Sri C.S Mehta passed away

Two days back I saw the news of Sri C.S Mehta – however I was ignorant of not knowing who he was and the details about him until I saw this post in FB. So sharing with you all. Let us pray Mahaswami to bless the departed soul.

Periyava Sharanam

சி.எஸ். மேத்தா என்று நண்பர்களால் அறியப்பட்ட திரு சந்திரசேகர மேத்தா,தனது 86வது வயதில் இன்று காலை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

மிகப்பெரிய பாரம்பரியக் கொண்டவர் மேத்தா. இவர்களது மூதாதயர்கள் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறிய குஜராத்தி பிராமண குடும்பம். வைர வியாபாரம் செய்வதற்காக சென்னைக்கு வந்தார்கள். மிகப்பெரிய செல்வந்தர்கள். குடும்பமே மகாபெரியாவாளிடம், காஞ்சி மடத்திடம் தங்களை ஒப்படைத்துக்கொண்டவர்கள்.

மடத்திற்காக ஏராளமான நிலங்களை தானமாக கொடுத்த குடும்பம். அந்த குடும்பத்தில் எல்லாமே காஞ்சி மடத்தில் கட்டளைப்படித்தான் நடக்கும். சென்னை அண்ணாநகரில் இன்று நொளம்பூர் என்று அழைக்கப்படும் அந்த கிராமமே மேத்தா குடும்பத்திற்குச் சொந்தமானது. அப்போது அங்கே செங்கச்சூளை நடத்திக்கொண்டிருந்தார் மேத்தாவின் தாத்தா ரங்கநாத மேத்தா.. ஒரு முறை காஞ்சி மகாபெரியவா அந்த பகுதிக்கு வந்திருந்தார். இவர் செங்கச்சூளை வைத்திருப்பதை அறிந்ததும், ` பிராமணன் மண்ணைச்சுட்டு பிழைப்பு நடத்தக்கூடாது ‘ என்றார். உடனே அதற்காக பயன்பட்ட பல ஏக்கர் நிலங்களை, மகாபெரியவர் முன்னிலையிலேயே அந்தப் பகுதி ஏழைகளுக்கு அந்த நிலங்களை தானமாக கொடுத்தார்.

இப்போது சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ளது சைல்ட் டிரஸ்ட் ஹாஸ்பிடல் (CHILD TRUST HOSPITAL) அதை நடத்துவது காஞ்சி மடத்தைச் சேர்ந்தவர்கள். ` நம் இந்து குழந்தைகளுக்கு எளிய மருத்துவ வசதி கொடுக்க உதவியாக இருக்கும்’ என்று காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் போராடி, அந்த மருத்துவமனையை பெற்றுத் தந்தவர் சி.எஸ். மேத்தா.

மேத்தா குடும்பம் பல ஆண்டுகளாக மருந்தக தொழிலில் இருந்து வந்துள்ளார்கள். சைல்ட் டிரஸ்ட் ஹாஸ்பிடல் துவங்கிய ஆரம்பகாலத்தில், அங்கிருந்த மருந்தகத்தை வேறு சிலர் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதிலே எப்போதுமே நஷ்டக் கணக்கே வந்துகொண்டிருந்தது. காஞ்சிப் பெரியவர் வேண்டுகோளின்படி அந்த மருந்தக நிர்வாகம் மேத்தா பொறுப்பில் வந்தது. முதல் மாதத்திலே சில ஆயிரங்கள் லாபம் என்று பெரியவரிடம் கொண்டு போய் கொடுத்தார் மேத்தா.

தான் இறக்குவரையில் அந்த மருந்தகத்தில் தினமும் அமர்ந்து நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தார். அதன் நிர்வாகச் செலவு போக, மடத்திற்கு அந்த மருந்தகத்திலிருந்து மட்டுமே மாதம் 15 லட்சம் வருமானமாக போய்க்கொண்டிருந்தது.

கூட்டுக்குடும்ப ஒன்றுமைக்கு மேத்தா குடும்பமே உதாரணம். இறந்த மேத்தாவுக்கு மனைவி, மற்றும் ஒரே மகன் இருக்கிறார்கள். மேத்தாவுக்கு 4 சகோதரர்கள், 2 சகோதரிகள். ஆனால் எல்லோருமே, சுமார் 2 ஏக்கரில் கீழ்பாக்கத்திலிருந்த தங்களது பங்களாவை அடுக்குமாடி குடியிருப்பாக்கி, அனைவரும், ஒரே வளாகத்தில் இருக்கிறார்கள். மேத்தா கிழித்த கோட்டை சகோதரர்கள் தாண்ட யோசிக்கக் கூட மாட்டார்கள்.

பூந்தமல்லி கெஸ்ட் ஹாஸ்டல் அருகே உள்ள கெஸ்ட் ஹோட்டல், சங்கர நேத்ராலாயாவில் இயங்கும் உணவகம், எல்லாமே மேத்தா குடும்பத்தைச் சேர்ந்தது.

தன் வீட்டையே ஒரு சங்கரமடமாக மாற்றி வைத்திருந்தார் சி.எஸ். மேத்தா. அந்த வீட்டிற்குள் நுழையும்போதே காஞ்சி மடத்திற்குள் நுழையும், பயமும், பக்தியும் உடனே நம்மை ஆட்கொள்ளும்.

மேத்தா கல்லூரி நாட்களில் தமிழ்நாட்டிற்காக விளையாடி கிரிக்கெட் வீரர். பல பெரிய தொழிலதிபர்கள் அவருடைய பள்ளி, கல்லூரி சகாக்கள். ஒரு உதாரணம் அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் ஆனந்த விகடம் எம்.டி, ஆசிரியராக இருந்த எஸ். பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய சகா சி.எஸ். மேத்தா.



Categories: Announcements

6 replies

  1. May the GOOD SOUL reach the Lotus feet of Sri Siva.
    Janakiraman Nagapattinam

  2. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM

  3. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA

    SRI C.S. MEHTA VERY GOOD SOUL, DEVOTEE OF SRI MAHA PERIYAVAA.

  4. It would have been complete if you had put up his photo along with this wonderful write-up.

  5. As a person from Purasawalkam, we all know the said family and their heritage. very Pious family. It was heartening to see them all living joint family and well knitted family. Our prayers for the soul to merge with Paramacharya feet.
    Our sons studied in Kolasaraswathi school where their family members were also teachers.

Leave a Reply

%d bloggers like this: