Jaya Jaya Sankara Hara Hara Sankara – Over the past few chapters Sri Periyava mentioned about the significance of ‘Sankara’ Nama. In this chapter HE provides a mathematical perspective on how letters were assigned numbers and they were translated back to words. Today’s computers applications use binary number which are represented by only two symbols or digits, i.e. 0 (zero) and 1(one). It is amazing to note our ancestors developed all these complex systems eons ago that too in the form of verses.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a solid drawing and Shri ST Ravi kumar for the great translation. This is not an straight forward chapter where you could breeze through recording. I could see Sowmya has put in quiet a bit of effort to get the audio perfect. Rama Rama
கடபயாதி ஸங்கியை
அது என்ன காரணம் என்று தெரிவதற்குக் க, ங, ச, ஞ முதலான அக்ஷரங்களைக் கொண்டு எண்ணிக்கைகளை (நம்பர்களை) நிர்ணயிக்கும் ‘கடபயாதி ஸங்கியை’ என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
பழைய நாளில் ப்ரிண்டிங் ப்ரெஸ் என்பது இல்லை. அப்போது எல்லாவற்றையும் புஸ்தகமாகப் போட்டு, வேண்டிய போது பிரித்துப் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க முடியாது. அதனால் எல்லாவற்றையும் புத்திக்குள்ளேயே மனப்பாடம் பண்ணி ஏற்றிக் கொண்டு, ஒவ்வொருவருமே ‘வாக்கிங் லைப்ரரி’களாக இருந்தார்கள். இப்படி மனப்பாடம் பண்ணுவதற்கு விஷயங்கள் செய்யுள் ரூபத்தில் இருந்தால்தான் ஸுலபம். அதனால்தான் நம்முடைய பழைய சாஸ்த்ரங்கள் எல்லாம் ச்லோகங்களாகவே இருப்பது. பக்தி சாஸ்த்ரம், ஞான சாஸ்த்ரம், தர்ம சாஸ்த்ரம், புராணம், இதிஹாசம் எதுவானாலும் பொயட்ரிதான். ப்ரோஸே கிடையாது. மற்ற கலைகள்,ஸயன்ஸுகள், கணித சாஸ்த்ரம், பரத சாஸ்த்ரம், ரஸ சாஸ்த்ரம், வாஸ்து சாஸ்த்ரம், காம சாஸ்த்ரம் எதுவாகத்தானிருக்கட்டும் – எல்லாம் ச்லோகங்கள்தான். அகராதிகூட ச்லோகங்களாகவே இருக்கிறது !
கணக்கு ஸமாசாரங்களை எப்படி ச்லோகமாகப் பண்ணுவது என்று இந்தக் காலத்தில் தோன்றலாம். ஆனால் அந்தக் காலத்தில் அதையும் பண்ணியிருந்தார்கள். கணக்கு என்றால் நடுநடுவே எண்ணிக்கைகள் நிறைய வரத்தானே செய்யும்? அவற்றை ச்லோகத்தில் எப்படிக் காட்டுவது, இதற்காகத்தான் கடபயாதி ஸங்க்யை என்பதாக ஒவ்வொரு எண்ணுக்கும் எழுத்துக்களின் மூலம் ஸங்கேதம் கொடுத்தார்கள். அந்த அக்ஷரங்களைச் சேர்த்து ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால், வெளியில் பார்த்தால் அது வார்த்தையாயிருக்கும், உள்ளுக்குள்ளே அது பல digit-களை (ஸ்தானங்களை)க் கொண்ட ஒரு நம்பராயிருக்கும்!
க, ட, ப, ய என்ற எழுத்துக்களிலிருந்து ஆரம்பித்து இப்படி எண்ணிக்கை ஸங்கேதம் கொடுத்திருப்பதால் அதற்குக் ‘கடபயாதி ஸங்க்யை’ என்று பேர்.
“காதி நவ; டாதி நவ; பாதி பஞ்ச; யாத்யஷ்ட” என்று அதற்கு விதி வகுத்திருக்கிறார்கள்.
‘காதி நவ’ என்றால் ‘க’விலிருந்து ஆரம்பித்து ஒன்பது எழுத்துக்கள். ஸம்ஸ்க்ருதத்தில் ka, kha, ga, gha என்று ‘க’ வர்க்கத்திலேயே நாலு. அப்புறம் ‘ங’. அதற்கப்புறம் ‘ச’- அதிலேயும் cha, chha, ja, jha என்று நாலு. இப்போது ‘க’ வரிசை நாலு, ‘ங’, ‘ச’ வரிசை நாலு ஆகியவற்றைக் கூட்டினால் ஒன்பதாகிறது: “காதி நவ”. க முதற்கொண்டு ஒன்று, இரண்டு என்று அந்த ஒன்பது எழுத்துக்களுக்கும் நம்பர் கொடுக்கணும். ka-ஒன்று; kha-இரண்டு; ga-மூன்று; gha-நான்கு; ங-ஐந்து; cha-ஆறு; chha-ஏழு; ja-எட்டு; jha-ஒன்பது. ka முதற்கொண்டு jha வரையில் ‘காதி நவ’ என்பதான ஒன்று முதற்கொண்டு ஒன்பது வரை.
அடுத்தது ‘டாதி நவ’ அதாவது ‘ட’ முதற்கொண்டு ஒன்பது எழுத்து. ta-ஒன்று; tha-(ட்ட) இரண்டு; da-மூன்று; dha-(ட்ஹ) நான்கு; ண-ஐந்து; tha(த) ஆறு; thha(த்த)-ஏழு; dha(த)-எட்டு; dhha(த்ஹ)-ஒன்பது.
‘பாதி பஞ்ச’ என்றால் ‘ப’ முதற்கொண்டு ஐந்து எழுத்து; pa, pha, ba, bha, ma என்பவை. முறையே இவை 1, 2, 3, 4, 5 என்பவற்றை குறிக்கும்.
‘யாத்யஷ்ட’ என்பது ‘யாதி அஷ்ட’. ‘ய’விலிருந்து எட்டு எழுத்து என்று அர்த்தம். ய-ர-ல-வ-ச (cha இல்லை; ‘சங்கர’வில் வரும் ‘ச’) – ஷ-ஸ-ஹ என்ற எட்டு எழுத்துக்கள். ய-ஒன்று; ர-இரண்டு………ஹ-எட்டு.
இப்போது இம்மாதிரி எழுத்துக்களைக் கொண்ட வார்த்தைகளால் எண்ணிக்கைகளை எப்படிக் குறிப்பது, புரிந்து கொள்வது என்பதற்கு உதாஹரணம் சொல்கிறேன்.
‘ஜய’ என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். ஜய சப்தம் எப்போதுமே மங்களமானது, ஆசார்யாளோடு அது விசேஷமாகப் பொருந்துவது என்பதோடு, அது (‘ஜய’ என்பது) ஒரு எண்ணிக்கையாகக் கடபயாதி ஸங்க்யையில் சொல்லப்படுவதால் அதை எடுத்துக்காட்டாகப் பார்ப்போம்.
‘ஜய’ என்பதில் ‘ஜ’ என்பது ‘காதி நவ’, ‘டாதி நவ’ முதலானவற்றில் எங்கே வருகிறது. அதற்கு என்ன வால்யூ (அதாவது எண்ணிக்கை) என்று பார்த்தால், அது முதலாவதான ‘காதி நவ’விலேயே, ka-kha-ga-gha-ங-cha-chha-ja-என்பதாக, எட்டாவதாக வந்து விடுகிறது. அதாவது அது 8 என்ற எண்ணைக் குறிக்கிறது.
‘ய’ என்பது ‘யாத்யஷ்ட’ என்பதில் முதல் எழுத்து; அதாவது 1 என்ற எண்ணைக் குறிப்பதாக இருக்கிறது.
ஆகையால் ஜ-ய என்றால் 8-1 என்று வருகிறது.
ஆனால் இந்த ஸங்க்யையில் இன்னொரு ரூல் இருக்கிறது. அதன்படி எண்களைத் தலைகீழாக மாற்றிச் சொல்ல வேண்டும். “அங்காநாம் வாமதோ கதி:” என்பது அந்த ரூல். ‘அங்க’ (anka) என்றால் எண்ணிக்கை. ‘வாம’ என்றால் எதிர்பக்கம், ‘reverse-ஆக’ என்று அர்த்தம். அதாவது கடபயாதிப்படி வரும் பல ஸ்தான எண்ணிக்கையை தலைகீழாக மாற்றிச் சொல்ல வேண்டும். 123 என்று வந்தால் அதை 321 என்று திருப்பிப் போட வேண்டும்.
பகவத்கீதையில் த்யானத்திற்காக ஆஸனம் போட்டுக் கொண்டு ஜபம் பண்ணுவதைச் சொல்லும்போது “சைலாஜிந-குசோத்தரம்” என்று பகவான் சொல்கிறார்.1 ‘சைலம்’, ‘சேலம்’ என்றால் துணி. ‘சேலை’ என்று அதிலிருந்துதான் வந்தது. ‘அஜினம்’ என்றால் தோல், அதாவது மான்தோல் அல்லது புலித்தோல். ‘குசம்’ என்றால் தர்ப்பை. ‘சைலாஜினகுசம்’ என்று அதே ஆர்டரில் வைத்துக் கொண்டால் ஆஸனமாக முதலில் பூமியில் துணியையும், அதற்குமேல் தோலையும், எல்லாவற்றையும் மேலே தர்ப்பையையும் போட்டுக் கொண்டு உட்கார வேண்டுமென்று ஏற்படும். இப்படி உட்கார்ந்தால் என்ன ஆகும்? தர்ப்பை குத்தி அறுக்கும். அடியிலிருக்கிற தோல் வேறே உறுத்தும். அப்புறம் த்யானத்திலா மனஸு நிற்கும்? அதனால் இங்கே ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் பொது ஆர்டரைத் தலைகீழாக மாற்றி, முதலில் பூமிமேல் தர்ப்பையைப் பரத்தி, அப்புறம் அதற்குமேல் மான்தோலோ புலித்தோலோ போட்டு, கடைசியாக ஒரு வஸ்த்ரத்தை எல்லாவற்றுக்கும், மேலே விரித்துக் கொண்டு உட்கார வேண்டும் என்று ‘ரிவர்ஸ்’ பண்ணிக் கொடுத்திருக்கிறார். இங்கே தலைகீழாக அர்த்தம் செய்ய வேண்டியிருப்பது போலத்தான் அந்த ஸங்க்யையில் எண்களை மாற்றிப் போடவேண்டும்.
அப்படிப் பண்ணும்போது 81 என்று (‘ஜய’ வுக்கு எண்ணிக்கை) சொன்னது 18 என்றாகும். “ஜய” என்றால் பதினெட்டு.
18 ஜயப்ரதமான எண்ணிக்கை. அதனால் அந்த உதாஹரணம் காட்டினேன்.
மேளகர்த்தா ராகங்கள் என்று கேள்விபட்டிருக்கலாம். ஸம்பூர்ணமாக ஸப்த ஸ்வரங்களையும் ஆரோஹண அவரோஹணங்களில் கொண்ட 72 ராகங்களுக்கு அப்படிப் பேர். அடுத்தடுத்த ராகங்களுக்கிடையில் ஒரே ஒரு ஸ்வரம் வித்யாஸப்படும் விதத்தில் அந்த 72 ராகங்களையும் வரிசைப்படுத்தியிருக்கிறது. வேங்கடமகி என்ற பெரியவர் அப்படி வரிசைபடுத்தினார். அவர் யாரென்றால் தஞ்சாவூர் நாயக்ராஜ்யம் ஏற்பட மூல புருஷராயிருந்தவரும், அநேக தர்மங்களையும் மஹாதானங்களையும் செய்தவரும், அத்வைத வித்யாசார்யர்களில் ஒருவருமான கோவிந்த தீக்ஷிதர் என்பவரின் புத்ரர்.
மேளகர்த்தா ராகங்கள் 72-ல் எந்த ராகம் எத்தனாவது என்று கண்டுபிடிக்க வசதியாக அந்த ராகங்களின் பெயர் ஆரம்பத்தில் கடபயாதி ஸங்க்யைப்படிதான் இரண்டு எழுத்துக்கள் இருக்கும். இப்படி ஸரியாய் வரவேண்டுமென்றே சங்கராபரணம், கல்யாணி என்பது போலுள்ள பெயர்களை ‘தீர’ சங்கராபரணம், ‘மேச’ கல்யாணி என்றெல்லாம் முதலில் இரண்டு எழுத்துச் சேர்த்துச் சொல்லியிருக்கும். ‘தீ-ர’ என்பது சங்கராபரணம் எத்தனாவது மேளமோ அந்த நம்பரைக் குறிப்பிடும். ‘மே-ச’ என்பது கல்யாணியின் மேள நம்பரைக் குறிப்பிடும்2.
____________________________________________________
1 VI. II
2 “தீ (dhhee) ர” என்பதில் “தீ” என்பது “த” dhha-வின் அடியாக வருவது. Dhha என்பது ‘டாதி நவ’ வில் 9-ஐக் குறிக்கும். ‘ர’ என்பது ‘யாத்யஷ்ட’ப்படி 2. எனவே தீ-ர என்பது 9-2, தலைகீழாக்கினால் 29. சங்கராபரணம் 29-வது மேளம்.
‘மேச’ என்பதில் ‘மே’ என்பதில் ‘ம’வில் பிறப்பது. ‘ம’ என்பது ‘பாதிபஞ்ச’வில் 5. ‘ச’ (cha) என்பது ‘காதி நவ’வில் 6. மே-ச என்பது 5-6. முன்பின்னாக மாற்ற 65 அதுவே கல்யாணியின் மேள எண்.
_______________________________________________
Katapayaadi Sankhya
To know the reason for that (method of choosing the name based on month, paksha and tithi), I should tell you about ‘Kaṭapayaadi Sankhya [कटपयादि संख्या], the system which determines the numbers based on ka [क], nga [ङ], cha [च], nya [ञ] etc.
In olden days, there was no printing press. Thus, it was not possible that everything could be put in the form of a book, which could be referred to any time one wanted. So people used to memorise everything and retain it in their minds and were like walking libraries. Memorisation is easy only if the matter is in the form of poetry. That is why our ancient Sastras are all in the form of verses. Be it Bhakti Sastra [भक्ति शास्त्र], Jnana Sastra [ज्ञान शास्त्र], Dharma Sastra [धर्म शास्त्र], Puranas [पुराणाः], Itihasa [इतिहास] – whatever it may be – they were all only in poetry. There was no prose at all. The other arts and sciences – Sastra of Mathematics [गणित शास्त्र], Bharata Sastra [भरत शास्त्र], Rasa Sastra [रस शास्त्र], Vastu Sastra [वास्तु शास्त्र], Kama Sastra [काम शास्त्र] – whatever it may be – everything was only in verses. Even dictionary was in the form of verses!
In the present days, one may wonder how matters relating to maths can be made into a verse. But in those days they had done that too. In mathematics, will numbers not appear every now and then? How can they be shown in a verse? For this purpose, a number was assigned to each consonant letter, which is known as Katapayaadi Sankhya [कटपयादि संख्या]. If all these letters are joined to form a word, externally it will appear like a word, but internally it will be a number consisting of several digits.
Since it starts with the letters ka [क], ta [ट], pa [प], ya [य] and is linked to numbers, its name is ‘Katapayaadi Sankhya’.
For this purpose a rule has been prescribed as follows: “kaadi nava [कादि नव]; taadi nava [टादि नव]; paadi pancha [पादि पञ्च]; yaadyashta [याद्यष्ट]”.
Kaadi Nava means, nine letters starting from ‘ka’. In Sanskrit, there are four letters in the category of ‘ka’, as ka [क], kha [ख], ga [ग], gha [घ], and then ‘’nga’ [ङ]; then comes ‘cha’; in that also we have another four – cha [च], chha [छ], ja [ज], jha [झ]. Adding the four letters of the ‘ka’ row, ‘nga’ and the four of ‘cha’ row, it becomes nine: “Kaadi Nava”. Numbers should be assigned to all the nine consonants in ascending order as 1, 2 etc. starting from ‘ka’. ka [क]–1, kha [ख]-2, ga [ग]-3, gha [घ]-4, nga [ञ]-5, cha [च]-6, chha [छ]-7, ja [ज]- 8, jha [झ]-9. It is ‘kaadi nava’ from 1 to 9, starting from ka till jha.
Next is ‘taadi Nava’ [टादि नव]. That is, nine consonants from ‘ta’. ta [ट]-1; tha [ठ] – 2; da [ड]-3, dha [ढ]-4; Na [ण]-5; tha [त]-6; thha [थ]- 7, dha [द]-8; dhha [ध]-9.
‘Paadi Pancha’ [पादि पञ्च] means five consonants starting from ‘pa’; pa [प], pha [फ], ba [ब], bha [भ] and ma [म] in that order. These denote 1, 2, 3, 4 and 5.
‘Yaadyashta’ [याद्यष्ट] is ‘yaadi ashta’ [यादि अष्ट]. This denotes the eight consonants starting from ‘ya’. Ya [य] –ra [र]-la [ल]-va [व]-sa [श] (‘sa’ as in Sankara), sha [ष], sa [स], ha [ह] – eight consonants. ya-1, ra-2 and so on up to ha-8.
Now, let me give an example of how to assign and understand a number using the word consisting of these consonants.
Let us take the word ‘jaya’ [जय]. The sound of the word Jaya is always auspicious. Not only because it is especially suited to Acharya [Sri Adi Sankara], it (‘Jaya’) is also mentioned as a number in Katapayadi Sankhya; so let us look at it as an example.
When we look at where ‘ja’ [ज] in ‘jaya’ comes in ‘Kaadi nava’ [कादि नव], ‘Taadi nava’ [टादि नव] etc. and what is its value, it comes as the eighth in ka-kha-ga-gha-nga-cha-chha-ja . That is, it represents the number 8.
‘Ya’ is the first letter in ‘yaadyashta; that is, it denotes the number 1.
So, the word ja-ya denotes 8-1.
However, there is one more rule in this numbering system. According to that, the digits should be mentioned in the reverse manner – left to right – to arrive at the final number. The rule is ‘ankaanaam vaamato gatihi:’ [अङ्कानां वामतो गतिः]. ‘Anka’ [अङ्कः] means digit. ‘Vaama’ [वाम] means ‘reverse’. That is, the digits we get as per the Katapayaadi system should be read in the reverse. If it comes as 123, it should be read as 321.
Bhagawan [Sri Krishna], when talking about preparing the seat for doing meditation, says, “chailaajina-kusottaram” [चैलाजिन-कुशोत्तरम्]1. ‘chailam’ [चैलम्] or ‘chaelam’ [चेलम्] means cloth. The word, Selai [சேலை – saree] has come only from this. ‘Ajinam’ [अजिनम्] means hide – the skin of a deer or a tiger. ‘Kusam’ [Kusa-कुश], means Darbha [दर्भ – sacred grass]. If we take it in the same order as “chailaajinakusam”, it will mean that the cloth has to be spread first on the floor, the hide above it and the Darbha on top, for one to sit on it. What will happen if we sit like this? The Darbha will prick and tear our skin. The hide below that will also prick. In such a case, will the mind dwell on meditation? Acharya has taken the order given here in reverse in his Bhashyam [commentary on the Gita], saying the Darbha should be spread first on the floor, the deer skin or tiger skin should be placed over that, and lastly a cloth be placed on top of all these and one sit on it [for meditation]. Just as we interpret the order in reverse here, the number [derived from Katapayaadi Sankhya] should also be read in the reverse order.
When we do that, 81 (the number for ‘Jaya’) will become 18. “Jaya” means 18.
18 is a number denoting victory. That is why I gave this example.
You might have heard about Melakarta Ragas. The 72 ragas which contain all the seven notes – the Sapta Swaras – in their Aarohanam [आरोहणम् – ascending order of notes] and Avarohanam [अवरोहणम् – descending order of notes] are called so. All the 72 ragas have been serially structured in such a way that consecutive Ragas will differ in only one swara (स्वर). A scholar by the name Venkatamakhi had done this listing. He was the son of Govinda Deekshithar who was primarily responsible for establishing the reign of Nayak kings in Tanjavur, had undertaken several Dharmic activities, done extensive charity work and was one of the great Gurus of Advaita Vidya.
To facilitate identifying the number of a particular raga in Melakarta listing, two consonants as per Katapayadi Sankhya are added to the name of the raga in the beginning. To ensure that they are in the precise order, the names of ragas like Sankarabharanam, Kalyani, etc. are given as ‘Dhheera’ Sankarabharanam [धीर-शङ्कराभरणम्] and ‘Maecha’ Kalyani [मेच-कल्याणी], by adding two letters in the beginning. ‘Dhhee-ra’ denotes the number of the Mela[karta], which Sankarabharanam pertains to. ‘Mae-Cha’, denotes Kalyani’s Mela[karta] number2.
________________________________________________________
1 VI.II
2 Dhhee [धी] in “Dhhee Ra” [धीर] comes from the letter “Dhha” [ध]. Dhha denotes 9 in ‘Taadi nava’ [टादि नव]. ‘Ra’ is 2 as per ‘Yaadyashta’. So Dhhee-ra is 9-2. When reversed it is 29. Thus Sankarabharanam is the 29th Melam.
In ‘Maecha’ [मेच], ‘mae’ [मे] originates from ‘ma’. ‘Ma’ [म] is 5 in ‘paadi pancha’ [पादि पञ्प]. ‘Cha’ [च] is 6 in ‘Kaadi Nava’ [कादि नव]. Mae-Cha is 5-6. On reversing the digits, it becomes 65, which is the Mela number for Kalyani.
_________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA
OM SRI MATRE NAMAHA
Hare Rama. Thanks for sharing. Wonderful Pictures.
மஹாபெரியவா திருவடிகளுக்கு நமஸ்காரங்கள்.
கடபயாமதி சாஸ்த்திரம் அதி ஆச்சர்யமானது. இதை அவசியம் பாதுகாக்க வேண்டும்.
ஜய ஶ்ரீ சத்குருநாதர் திருவடிகளே சரணம்.
ஜய ஶ்ரீ மந் நாராயண.
ராம ராம ராம.
And.. cavarga’s na and tavarga’s na are assigned zero.
Ram Ram