எனக்காக ஒன்னு செய்யறையா?

Thanks to Sri Sarma Sastrigal for this share.


ஆடி அமாவாசை என்றாலே எனக்கு மஹா பெரியவா அவர்கள் எனது அப்பாவிடம் சொன்ன வார்த்தைகள் தாம் நினைவுக்கு வரும்.

திருப்பதி அருகில் இருக்கும் சூர்யநாராயணபுரம் காட்டன் மில்ஸ் கெஸ்ட் ஹெளஸ் மற்றும் பிள்ளையார் கோவிலில் ஸ்ரீமட முகாம். 55 வருஷம் இருக்கலாம். வருஷம் சரியாக ஞாபகம் இல்லை.

அப்போது எனக்கு சிறிய வயது. நானும் அப்பா கூட இருந்தேன். அப்போது என் கண்கள் பெரியவா பக்கத்தில் தட்டில் இருந்த கல்கண்டு மேல் தான் இருந்தது. எப்போ கிடைக்கும் என ஏக்கத்துடன் நின்றிருந்தேன். கூட்டமே இருக்காது அப்பொதெல்லாம். 20 பேர்கள் இருந்தாலே அதிகம்.

எனது அப்பாவிடம் பெரியவா தெரிவித்த தெய்வீக உத்தரவு:

”எனக்காக ஒன்னு செய்யறையா. ஆடி அமாவாஸை வரப்போகிறது அல்லவா. அது சமயம் ராமேஸ்வரத்தில் யாத்ரிகர்களின் சங்க்யை அதிகமாக இருக்கும். நிறைய பேர் வருவார்கள். அன்னதானத்திற்காக உன்னால் முடிந்த அளவிற்கு அரிசி மூட்டைய ராமேஸ்வரத்துக்கு அனுப்ப முடியுமா? நாலு பேரிடம் இதை பற்றி பேசு. அவர்களையும் இந்த கைங்கர்யத்தில் ஈடுப்படுத்து.”

இன்னும் அந்த வார்த்தைகள் என் காதில் ரீங்காரமாக ஒலிக்கின்றது.



Categories: Devotee Experiences

2 replies

  1. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA, SARANAM SARANAM
    JANAKIRAMAN NAGAPATTINAM

  2. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    OM SRI MATRE NAMAHA
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading