நான் அதை வாசிக்கலாமா?

Thanks to Smt Indu Mohan for the share. Although this incident has been shared already I am re-sharing this for the beautiful drawing.

சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அபோது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.

பெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.வந்திருந்த பொது மக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.

வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார்.கேட்டவர ்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச்சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அப்புறம் நான் அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?

வீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார்.இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.

சரியா இருக்கு!

பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்றூ போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்றூ கதறினார்.அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. ” தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கனும்” என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.

வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக்கொடுத்தர்.வித்யா கர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுதுக்கொண்டே வெளியேறினார்.கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை.

என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?

ராவணனின் ஸாம கானம் வந்த போது அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.

பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக்காட்டினர். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?

யாருக்குத்தெரிய போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன் என்று நண்பரிடம் சொல்லி அழுதாராம் வித்வான்…



Categories: Uncategorized

4 replies

  1. can you please share 2021 anusham claendar same like the one appearing for 2020 on the right side now in this forum. thanks

  2. பெரியவா திருவடிகளே சரணம்.
    G.B. Mohan Gopal

  3. Could be a true episode. But no one tunes the Veena for a given Raga. Please Post clear messages.

  4. அந்த ஸர்வக்ஞரான ஆசார்யரின் திருவடிகளில் பணிந்து வணங்குகிறேன்

Leave a Reply to aruncccmCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading