ரீசைலத்தைக் குறிப்பிட்டிருப்பதுதான். “எப்போது என் உடம்பைச் சுற்றிக் கொண்டு கொடிகள் படர்ந்து கொண்டும், காதிலேயே பக்ஷிகள் கூடு கட்டிக் கொண்டும் இருக்கும்படி தன்னை மறந்து ஸமாதியில் முழுகி உட்கார்ந்து கொண்டிருப்பேன்?” என்று அதிலே கேட்கும்போது, “இந்த மாதிரி ஸ்ரீசைல மலையுச்சில் குஹையில் எப்போது உட்கார்ந்திருப்பேன்?” என்று கேட்கிறார்! ”ஸ்ரீசைல ச்ருங்க குஹரேஷு“என்கிறார்.1

மல்லிகையாக ஈச்வரனே இருக்கிறான் — ஸ்ரீசைலத்தில். அந்த மல்லிகைக் கொடி அர்ஜுன மரத்தைச் சுற்றிக் கொண்டு படர்ந்திருக்கிறது. அதுதான் மல்லிகார்ஜுனம். அர்ஜுனம் என்பது மருத மரம். அதை ஸ்தல வ்ருக்ஷமாகக் கொண்ட மூன்று க்ஷேத்ரங்கள் இருக்கின்றன. வடக்கில் ஆந்த்ர தேசத்தில் இருப்பதுதான் ஸ்ரீசைலம். அது மல்லிகாஜுர்னம். பாதாள கங்கை என்கிற க்ருஷ்ணா தீரத்தை ஒட்டியிருப்பது அது. மத்தியில் இருப்பது திருவிடைமருதூர். மத்யார்ஜுனம், இடை மருதூர் என்றே பெயர் பெற்றது. காவேரிக் கரையில் சோழ மண்டலத்திலிருப்பது. தெற்கே இருப்பது திருப்புடைமருதூர் என்னும் புடார்ஜுனம். தென்பாண்டி நாட்டில், தாம்ரபர்ணிக் கரையில் அது இருக்கிறது.

மரத்தில் கொடி படர்கிறது என்றால் என்ன தாத்பர்யம்? ‘ஸ்தாணு’ என்று பட்ட சட்டையாக அசையாமலிருக்கிற சிவத்தை ஆச்ரயித்தே சக்தியான அம்பிகை படர்ந்து ஸ்ருஷ்டியை உண்டாக்குகிறாள் என்று தாத்பர்யம். நம்மிலே புத்தி சக்தி என்ற மேதாவாக இருப்பவள் அவள் தான். அந்த புத்தி சக்தி சுத்த ஆத்ம தத்வமான சிவத்தைச் சுற்றிப் படர வேண்டும். அதுதான் மல்லிகைக் கொடி அர்ஜுன வ்ருக்ஷத்தைச் சுற்றிப் படர்வது. அர்ஜுனம் என்றால் வெளுப்பு. பரம நிர்மலமாயிருக்கும் சிவ தத்வம் அப்படியிருக்கிறது.

அர்ஜுன மரம் — சிவம், மல்லிகைக் கொடி — அம்பாள் என்பது ஒரு விதத்தில். மல்லிகைக் கொடியில் புஷ்பித்த மல்லிகைப் புஷ்பமே சிவம், அந்தப் புஷ்பத்தை மொய்த்து மொய்த்து, அதன் தேனைக் குடித்து அதிலேயே மயங்கி லயித்துக் கிடக்கிற வண்டு அம்பாள் என்று இன்னொரு விதத்தில் சொல்வது. வண்டுக்குப் பேர் ப்ரமரம். ஸ்ரீசைலத்தில் அம்பாளுக்கு ப்ரமராம்பா என்றே பேர். மல்லிகார்ஜுனரை, ஈச்வர மல்லிகையை மொய்த்துக் கொண்டிருக்கும் ப்ரமர அம்பா!

இதைப் பற்றி நீளமான ச்லேஷாலங்காரமாக (சிலேடை அணியாக) ஆசார்யாள் சிவாநந்த லஹரியில் சொல்லியிருக்கிறார் 2:

ஸந்த்யாரம்ப-விஜ்ரும்பிதம் ச்ருதி-சிரஸ்தாநாந்தராதிஷ்டிதம்
ஸப்ரேம-ப்ரமராபிராம-மஸக்ருத் ஸத்வாஸநா சோபிதம் |
போகீந்த்ராபரணம் ஸமஸ்த ஸுமந பூஜ்யம் குணாவிஷ்க்ருதம்
ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுந மஹாலிங்கம் சிவாலிங்கிதம் ||

ஒவ்வொரு phrase -கும் (சொற்றொடருக்கும்) இரண்டு அர்த்தம் வைத்துப் பண்ணியிருக்கிறார். ஒன்று மல்லிகையைக் குறிக்கும், மற்றது ஈச்வரனைக் குறிக்கும்.

“ஸந்த்யாரம்ப விஜ்ரும்பிதம்”: மல்லிகையைக் குறிக்கும்போது, ஸந்தி வேளை ஆரம்பிக்கும்போது மலர்வது என்று அர்த்தம். ஈச்வரனைக் குறிக்கும்போது, ஸந்தி ஆரம்பத்தில் நாட்யம் பண்ணுவதால் தம்மை நன்றாக வெளிப்படுத்திக்கொள்பவர் என்று அர்த்தம்.

“ச்ருதி-சிரஸ்தாநாந்தராதிஷ்டிதம்” — மல்லிகையானால், ‘காதிலும் தலையிலும் சூட்டிக் கொள்ளப்படுவது’. ஈச்வரனானால், ‘ச்ருதியான வேதத்தின் சிரஸான உபநிஷத்தில் உறைபவர்’.

“ஸப்ரேம ப்ரமராபிராமம்” — மல்லிகையானால், ‘ஆசையோடு வரும் வண்டினால் அழகுறுவது’. ஈச்வரனானால், ‘ப்ரேமை கொண்ட ப்ரமராம்பிகையினால் சோபிக்கிறவர்.

“அஸக்ருத் ஸத்வாஸநா சோபிதம்” — மல்லிகையானால், ‘எப்போதும் ஸுகந்தத்தோடு விளங்குவது’. ஈச்வரனானால், ‘எப்போதும் ஸாதுக்களின் புண்ய வாஸனையில் சோபை பெற்றவர்’. ஸாதுக்களின் பக்தி ‘ஸெண்ட்’ போடுவது போல் ஸ்வாமிக்கு வாஸனையாக இருக்கிறது!

“போகீந்த்ராபரணம்” — மல்லிகையானால், ‘நன்றாக போகங்களை அநுபவிப்பவர்கள் அலங்காரமாகச் சூட்டிக் கொள்வது’. (அல்லது) மல்லிகை வாஸனைக்காக பாம்புகள் வந்து அதைச் சூழ்ந்து கொள்வதாகவும் சொல்லலாம். ஈச்வரனாக வைத்து அர்த்தம் பண்ணும்போது, ‘சிறந்த பாம்புகளை ஆபரணமாக உடையவர்’. ‘போகி’ என்றால் பாம்பு என்றும் அர்த்தம்.

“ஸமஸ்த ஸுமந: பூஜ்யம்”-மல்லிகையானால், ‘எல்லாப் புஷ்பங்களுக்குள்ளும் உயர்வானதாகப் போற்றப்படுவது’. ஈச்வரனானால், ‘ஸகல தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர்’. ‘ஸுமன’ ஸுக்கு ஒரு அர்த்தம் ‘புஷ்பம்’, இன்னொரு அர்த்தம் ‘தேவர்’.

“குணாவிஷ்க்ருதம்” — மல்லிகையானால் ‘கயிற்றால், நாரினால், நன்றாக எடுத்துக் கட்டப்படுவது.’ ‘குணம்’ என்றால் கயிறு. உதிரி உதிரியாயிருக்கும் புஷ்பத்தை நாரால் தொடுத்தால்தானே அது ஒன்று சேர்ந்து அழகாக விளங்குகிறது? அதனால் “குணாவிஷ்க்ருதம்”. ஈச்வரனாக வைத்துச் சொல்லும்போது, உத்தம குணங்களால் சிறப்புற்று விளங்குபவர் என்று அர்த்தம்.

‘இப்படிப்பட்டவராக, சிவா என்னும் அம்பாளால் ஆலிங்கனம் செய்யப்பட்டு விளங்குகிற ஸ்ரீசைல மல்லிகார்ஜுனரை வணங்குகிறேன்’ என்று முடிக்கிறார்:

ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன மஹாலிங்கம் சிவாலிங்கிதம்

மல்லிகைப் புஷ்பம், மாம்பழம் இரண்டும் வஸந்த வைசாகத்தில் விசேஷமாக உண்டாவது. ஆசார்யாள் சுத்த ஸத்வ மல்லிகையாகவும், அத்வைத ரஸ பரிதமான ஞான மாம்பழமாகவும் இருந்தவர். ‘ஞானப் பழம்’ என்கிறார்களே அதுவாக!

_________________________________________________________________________________________________

1 ச்லோகத்தின் முழு வடிவம் :

ஸித்திம் ததாவித மநோவிலயாம் ஸமாதௌ
ஸ்ரீசைல ச்ருங்க குஹரேஷு கதோபலப்ஸ்யே |
காத்ரம் யதா மம லதா: பரிவேஷ்டயந்தி
கர்ணே யதா விரசயந்தி ககாச்ச நீடாந் ||
(யோகதாராவலீ — 28)

2 50–வது ச்லோகம்

_________________________________________________________________________________________________

Srisailam; “Arjuna” Kshetra(s)

His [Acharya Sri Adi Sankara’s] original source – Paramasiva – also has a lot of connection to jasmine.  He [Paramasiva] is himself white hued like jasmine.  He even has the name Mallikarjuna.  The place of pilgrimage where He has this name is Srisailam.  Acharya has a special regard for Srisailam.  He has sung verses specially mentioning Srisailam in ‘Sivananda Lahari’.  He has mentioned about Srisaila Mallikarjuna in verses 50 and 51, which appear in the middle of that sloka containing 100 verses.  In a way, it is on expected lines that he has talked about Srisailam – the grand Siva Kshetra – in ‘Sivananda Lahari’ (शिवानन्दलहरी), which was penned as a devotional sloka.  More significant is the fact that he has mentioned about Srisailam even in the treatise ‘Yoga Taravali’ that he has written, which is out and out on Yoga and Jnana [Ultimate Knowledge]. In one stanza he asks: “When will I be totally immersed in Samadhi  (समाधि – meditation), oblivious to creepers climbing around my body and birds making their nests in my ears?” and further states “When will I be sitting like this in the cave at the top of Srisailam?” He says, “srisaila shringa kuhareshu”1 [श्रीशैल शृङ्ग कुहरेषु].

Eswara is in the form of Jasmine in Srisailam. The jasmine creeper has climbed and spread around the Arjuna tree.  That is Mallikarjunam.  Arjunam is name for Marudam tree.  There are three holy places of pilgrimage having marudam tree as the sthala vruksha (स्थल वृक्ष).  Srisailam is the one which is in the north, in Andhra. It is also called Mallikarjunam.  It is on the banks of Krishna river, known there as Patala Ganga [पाताल गङ्गा].  The one [kshetram] which is in the middle is Thiruvidaimarudur. It is known by the name Madhyarjunam or Idai marudur [Idai means ‘inbetween’].  It is on the banks of Cauvery in the Chola region.  What is in the south is Putarjunam, known as Thiruppudaimarudur.  It is in South Pandya region on the banks of Tamraparani.

What is the objective (तात्पर्य) of saying that the creeper is spreading around the tree?  It means that Ambika – Sakti – is taking up the creation [of the world], supported by Sivam who is totally immobile like a log.  In all of us, She is present as the wisdom – the intellect.  The power of that intelligence should spread around Siva, the true nature of the self (आत्मतत्त्व). This is the symbolism behind the concept of a Jasmine creeper spreading around the Arjuna tree.  Arjunam means white.  The absolutely pure [परम निर्मल] Siva Tatvam is like that.

In one sense, the Arjuna tree is Siva and Jasmine creeper is Ambal.  Another interpretation is that Sivam is the jasmine flower which has blossomed on that jasmine creeper and Ambal is the bee which is resting in that flower in a state of swoon, having drunk the nectar by repeatedly visiting the flower. The name for bee is bhramaram [भ्रमरम्].  In Srisailam, Ambal’s name itself is Bhramaramba [भ्रमराम्बा].  She is Bhramara Amba, swarming Mallikarjuna – the jasmine Eswara!

Acharya has talked about this, making an ornament of puns (श्लेष अलङ्कार) in Sivananda Lahari2:

sandhyaarambha-vijrumbhitam sruti-sirasthaanaantaraadhishttitam
saprema-bhramaraabhiraama-masakrit sadvaasanaa shobhitam I
bhogeendraabharanam samasta sumana: poojyam gunaavishkrutam
seve srigiri mallikaarjuna mahaalingam sivaalingitam II

सन्ध्यारम्भ-विजृम्भितं श्रुति-शिर-स्थानान्तराधिश्ठितं
सप्रेम भ्रमराभिराम-मसकृत् सद्वासना-शोभितम्
भोगीन्द्राभरणं समस्त-सुमनः-पूज्यं गुणाविश्कृतं
सेवे श्रीगिरि मल्लिकार्जुन महालिङ्गं शिवालिङ्गितम्

He has penned every phrase with two meanings.  One denotes Jasmine and the other denotes Eswara.

‘sandhyaarambha-vijrumbhitam’ [सन्ध्यारम्भ-विजृम्भितं] – When it denotes Jasmine, it means ‘that which flowers at the time of dusk’.  While denoting Eswara it means ‘He who reveals himself fully since he performs his dance at dusk’.

‘sruti-sirasthanaantaraadhishtitam’ [श्रुति-शिरस्थानान्तराधिश्ठितं] – for Jasmine it means ‘that which is worn in the ear and the head’.  For Eswara – ‘He who dwells in the Upanishads, which is the crowning jewel of the Vedas – the Sruti [श्रुतिः]’.

‘saprema bhramarabhiramam’ [ सप्रेम भ्रमराभिरामम् ]– For jasmine – ‘that which becomes beautiful by the swarming bees that approach with love’. For Eswara – ‘He who dazzles on account of Bhramarambika who is full of love’.

‘asakrut sadvaasanaa shobhitam’ [असकृत् सद्वासना शोभितम्] – For Jasmine – ‘that which has a pleasant smell’. For Eswara – ‘He who has gained his lustre because of the devotion of sadhu(s) [mahaan(s)]’.  The devotion of Sadhus is like a ‘scent’ – giving a pleasant fragrance to Swami.

‘bhogeendraabharanam’ [भोगीन्द्राभरणं] – For Jasmine – ‘That which is worn as a decoration by people who indulge in pleasures’. It can also be interpreted as ‘serpents come and surround it for the sweet smell of Jasmine’.    When the meaning is derived for Eswara – ‘He who has great serpents as his ornaments’.  ‘Bhogi’ also means Serpent.

‘samasta sumana: poojyam’ [समस्त सुमनः पूज्यं] – When it denotes Jasmine – ‘That which is considered as the best of all flowers.  When it denotes Eswara – ‘He who is worshipped by all Devas’.  One meaning of ‘Sumana:’ is ‘flower’. Another meaning is ‘Devas’.

‘gunaavishkrutam’ [गुणाविष्कृतं] – When it denotes Jasmine – ‘That which is well bound by a string or fibre’.  ‘Gunam’ means string or rope.  Is it not that flowers which are loose and separate, become beautiful only when they are strung together with a string?  That is why gunaavishkrutam.  When the meaning is derived for Eswara, it means ‘He who is great owing to his superior qualities’.

He concludes by offering his salutations to Srisaila Mallikarjuna who has all these qualities and who is embraced by Ambal – who also known as Sivaa.

seve srigiri mallikarjuna mahaalingam sivaalingitam- सेवे श्री-गिरि-मल्लिकार्जुन-महा-लिङ्गं शिवालिङ्गितम्

Both the jasmine flower and mango fruit are specific to the spring season in Vaikasi [month].  Acharya was a pure jasmine with satva qualities as well as a mango of ultimate knowledge filled with juicy Advaita. A ‘jnanapazham’ [ஞானப்பழம்] as they say.

  1. Full form of the Sloka:

siddhim tathavidha manovilayaam samaadhou
srisaila shringa kuhareshu kadopalapsye I
gaatram yadaa mama lataa: pariveshtayanti
karne yadaa virachaayanti khagaascha needaan II -(Yoga Taravali-28)


सिद्धिं तथाविधमनोविलयां समाधौ
 
श्रीशैलश्रृङ्गकुहरेषु कदोपलप्स्ये। 
गात्रं यदा मम लताः परिवेष्टयन्ति 
कर्णे यदा विरचयन्ति खगाश्च नीडान् II (योग तारावलि-28)

  1. 50th Sloka

_________________________________________________________________________________________
Audio



Categories: Uncategorized

Tags: ,

2 replies

  1. Mahaperiyava as Dakshinamurthy @Shrisailam. Please do listen: https://soundcloud.com/chandrasekhar-s-402671501/mahaperiyava-as-dakshinamurthy-shrishailam

  2. Beautiful

Leave a Reply

%d bloggers like this: