Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava magnificently explains the significance of Vaikaasi month which has many good attributes and relates it to the period of Bhagawathpadhal avataram.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya another beautiful drawing & audio and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama
வஸந்தகால வைசாக மாதப் பொருத்தம்
ஆசார்யாள் அவதரித்தது வஸந்த காலம். மஹாத்மாக்கள் வஸந்த காலம் மாதிரி ப்ரதிப்ரயோஜனமே எதிர்பார்க்காமல் லோகத்துக்கு ஹிதம் செய்கிறார்கள் என்று சொன்னவர் அவர்.* அவரும் அப்படிப்பட்டவர் தான். அவர் அவதாரம் பண்ணியது வஸந்த ரிதுவாக இருக்கிறது!
அவர் பிறந்த மாஸம் வைசாகம் — நாம் வைகாசி என்பது. வைசாகம் என்றால் சாகை (கிளை) இல்லாதது. மரம் செடி என்றால் கிளை உண்டு. கொடிதான் கிளையில்லாதது.
வைசாகத்திற்கு மாதவ மாஸம் என்றும் ஒரு பெயர் உண்டு. சைத்ர மாஸம் ‘மது’; வைசாகம் ‘மாதவம்’. மாதவி என்பது மல்லிகையின் பெயர். கிளையில்லாமல் மல்லிகைக் கொடியும் ‘வைசாக’மாக இருப்பதால், அந்த மாஸத்தின் இரண்டு பேரும் மல்லிகை ஸம்பந்தமுள்ளதாயிருக்கிறது. அது மாத்ரமில்லை. ‘வஸந்தம்’ என்பதன் அடியாகப் பிறப்பது ‘வாஸந்தி’ என்ற வார்த்தை. வாஸந்தி என்றும் மல்லிகைக்கே இன்னொரு பெயர்கூட இருக்கிறது.
இப்படி ஒரே மல்லிகை ஸம்பந்தத்தோடு ஆசார்யாளின் அவதார காலம் இருப்பது ரொம்பவும் பொருத்தந்தான். வெள்ளை வெளேரென்று சுத்த ஸத்வ ரூபமாக மல்லிகை இருக்கிறது – வெயில் காலத்தில் குளிர்ச்சி தருவதாகப் புஷ்பிக்கிறது. ஆசார்யாள் ஸம்ஸார வெயிலில் குளிர்ச்சி தருகிற ஒரு பெரிய மல்லிகையாக, சுத்த ஸத்வ அவதாரமாக வந்தவர்.
ஞான மல்லிகையாக வந்து லோகத்துக்கெல்லாம் ப்ரேமை என்கிற ‘சம்’மின் ஸுகந்தத்தைச் செய்த சம்கரரின் ஜயந்தியே வஸந்த மாதவ ஜயந்தியாயிருக்கிறது. அது நம் மனஸை எல்லாம் சுத்த வெளுப்பாக்கட்டும்! அன்பின் மணத்தினால் நம் மனஸை நிரப்பட்டும்! அன்பான சிவத்திலேயே ஊறிப்போய் சாந்தமான சிவஞானத்தை நாம் அடையும்படி அநுக்ரஹிக்கட்டும்!
ஞான வெளுப்பில் லயம் அடைய வைக்கும் ப்ரேமையின் ஸுகந்தம்! ஸுகந்தத்தை உள்ளே தீர்க்கமாக இழுப்பது அப்படியே ப்ராணாயாமமாகி லயத்தை உண்டாக்குவது தானே?
மல்லிகை ஸம்பந்தம் மேலும் சொல்கிறேன்: மடத்தில் ஸ்ரீமுகம் கொடுக்கும்போது முதலில் ஆசார்யாளைப் பற்றி வர்ணிக்கிற வாசகம் நீளமாக வரும். அதன் நடுவில் “அதுலித ஸுதாரஸ மாதுர்ய கமலாஸன – காமிநீ தம்மில்ல ஸம்புல்ல மல்லிகா மாலிகா நிஷ்யந்த மகரந்த ஜரீ ஸெளவஸ்திக வாக் விஜ்ரும்பணாநந்த துந்திலித மநீஷி மண்டலாநாம்” என்று வருகிறது. என்ன அர்த்தமென்றால்: கமலாஸனரான ப்ரஹ்மாவின் காமினியாக ஸரஸ்வதி தேவி இருக்கிறாளே, அவளுடைய ‘தம்மில்லம்’ என்னும் கூந்தல் அலங்காரத்தில் மல்லிகை ஸரங்களை அணிந்திருக்கிறாள். அவற்றிலிருந்து பொழியும் தேன் பெருக்கும் நிகராகாது என்னும்படியாக அப்படிப்பட்ட அம்ருத ரஸம் போன்ற அருமையான வாக்கை ஆசார்யாள் ஆனந்தமாக மலர்த்திக் கொண்டு வித்வத் ஸமூஹத்தையெல்லாம் பூரிக்கும்படிச் செய்கிறாராம்!
ஆசார்யாளுடைய ஸர்வஜ்ஞத்வம் லோகத்திற்குத் தெரிவதற்காக ஸரஸ்வதியே அவரிடம் வாக்குவாதம் பண்ணித் தோற்றுப் போய்க் காட்டினாள். அவளை சாரதா பீடம் என்று ச்ருங்கேரியில் ஸ்தாபித்து அதில் ஸாந்நித்யத்துடன் இருக்கும்படியாக ஆசார்யாள் அமர்த்தினார். பத்து விதமான ஸந்நியாஸப் பிரிவுகளில் அவளுடைய பெயரிலேயே பாரதி, ஸரஸ்வதி என்று இரண்டை வைத்தார். ச்ருங்கேரியில் பாரதி ஸந்நியாஸிகள். இங்கே (காஞ்சி மடத்தில்) ஸரஸ்வதி ஸந்நியாஸிகள். ஸரஸ்வதி ஸந்நியாஸிகளிலேயே இரண்டு ஸம்ப்ரதாயங்கள் — ஆனந்த ஸரஸ்வதியென்றும், இந்த்ர ஸரஸ்வதியென்றும். இந்த மடம் இந்த்ர ஸரஸ்வதி ஸம்ப்ரதாயம். ச்ருங்கேரியில் பீடத்திற்குப் பேர் சாரதா பீடம். இங்கே நம் மடத்திற்குப் பேர் சாரதா மடம். ஸரஸ்வதி வெள்ளை வெளேரென்று மல்லிகை மாதிரி இருப்பவள். அவள் சூட்டிக் கொடுண்டுள்ள மல்லிகையின் மாதுர்யத்தையும் மிஞ்சுவதாக இருக்கிறதாம் ஆசார்யாள் வாக்கு! மல்லிகை மாஸத்தில் பிறந்தவரின் வாக்விசேஷம்!
* இப்பகுதியில் “குருமூர்த்தியும் திருமூர்த்திகளும்” என்ற உரையில் “ஆசார்யாள் அளிக்கும் ஆசார்ய லக்ஷணம்” என்ற பிரிவு பார்க்க.
______________________________________________________________________________________________
Appropriateness of Vaisaka Month and Spring Season
Acharya [Sri Adi Sankara] was born in spring season. He was the one to have stated that great men render good to the world just like the spring season, without expecting anything in return*. He was himself like that. The time he incarnated happens to be spring season!
The month he was born in, is Vishakha [विशाखा], which we call as Vaikaasi [in Tamizh]. Vishakha means ‘that which does not have branches’ (शाखा – branch). A tree or plant has branches. Only a creeper does not have branches.
Vishakha month has another name – Madhava [माधव]. Chaitra masam [चैत्र मासम्] is ‘Madhu’ [मधु]; Vaishakha is ‘Madhavam’ [माधवम्]. Madhavi [माधवी] is the name for jasmine. The jasmine creeper is without branches – it is Vishaka; hence both the names of the month have a connection to Jasmine. Not only that. The word ‘Vaasanti’ [वासन्ती] has its roots in [the word] ‘Vasantam’ [वसन्तम्]. Vaasanti is another name for jasmine.
It is very appropriate that the time of Acharya’s birth has so much connection to jasmine. Jasmine, being pure white, represents absolute goodness. It blossoms during summer season, but also provides a breath of coolness. Acharya’s incarnation is like a huge jasmine; he came to provide us relief from the summer of worldly existence [संसार] and as a form of supreme goodness.
The Jayanti of Samkara, who had appeared as a Jasmine of Jnana and provided the fragrance of love, called ‘Sam’, is indeed Vasanta Madhava Jayanti. Let it make our minds, pure white! Let it fill our minds with the fragrance of love! Let it bless us that we may get soaked in love – in Sivam and reach the peaceful state of Sivajnanam [the state of merger with Siva]!
The fragrance of love which helps the individual unite with the pure, white Jnana! Does not the deep inhalation of the fragrance become a Pranayama [प्राणायाम] and culminate with our merger [लय] [with the Supreme]?
Let me tell you a little more about the link with jasmine: While giving the Sri Mukham [श्रीमुखम्] in the matam, the sentence describing Acharya is a long one. In the middle of the description comes this phrase:
“atulita sudhaarasa maadhurya kamalaasana – kaaminee dhammilla samphulla mallikaa maalikaa nishyanda makaranda jharee souvastika vaak vijrumbhanaananda tundilita maneeshi mandalaanaam”.
‘अतुलित सुधारस माधुर्य कमलासन-कामिनी धम्मिल्ल सम्फुल्ल मल्लिका मालिका निष्यन्द मकरन्द झरी सौवस्तिक वाक् विजृम्भणानन्द तुन्दिलित मनीषि मण्डलानाम्’
The meaning is this: Saraswati Devi, the affectionate consort of ‘kamalaasana’ [Brahma who is seated on the lotus], has adorned her tresses called ‘dhammillam’ with jasmine strings. It seems that even the stream of honey that flows from these jasmine flowers is not any match to the sweet words of Acharya, which are like nectar; happily spreading such words in abundance, he is making the entire community of scholars [विद्वत्] revel in great joy!
In order to reveal the omniscience [सर्वज्ञत्वम्] of Acharya to the world, Saraswati herself engaged in debate with him and got defeated. Acharya established the Sarada Peetam [शारदा पीठम्] in Sringeri and seated her there with all her divinity. For two of the ten categories of ascetics, he had given her names – as Bharati and Saraswati. In Sringeri, they are Bharati Sanyasis. Here (in Kanchi Matam), are Saraswati Sanyasis. Within the Saraswati Sanyasis itself there are two traditions [सम्प्रदाय] – Ananda Saraswati and Indra Saraswati. This matam comes under the Indra Saraswati tradition. The religious seat at Sringeri is called Sarada Peetam. Here, the name of our Matam is Sarada Matam. Saraswati is white – like the Jasmine. It seems that the speech of Acharya surpasses even the sweetness [माधुर्यम्] of the jasmine she is wearing! This is the special quality [विशेष] of his eloquence, who was born in the month of Jasmine!
_____________________________________________________________________________________________
*In this section, please see the part, ‘The attributes of an Acharya displayed by Acharya’, in the text titled, “Gurumurty and Trimurtis”.
______________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
🙏🙏🙏🙏🙏
🙏
Sent from my iPhone
>
Can feel the fragrance of malligai and honey dropping from the flowers and acharyal singing ‘bhajE sharadaambaam ajasram madambaam ” in a voice sweeter than honey. Sharadamba so serene. Divine art 🙏
Sharadambal prathyaksham here !! Sowmya brought the full divinity in this picture !!
Acharyal ‘s description is very apt to the picture ! Madhuram athi Madhuram !!