112. Sri Sankara Charitham by Maha Periyava – Offering the mind and silent contemplation


 


Jaya Jaya Sankara Hara Hara Sankara – What is the best way to celebrate Sankara Jayanthi and bring Acharyal into our minds? What is the best way to do Kainkaryams to Sri Matam? Periyava enlightens us with a very simple technique.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for the befitting drawing/audio and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama


மனத்தின் அர்ப்பணமும் மௌன மனனமும்

அது நடக்கிறபோது நடக்கட்டும். இப்போதைக்கு என்ன பண்ணணுமென்றால் ஆசார்ய ஜயந்தியன்று நம் மனஸை ஆசார்யார்ளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். த்ரவ்யத்தால், தேஹத்தால் உத்ஸவம் பண்ணுவதற்கு முந்தி மனஸினால் பண்ண வேண்டும். த்ரவ்யத்தையும், தேஹத்தையும் அர்ப்பித்துப் பெரிசாக உத்ஸவம் பண்ணும் போதுங்கூட மனஸைப் பூர்ணமாக அவருக்குக் கொடுத்து சரணாகதி பண்ணுவதே பெரிய பூஜை. இப்படிச் சொல்வதால் வெளி உத்ஸவம் வேண்டாமென்று அர்த்தமில்லை. முழு மனஸோடுகூட வெளி உத்ஸவமும் செய்யணும்.

இப்போது1 கொஞ்ச நாழி மனஸை ஆசார்யாளுக்கென்றே கொடுப்போம். அவதார மஹிமை, அது, இது என்று நிறையப் பேசியும், பேசியதைக் கேட்டும் ஸந்தோஷப்படுவதைவிட, முடிந்த மட்டும் மனஸை ஆசார்யாளிடம் அர்ப்பணம் பண்ணுவோம். அதுதான் பெரிய ஸந்தோஷம். மனஸில் அவரைக் கொண்டுவந்து நிறுத்திக் கொண்டு கொஞ்சம் பார்த்தோமானால் அதுவே பெரிய ஸந்தோஷம். நம்முடைய தாபமெல்லாம் சமனமாகிற பெரிய சாந்தி அது தான்.

பகவத் ஸ்மரணத்தைவிட பகவத்பாத ஸ்மரணம் அதிக சாந்தி! நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் காரணமாயிருந்து கொண்டு, கெட்டதற்காக நம்மை தண்டிக்கவும் செய்யும் பகவானைவிட, நல்லதே செய்து கொண்டு, நாம் எத்தனை கெட்டுக் குட்டிச் சுவராயிருந்தாலும் நம்மை உத்தரிப்பதற்கென்றே வந்த பகவத்பாதாளை ஸ்மரிப்பதே நமக்குப் பெரிய சாந்தி.

‘எப்படி மனஸை அர்ப்பிப்பது, அதாவது அது கண்ட கண்டதுகளை நினைக்காமல் அவரையே எப்படி மனஸில் கொண்டுவந்து நிறுத்திக் கொள்வது?’ என்றால் ஸுலபமாக வழி சொல்லித் தருகிறேன். “ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர” என்று மனஸுக்குள்ளேயே சொல்லிக் கொள்வதுதான் வழி. அதன் வழியாக அவர் மனஸுக்குள் வந்துவிடுவார். “வையகம் துயர் தீர” ஞானஸம்பந்தர் காட்டிக் கொடுத்த வழி ஹர நாம உச்சாரணந்தானே?

ஆழ்க தீயதெல்லாம்அரன் நாமமே
சூழ்க, வையகமுந் துயர் தீர்கவே
!

அதனால் “ஹர ஹர” என்று சங்கர நாமாவோடு சேர்த்துச் சொல்வோம். அவர் திக்விஜய சங்கரராக இருந்ததால் “ஜய ஜய” என்றும் சேர்த்துச் சொல்வோம். வேறே உபந்நியாஸம் வேண்டாம். புத்தி ஸாமர்த்தியங்கள் வேண்டாம்.

“எதற்கு வ்ருதாவாக (வீணாக) சாதுர்ய வாதங்கள் பண்ணிக் கண்டக்ஷோபம் (தொண்டைக்கு உபத்ரவம்) விளைவித்துக் கொள்கிறாய்! நீ புத்திசாலி இல்லையா? பேசாமல் சம்புவின் பாத பத்மங்களை நினைத்துக் கொண்டு பரமானந்தத்தை அநுபவி” என்று அந்த சம்புவின் பாதமாக வந்த பகவத்பாதாளே சொல்லியிருக்கிறார்:

வ்ருதா கண்டக்ஷோபம் வஹஸி தரஸா தர்க்கவசஸா
பதாம்போஜம் சம்போர் பஜ பரம ஸெளக்யம் வ்ரஜ ஸுதீ:2

“ஸுதீ :” — ‘நல்ல புத்தியுள்ளவனே, சமர்த்துக் குழந்தையே!’ என்று கூப்பிட்டு இப்படி உபதேசம் பண்ணியிருக்கிறார். அதனால் இந்தப் புண்ய காலத்தில் வேறே உபந்நியாஸம் ஒன்றும் வேண்டாம். அதிலும் ஏதாவது மாற்று அபிப்ராயம் வரத்தான் வருகிறது. அதனால் வேண்டாம்! கொஞ்சம் நாழி ”ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர“ என்று மனஸுக்குள் சொல்லிக் கொண்டிருப்போம். மனஸுக்குள்; வெளியில் சப்தம் வரவேண்டாம்! யோகம், த்யானம், ஸமாதி என்று முடியாவிட்டாலும் இந்த ஜபம் போதும். இதற்கே ஆசார்யாள் வந்து அநுக்ரஹம் பண்ணிவிடுவார்.

ஆசார்யாள் உத்ஸவமும் இந்த மடத்துக் கைங்கர்யமும் நீங்களெல்லாம் திரவியத்தாலும் தேஹத்தாலும் செய்யணுமென்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ‘வருஷத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்தாவது மட கைங்கர்யம் பண்ணுங்கள்; வாரத்தில் week-end ஒருநாள் மடத்துக்குக் கொடுங்கள்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். அதெல்லாவற்றையும்விட இன்றைக்கு இப்போது அஞ்சு நிமிஷம் “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” என்று மனஸை நிறுத்தி மனஸுக்குள் சொல்லிவிட்டீர்களானால் அதுதான் மஹா உத்ஸவம், மஹா பெரிய மடத்துக் கைங்கர்யம். நீங்கள் நன்றாயிருக்க, உங்களால் மடம் நன்றாயிருக்க, உங்களை மடம் நன்றாக வைக்க — எல்லாவற்றுக்கும் இந்த ஜபத்தைவிட எதுவும் வேண்டாம்! பதார்த்தத்தால், கைங்கர்யத்தால் செய்வதைவிட மனஸால் செய்வது பெரிசு.

வாய்விட்டுச் சொல்லாமல் எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம், “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” என்று ஜபித்துக் கொண்டிருங்கள் — நான், ” அரோஹரா ” என்று சொல்கிற வரை!

(இவ்விதம் கூறிச் சில நிமிஷங்கள் எல்லோரையும் மானஸிகமாக ஜபிக்கச் செய்கிறார்கள். அதன்பின் மும்முறை “அரோஹரா” சொல்லி அவர்களையும் சொல்ல வைத்து, ”கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்று தாம் கூறி,”கோவிந்தா கோவிந்தா” என்று ஸபையோர் கோஷிக்க, அன்றைய உபந்நியாஸத்தை முடிக்கிறார்கள்.)

1 இப்பகுதி 1960 ஆச்சார்ய ஜெயந்தி அன்று திருச்சியில் ஆற்றப்பட்ட உரையில் வருவதாகும்.
2 “சிவானந்தலஹரி” ஆறாவது ச்லோகப் பின் பாதி.

________________________________________________________________________________________________

Offering the mind and silent contemplation

Let it [the celebration of Acharya’s Jayanti the way I desire] happen whenever it does.  What we should do right away is that on the day of Acharya’s [Sri Adi Sankara’s] Jayanti, we should dedicate our minds to Acharya.  Before we ceremonially celebrate it [the utsavam – Jayanti of Acharya] with material things and with physical effort, we should do it with our minds. Even while celebrating the utsavam in a big way by offering material and physical effort, the biggest puja would be to completely offer our mind to him and surrender.  When I say this, it does not mean that the external utsavam is not required. It should also be done with complete focus of mind.

Now, for some time, let us offer our mind exclusively to Acharya1.  Instead of deriving pleasure by talking and listening about the greatness of the incarnation and other related things, let us submit our mind to Acharya to the maximum extent possible.  That would be the greatest joy.  It would be a great feeling of happiness if we could bring him into our mind and dwell on him a little.  That will bring in the peace which will calm down all the distress within us.

Remembering Bhagawadpada gives us more peace than remembering Bhagawan himself!  It is greater peace to be remembering Bhagawadpada who incarnated only to do good to us, and to rescue us even if we have degraded to a great extent, rather than remembering Bhagawan, who while being the cause for all the good and the bad, also punishes us for our wrong doings.

To the question ‘How can the mind be offered? How can he be brought into the mind which keeps thinking of unwanted things, and made to dwell there?’, I will give you a very simple solution.  The only way is to keep chanting “Hara Hara Sankara, Jaya Jaya Sankara” mentally.  Through that, he will come and occupy our mind.  Isn’t chanting the name of Hara the way shown by Jnanasambandar to ‘get rid of the world’s misery’ (வையகம் துயர் தீரvaiyagam thuyar theera)?

aazhga theeyadhellam! aran naamame
soozhga, vaiyagamum thuyar theergavae!

ஆழ்க தீயதெல்லாம்அரன் நாமமே
சூழ்க
, வையகமுந் துயர் தீர்கவே!

Let us, therefore, add “Hara Hara” to the name of Sankara and chant.  As he was Digvijaya Sankara, we shall also add “Jaya Jaya”.  No other discourse is necessary. No other intelligent trick is required.

Bhagawatpada, who was in fact the holy feet of Sambhu, has himself mentioned “why are you unnecessarily causing ‘discomfort to your throat’ (कण्ठक्षोभम्) engaging in skillful debates!  Are you not intelligent?  Just dwell on the lotus feet of Sambhu and enjoy the supreme bliss”.

vruthaa kantakshobham vahasi tarasaa tarkavachasaa
padaambhojam sambhor bhaja parama sowkhyam vraja sudhee:2

वृथा कण्ठक्षोभं वहसि तरसा तर्क वचसा
पदाम्भोजं शम्भोर् भज परम सौख्यं व्रज सुधीः

Calling “sudhee:” – ‘you with high intelligence, smart child!”, he has given instructions like this.  Therefore, in this auspicious time, no other discourse is necessary.  Some difference of opinion does arise even in that (in the discourses).  So it is not required!  For some time let us chant “Hara Hara Sankara Jaya Jaya Sankara” within our mind. Only within; not aloud!  Even if it is not possible to do Yoga, Dhyana, Samadhi, etc. this chanting will do.  Acharya will bless us for this itself.

I have often been exhorting that you all should celebrate Acharya’s Jayanti and also render service to the Matam physically and materially.  I have even been saying, “render your service at the Matam availing leave for at least a week every year; offer one day of your weekends for the Matam” etc.  More than all these, if you can now control your mind for five minutes and silently chant “Hara Hara Sankara Jaya Jaya Sankara”, that itself will be the greatest Utsavam, greatest service to the Matam.  For you to be prosperous, for the Matam to flourish through you, for the Matam to do good to you, for everything, nothing else is required other than this chanting!  Doing it from the heart is greater than doing it materially and physically.

Without saying it aloud, all of you keep chanting “Hara Hara Sankara Jaya Jaya Sankara”, till I say “Arohara”!

[Saying this, he makes everyone do the japa mentally for about five minutes.  Thereafter, saying “Arohara” three times and making others also to repeat it, concludes the discourse for the day by saying, “Govinda Nama Sankeertanam” for which the people assembled respond, saying “Govinda, Govinda”].

1This portion appears in the discourse given on Acharya’s Jayanti day at Trichy in 1960.
2The latter portion of the sixth verse of “Sivanandalahari”

_________________________________________________________________________________________
Audio

 



Categories: Deivathin Kural

Tags: ,

5 replies

  1. Soumya Garu is another gifted soul in this blog. Her drawings are always entice everybody. Let her be blessed by Maha Swamy as always.
    Jaya Jaya Shankara….. Hara Hara Shankara….

  2. இந்த அத்தியாயத்தில் மஹாபெரியவா, ‘ஆசார்யாளுக்கு நம்முடைய மனதை அர்ப்பணம் பண்ணுவோம். அதற்கு ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்று ஐந்து நிமிடங்கள் சொல்வோம். அப்படி சொன்னால் ஆச்சார்யாள் நம் மனதுக்குள் வந்துவிடுவார்’ என்கிறார். சௌம்யா இதை அழகான சித்திரமாக வரைந்து இருக்கிறார். பெரியவா கைகளை நெஞ்சில் வைத்து ஹரஹர சங்கர ஜய ஜய சங்கர என்று சொல்லி ஆச்சாரியாளை தியானிப்போம். நம் மனத்தை அர்ப்பணிப்போம் என்று சொல்வதை சௌமியா குறிப்பிடுகிறார். ஆனால் இதில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்று ஐந்து நிமிடங்கள் ஜபித்தால், பெரியவா ‘இதோ நான் இருக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டு நம்முடைய மனதுக்குள் வந்து விடுவார் என்று சொல்வதும் போலவும் இந்த சித்திரம் அமைந்துள்ளது. மகாபெரியவா ஆச்சாரியாளின் மறு அவதாரம் தானே. நன்றி சௌம்யா.

  3. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

  4. Periyava tadroopam 🙏
    Nice way of depicting the message.

  5. Awesome sketch.
    Jaya Jaya Sankara!!
    Hara Hara Sankara!!

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: