109. Sri Sankara Charitham by Maha Periyava –  Celebrate the festival in a grand manner

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The significance of unparalleled Acharya Jayanthi has been re-iterated again by Sri Periyava along with his ‘great desire’. Sowmya’s drawing comes to the fore again in capturing the gist of this chapter. I was telling Sowmya in these times, mass gathering like this without wearing masks seems to be quite a while away. However we can consider thronging the place wearing masks and smearing sanitizers all over :-). Rama Rama

Many Jaya Jaya Sankara Shri ST Ravi kumar for the great translation. Rama Rama

விமரிசையாக விழாக் கொண்டாடுக

எல்லா ஜனங்களும் இந்த விசேஷத்தைப் புரிந்து கொண்டு ஆசார்ய ஜயந்தியை மஹோத்ஸவமாகக் கொண்டாட வேண்டுமென்று எனக்கு ஆசை. அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைப்பதனாலோ என்னவோ, அத்தனை ஜயந்திகளைவிடவும் விசேஷமாக, அவை எல்லாவற்றையும் தூக்கி நிற்கச் செய்த இந்த ஜயந்தியைக் கொண்டாட வேண்டுமென்று எனக்கு இருக்கிறது! ஆசார்ய ஜயந்தி இல்லாவிட்டால் க்ருஷ்ண ஜயந்தி ஏது? ந்ருஸிம்ஹ ஜயந்தி, ராமநவமி எல்லாம் ஏது? ராமாயணம் இருந்திருக்குமா? கீதை இருந்திருக்குமா?

எனக்குப் பேராசை — அது நிறைவேறுமோ, இல்லையோ? சொல்லி வைக்கிறேன்: சங்கர ஜயந்தி என்று எங்கே நடந்தாலும் அங்கே ஜனங்கள் படையெடுத்துப் போய்ப் பிரஸாத விநியோகத்தை அஸாத்யமாக்கிவிட வேண்டுமென்று பேராசை! இதை நான் சொல்லிக் கொண்டே போனால் என்றைக்காவது நிறைவேறாதா?

எதற்காக் கொண்டாடணுமென்றால், கொண்டாட்டத்தால் அவருக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. நமக்கேதான் ச்ரேயஸ். அவரை ஸ்மரிக்கிற புண்யம் ஏற்பட்டுச் சித்தமலம் போகும். நன்றியுணர்ச்சி என்பது மநுஷ்யனாகப் பிறந்தவனுக்கு அவச்யமோ இல்லையோ? ‘நன்றி மறவாமை’ என்பதைத்தானே பெரியவர்களெல்லாம் மநுஷ லக்ஷணத்தின் உச்சியில் சொல்கிறார்கள்? ஆகையால், நமக்கு இடைக்காலத்தில் அடைப்பட்டுப்போன மோக்ஷமார்க்கத்தை மறுபடியும் திறந்துவிட்டு, ஸநாதன தர்மத்தைப் புத்துயிரூட்டிக் கொடுத்து, சிவராத்ரி என்றும் ஸ்ரீஜயந்தி என்றும் ராமநவமி என்றும் பண்டிகைகள் கொண்டாடும் ஆனந்தத்தைக் கொடுத்தவரிடம் நன்றிக்கு அடையாளமாக அவருடைய ஜயந்தியைப் பண்டிகைகளிலெல்லாம் பெரிய பண்டிகையாகக் கொண்டாட வேண்டியது நியாயந்தானே?

தற்போது இந்த ஜயந்தியின் மஹத்வம் போதிய அளவு ஜனங்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கவில்லை. அதனால் தனியாக எங்கேயாவது யாராவது கொண்டாடினால் பத்துப் பேர்கூடச் சேர்வதில்லை. மடத்தில் கொண்டாடினால் கூட்டம் சேர்கிறது. மக்கள்மேல் குற்றமில்லை. முக்யத்வத்தை எடுத்துச் சொல்லி உணர்த்தாதது எங்கள் தப்புத்தான்.

ஆழ்வார்களுக்கும், ராமாநுஜர், தேசிகர், மணவாள மாமுனிகள் முதலானவர்களுக்கும் பெருமாள் கோவில்களில் பிம்பம் இருக்கிறது. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மதாபிமானமும் நிறைய இருப்பதால் அந்த பெரியவர்களுடைய அவதார தினங்களில் ஆலய பிம்பங்களுக்கு விசேஷ பூஜை, புறப்பாடு, சாத்துப்படி என்று விமர்சையாகப் பண்ணுகிறார்கள். அப்பர், ஸுந்தரர் முதலான 63 நாயன்மார்களுக்கும், உமாபதி சிவம் முதலிய சைவ சமயாசார்யர்களுக்கும் இதே போல ஈச்வரன் கோவிலில் பிம்பங்களிருப்பதால் அவர்களுக்கும் விழா நடந்துவிடுகிறது. வைஷ்ணவ ஸம்ப்ரதாயமாகவோ, சைவ ஸம்ப்ரதாயமாகவோ இல்லாமல், எல்லா ஸம்ப்ரதாயங்களுக்கும் மூலமாகவும், அவை யாவற்றையும் ஒப்புக் கொள்வதாகவும் உள்ள ஸ்மார்த்த ஸம்ப்ரதாயக்காரராக நம் ஆசார்யாள் இருப்பதால்… இரண்டு கோவில்களிலேயும் அவருக்கு பிம்பமில்லை! வைதிக பூஜை உள்ளதாகவோ, அவரால் யந்த்ர ப்ரதிஷ்டை போன்ற ஏதோ ஒன்று செய்யப்பட்டு அவருடைய விசேஷ ஸம்பந்தம் உள்ளதாகவோ இருக்கிற ஒரு சில கோவில்களில் மாத்ரந்தான் ஆசார்ய பிம்பமிருக்கிறது.

 ___________________________________________________________________________________________

Celebrate the festival in a grand manner

My wish is that all the people should realise the significance and celebrate the occasion of the birth anniversary [जयन्ती महोत्सव] of Acharya [Sri Adi Sankara] with great festivity.  Probably because I am eking out a living quoting his name, I feel that more than all the other festivals, his Jayanti (birth anniversary) – which rejuvenated all the other festivals – should be celebrated in a magnificent way!  Had Acharya’s Jayanti not been there, would there have been Krishna Jayanti [celebrations]? Would there have been Nrusimha Jayanti, Rama Navami, etc.? Would Ramayanam be [known] here? Would Bhagavad Gita be [known] here?

I have a great desire – will it get fulfilled? However, let me spell it out: My great desire is that wherever Sankara Jayanti is celebrated, people should throng that place in such huge numbers, so as to make the distribution of prasad impossible!  If I keep on saying this, will it not get fulfilled some day?

Why should it be celebrated? He is not going to gain anything on account of the celebrations.  The benefit (श्रेयस्) is only for us.  The merit of focussing our thoughts on him will ensure that the impurities in the mind are removed.  Is not gratitude important for someone born as a human being?  Don’t elders quote ‘gratefulness’ as the highest among all virtues for a human being?  Therefore, is it not justified that the Jayanti of the person who opened up the path for emancipation (which had got blocked in between), revitalised the Sanatana Dharma, and gave the joy of celebrating many festivals like Sivaratri, Sri Jayanti and Rama Navami, be celebrated as the biggest among all festivals?

As of now, people are not adequately made aware of the greatness of this Jayanti.  That is why, when an individual celebrates it somewhere, not even ten people assemble there.  A crowd does assemble when it is celebrated in the Matam.  People are not at fault.  It is our fault that we have not highlighted the significance, for it to be understood.

Images are there for Azhwars, Ramanuja, Desika, Manavala Mamuni etc. in the Perumal [Vishnu] temples. Since Srivaishnavas have much pride in their religion, they celebrate the Jayanti(s) of these great people with much pomp – by performing special pujas to these vigrahams, taking them out in procession, offering special food etc.  Since images of the 63 Nayanmars like Appar, Sundarar, and of Saiva religious teachers like Umapati Shivam etc. are there in the Eswara [Siva] temples, similar festivals are celebrated for them also. Since our Acharya does not belong exclusively to the Vaishnava tradition [वैष्णव सम्प्रदाय] or the Saiva tradition [शैव सम्प्रदाय], but to the Smartha tradition [स्मार्त सम्प्रदाय] which is the basis of all traditions, and also acknowledges these other faiths …… he has no image in either of these temples!  Acharya’s image is there only in a few temples which have their pujas as per Vedic procedures, or temples that have a special connection with him because he has installed a Yantra [यन्त्रम् – a divine device or diagram] there. 
___________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. மஹா பெரிவாளோட வேதனை புரிகிறது….. மக்கள் இதைப் புரிந்துக்கொண்டு இனியேனும் ஶங்கர ஜெயந்தியை விமர்சையாக கொண்டவேண்டும். இதனால் பெரிவா சொன்னதுப்போல், இந்த பண்டிகைகளை திரும்ப அளித்தஅவருக்கு நாம்முடைய நன்றியே தெரிவிக்க வாய்ப்பு மற்றும் ஸ்மரணையால் போகும் நம் மாலீனம்.

    பெரிவா ஶரணம். பாஹி..பாஹி…

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading