Jaya Jaya Sankara Hara Hara Sankara – Of all the Namas that Eswara has why ‘Sankara’ was chosen and its significance? Sri Periyava explains in his inimitable way.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for the majestic drawing/audio. and Shri ST Ravi kumar for the great translation. The tejas on Bala Sankarar’s face is mesmerizing. Rama Rama
நாமகரணச் சிறப்பு
அவதாரமாகி விட்டது.
பெற்றவர்கள், ஊரில் இருந்தவர்கள் எல்லாருக்கும் ஸந்தோஷமாயிற்று.
லோகம் பூராவுமே அப்போது அநேக சுப சகுனங்கள் தோன்றியதாகவும், வைதிக விருத்தமாகப் பாஷண்ட மதங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் ஒரே துர்நிமித்தங்களாகத் தோன்றின என்றும் “சங்கர விஜய”ங்களில் இருக்கிறது.
(பிறந்தவுடன் செய்யும் ஸம்ஸ்காரமான) ஜாதகர்மா சிவகுரு செய்தார்.
பதினோராவது நாள் புண்யாஹவாசனம் பண்ணி நாமகரணம் செய்ய எண்ணினார்கள்.
சங்கரர் என்று பிதா பேர் வைத்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.
எதனால் அந்தப் பேர் வைத்தார்?
ஈச்வரனுக்கு வேண்டிக் கொண்டு ஈச்வரனின் வரப்படி தானே பிள்ளை பிறந்திருந்தது? அதனால் ஈச்வர நாமாக்களில் ஒன்றான சங்கர நாமாவை வைத்தார்.
ஈச்வரனுக்கு எத்தனையோ நாமா இல்லையா? இதைத் தேர்ந்தெடுத்து வைப்பானேன்?
பெரியோர்களாக இருப்பவர்கள் (புத்தி பூர்வமாகத்) தெரிந்து ஒன்று பண்ணாதபோதிலுங்கூட அதில் அநேக உள்ளர்த்தங்கள் இருக்கும். அந்த மாதிரி, சும்மாயிருக்கும் சம்புதான் கார்யம் செய்யும் சம்கரராக, “சங்கரம் லோக சம்-கரம்” என்னும்படியாக லோகத்துக்கெல்லாம் நல்லதைச் செய்பவராக வந்திருக்கும்போது அவருக்கு அந்தப் பெயர் தான் வைக்கணுமென்று ஏதோ ஒரு உள்ளுணர்ச்சியில் அவருடைய பிதாவுக்குத் தோன்றியிருக்கலாம்.
ஒரு வஸ்துவுக்கு ஒரு பெயர் ஏற்படுவதில் ‘ரூடி’ என்றும் ‘யோகம்’ என்றும் இரண்டு விதம் உண்டு. ஏதோ ஒரு பெயர் சொன்னால்தானே புரியும்? அதனால் அப்படி ஏற்படும் பேர் ‘ரூடி’. அப்படியில்லாமல் அந்த வஸ்துவின் குணம் அல்லது அது செய்யக்கூடிய கார்யத்தை வைத்து அதற்குப் பேர் வைப்பது ‘யோகம்’ அல்லது யௌகிகம். இதில் அந்த வார்த்தையை தாது பிரித்து அர்த்தம் சொல்ல முடியும்.
ஒருவருக்கு ஏதாவது ஒரு பெயர் வைத்துத்தானாக வேண்டுமென்பதால் ஏதோ ஒன்றை வைப்பதை ‘ரூடி’ என்றும் அவருடைய குண – கர்மங்களைக் குறிக்கும் விதத்தில் வைப்பதை ‘யௌகிகம்’ என்றும் ஒரு தினுஸில் சொல்லலாமானால் அப்போது ஆசார்யாளுக்கு சங்கர நாமம் ரூடி, யௌகிகம் இரண்டுமாகி விடுகிறது. அப்பா பாட்டுக்குப் பேர் வைத்தார்; அதுவே அவருடைய லக்ஷணையாகவும் இருந்துவிட்டது!
‘அப்பா பாட்டுக்கு வைத்தார்’ என்றது அவ்வளவு ஸரியில்லை. அவரும் ஒரு காரணத்திற்காகத்தான் அப்படி வைத்தார். நல்லதைச் செய்கிறவர் சம்-கரர் என்கிற காரணத்திற்காக அல்ல. வேறே ஒரு காரணதிற்காக, அவதாரம் இன்ன மாஸம், இன்ன பக்ஷம், இன்ன திதி என்று ஸங்கேதமாகக் காட்டுவதற்காகப் பேரில் இன்ன அக்ஷரங்கள் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து வைத்தார். சேர்த்துப் பார்த்தால் அதுவே ‘சங்கர’ என்றாகி ஆசார்யாளின் ‘யௌகிக’ப் பேருமாகிவிட்டது!
_________________________________________________________________________________________________
Significance of the naming ceremony
The incarnation took place.
Parents and all the people of the village were happy.
It is mentioned in “Sankara Vijayam(s)” that several auspicious signs appeared throughout the world at that time; but for those who were propagating heretical (पाषण्ड) doctrines against the Vedic ways, lot of ominous omens appeared.
Sivaguru performed Jatakarma (जातकर्म – the ceremony performed immediately after birth).
They decided to have the Punyahavachanam (पुण्याहवाचनम् – purification ceremony) and perform the naming ceremony (नामकरणम्) on the eleventh day.
Everyone knows that the father named the child Sankara.
Why did he give that name?
Was not the son born after offering prayers to Eswara and receiving His blessings? So he chose Sankara, one of the names of Eswara.
Does Eswara not have many names? Why choose this particular one?
When elders do something, even if it is not a pre-meditated (बुद्धिपूर्व) act, there will be many inner meanings to it. In this manner, when the tranquil Sambhu incarnated as Samkara, as one who was to do lot of activities and as one who was going to render so much good to the entire world – “Sankaram Loka Sam-karam” [शङ्करं लोक शम्-करम्], it might have intuitively occurred to the father to give only that name.
An object gets its name in two ways, as ‘Roodi’ (रूढि-convention) and ‘Yogam’ [योगम् – characteristic]. It [the object] can be understood only if it has a name isn’t it? A name just given that way is ‘Roodi’. In contrast to this, if the name given is based on the quality of the object or the action that it would do, it is ‘Yogam’ or ‘yowgikam’ [यौगिकम्]. In this type, the word can be interpreted from its root word [धातु].
In general, we can say that if a person is given a name only because some name should be given, it is called ‘roodi’ and if it is given based on the quality and action of the person, it is called, ‘yowgikam’; then the name Sankara for Acharya fulfils both – roodi and yowgikam. The father gave some name and that name itself defined his attribute!
It is not proper to say that the father ‘gave some name’ randomly. He gave that name for a reason. Not for the reason that Sam-kara is the one who does good, but for some other reason. He had chosen the name, consisting of those specific letters, which provide the clue to the month, paksha [पक्ष:] and tithi [तिथि:] in which the incarnate was born. When combined, that became ‘Sankara’ and also became the ‘yowgika’ name.
______________________________________________________________________________________________
Audio
Categories: Deivathin Kural
உதித்தனரே சங்கரர்
அவனியில் உதித்தனரே
ஆதி சங்கரர் அவனியில்
உதித்தனரே உதித்தனரே…. (உ)
கண்டனரே சங்கரன்
தம்மைக் கண்டனரே
சிவ சங்கரன் தம்மைக்
கண்டனரே கண்டனரே
சம் கரம் புரிந்திட
உதித்தனரே லோக
சம் கரம் புரிந்திட
உதித்தனரே உதித்தனரே (உ)
சிவ சங்கரன் ஆதி
சங்கரராய் உதித்தனரே
சிவ சங்கரன் ஆதி
சங்கரராய் உதித்தனரே
உரைத்தனரே காஞ்சி
மஹான் உரைத்தனரே
சங்கரர் நாமம்
ஏனென உரைத்தனரே (உ)
தூரிகையில் காரிகை
ஓவியம் தந்தனளே
வரைந்தனளே சௌம்யா
எழிலாய் வரைந்தனளே
புனைந்தேனே இறை
அருளால் புனைந்தேனே
அடியன் சிவ ராம தாஸன்
கவியில் வாழ்த்துதுமே ! (உ)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
Yet another divine drawing by Sowmya. In this drawing, the Tejas of Acharyal and the Saantham of Sri Dakshinamurthy seems to have combined in our Periyava. Vande Guru Paramparam. Hara Hara Sankara Jaya Jaya Sankara.