103. Sri Sankara Charitham by Maha Periyava – Aryamba: Kanchi Kamakshi; Aryan: Iyappan


Jaya Jaya Sankara Hara Hara Sankara – In the previous chapter we saw the significance of the name ‘Siva Guru’ (Bhagawath Padhal’s father). In this one Sri Periyava explains the significance of HIS mother’s name ‘Aryaambal’ and how it is synonymous to Kamakshi Amman.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for the incredible Kamakshi drawing and audio. Rama Rama

ஆர்யாம்பா : காஞ்சி காமாக்ஷி ; ஆர்யன் : ஐயப்பன்

அப்பா பெயர் கும்பகோண ஸம்பந்தமுள்ளதென்றால் அம்மா பெயர் காஞ்சி ஸம்பந்தமுள்ளதென்று ஒரு விதத்தில் சொல்லலாம். ‘சிவகுரு’ மாதிரி ‘ஆர்யாம்பா’வும் அபூர்வமான பேர்தான்.

மலையாளத்தில் ஆரியங்காவு சபரிமலை வழியிலிருக்கிறது. ஆர்யனுடைய காடு என்று அர்த்தம். ஆர்யன் என்பது சபரிமலை சாஸ்தாவைத்தான். ‘ஆர்யன்’ தான் தமிழில் ‘ஐயன்’ ஆயிற்று. அதை மரியாதையாகப் பன்மையில் சொன்னால் ‘ஐயர்’ அல்லது ‘ஐயனார்’. ஐயனார், ஐயனாரப்பன் என்பதே தமிழ்நாட்டில் சாஸ்தாவின் பெயர். மலையாளத்தில் ‘ஐயப்பன்’ என்பதும் அதே வார்த்தைதான். த்ராவிடர்களின் க்ராம தேவதை என்று இக்கால ஆராய்ச்சிக்காரர்களால் சொல்லப்படுபவர்தான் ‘ஆர்ய’ராகவும் ‘ஐய’ராகவும் இருக்கிறார்! இந்த இன பேத ஆராய்ச்சியெல்லாம் எவ்வளவு தப்பான அடிப்படையில் உண்டானது என்பதற்கு இது மாதிரிப் பல சான்றுகள் இருக்கின்றன. அது இருக்கட்டும்.

ஆர்யா என்பது அம்பாளின் — பரமேச்வர பத்னியாக இருக்கப்பட்ட பராசக்தியின் — பெயர். ”உமா காத்யாயநீ கௌரீ“ என்று ஆரம்பித்து அமரத்தில் அம்பாள் நாமங்களைச் சொல்லிக் கொண்டு போகும்போது ”ஆர்யா தாக்ஷாயணீ சைவ கிரிஜா ” என்று வருகிறது. குறிப்பாக த்ரிபுரஸுந்தரி என்கிற ரூபத்தில் தநுர்-பாண-பாச-அங்குசங்களுடன் செக்கச் செவேலென்று உள்ள அம்பாளையே ‘ஆர்யா’ என்று சொல்வதாகத் தெரிகிறது. அந்த ரூப லக்ஷணங்களோடேயே இருப்பவள்தான் காஞ்சி காமாக்ஷி. “காமாக்ஷி மஹா த்ரிபுரஸுந்தரி” என்றே அவளைச் சொல்வது. லலிதாம்பிகை என்பதும் இந்த ரூபத்தைத்தான்.

காஞ்சி காமகோஷ்ட பூஜா பத்ததியை அநுக்ரஹித்தவர் துர்வாஸர். அவர் அவளைப் பற்றி இருநூறு ச்லோகமுள்ள ஒரு ஸ்துதி செய்திருக்கிறார். அதற்கு ‘ஆர்யா த்விசதி’ என்றே பேர்1. (த்வி – சதி என்றால் இரு — நூறு.) காமாக்ஷியைக் குறித்த மிகவும் உத்தமமான இன்னொரு ஸ்துதி உண்டு. அது ‘பஞ்சசதி’, அதாவது 500 ஸ்லோகம் கொண்டது, மூகர் என்பவர் செய்தது. அதனால் ‘மூக பஞ்சசதி’ எனப்படுவது. அதிலும் முதல் நூறு ஸ்லோகங்களுக்கு ‘ஆர்யா சதகம்‘ என்றே தலைப்புக் கொடுத்திருக்கிறது.

பரமேஸ்வரனோடு சேர வேண்டும் என்பதற்காகக் காஞ்சீபுரத்தில் காமாக்ஷி தபஸிருந்தது பிரஸித்தம். காமாக்ஷி அப்படி தபஸிருந்த ஊர் காஞ்சீபுரம் என்று கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறபோது ‘ஆரியை தவஞ்செய்பதி’ என்றே சொல்லிருக்கிறது.

(ஸ்ரீசரணர்கள் குறிப்பிடும் சொற்றொடர் கந்தபுராணம், தக்ஷ காண்டம், 21-ம் படலத்தில் ‘வாரிதிகள்’ எனத் தொடங்கும் 15-ம் பாடலில் வருகிறது.)

ஆகையால் காஞ்சி காமாக்ஷிக்கு விசேஷமாக உள்ள பெயரே ஆசார்யாளின் தாயாருக்கு வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அம்பாளே அம்மாவாக வந்து ஆர்யாம்பா என்று பெயர் வைத்துக் கொண்ட மாதிரி த்வனிக்கிறது!

சிவனுக்கு குரு (அப்பா) சிவகுரு என்பதுபோல ஆர்யரான ஆசார்யாளுக்கு அம்பா (அம்மா) ஆர்யாம்பா என்றும் பொருத்தம் பார்த்தோம்.

இரண்டு பெரிய வம்சங்களில் வந்த தம்பதி.

1 லலிதாம்பிகை குறித்த துதிகளில் நன்மணியாக விளங்குவது எனப் பொருள்பட இதனை ‘லலிதா ஸ்தவ ரத்னம்’ என்றும் சொல்வர்.

________________________________________________________________________________________________________________________

 Aryamba : Kanchi Kamakshi; Aryan : Iyappan

If father’s name had a connection to Kumbakonam, it can be said that in a way, the mother’s name had a connection with Kanchipuram.  Like ‘Sivaguru’, ‘Aryamba’ also is indeed a rare name.

In Malayalam, Ariyankavu is en route to Sabarimala.  It [Ariyankavu] means ‘the forest of Aryan’.  Aryan refers only to Sastha of Sabarimala.  It is ‘Aryan’ which got modified to ‘Iyan’ in Tamil.  If it is reverentially mentioned in plural, it becomes, ‘Iyer’ or ‘Iyanaar’. Sastha is known by the names Iyanaar and Iyanaarappan in Tamilnadu.  The Malayalam word Iyappan also refers to the same. What the present day researcher calls as the village deity of the Dravidians, is the ‘Aryar’ and ‘Iyer’!  There are many such evidences to show how these researches on distinctions in races are founded on wrong basis.  Let that be.

Arya is the name of Ambal – of Parasakti, the wife of Parameswara.  In Amara [Amarakosam अमरकोषः], while listing out the names of Ambal starting with “Uma Kathyayani Gowri” [उमा कात्यायनी गौरी], it goes on to mention “Arya Daakshayani Saiva Girija” [आर्या दाक्षायणी शैव गिरिजा].  It is evident that ‘Arya” refers in particular to the reddish hued Ambal in the form of Tripurasundari, who has the bow, arrow, rope and goad [dhanur-baana-paasa-Ankusa धनुर-बाण-पाश-अङ्कुश] in her hands.  Kanchi Kamakshi is the one who has such a form and these features.  She is known as “Kamakshi Maha Tripurasundari” [कामाक्षि महा त्रिपुरसुन्दरी].  This same form is also called Lalithambika.

Durvasa was the one who had prescribed the procedure for puja at the Kanchi Kamakoshta.  He has composed a stuti on Her, containing 200 slokas.  It is called ‘Arya Dvishati’1 [आर्या द्विशति]. (Dvi – Shati means two hundred).  There is another great stuti on Kamakshi.  It is ‘Panchashati’ [पञ्चशति], containing 500 slokas.  It was composed by a person called Mookar [मूक कविः].  Therefore, it is called, ‘Mooka Panchashati’.  In that also, the first hundred slokas have been given the title, ‘Arya Shatakam’.

It is very well known that Kamakshi had undertaken penance in Kanchipuram with a view to unite with Parameswara.  In Kandapuranam, while mentioning about Kanchipuram as the place where Kamakshi had undertaken such a penance, it says ‘Aryai Thavancheipathi’ [the place where Arya did penance].

(The phrase being referred by Sri Charanar comes in the 15th verse, starting with ‘Vaaridigal’, in the 21st chapter of Daksha Kaanda in Kandapuranam).

Thus, it is clear that Acharya’s mother has been named with the very special name of Kanchi Kamakshi.  It sounds as though Ambal herself came as the mother and took the name Aryamba!

Just like the name Sivaguru – Siva’s Guru (Acharya’s father), the name Aryamba for Acharya’s mother also appears to be very appropriate.

They were a couple hailing from two great ancestries.

1 This is referred to as ‘Lalitha Stava Ratnam’ to mean that it is a shining gem among the slokas pertaining to Lalithambika.

_______________________________________________________________________________________________________________

Audio


 



Categories: Deivathin Kural

Tags: ,

4 replies

  1. அற்புதம்!! அருமை!!
    காமாட்சியம்பாளின் குமின் சிரிப்பு கண்டு பெரியவா அகமகிழ்ந்து சிரிப்பது போல் இருக்கிறது.!!🙏🙏🙏

  2. ஏந்திய வண்ண தூரிகையிலே
    ஏற்றமிகு எழில் கண் கவர்

    எழில் மிகு ஓவியம் கண்டு
    என் சொல்வேன் காரிகையே !

    கன்னல் ஏந்தும் காமாட்சியின்
    கயல் விழி பொழி கருணையோ

    கருணாம்ருத ஆலய காஞ்சி
    மாமுனி பேரருளையோ

    வான் உலாவும் முகிலை உரசும்
    உயர் கோபுர தரிசனமோ

    பிறை சூடிய நாயகி பெரியவா அருள்
    பொழிய பேருவகை ஓவியம் தந்தாய் !

    வாழிய வாழிய வாழிய வளர்க
    வளர்க நின் வரைகலை !

    சந்தர் சோமயாஜிலு (@)
    சிவ ராம தாஸன்

  3. ரொம்ப அழகான காமாக்ஷி !! கண் முன்னே பிரத்யக்ஷமா நிக்கறா !! கோவில் கோபுரம் அப்படியே ! அவள் சிரக்தையே காரணம்! மேல மேல அவள் நன்னா வரணும் பெரியவா. காமாக்ஷி கிருபையால்!!

  4. They say the deity in a temple gets more sannidhyam with the manthra japam, pujai etc. This kamakshi of Sowmya is getting more and more beautiful, probably because of her mooka pancha shathi parayanam. Parthunde irukkalam pola avlo azhagu kamakshi 🙏🙏🙏

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading