மீனாக்ஷி அம்மன் காலணி

Thanks to Sri Sathasivan Subburaya Chettiar‎ for FB share.

திரு ரோஸ்பீட்டர் என்பவர் மதுரைக்கு 1812 முதல் 1828 வரை கலெக்டர் ஆக இருந்தார் மக்கள் மீனாக்ஷியம்மனை வழிபடுவதை கண்டு அவருக்கு ஆச்சிரியம் ஆனால் வெளிநாட்டவர் என்பதால் அவருக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை இருந்தாலும் அவருக்கு மீனாட்சி மீது அளவு கடந்த மரியாதை ஒரு சமயம் பெரும் இடியுடன் கூடிய மழை பெய்தது அப்போது இரவு வேளையில் அந்த கலெக்டர் தன்னந்தனியாக தனது கலெக்டர் மாளிகை (தற்போது உள்ளது ) விட்டு தனியே தூக்கத்தில் வெளியே சென்றார் அச்சமயம் எதிர் பாராதபடி அவர் இருந்த அறை மீது பெரும் இடி விழ அந்த இடமே அல்லோலப்பட்டது அப்போதுதான் தூக்கத்தில் நடப்பவர் போல் சற்று தொலைவில் கலெக்டர் வந்து கொண்டு இருப்பதை காவலர்கள் கவனித்தனர் கலெக்டருக்கு ஆபத்து இல்லை என்று உணர்ந்து அவரிடம் சென்றனர் அப்போது கலெக்டர் நான் கனவில் பார்த்த மீனாட்சியம்மன் போன்று ஒரு இளம் பெண் நகைகள் அணிந்து என்னை முன்னே அழைத்துச் செல்ல நானும் பின் சென்றேன் என்றார் மீனாட்சியம்மனே ரோஸ் பீட்டரை இடி விபத்தில் இருந்து காப்பாற்றி உள்ளாள் இதை கேட்ட சுற்றியிருந்தவர்கள் மெய்சிலிர்த்து போனார்கள் தன்னை காப்பாற்றிய அந்த மீனாட்சிக்கு ஒரு காணிக்கை செய்ய விரும்பி கோவில் நிர்வாகத்திடம் அம்பிகைக்கு இல்லாத ஒரு ஆபரணத்தை சொல்லுங்கள் அதை நான் காணிக்கையாக செய்து தர விரும்புகிறேன் என்றார் அவர்களும் அம்பிகைக்கு காலணி செய்து தாருங்கள் என்றனர் .உடனே கலெக்டர் தங்கத்தால் இரண்டு காலணிகள் செய்து அதில் 412 பவளங்கள் 72 மரகத கற்கள் 80 வைர கற்கள் பொருத்தி அதில் பீட்டர் என்று தனது பெயரை பதித்து காணிக்கையாக கொடுத்தார் இந்த காலணிகள் இன்றும் சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது .நன்றி – வேதவல்லி – தீபம்



Categories: Devotee Experiences

6 replies

  1. sri MEENAKSHI has blessed him even he is of different faith because of his devotion to Goddess .

  2. A thrilling episode that Goddess MEENAKSHI protects the people who pray to
    Her. Krishnamoorthy

  3. How powerful & Divine our God’s are! Goose bumps even though I read this umpteen times ! Every time the same feeling I have !!
    Jaya Jaya jagadamba Sive….

  4. Please provide English translation 👏

Leave a Reply to Saraswathi ThyagarajanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading